அன்புள்ள வலைப்பூவிற்கு,
பல தடைகளை தாண்டி தடையறத் தாக்க படம் பார்த்தேன். ரிலீசாகி முழுசாக
முப்பது நாட்கள் ஆகியிருந்தாலும் கடைசி நிமிடம் வரைக்குமே செம த்ரில். தேவையில்லாத
காட்சியென்று ஒன்று கூட இல்லை. இரண்டு பாடல்களையும் கத்தரித்திருந்தால் செம நீட். மம்தா
– கேன்சரை கேன்சல் பண்ணிப்புட்டு வந்திருக்கும் நம்பிக்கை நாயகி. அருண் விஜய்யிடம்
“பிச்சிபுடுவேன்...” என்று செல்லமாக மிரட்டும் காட்சிகள் க்யூட். ஒரு பாடல்
காட்சியில் ஆர்ப்பாட்டமே இல்லாமல் மானாவாரியாக காட்டியிருக்கிறார். முக்கியமாக
மம்தாவுக்கு டப்பிங் கொடுத்தவருடைய வாய்ஸ் திரும்பத் திரும்ப கேட்கத் தூண்டுகிறது.
திரையரங்கில் பார்க்காமல் விட்டதற்காக கர்த்தரிடம் பாவமன்னிப்பு கேட்டுவிட
வேண்டும்.
உலகப்படங்களை உருவியெடுத்து தமிழ் பூசும் வேலையை நம்மவர்கள் நாசூக்காக
செய்துக்கொண்டிருக்கும் வேளையில் “ALONE” என்ற தாய்லாந்து திரைப்படத்தின் இந்திய
ரீமேக் உரிமையை அதிகாரப்பூர்வமாக பணம் கொடுத்து வாங்கியிருக்கிறது க்ளோபல் ஒன்
ஸ்டுடியோஸ். OATS சாப்பிடக்கூடிய சாத்தியம் இருந்தாலும் நேர்மையாக
செயல்பட்டிருக்கும் அந்நிறுவனத்தை பாராட்டலாம். தமிழ், தெலுகு, கன்னடம், ஹிந்தி
ஆகிய மொழிகளில் தயாராகிக்கொண்டிருக்கும் தாய்மொழி ரீமேக்கில் ப்ரியா மணி
ஓட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகளாக நடித்திருக்கிறார்.
“நான் அப்பவே சொன்னேன்ல...!” என்று பெருமைப்பட்டுக்கொள்ள முடியாத
விஷயம். அரசு கஜானாவில் இழப்பீட்டு தொகை கொடுக்க பணம் இல்லாததால் திருவொற்றியூர்
சாலை விரிவாக்கப் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தற்காலிகம்
என்றால் நான்கைந்து, பத்து, பதினைந்து வருடங்கள் கூட ஆகலாம். அதுவரைக்கும்
இடித்தது இடித்தபடி, போட்டது போட்டபடி. செய் அல்லது செத்து மடி என்றே
சொல்லத்தோன்றுகிறது.
சின்ன வயதிலிருந்தே ஹிந்தி கற்க வேண்டுமென்ற என்னுடைய பேராவலை
பூர்த்தி செய்யும்பொருட்டு காமாஸ்த்திரி எனும் பி-கிரேடு காம காவியத்தை கண்டேன். சிலர்
வித்தியாசமான கான்செப்ட் புடிக்கிறேன் என்று கஜுராஹோ, காம சூத்ரா, பூர்வ ஜென்மம்
என்று ஜல்லியடிப்பது என்ன எழவென்று தெரியவில்லை. அதுவரைக்கும் கதையோடு
படமெடுக்கிறேன் என்று மொக்கை போடாமல் படம் முழுவதுமே முகர்ந்து பார்க்கும் காட்சி
வைத்து நகர்ந்து இருக்கிறார்கள். அதையாவது காட்டினார்களே என்று வருத்தப்படுவதை
தவிர வேறு வழியில்லை. ம்ம்ம் முன்னமாதிரி இல்லை, இப்ப வர்ற பிட்டுப்படங்களில் மெசேஜ் சொல்வதே
கிடையாது. உபரித்தகவல்: பல்லாவரம் லட்ச்சுமி திரையரங்கம் தன்னுடைய கடைசி
நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறது.
