அன்புள்ள வலைப்பூவிற்கு,
வெள்ளிக்கிழமை இரவு, ஒருவேளை கொஞ்சம் குஜாலாக இருக்குமோ என்று நம்பி
ஒரு நடிகையின் வாக்குமூலம் பார்க்க ஆரம்பித்தேன். ஸ்கூல் பசங்க மேடை நாடகத்தில்
நடிப்பது போல அப்படியொரு செயற்கைத்தனம் அத்தனை பேர் நடிப்பிலும். ஜோதிலட்சுமி,
மனோபாலா போன்றவர்கள் விதிவிலக்கு. “ஒரு பொண்ணோட மனசு ஒரு பொண்ணுக்கு தான்
தெரியும்”, “என்னய்யா கையில வெண்ணையை வச்சிக்கிட்டு நெய்யுக்கு அலையுற” என்று
ரொம்ப ஃப்ரெஷ்ஷான டயலாக்ஸ். மெகா சீரியல் பார்க்கும் உணர்வு. பாதி படத்திற்கு மேல்
பார்க்க முடியவில்லை. அட்லீஸ்ட் சோனியா அகர்வாலுடைய அம்மா கேரக்டரிலாவது வேறு
யாரையாவது நடிக்க வைத்திருக்கலாம்.
ஸ்பென்சர் பிளாசா எளியோர்களின் ஷாப்பிங் மாலாகவும், EAவில் பார்க்கிங்
பணம் கட்டி மாளாதவர்களுக்கு பார்க்கிங் கூடாரமாகவும் மாறியிருப்பது அறிந்ததே. இருப்பினும்
லேண்ட்மார்க், மியூசிக் வேர்ல்டு போன்ற கடைகளில் பழைய கம்பீரத்தை காண முடியும்.
இரண்டு நாட்களுக்கு முன்பு சென்றிருந்தபோது, மால் பெரும்பான்மைக்கு ஏசி வேலை
செய்யவில்லை. லேண்ட்மார்க் கடையில் நிறைய புத்தகங்களுக்கு 70 சதம் தள்ளுபடி
இருந்தாலும் புழுக்கம் தாளாமல் வெளியே அலறியடித்து வந்தபடி இருந்தனர் மக்கள். இதைக்கண்டு
மனம் வருந்திய லேண்ட்மார்க் மேனேஜர் வாடிக்கையாளர்கள் தாகம் தணிக்க இலவச பெப்சி
கொடுத்து மகிழ்விக்கிறார். ஃபுட் கோர்ட் பகுதியில் நிறைய கடைகள் மூடப்பட்டு
விட்டன. எஞ்சியிருக்கும் கே.எப்.சி போன்ற கடைகளில் கூட முன்பிருந்த வாடிக்கையாளர்
சேவை கிடைப்பதில்லை. நடக்கும் சம்பவங்களை கோர்த்துப் பார்க்கும்போதே விரைவில்
ஸ்பென்சர் ப்ளாசாவும் எக்ஸ்பிரஸ் அவென்யூவுக்கு இணையாக புதுப்பிக்கப்படும் என்றே
தோன்றுகிறது.
சிவாஜி நடித்த சிறந்த பத்து படங்களில் நிச்சயமாக தேவர் மகனும்
இருக்கும். ஆனால் அந்த ரோலில் எஸ்.எஸ்.ஆர் தான் நடிப்பதாக இருந்தது. சிவாஜிக்கு
அந்த நேரத்தில் உடல்நிலை சரியில்லை. ஆனால் சிவாஜிகிட்ட போய் கமல் கதையைச்
சொன்னதும் உடல்நிலையை பற்றி கவலைப்படாமல் நானே நடிக்கிறேன்னு கிளம்பிட்டார்
சிவாஜி. அது மட்டுமல்ல, ரேவதி ரோலில் நடிப்பதற்கு மீனாதான் தேர்வானார். ஷூட்டிங்
தொடங்க தாமதமாகி, அதற்குள் மீனாவிற்கு ஆந்திர படவாய்ப்புகள் குவிய, மீனா எஸ்கேப்.
இல்லையென்றால் மீனாதான் இஞ்சியிடுப்பழகி...! நன்றி: சினிமா
விகடன்
ட்வீட் எடு கொண்டாடு:
திருமணத்திற்க்கு
அறிவு,அழகு,பணிவு,சம்பாதிக்கும்,குடும்ப பாங்கான பெண் வேண்டுமாம்# ஹைலி ஹைபோதெடிகல் ரிக்வையர்மெண்ட்!
கொய்யால!
விம்பிள்டன்னை விஜய் டிவில தான் டெலிகாஸ்ட் பண்ணனும்! எல்லாரும் ஒரே அழுகாச்சி!
பிக் பேங் தியரியை நாம் பிராக்டிகலாகக்
காணும் நாள் வெகுதொலைவில் இல்லை! # கலா மாஸ்டர் - குசுபு – நமீதா
ரேசனில் சீனி
பார்த்து வர சொன்னாள் அம்மா; அவளுக்கு எங்கே தெரிய போகிறது 70 kg சீனி
மூடை எதிர் வீட்டில் இருப்பது தேன்மொழி என்ற பெயரில்.
