அன்புள்ள வலைப்பூவிற்கு,
ட்ரைலரிலேயே அரசியல் மசாலா தூக்கலாக இருந்தபோதே இது “கோ” வகையறா படம்
என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்தாலும் அதையே பகடி செய்து நகைச்சுவையாக சொல்லியிருப்பார்கள்
என்ற நம்பிக்கையில் வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ் திரையரங்கம் நோக்கி பயணித்தேன்.
காரைக்குடியில் பாரம்பரியமான குடும்பத்து வீடு ரயில்வே சுரங்கப்பாதை
கட்டுமான பணிக்காக இடிக்கப்பட இருக்கிறது. அதனை தடுத்து நிறுத்தச் சொல்லி
அமைச்சரிடம் மனு கொடுக்க வீட்டு சார்பாக கார்த்தி சென்னைக்கு அனுப்பி
வைக்கப்படுகிறார். அதற்குப்பின் என்ன நடக்கும் என்பது குப்பனுக்கும் சுப்பனுக்கும்
கூட தெரியும்.
இயக்குனர் லாஜிக் என்ற வஸ்துவை வசதியாக மறந்துவிட்டதால் நாமும் மூளை
என்று வஸ்துவை கழற்றிவைத்துவிட்டு படம் பார்த்தல் நலம்.
ஒரு பாட்டு, ஒரு காமெடி, ஒரு லவ் சீன், ஒரு ஃபைட்டு என்று முதல்பாதி
முழுவதுமே சீட்டு குலுக்கிப்போட்டு காட்சியமைத்திருக்கிறார்கள். தியேட்டரில்
ரசிகர்கள் வெறியேறி கமென்ட் அடிப்பார்களே, அந்த வேலையையும் சந்தானமே செய்துவிடுவது
மிகப்பெரிய ஆறுதல்.
கார்த்தி வழக்கம் போலவே துருதுரு அசால்ட் இளைஞர் கேரக்டரே. இந்த “ஏங்க...
நீங்க... வாங்க...” எத்தனை நாளைக்கு எடுபடும் என்று தெரியவில்லை. டான்ஸ்
ஆடியிருப்பது மட்டும் கார்த்தியிடம் இருந்து ஒரு புது முயற்சி. என்ன தான்
இருந்தாலும் சூர மொக்கை என்று சொல்லும் அளவிற்கு ஒரு படம் கூட நடிக்கவில்லை என்பதற்காக
கார்த்தியின் கதை கேட்கும் திறமையை பாராட்டலாம்.
ப்ரணிதா, ஆக்சுவல்லி ஒரு மொக்கை ஃபிகரு. ஏதோ கொஞ்சம் பட்டி பார்த்து
டிங்கரிங் செய்து நல்ல ஃபிகரு மாதிரி காட்ட முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனாலும் ‘வெள்ள
பம்பரம்’ பாடலில் பாப்பா தக்கனூண்டு குட்டை பாவாடையை போட்டுக்கொண்டு ஆடும்போது
காத்து கீத்து அடிக்காதா என்று மனது ஏங்கித்தவிக்கிறது. வழக்கமா ஹீரோயினுக்கு
லூசுத்தனமா நாலு சீன் வைப்பாங்க, இந்தப்படத்துல அதுகூட இல்லை. என்னைக்கேட்டால்
ஹீரோயினை விட கார்த்தியை லுக்கு விடும் நைட்டி ஆண்ட்டி சூப்பர் என்பேன்.
பெயர் போடுவதில் இருந்தே கார்த்தியை விட அதிக விசிலை அள்ளுகிறார்
சந்தானம். “சந்தானம் காமெடிக்காக பார்க்கலாம்...” என்ற சான்றோர் சொல்லைக்
காப்பாற்றி இருக்கிறார், கொஞ்சம் கஷ்டப்பட்டு தான். கதைக்கு சம்பந்தமே இல்லாமல்
காமெடி வலிந்து திணிக்கப்பட்டிருப்பதால் அதிகம் ரசிக்க முடியவில்லை.