ட்வீட் எடு கொண்டாடு:
இப்போதும் ஜன்னலோர
சீட்டுக்கு ஏங்கும் எண்ணத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் என் மிஞ்சிய குழந்தைத்தனம்.
கமிட்டானவங்க
சிங்கிளா இருக்கிற மாதிரியும் ,சிங்கிளா
இருக்கிறவங்க கமிட்டானவங்க மாதிரியும் காட்டிக்கிறதுல ஒரு கிக்கு தான்!
டீனேஜர்களும்
மேனேஜர்களும் யார் பேச்சையும் கேட்பதில்லை
அஜித்த ஓட்றவன் விஜய் ரசிகனா இருப்பான்
..ஆனா விஜய ஓட்றவன் மன்சூர் அலி கான் ரசிகனா கூட இருப்பான் !!
பவர் ஸ்டார் பதறணும்...! சாம் ஆண்டர்சன் சிதறணும்...! என்று வெறியோடு
களமிறங்கியிருக்கிறார் வில்பர் சற்குணராஜ்...! ஆம், தலைவர் சினிமாவில்
நடிக்கப்போகிறார். சிம்பிள் சூப்பர் ஸ்டார் (ம்க்கும்) என்று பெயரிடப்பட்டுள்ள
அன்னாரின் திரைப்படத்திற்கு போஸ்டர் வடிவமைக்கும் போட்டி கோலாகலமாக
நடந்துக்கொண்டிருக்கிறது. போட்டோ ஷாப் பாய்ஸ், உங்க திறமையை கொஞ்சம் காட்டுங்க...!
போட்டி விவரங்கள்
மதராசப்பட்டினம்
சாந்தோமில் கம்பீரமாக நிற்கும் கதீட்ரல் 1896ல் கட்டப்பட்டது. 12ம்
நூற்றாண்டில் இங்கு நேமிநாதர் சமணக்கோவில் இருந்ததாக நம்பப்படுகிறது. அப்போது கடல்
அரிப்பு இருந்த காரணத்தால், மூலவர் அகற்றப்பட்டு தென் ஆற்காடு – மேல்
சித்தாமூருக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிகிறது. போர்ச்சுகீசியர்கள் அப்போது
வெற்றுக்கட்டிடமாக இருந்த கோவிலின் பகுதிகளை தங்கள் கோட்டையாக மாற்றிக்கொண்டது
மட்டுமின்றி அங்கிருந்த மற்றோர் ஹிந்து கோவிலையும் இடித்து அந்த இடத்தையும்
ஆக்கிரமித்துக் கொண்டனர். போர்ச்சுகீசியர்களுக்கு மற்ற மதங்களின் துவேஷம் அதிகமாக
இருந்தது. மதப்பரப்பை புனிதமான கடமையாக கருதினர். பல இடங்களில் அவர்கள்
கட்டாயமாகப் பல இந்துக்களை மதமாற்றம் செய்வித்து வந்தனர்.
முனிவர்களின் கல்லறைகளின்மேல் கட்டப்பட்ட கிறிஸ்தவத் தொழுமிடங்கள்
அரிதானவை. அவ்வகை தொழுமிடங்களில், கதீட்ரல் சிறந்த அமைப்பு கொண்டது. கதீட்ரலில்
உள்ள வண்ணத்தால் ஆன ஜன்னல் கண்ணாடிக் கதவுகள், ஜெர்மனியின் மியூனிச் நகரில்
செய்யப்பட்டவை. இங்கிருக்கும் மூன்றடி மாதா சிலை போர்ச்சுகலிலிருந்து 1543ல் கொண்டு
வரப்பட்டதாக நம்பப்படுகிறது.