Jus spoke to power star! Nxt week shankar's -i shooing
with vikram. Way to go power star!
மதராசப்பட்டினம்
நாட்டுக்கதையாக “லஸ்” வந்த விதம் இவ்வாறு கூறப்படுகிறது :- “கடலில்
புயலால் அவதியுற்ற மாலுமிகள் சிலர் தமது தெய்வத்தை வேண்டிக்கொண்டபோது, அவர்களுக்கு
ஆகாயத்தில் ஒரு ஒளி தெரிந்து அது இவ்விடத்திற்கு கடல் வழி காட்டி இட்டுச்
சென்றதென்றும், அவ்வாறு அவர்கள் உயிர் தப்பிக்கரை சேர்ந்த இடம் லஸ் என்றும், அங்கு
அந்த ஒளி மிகப்பிரகாசமாக தெரிந்து மறைந்ததென்றும், அந்த மறைந்த இடத்தில் அவர்கள்
ஒரு மாதா கோவிலெழுப்பி, அதற்கு “எங்கள் புனித ஒளி மாதா கோவில்” என்று
பெயரிட்டதாகவும் தெரிகிறது. (லத்தீன் மொழியில் லஸ் என்றால் ஒளி என்று பொருள்)
இரண்டு நாட்களுக்கு முன், நண்பர் வீட்டுக்கு அவசர அவசரமாக
சென்றுக்கொண்டிருக்கும்போது தெருவோரத்தில் ஒரு டெம்போவில் இருந்து சினிமா பாடல்
ஒலித்தது. அதன்முன்பு ஒரு யுவனும் யுவதியும் டான்ஸிக்கொண்டிருந்தார்கள். நேரமின்மை
காரணமாக சட்டென கடந்து சென்றாலும் பாடல் பச்சக்கென்று ஒட்டிக்கொண்டது. யூடியூபில்
சல்லடை போட்டு தேடியெடுத்து போட்டிருக்கிறேன். எதிர்க்கட்சி தலைவரு என்னமா ஆடுறாரு
பாருங்க...! பாடல் முடிந்தபிறகு கிளுகிளுப்பான விஜயகாந்த் தொப்புள் காட்சியை
தவறவிட வேண்டாம்.
சென்ற வாரம் பார்த்த தர்மம் போலவே விரக்தியான இளைஞர் ஒருவரின்
படைப்பு. ஆனால் எல்லோருமே அப்படியல்ல, ஒருசில நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பதை
பதிவு செய்கிறது No Comments...!
மேலே இருக்கும் வீடியோ - காலையில் கக்கா வராமல் அவதிப்படுவோருக்கு
அருமருந்து...!
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
N.R.PRABHAKARAN
|
14 comments:
குறும்படம் மட்டும்தான் தேறிச்சி!!
கமல் வீடியோவிற்கும் கக்கா போறதுக்கும் என்ன சம்பந்தம்.. பிரபா பேசுறதும் இப்போ பாதிதான் புறிகிறது.. ஒலகநாயகன் உளரல் மாதிரி!!!
உலக நாயகன் நிலைமை இப்பிடியா போச்சே... இந்தாளு என்னக்கித்தான் திருந்தப்போறாருன்னு தெரியல...
ஒரு நடிகையின் வாக்குமூலம் பாதி பாத்திருக்கீங்களே, உங்க மன தைரியத்துக்கு நான் தலை வணங்குகிறேன்.
விசயகாந்த் ரசிகர் வாழ்கோ...!
கமல் வழக்கம் போல தானே பேசுனார்....
காக்டெயில் தூக்காலா இருக்குன்னு பொய் சொல்ல முடியல....மற்றபடி சொன்ன விடயம்... ம்
சரக்குல கொஞ்சம் அதிகமாவே தண்ணி சேர்ந்த மாதிரி இருக்கு, இன்னும் கொஞ்சம் சரக்க ஊத்துக்குங்க, சூப்பரா இருக்கும் :-)
//:-) @RajanLeaks
பிக் பேங் தியரியை நாம் பிராக்டிகலாகக் காணும் நாள் வெகுதொலைவில் இல்லை! # கலா மாஸ்டர் - குசுபு – நமீதா
//
சாரி நான் சின்ன குழந்தையாய் இருப்பதால் இது புரியவில்லை
உங்களுடைய அனைத்து பதிவுகளையும் படித்து வருகிறேன் . நன்றாக உள்ளது . தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் .
ஒயின் ஷாப் விஷயங்கள் அனைத்தும் அருமை பிரபா. பகிர்வுக்கு நன்றி.
கக்கா.......... போயிருச்சு...
நடிகையின் கதைக்கு பதில் வேலு பிரபாகரின் காதல் கதை பாருங்களேன்... தேவைப்பட்டது கொஞ்சநூண்டு கெடைக்கும்...#ஆல்பர்ட் தியேட்டர் நினைவுகள்..
பிபி எல்லாம் படிச்சாச்சு கடைசி வீடியோவுக்கு தான் இணையம் வேகம் தரவில்லை... முயற்சிக்கிறேன்..
Post a Comment