“டேய் டேய் டேய்... பொதைச்சுடுவேன்டா...!” என்று பொங்கும் வில்லன்
கேரக்டரில் அறுபத்தி ஏழாவது முறையாக பிரகாஷ் ராஜும், முப்பத்து மூன்றாவது முறையாக எதிர்க்கட்சி
தலைவர் கேரக்டரில் கோட்டா சீனிவாசராவ் அய்யாவும் நடித்திருக்கிறார்கள். பெண்
சிங்கங்களாக ரோஜாவும் ராதிகாவும். மும்தாஜ் நடிப்பதாக யாரோ கிளப்பி
விட்டிருக்கிறார்கள். அந்த கேரக்டரில் தான் கிரண் நடித்திருக்கிறார் என்று
நினைக்கிறேன். பாவம் அந்தப்புள்ள நெலமை... வில்லனுக்கு கீப்பா நடிக்கிற லெவலுக்கு
இறங்கிடுச்சு. பட் நாசரின் ‘பர்பாமன்ஸ்’ மட்டும் கலக்கல். (சொல்லி வைப்போம்...
நமக்கும் என்னைக்காவது புத்தகம் வெளியிடுவார்...) ஆங்... அனுஷ்காவும்
ஆண்ட்ரியாவும் கெளரவ தோற்றம். (பேசாம கேவலத் தோற்றம்’ன்னு மாத்திடலாம்).
பாடல்காட்சிகள் மரண மொக்கைகள். ஹீரோ தொழிலாள பதர்களுடன் சேர்ந்து
தெருக்களில் ஆடிப்பாடுவது, பல வருடங்களுக்கு ஒருமுறை பூப்பதாக சொல்லும் வெளிநாட்டு
பூக்களுக்கு மத்தியில் டூயட் பாடுவது என்று புதுமைகள் கொப்பளிக்கின்றன. ஹீரோயின்
ஹீரோவை கட்டிப்பிடிக்கும் ஒரு காட்சியை தொடர்ந்து தியேட்டரே பெருமூச்சு
விட்டதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். கந்தா காரவடை... பாடலை “கார்டு காட்டினா ATM
காசு துப்புது... காசு இல்லாதவனை உலகம் காறித்துப்புது...” போன்ற எளிமையான
வரிகளில் அழகாக எழுதியிருக்கிறார்கள்.
மொத்தத்தில் படம் பளபளப்பான பாலிதீன் கவரில் பாதிக்கும் மேலே
காற்றடைக்கப்பட்ட சிப்ஸ் பாக்கெட். படத்தில் பீடி சாமியாரை கேடி சாமியாராக
மாற்றுவது போல மொக்கை படத்தை மார்கெட்டிங், பேக்கேஜிங் எல்லாம் செய்து நம்மிடம்
விற்க முயல்கிறார்கள். சிலருக்கு அதன் சுவை பிடிக்கலாம். சிலர் தாங்கள்
ஏமாற்றப்படுவதை உணரலாம். சிலர் வாய் நமநமன்னு இருக்குதேன்னு வாங்கி சாப்பிடலாம்.
அவ்வளவுதான்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
44 comments:
என்கூட நாளைக்கு மறுபடியும் இந்த அரிய படைப்பை பாக்க வர்ற உன் தைரியம் கீதே....என்னத்த சொல்ல..!!
இந்த இம்சைக்கு என்னை கூட்டிட்டு போற உனக்கு மைனஸ் ஓட்டு போட்டுட்டேன் தம்பி.
நீங்க இந்த சமூகத்துக்கு ஏதோ சொல்ல வர்றீங்கன்னு தெரியுது :)) கிட்டத்தட்ட எனக்கும் இதே பீலிங்தான்.. சந்தானம் தவிர்த்து சுத்தமாக யோசிக்க முடியவில்லை.
@ ! சிவகுமார் !