(நரசய்யா எழுதிய மதராசப்பட்டினம் புத்தகத்திலிருந்து...)
சட்டென பார்த்ததும் “இது யாருய்யா கோமாளி மாதிரி...?” என்று
எண்ணத்தோன்றினாலும் கனடாவை சேர்ந்த ரிவ்யூ ராஜாவின் வீடியோக்கள் ரசிக்க
வைக்கின்றன. ராஜாவின் சகுனி விமர்சனம் உங்கள் பார்வைக்காக...!
திருமண நிகழ்வுகளில் வீடியோ எடுக்கும் நண்பர்களுக்காக மேற்கண்ட பாடலை
அர்பணிக்கிறேன்...! ங்கொய்யால சாவட்டும் :)
சிக்னல் பிச்சைக்காரர்களுக்கு நாகரிகமாக ஒரு செருப்படி
கொடுத்திருக்கிறார் மடோன் அஷ்வின்...!
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
38 comments:
சாந்தோம் தேவாலயத்துக்கு 2000 வருஷம் வரலாறு சொல்லுறாங்க, நரசய்யா என்ன வரலாற்று ஆவண காப்பாளாரா?
பல்லாவாரம் லட்சுமி தென் சென்னை ஆச்சே?
யோவ் வட சென்னைலவே முருகன், ராகவேந்திரா, வெங்கடேஸ்வரா, ஓடியன் மணிலாம் அப்போ ஓடுதா இன்னும் :-))
குறும் படம்...நிறைவாக இருக்கிறது.
தெரிவு செய்த பிரபாவுக்கு நன்றி.
எத்தனை குப்பைகளை கிண்டி இந்த மாணிக்கத்தை கண்டு பிடித்தீர்கள்!
குறும் படம்...நிறைவாக இருக்கிறது.
தெரிவு செய்த பிரபாவுக்கு நன்றி.
எத்தனை குப்பைகளை கிண்டி இந்த மாணிக்கத்தை கண்டு பிடித்தீர்கள்!
//////////////////////
அண்ணா! ரிபீட்டு!
"தடையறத் தாக்க" ரொம்பவே நல்ல படம்...எனக்கு மிகவும் பிடித்து இருந்தது...
ஹிந்தி மட்டுமா கத்துகிட்டேங்க...??? இப்ப எல்லாம் சென்னைல சீன் படங்கள் வருதா பாஸ்..
"வில்பர் சற்குணராஜ்" பவர் ஸ்டார் அளவுக்கு பெரிய பெர்பார்மர் கிடையாது...அவரோட சில பாட்டு வீடியோஸ் பார்த்து இருக்கேன்...சிரிப்பே வரல.. இவர் எல்லாம் பவர்க்கு போட்டியா வரவே முடியாது...
தர்மம் நானும் பார்த்தேன்...சாதாரண கதைக்கு அஷ்வின் ரொம்பவே நல்ல மேக்கிங் செய்து இருந்தார்..எனக்கு பிடித்து இருந்தது..
எல்லா சரக்கும் சூப்பர்
//மம்தா – கேன்சரை கேன்சல் பண்ணிப்புட்டு வந்திருக்கும் நம்பிக்கை நாயகி. அருண் விஜய்யிடம் “பிச்சிபுடுவேன்...” என்று செல்லமாக மிரட்டும் காட்சிகள் க்யூட்
//
அதும் அவர் குடுக்கும் சில எக்ஸ்பிரேஷேன் சூப்பர்
//அஜித்த ஓட்றவன் விஜய் ரசிகனா இருப்பான் ..ஆனா விஜய ஓட்றவன் மன்சூர் அலி கான் ரசிகனா கூட இருப்பான் !!