// என்கூட நாளைக்கு மறுபடியும் இந்த அரிய படைப்பை பாக்க வர்ற உன் தைரியம் கீதே....என்னத்த சொல்ல..!! //
இது மொக்க படம் பார்த்து வளர்ந்த ரத்தம் சிவா... சின்ன வயதிலிருந்தே எங்க அப்பா, அம்மா என்னை வி.சேகர், கே.எஸ்.ரவிகுமார் படங்களுக்கே அழைத்துச்செல்வார்கள்...
// இந்த இம்சைக்கு என்னை கூட்டிட்டு போற உனக்கு மைனஸ் ஓட்டு போட்டுட்டேன் தம்பி. //
சத்யம் திரையரங்க வளாகத்தில் பட்டதாரி வாலிபர் ஓட ஓட விரட்டிக்கொலை - மைனஸ் ஓட்டு போட்டதால் 'நண்பர்' வெறிச்செயல்
@ ராம்குமார் - அமுதன்
// நீங்க இந்த சமூகத்துக்கு ஏதோ சொல்ல வர்றீங்கன்னு தெரியுது :)) கிட்டத்தட்ட எனக்கும் இதே பீலிங்தான்.. சந்தானம் தவிர்த்து சுத்தமாக யோசிக்க முடியவில்லை. //
நான் கருத்து சொல்லவில்லை தல... டைரக்டருங்க கருத்து சொல்றேன்னு தாலியருக்காதீங்க'ன்னு தான் சொல்றேன்...
பிரபா AGSல எந்த ஷோ பார்த்த. நான் 12.30 ஷோ அதே தியேட்டரில் தான் பார்த்தேன்.
நல்ல விமர்சனம்.... கடைசியில் படம் மரண மொக்கையோ ...? இந்தப் படத்திற்கு போவதாக இல்லை. ஏன்னா... அடுத்த மாசம் T.V.யிலே போட்ருவாங்க... நன்றி நண்பா !
//“டேய் டேய் டேய்... பொதைச்சுடுவேன்டா...!” என்று பொங்கும் வில்லன் கேரக்டரில் அறுபத்தி ஏழாவது முறையாக பிரகாஷ் ராஜும், முப்பத்து மூன்றாவது முறையாக எதிர்க்கட்சி தலைவர் கேரக்டரில் கோட்டா சீனிவாசராவ் அய்யாவும் நடித்திருக்கிறார்கள்//ஹா ஹா நீங்க பெரிய அக்கௌன்டன்ட் பாஸ்
ராஜ்நீதி ஹிந்தி படத்தை உல்டா செய்து இருப்பார்கள் என ஒரு யூகத்தில் இருந்தேன், ஆனால் அப்படி இல்லை போல.
ஒரு "தூளா"ன கதையை டிங்கரிங் செய்து சகுனியா உலாவ விட்டு இருக்காங்க போல.
ரெயில்வே சுரங்கப்பாதை என்றால் அது மத்திய அரசு முடிவு , அப்புறம் ஏன் மாநில அரசோட சகுனி தனம் செய்யப்போறார் ஹீரோ? பிரதமரை கவுக்கிறாப்போல இல்லை படம் எடுக்கணும் :-))
NHAI திட்டத்தில கட்டின பாலத்துக்கு வி.காந்த் கலைஞர் கூட மல்லுக்கட்டினதை வச்சு இப்படி கதை பண்ணிட்டாங்க போல.டீ.ஆர்.பாலு அமைச்சர் என்பதால் அது கூட ஓ.கே.(சிவாஜில கூட இந்த கூத்து தான்)
விமர்சனம் கலக்கட்டிருச்சி..பார்த்து தோன்றியவற்றை அப்படியே பதிவு செய்திருக்கீங்க..அசத்தல்..இந்த படமெல்லாம் பார்ப்பேனானு தெரியலை..டைம் கிடைப்பின் பார்க்கலாம்.நன்றி.
itS a medical miracle
முரட்டுகாளைக்கு இது பரவாயில்ல....!யோவ் சிவா! ஏய்யா இந்த கொலைவெறி மைனஸ் ஓட்டு போட்டிருக்க......
கடசில கேட்ட கேள்வி...ம் திராணி இருக்கா? பாக்கலாம்
தம்பிக்கு வந்திருக்கறது ஆண்ட்டியோமேனியான்னு ஒரு பழைய வியாதி.... எல்லாருக்கும் வந்து போறதுதான்......... சரியாகிடும்.....!
/////! சிவகுமார் ! said...
இந்த இம்சைக்கு என்னை கூட்டிட்டு போற உனக்கு மைனஸ் ஓட்டு போட்டுட்டேன் தம்பி.//////
இதெல்லாம் உங்க கடமைண்ணே.......
/////ஆனாலும் ‘வெள்ள பம்பரம்’ பாடலில் பாப்பா தக்கனூண்டு குட்டை பாவாடையை போட்டுக்கொண்டு ஆடும்போது காத்து கீத்து அடிக்காதா என்று மனது ஏங்கித்தவிக்கிறது.//////
அடங்கொன்னியா..... மொக்க பிகருன்னு சொல்லிப்புட்டு ஸ்க்ரீனுக்கு கீழ உத்து பாத்திருக்காருய்யா இந்தாளு..........
//// ஹீரோ தொழிலாள பதர்களுடன் சேர்ந்து தெருக்களில் ஆடிப்பாடுவது, பல வருடங்களுக்கு ஒருமுறை பூப்பதாக சொல்லும் வெளிநாட்டு பூக்களுக்கு மத்தியில் டூயட் பாடுவது என்று புதுமைகள் கொப்பளிக்கின்றன. ///////
இப்பல்லாம் ஷங்கரே அப்படித்தானுங்க எடுக்குறாரு.........
///// தன்னை கேலி செய்யும்போது கூட கைதட்டி, விசிலடித்து ரசிக்கும் “புன்னகை மாறாமுகம்” மானுடப்பதர்களுக்கு எப்போதுமே உண்டு. பெரிய சமூக பொறுப்பு வெளக்கெண்ணெய் மாதிரி படமெடுக்கும் ஷங்கர், மணிரத்னம், கே.வி.ஆனந்த் இன்னபிற வெ.ம.க்கள் உண்மையிலேயே தைரியசாலிகளாக இருந்தால் தங்கள் படங்களில் நேரடியாக கருணாநிதியையோ, ஜெயலலிதாவையோ தாக்கி காட்சிகள், கதாபாத்திரங்கள் அமைக்கலாமே...!//////
எலே ஓடுலேய்ய்.... தம்பி ஏதோ கருத்து சொல்றாப்ல........
படம் மொக்கைதான் போல. இருந்தாலும் விமர்சனம் பரபர நடையில் படுசுவாரஸ்யம். குறிப்பாக ஹீரோயினை வர்ணிக்கும் பத்தி அசத்தல்.
ப்ரணீ தா உங்க காஜல் போலவே இருக்குன்னு நினைச்சா மொக்கை பிகருன்னு சொல்றீங்க !
\\உண்மையிலேயே தைரியசாலிகளாக இருந்தால் தங்கள் படங்களில் நேரடியாக கருணாநிதியையோ, ஜெயலலிதாவையோ தாக்கி காட்சிகள், கதாபாத்திரங்கள் அமைக்கலாமே...!\\
மாப்பு, உனக்கு என்ன ஆச்சு? இப்படியெல்லாம் நேரடியா படம் எடுக்க முடியாது. கேசு போட்டுடுவாங்க, சென்சார்லேயே வெட்டி போட்டுடுவானுங்க. அதிகம் வேணாம், நம்ம ரஞ்சிக் கோட்டை வாலிபனோட கதையை படமா எடுக்கறதுக்கு அறை டஜன் பேரு ரெடியா இருக்காங்க, எடுக்கக் கூடாதுன்னு அவன் கேசு போட்டு நிறுத்தி வச்சிருக்கான். எங்கே இருக்கே நீ.........??!!