//
100% true
தர்மம் குறுப்படம் பார்த்தேன் .. அருமையான படைப்பு , பிறப்பு சாலமன் அன்றே புகழ்ந்து தள்ளிவிட்டார் .. கலக்கல் படம்
தடையறத் தாக்க பாக்கணும்
சரக்கு சரக்கு தான்... ம்
//அஜித்த ஓட்றவன் விஜய் ரசிகனா இருப்பான் ..ஆனா விஜய ஓட்றவன் மன்சூர் அலி கான் ரசிகனா கூட இருப்பான் !!//
ஹி ஹி செம... :)
//அஜித்த ஓட்றவன் விஜய் ரசிகனா இருப்பான் ..ஆனா விஜய ஓட்றவன் மன்சூர் அலி கான் ரசிகனா கூட இருப்பான் !!// ஹா.........ஹா.........ஹா.........ஹா.........
\\முன்னமாதிரி இல்லை, இப்ப வர்ற பிட்டுப்படங்களில் மெசேஜ் சொல்வதே கிடையாது.\\ என்கேங்கேஎல்லாம் நமாளுங்க மேசாஜை தேடுராங்கப்பா.......!!
\\பல்லாவரம் லட்ச்சுமி திரையரங்கம் தன்னுடைய கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறது.\\ பரங்கிமலை ஜோதி பத்திரமா இருக்காளா? நான் அங்க எல்லோரும் பார்க்கும் படத்தைத்தான் ஒரு தடவை பார்த்தேன், சந்தேகமா பாக்காதீங்கப்பு......
தகவல்கள் அருமை..... பகிர்வுக்கு நன்றி...
Nice Blog Prabha. Thanks for Sharing.
பவர் ஸ்டார், சாம் எல்லாம் லோக்கல்.. வில்பர் சற்குணராஜ் ஆல் ஓவர் த வோர்ட்டு ஃபேமஸ்... அவரோட cobra song ஒண்ணு இருக்கு...தாறு மாறு.. பாத்து enjoy பண்ணுங்க..
@ வவ்வால்
// நரசய்யா என்ன வரலாற்று ஆவண காப்பாளாரா? //
" அண்மையில் ஆங்கிலத்தில் சென்னையைப்பற்றி நூலெழுதும் (Madras Gazetteer) பணியில் ஒரு அங்கத்தினராக பங்கு பெறும் பெருமை எனக்குக் கிடைத்தது. அப்போது சில சரித்திரப் புகழ் வாய்ந்த நூல்களைப் படிக்க நேர்ந்தது. அந்தத் தாக்கத்தில்தான் இம்மாதிரியான ஒரு நூல் தமிழில் வர வேண்டுமென்ற அவா என்னுள் எழுந்தது. "
இவ்வாறு நரசய்யா குறிப்பிட்டிருக்கிறார்... Vestiges of Old Madras - Henry Davison Love, Madras in the Olden Times - Talboys Wheeler போன்ற நூல்களில் இருந்து தகவல்களை தொகுத்திருக்கிறார் நரசய்யா...
// சாந்தோம் தேவாலயத்துக்கு 2000 வருஷம் வரலாறு சொல்லுறாங்க, //
வாஸ்கோ டகாமா இந்தியாவிற்கு வருகை தந்ததே 1498ம் வருடத்தில் தான்... பின்னர் எப்படி இரண்டாயிரம் ஆண்டு வரலாறு இருக்க முடியும்...
// பல்லாவாரம் லட்சுமி தென் சென்னை ஆச்சே? //
ஆமாம் வடசென்னையிலிருந்து அசராமல் தென் சென்னை வரை பயணம் செய்து படம் பார்த்து வந்தேன்...
// யோவ் வட சென்னைலவே முருகன், ராகவேந்திரா, வெங்கடேஸ்வரா, ஓடியன் மணிலாம் அப்போ ஓடுதா இன்னும் :-)) //
முருகன் யாருன்னு எனக்கு தெரியல... ராகு, வெங்கியெல்லாம் மூடியாச்சு... ஓடியன்மணி மட்டும் இன்னும் இருக்குது...
@ உலக சினிமா ரசிகன்
// குறும் படம்...நிறைவாக இருக்கிறது.
தெரிவு செய்த பிரபாவுக்கு நன்றி.