\\ஹீரோ தொழிலாள பதர்களுடன் சேர்ந்து தெருக்களில் ஆடிப்பாடுவது, பல வருடங்களுக்கு ஒருமுறை பூப்பதாக சொல்லும் வெளிநாட்டு பூக்களுக்கு மத்தியில் டூயட் பாடுவது என்று புதுமைகள் கொப்பளிக்கின்றன.\\ காமடி கீமடி எதுவும் பண்ணலியே?!
\\மொத்தத்தில் படம் பளபளப்பான பாலிதீன் கவரில் பாதிக்கும் மேலே காற்றடைக்கப்பட்ட சிப்ஸ் பாக்கெட். படத்தில் பீடி சாமியாரை கேடி சாமியாராக மாற்றுவது போல மொக்கை படத்தை மார்கெட்டிங், பேக்கேஜிங் எல்லாம் செய்து நம்மிடம் விற்க முயல்கிறார்கள். சிலருக்கு அதன் சுவை பிடிக்கலாம். சிலர் தாங்கள் ஏமாற்றப்படுவதை உணரலாம். சிலர் வாய் நமநமன்னு இருக்குதேன்னு வாங்கி சாப்பிடலாம். அவ்வளவுதான்.\\ மாப்பு நீ........ நீதான்....... கலக்கிட்டே போ.......!!
### பெரிய சமூக பொறுப்பு வெளக்கெண்ணெய் மாதிரி படமெடுக்கும் ஷங்கர், மணிரத்னம், கே.வி.ஆனந்த் இன்னபிற வெ.ம.க்கள் உண்மையிலேயே தைரியசாலிகளாக இருந்தால் தங்கள் படங்களில் நேரடியாக கருணாநிதியையோ, ஜெயலலிதாவையோ தாக்கி காட்சிகள், கதாபாத்திரங்கள் அமைக்கலாமே...! ###
டவசர் கழண்டுடும் பாஸ்.சும்மா ஏன் உசுப்பேதிக்கிட்டு.
ஜென்டில்மேன் படத்தில் பையன் படிக்க லஞ்சம் வாங்கும் அரசியல்வாதி பாத்திரம் கருணாநிதியை மனதில் வைத்து எடுத்ததுதான். கோர்ட்டு சீனில், சாட்சிக் கூண்டு எங்களுக்கு பஞ்சுமெத்தை, எதையும் சந்திப்போம் .... இந்த டயலாக் அப்படியே இவர் விடுவது போலவே இருக்கும். மேலும் முதல்வன் படம் வந்தபோது கருணாநிதிதான் முதல்வர், அதில் ரகுவரன் பாத்திரம் கருணாநிதியை நக்கலடித்து வைக்கப் பட்டது தான். அந்தப் படம் வெளிவந்த போது அதற்க்கு தடை போடலாமா என்ற பேச்சு கூட அடிபட்டது. அடுத்து பாரதிராஜாவின் "என் உயிர் தோழன்" படத்தில் ஒரு கட்சியின் தொண்டனை அதன் தலைமை எப்படியெல்லாம் தங்கள் சுயநலனுக்காக எப்படி பயன்படுத்திக் கொண்டு அவனை சக்கையாக துப்புகிறது என்பது தான் கதை. இதிலும் அந்த கட்சித் தலைவர் பாத்திரம் வடிவமைக்கப் பட்டது வேறு யாரு............ அவரே தான்!! இருந்தாலும், இப்போ தமிழக அரசியல் வரலாறு என்று படமெடுக்க முடியுமா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது. யாராவது ஒரு கட்சிக்கு சாதகமாக எடுத்தால் மற்றவர் கடுப்பாவார் என்பது மட்டுமே பிரச்சினை அல்ல, உண்மையை அப்படியே எடுத்தாலும் அதே நிலை தான், இப்போது ரெண்டு பக்கமும் கடுப்பாவார்கள்!! அது நடக்காது.
@ ஆரூர் மூனா செந்தில்
// பிரபா AGSல எந்த ஷோ பார்த்த. நான் 12.30 ஷோ அதே தியேட்டரில் தான் பார்த்தேன். //
நான் பார்த்தது காலை 9.45 காட்சி தல... நான் படம் முடிந்து வெளியே வரும்போது மணி 12:20... அநேகமாக நீங்கள் அப்போது அங்கேதான் இருந்திருப்பீர்கள்...
@ திண்டுக்கல் தனபாலன்
// நல்ல விமர்சனம்.... கடைசியில் படம் மரண மொக்கையோ ...? இந்தப் படத்திற்கு போவதாக இல்லை. ஏன்னா... அடுத்த மாசம் T.V.யிலே போட்ருவாங்க... நன்றி நண்பா ! //
நல்ல முடிவு தலைவா...
@ PREM.S
// ஹா ஹா நீங்க பெரிய அக்கௌன்டன்ட் பாஸ் //
எங்கள் தலைவரு சிபிக்கு முன் இதெல்லாம் கால்தூசு...
@ வவ்வால்
// ராஜ்நீதி ஹிந்தி படத்தை உல்டா செய்து இருப்பார்கள் என ஒரு யூகத்தில் இருந்தேன், ஆனால் அப்படி இல்லை போல.
ஒரு "தூளா"ன கதையை டிங்கரிங் செய்து சகுனியா உலாவ விட்டு இருக்காங்க போல. //
ராஜநீதி நான் பார்த்ததில்லை தல... ஆனால் ஃபிளாஷ்பேக் ஆரம்பித்ததுமே தூள் கதை என்று தெரிந்துவிட்டது...
// ரெயில்வே சுரங்கப்பாதை என்றால் அது மத்திய அரசு முடிவு , அப்புறம் ஏன் மாநில அரசோட சகுனி தனம் செய்யப்போறார் ஹீரோ? பிரதமரை கவுக்கிறாப்போல இல்லை படம் எடுக்கணும் :-))
NHAI திட்டத்தில கட்டின பாலத்துக்கு வி.காந்த் கலைஞர் கூட மல்லுக்கட்டினதை வச்சு இப்படி கதை பண்ணிட்டாங்க போல.டீ.ஆர்.பாலு அமைச்சர் என்பதால் அது கூட ஓ.கே.(சிவாஜில கூட இந்த கூத்து தான்) //
நம்ம சினிமா ரசிகர்கள் அந்த அளவிற்கு விவரமில்லாதவர்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் போலும்...
@ Kumaran
// விமர்சனம் கலக்கட்டிருச்சி..பார்த்து தோன்றியவற்றை அப்படியே பதிவு செய்திருக்கீங்க..அசத்தல்..இந்த படமெல்லாம் பார்ப்பேனானு தெரியலை..டைம் கிடைப்பின் பார்க்கலாம்.நன்றி. //
நன்றி குமரன்...
@ இரவு வானம்
// itS a medical miracle //
யோவ் என்னய்யா சொல்ற...
@ வீடு சுரேஸ்குமார்
// முரட்டுகாளைக்கு இது பரவாயில்ல....! //
தல... முரட்டுக்காளை போன்ற மொக்கை படங்களை நாங்கள் எப்படியெல்லாம் கொண்டாடுவோம் என்பதை எங்கள் லத்திகா, மேதை பட விமர்சனங்கள் பார்த்து தெரிந்துக்கொள்ளவும்...
@ மனசாட்சி™
// கடசில கேட்ட கேள்வி...ம் திராணி இருக்கா? பாக்கலாம் //
நன்றி மனசாட்சி...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// தம்பிக்கு வந்திருக்கறது ஆண்ட்டியோமேனியான்னு ஒரு பழைய வியாதி.... எல்லாருக்கும் வந்து போறதுதான்......... சரியாகிடும்.....! //
ஆமாம் ப.ரா... மணமாயிட்டா குணமாயிடும்'ன்னு நினைக்கிறேன்...