எத்தனை குப்பைகளை கிண்டி இந்த மாணிக்கத்தை கண்டு பிடித்தீர்கள்! //
இப்பொழுதெல்லாம் பெரும்பாலான குறும்படங்கள் நன்றாகவே இருக்கின்றன தல... இது ஏற்கனவே சிவா பரிந்துரைத்தது தான்...
@ வீடு சுரேஸ்குமார்
// அண்ணா! ரிபீட்டு! //
கமெண்டும் ரிபீட்டு...
@ ராஜ்
// "தடையறத் தாக்க" ரொம்பவே நல்ல படம்...எனக்கு மிகவும் பிடித்து இருந்தது... //
எனக்கும் பிடித்திருந்தது... ஆனால் முதல்நாளே திரையரங்கில் பார்த்திருந்தால் பிடித்திருக்குமா என்று தெரியவில்லை...
// ஹிந்தி மட்டுமா கத்துகிட்டேங்க...??? இப்ப எல்லாம் சென்னைல சீன் படங்கள் வருதா பாஸ்.. //
இந்தி கத்துக்கவே முடியல தல... சீன் படங்கள் வருகின்றன... ஆனால் முன்பைப் போல தரமில்லை...
// "வில்பர் சற்குணராஜ்" பவர் ஸ்டார் அளவுக்கு பெரிய பெர்பார்மர் கிடையாது...அவரோட சில பாட்டு வீடியோஸ் பார்த்து இருக்கேன்...சிரிப்பே வரல.. இவர் எல்லாம் பவர்க்கு போட்டியா வரவே முடியாது... //
வில்பரை எந்த கேட்டகிரியில் சேர்ப்பது என்று புரியவில்லை...
@ sethu
// எல்லா சரக்கும் சூப்பர் //
நன்றி சேது...
@ "என் ராஜபாட்டை"- ராஜா
// அதும் அவர் குடுக்கும் சில எக்ஸ்பிரேஷேன் சூப்பர் //
ஆமாம் ரா.ரா.,.. எனக்கும் பிடித்திருந்தது...
@ மனசாட்சி™
// சரக்கு சரக்கு தான்... ம் //
நன்றி மனசாட்சி...
@ முத்துசிவா
// ஹி ஹி செம... :) //
நன்றி தல...
// பவர் ஸ்டார், சாம் எல்லாம் லோக்கல்.. வில்பர் சற்குணராஜ் ஆல் ஓவர் த வோர்ட்டு ஃபேமஸ்... அவரோட cobra song ஒண்ணு இருக்கு...தாறு மாறு.. பாத்து enjoy பண்ணுங்க.. //
கோப்ரா சாங், லவ் மேரேஜ், சிக்கன் 65, கக்கா போவது எப்படி ? அத்தனையும் பார்த்திருக்கேன் தல... நான் தீவிரமான வில்பர் ரசிகன்...
@ Jayadev Das
// என்கேங்கேஎல்லாம் நமாளுங்க மேசாஜை தேடுராங்கப்பா.......!! //
தல... நகைச்சுவைக்காக சொன்னாலும் கூட உண்மையாகவே எல்லா விதமான படங்களிலும் நாம் கற்றுக்கொள்ள ஏதோ ஒன்று இருக்கிறது...
// ரங்கிமலை ஜோதி பத்திரமா இருக்காளா? நான் அங்க எல்லோரும் பார்க்கும் படத்தைத்தான் ஒரு தடவை பார்த்தேன், சந்தேகமா பாக்காதீங்கப்பு...... //
ஜோதி பத்திரமா தான் இருக்கா... ஆனா இப்ப மேற்படி படங்கள் போடுவதில்லை...
@ Ponmahes
// தகவல்கள் அருமை..... பகிர்வுக்கு நன்றி... //
நன்றி தோழரே...
@ N.H.பிரசாத்
// Nice Blog Prabha. Thanks for Sharing. //
நன்றி நண்பா...