// அடங்கொன்னியா..... மொக்க பிகருன்னு சொல்லிப்புட்டு ஸ்க்ரீனுக்கு கீழ உத்து பாத்திருக்காருய்யா இந்தாளு.......... //
கோழி குருடா இருந்தாலும் லெக் பீஸ் நல்லா இருக்குதே...
// இப்பல்லாம் ஷங்கரே அப்படித்தானுங்க எடுக்குறாரு......... //
ஆமாம் ரொம்ப பழைய ஸ்டைல் என்பதைத்தான் அப்படி சொன்னேன்...
// எலே ஓடுலேய்ய்.... தம்பி ஏதோ கருத்து சொல்றாப்ல........ //
ஏதாவது சொல்லி ஆஃப் பண்ணிடுவீங்களே...
@ யுவகிருஷ்ணா
// படம் மொக்கைதான் போல. இருந்தாலும் விமர்சனம் பரபர நடையில் படுசுவாரஸ்யம். குறிப்பாக ஹீரோயினை வர்ணிக்கும் பத்தி அசத்தல். //
நன்றி லக்கி... தொடர்ந்து வர்ணிப்பேன்...
@ மோகன் குமார்
// ப்ரணீ தா உங்க காஜல் போலவே இருக்குன்னு நினைச்சா மொக்கை பிகருன்னு சொல்றீங்க ! //
தல... ப்ரணிதா காஜலின் கால்தூசு...
@ Jayadev Das
// மாப்பு, உனக்கு என்ன ஆச்சு? இப்படியெல்லாம் நேரடியா படம் எடுக்க முடியாது. கேசு போட்டுடுவாங்க, சென்சார்லேயே வெட்டி போட்டுடுவானுங்க. அதிகம் வேணாம், நம்ம ரஞ்சிக் கோட்டை வாலிபனோட கதையை படமா எடுக்கறதுக்கு அறை டஜன் பேரு ரெடியா இருக்காங்க, எடுக்கக் கூடாதுன்னு அவன் கேசு போட்டு நிறுத்தி வச்சிருக்கான். எங்கே இருக்கே நீ.........??!! //
இருங்க... எதுக்கும் உங்க மற்ற பின்னூட்டங்களையும் படித்துவிட்டு பதில் சொல்கிறேன்...
// காமடி கீமடி எதுவும் பண்ணலியே?! //
இயக்குனரின் பழமைவாதத்தை கிண்டலடித்திருக்கிறேன்...
// மாப்பு நீ........ நீதான்....... கலக்கிட்டே போ.......!! //
அந்த உதாரணமே படத்தில் இருந்து எடுக்கப்பட்டது தான் சார்...
// ஜென்டில்மேன் படத்தில் பையன் படிக்க லஞ்சம் வாங்கும் அரசியல்வாதி பாத்திரம் கருணாநிதியை மனதில் வைத்து எடுத்ததுதான். கோர்ட்டு சீனில், சாட்சிக் கூண்டு எங்களுக்கு பஞ்சுமெத்தை, எதையும் சந்திப்போம் .... இந்த டயலாக் அப்படியே இவர் விடுவது போலவே இருக்கும். மேலும் முதல்வன் படம் வந்தபோது கருணாநிதிதான் முதல்வர், அதில் ரகுவரன் பாத்திரம் கருணாநிதியை நக்கலடித்து வைக்கப் பட்டது தான். அந்தப் படம் வெளிவந்த போது அதற்க்கு தடை போடலாமா என்ற பேச்சு கூட அடிபட்டது. அடுத்து பாரதிராஜாவின் "என் உயிர் தோழன்" படத்தில் ஒரு கட்சியின் தொண்டனை அதன் தலைமை எப்படியெல்லாம் தங்கள் சுயநலனுக்காக எப்படி பயன்படுத்திக் கொண்டு அவனை சக்கையாக துப்புகிறது என்பது தான் கதை. இதிலும் அந்த கட்சித் தலைவர் பாத்திரம் வடிவமைக்கப் பட்டது வேறு யாரு............ அவரே தான்!! இருந்தாலும், இப்போ தமிழக அரசியல் வரலாறு என்று படமெடுக்க முடியுமா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது. யாராவது ஒரு கட்சிக்கு சாதகமாக எடுத்தால் மற்றவர் கடுப்பாவார் என்பது மட்டுமே பிரச்சினை அல்ல, உண்மையை அப்படியே எடுத்தாலும் அதே நிலை தான், இப்போது ரெண்டு பக்கமும் கடுப்பாவார்கள்!! அது நடக்காது. //