பிரபா,
//வாஸ்கோ டகாமா இந்தியாவிற்கு வருகை தந்ததே 1498ம் வருடத்தில் தான்... பின்னர் எப்படி இரண்டாயிரம் ஆண்டு வரலாறு இருக்க முடியும்...//
மெட்ராஸ் கெசட்டியர்னு எல்லாம் சொல்லி மிரட்டிட்டு இப்படிக்கேட்டா எப்படி?
வாஸ்கோட காமாவிற்கு முன்னரே ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு வந்தாச்சு.குறிப்பாக கிரேக்கர்கள்(கிரீஸ் ஈரோப் இல்லைனு சொல்லிடாதிங்க)
மவுரிய அரசர்கள்,ஏசுவுக்கு முந்தைய காலம், செலுக்கஸ் நிக்கேடார் என்ற கிரேக்க மன்னனின் அமைச்சர் மெகஸ்தனிஸ், சந்திரகுப்தா, அவைக்கு வந்து ,நீண்ட காலம் இருந்து இன்டிகா என்ற நூலை எழுதியுள்ளார், அந்நூலே பலரும் இந்தியாவுக்கு வர வேண்டும் என ஆசையை தூண்டியது.
சங்க கால பாண்டியர்கள் ,யவனர்கள்(கிரேக்கர்கள்-romans) உடன் வாணிகம் கொற்கை துறைமுகம் வாயிலாக செய்துள்ளனர்.சேரர்கள் தொண்டி,முசுறி வழியாக யவனர்களுடன் கடல் வாணிபம் செய்துள்ளார்கள்.
சாந்தோமில் உள்ளது புனித தாமஸ் கல்லறை அவர் ஏசுவின் நேரடி சீடர், ஏசு உயிர்பித்து வந்தார் என்பதை நம்பாமல் கேள்வி கேட்டதால் ,மீண்டும் ஏசு அவருக்கு காட்சி தந்தார்,எனவே டவுட்டிங்க் தாமஸ் எனப்பெயர் பெற்றவர். உலகம் எங்கும் கிருத்துவம் பரப்ப என அப்போதே கொச்சி வழியாக இந்தியாவுக்கு வந்துவிட்டார். கடைசியாக தமிழகம் வந்து பரங்கிமலை,மயிலாப்பூர் ஆகிய இடங்களில் வசித்தார்.உலகிலேயே இரண்டு சர்ச்சுகள் தான் புனித சீடர்களின் கல்லறையுடன் உள்ளது,ஒன்று வாட்டிகனில் உள்ள செயிண்ட் பீட்டர் தேவாலயம், மற்றது சாந்தோமில் உள்ள புனித தாமஸ் தேவாலயம்.
வாஸ்கோடகாமா கிரிக்-ரோமனுக்கு மட்டுமே தெரிந்த கடல் வழியை உலகறிய செய்தார்.
----
மிண்ட் முருகன் ,டான் பாஸ்கோ பக்கம் தெரியாதா? வெங்கடேஸ்வரா,ராகவேந்திராவில் எல்லாம் பார்த்து இருக்கேன்.அப்போ பூவெல்லாம் உன் வாசம் படம் பேசின் பிரிட்ஜ் பாரத்ல தான் பார்த்தேன்.ஹி..ஹி நாமளும் எரியா விட்டு ஏரியா போய் படம் பார்க்கிறதுல ஒரு கிக்குனு போறது :-))
வள்ளலார் நகர்ல கிரவுனா ,அங்கே சித்திரம் பேசுதடி பார்த்தேன்னா பார்த்துக்கோங்க.இப்போ அந்த தியேட்டர்லாம் இருக்கான்னே டவுட்.
//பவர் ஸ்டார் பதறணும்...! சாம் ஆண்டர்சன் சிதறணும்...! என்று வெறியோடு களமிறங்கியிருக்கிறார் வில்பர் சற்குணராஜ்...!//
என்ன தான் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? இவரு அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டாரு.
குறும்படமும் ரசிக்க வைத்தது. இப்பொழுதெல்லாம் 2 மணி நேரம் வேஸ்ட் பண்ணி பார்க்கும் தமிழ்ப்படங்களை விட 10-15 நிமிடத்தில் பார்க்கும் குறும்படங்கள் திருப்தியைத் தருகிறது.
@ வவ்வால்
யாரு தல நீங்க... நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் :)
உங்களுக்கு பதில் போடுவதற்காக வேறொரு நண்பரை அனுப்பி வைக்கிறேன்...
பிரபா,
என்னைய வச்சு காமெடி கீமெடி செய்யலையே ...அவ்வ்:-))
இப்போ வட சென்னையில புதுசா வந்த எஸ்-2 தவிர எல்லாம் மூடியாச்சா ?
---------
அலோன் படம் தான் மாற்றானா "ஓட்ஸ்" சாப்பிடுதுன்னு கிசு கிசு ஓடுதே ...
கலக்கலான ஒயின்ஷாப்.
அருமை... அருமை...
என்னது பல்லாவரம் லட்சுமி அபீட்டா, என்னாப்பா சொல்லுறீங்க.
@ வவ்வால்
// என்னைய வச்சு காமெடி கீமெடி செய்யலையே ...அவ்வ்:-)) //
சத்தியமா இல்லை வவ்ஸ்... சாந்தோம் தேவாலயம் பற்றி மேலதிக தகவல்கள் கொடுத்தமைக்கு மிக்க நன்றி...
// இப்போ வட சென்னையில புதுசா வந்த எஸ்-2 தவிர எல்லாம் மூடியாச்சா ? //
ஏன் இல்லை... பிரைட்டன் - ஐ ட்ரீம்ஸ் திரையரங்கமா மாறியிருக்கு... அம்பத்தூர் திரையரங்குகள் கலக்குகின்றன... அகஸ்தியா, மகாராணி, பாரத், எம்.எம் எல்லாம் இருக்கின்றனவே...
// அலோன் படம் தான் மாற்றானா "ஓட்ஸ்" சாப்பிடுதுன்னு கிசு கிசு ஓடுதே //
எத வச்சி அப்படி சொல்றீங்க...
வில்பரின் படங்கள் வெளிநாடுகளில் பிய்த்துக்கொண்டு ஓடினாலும் ஓடும்!!! என் பதிவுகளை பரிந்துரைத்ததிற்கு நன்றி நண்பரே!
நல்ல பதிவு.. லட்சுமி திரையரங்கத்தின் நிலை பரிதாபமாக இருக்கின்றது .. நேமிநாதர் கோவில் பற்றியத் தகவல் அருமை சகோ..
ரிவியு ராஜா .. அருமை .. கனடாவில் வெள்ளையர்கள் தமிழ் படங்கள் பார்க்கவும், தமிழி பேசவும் கற்றுக் கொண்டுவிட்டார்கள்.. ஈழத்தமிழர்களுக்கு நன்றி சொல்லுங்கள் ... !!
பிரபா,
எல்லா தியேட்டரும் நல்லா இருந்தா சரி, நான் எல்லாத்திலும் படம் பார்த்திருக்கேன்(எந்த ஏரியா போனாலும் தியேட்டர்&பார் விசிட் தான்),இன்னும் ஓடுதுனு கேட்கும் போது சந்தோஷமே,
//// அலோன் படம் தான் மாற்றானா "ஓட்ஸ்" சாப்பிடுதுன்னு கிசு கிசு ஓடுதே //
எத வச்சி அப்படி சொல்றீங்க...//
எத வச்சுன்னு கேட்டீரே, இப்போ நாம சொன்னதை வச்சு அவன் ,அவன் பதிவ போட்டு ஹிட்ஸ் அள்ளுறான் :-))
இந்த மாறி படம் எடுகுறவங்களுக்கு வாய்பு தந்தா தமிழ் சினிமா நல்ல இற்கும் தரமான படம் வரும்
Post a Comment