சார்... படங்களில் அவரை மாதிரி, இவரை மாதிரி என்று சமாதானம் சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம்... உண்மையில் ஷங்கருக்கோ மற்ற இயக்குனர்களுக்கோ மக்கள் மீது அக்கறையோ குறிப்பிட்ட அரசியல்வாதிகளின் மீது கோபமோ இருப்பதில்லை... பொதுமக்களுக்கு அரசியல்வாதிகள் மீது இருக்கும் கோபத்தை புத்திசாலி இயக்குனர்கள் காசாக மாற்றுகிறார்கள்... எரிகிற கொள்ளியில் இருந்து பிடுங்கின வரைக்கும் லாபம்... அதனால்தான் தைரியமிருந்தால் நேரடியாக தாக்கச்சொல்லி குறிப்பிட்டிருந்தேன்...
ஆங்... அனுஷ்காவும் ஆண்ட்ரியாவும் கெளரவ தோற்றம். (பேசாம கேவலத் தோற்றம்’ன்னு மாத்திடலாம்).//
அழகிய பொண்ணுங்களை அழுக்காக்கிட்டாயிங்களே...?!
சதுரங்கம் படம் கொஞ்சம் சில்லியாக கதையாக இருந்தாலும் கருணாநிதி ஜெயலலிதா என்றே வசனங்கள் வரும் பாருங்கள்
#ஷங்கர், மணிரத்னம், கே.வி.ஆனந்த் இன்னபிற வெ.ம.க்கள் உண்மையிலேயே தைரியசாலிகளாக இருந்தால் தங்கள் படங்களில் நேரடியாக கருணாநிதியையோ, ஜெயலலிதாவையோ தாக்கி காட்சிகள், கதாபாத்திரங்கள் அமைக்கலாமே...!#
அவங்க நல்லா இருக்கறது பிடிக்கலையா ? உங்களைப் போல தான் உண்மைதமிழனும் கேள்வி கேட்டிருக்கிறார் ... பார்க்கலாம் ஏதாவது நடக்கிறதா என்று !
// அழகிய பொண்ணுங்களை அழுக்காக்கிட்டாயிங்களே...?! //
இல்லஜி... அழகான பெண்களை ஒரே ஒரு மலிவான காட்சியில் காட்டுவது கேவலம்தானே...
@ வடக்குபட்டி ராம்சாமி
// சதுரங்கம் படம் கொஞ்சம் சில்லியாக கதையாக இருந்தாலும் கருணாநிதி ஜெயலலிதா என்றே வசனங்கள் வரும் பாருங்கள் //
டவுன்லோடு கிடைத்தால் கண்டிப்பாக பார்க்கிறேன்...
@ ananthu
// அவங்க நல்லா இருக்கறது பிடிக்கலையா ? உங்களைப் போல தான் உண்மைதமிழனும் கேள்வி கேட்டிருக்கிறார் ... பார்க்கலாம் ஏதாவது நடக்கிறதா என்று ! //
நீங்க வேற... நானோ உண்மைத்தமிழனோ கேள்வி கேட்பதால் ஒரு மசிரும் நடக்கப்போவதில்லை... என்னுடைய எண்ணத்தைச் சொன்னேன்... அவ்வளவுதான்...
வணக்கம் நண்பரே...
உங்களின் தளம் (இந்தப் பதிவும்+2) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...
வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_8.html) சென்று பார்க்கவும். நன்றி !
Post a Comment