அன்புள்ள வலைப்பூவிற்கு,
வசீகரமான ட்ரைலரை நம்பி நிறைய படத்திற்கு போயிருக்கிறேன், சில
சமயங்களில் க்ரியேடிவான நாளிதழ் விளம்பரங்கள் கூட படம் பார்க்க வைத்திருக்கிறது,
ஏன் வித்தியாசமான தலைப்பை நம்பி மட்டுமே கூட சிற்சில படங்களை பார்த்திருக்கிறேன்,
ஆனால் முதல்முறையாக ஒரு இயக்குனரின் பெயர்...! காந்தி மார்க்ஸ்...! என்னவொரு
முரண்...!
ஹனிமூன் கொண்டாடுவதற்காக மலை பங்களாவிற்கு செல்லும் தம்பதியின்
அமானுஷ்ய அனுபவங்கள்.
விறுவிறுப்பான கார் சேசிங் காட்சியோடு படம் ஆரம்பமாகிறது. ஹனிமூன்
ஜோடியை நால்வர் குழு ஒன்று ஜீப்பில் துரத்திக்கொண்டு வருகிறது. அவர்கள் ஏன் துரத்திக்கொண்டு
வருகிறார்கள்...? ஹீரோ ஏன் டூமாங்கோலி மாதிரி நடந்துக்கொள்கிறார்...? ஹீரோயின்
மறைத்து வைக்கும் பொருள் என்ன...? துரத்தி வந்த வில்லன் குழு இறுதியில் என்ன
ஆனது...? சாமியார் ஏவிவிட்ட ஆத்மா யாருடையது...? மேலும் பற்பல உப கேள்விகளுள்
பலவற்றிற்கு இரண்டாம் பாதியில் விடை சொல்லியும், சிலவற்றிற்கு படம்
முடிந்தபின்னரும் கூட விடையே சொல்லாமல் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார் காந்தி
மார்க்ஸ்.
ஹீரோ ஒரு மொக்க ப்ளேடு. டிவி சீரியல்களுக்கும், கவர்ச்சி நடிகைகளை
மோந்து பார்ப்பதற்கும் பொருத்தமான முகம். நல்ல வசனங்களை கூட சுரத்தே இல்லாமல் பேசி
சாகடிக்கிறார். படத்திலும் ஹீரோவினுடைய கதாபாத்திரம் அவ்வாறே சித்தரிக்கப்பட்டுள்ளது,
இரண்டாம் பாதி ட்விஸ்டை தவிர்த்து பார்த்தால். கூடல் முடிந்த தருணத்தில்
படுக்கையில் கட்டிப்பிடித்தபடி ஹீரோயின் ஃபீல் பண்ணி ஒரு ரொமாண்டிக் கவிதை
சொல்கிறார். அதற்கு நம்மவர், “ஙே... புரியலையே...” என்கிறார். இதெல்லாம்
எதுக்கு ஹனிமூன் போகுதோ...!
ஹீரோயின்
நிஷா லால்வாணி அரைக்கிழவி. அண்ணி கேரக்டரில் நடித்தால் கூட சைட்டடிக்க தோன்றாது. சொற்ப
காட்சிகளில் அழகாக தெரிகிறார். இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் வரும் ரொமாண்டிக்
காட்சிகள் ஓகே. ஆனால் முதல் பாதிக்காக நிறையவே உழைத்திருக்கிறார் நிஷா. காடு, மலை
பகுதிகளில் உருண்டு புரளுகிறார், மரம் ஏறுகிறார், நீச்சல் அடிக்கிறார். அவற்றில்
பாதி கிராபிக்ஸ், டூப்பாக இருந்தாலும் கூட மற்ற ஷோகேஸ் பொம்மை நடிகைகளைவிட
நிஷாவிற்கு ஒரு மதிப்பெண் அதிகமாக கொடுக்கலாம், அழகில் அல்ல.
ஹீரோ,
ஹீரோயினை தவிர நான்கு வில்லன்கள் இருக்கிறார்கள், அவ்வளவுதான் படத்தின் மொத்த ஜனத்தொகை.
(ஓரிரு காட்சிகளில் தோன்றுபவர்களை சேர்க்கவில்லை). Dude, Yo, Wazzup man போன்ற
அதிநவீன சொற்களை பயன்படுத்தினால் அவர் பணக்கார வீட்டு பையனாமாம்...! நால்வருமே
மிகையான நடிப்பை வெளிப்படுத்தி வெறியேற்றுகிறார்கள்.
கதைக்கு
சம்பந்தமே இல்லாமல் இரண்டு ஐட்டம் சாங்குகள் வருகின்றன. அவற்றிற்கு ஆட்டம் போடும்
அம்மணிகள் அனைத்தும் தினத்தந்தி அழகிகள் ரகம்...!
இரண்டாம்
பாதியின் ஆரம்பத்தில் வரும் காதல் ரசம் சொட்டும் காட்சிகளும் வசனங்களும் ரசிக்க
வைக்கின்றன. நிறைய காட்சிகளில் இயக்குனரின் ரசிப்புத்தன்மை வெளிப்படுகிறது ஒரு
காட்சியில் ஹீரோயின் ஒளியூடுருவும் குளியறையில் குளிக்க, ஹீரோ அதனை வெளியில்
அமர்ந்து தம்மடித்துக்கொண்டே ரசிக்கிறார். என்ன, ஹீரோயின் துண்டு கட்டிக்கொண்டு
குளிப்பதில் தான் தர்க்க ரீதியான தவறு இருக்கிறது.
என்னவோ
இருக்கு, ஏதோ பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது என்று கிட்டத்தட்ட கடைசி வரைக்குமே
சஸ்பென்ஸ் வைத்திருப்பது சபாஷ்...! அந்த பில்டப்புகளுக்கு தகுந்தபடி அழுத்தமான
காட்சிகள் இல்லாததற்கு இயக்குனர் மட்டுமில்லாமல் நம்முடைய சென்சார் விதிமுறைகளும்
கூட காரணமாக இருக்கலாம்.
பிற்பாதியில்
ஒரு பாழடைந்த அறையில் பாடாவதி நாற்காலியில் கதாநாயகி உட்கார வைக்கப்பட்டு
சித்திரவதை செய்யப்படுகிறார். தேகம் நாவலின் அட்டைப்படத்தை நினைவூட்டும் காட்சி. அதன்பிறகு
வரும் சில காட்சிகளில் கூட சாரு ஞாபகம் வருகிறது. தமிழ் சினிமாவின் தற்போதைய
அதிகபட்ச சாடிஸ திரைப்படமெனச் சொல்லலாம்.
தமிழ்
சைக்கோ படங்கள் பெரும்பாலானவற்றில் வரும் இறந்தவர்களை இருப்பதாக நினைப்பது
இங்கேயும் தொடருகிறது. வானத்திலிருந்து ஒரு டியூப் லைட் வெளிச்சம் காட்டி
ஆத்மான்னு சொன்னா நம்புறதுக்கு பாக்குறவங்க ஒன்னும் டியூப் லைட்ஸ் கிடையாது.
சாமியார்
கேரக்டரை கிண்டலடிப்பது மாதிரி இரண்டு வசனங்கள் வைத்துவிட்டு அப்புறம் அவரையே ஆபத்பாந்தவர்,
அப்பாட்டாக்கர் மாதிரி காட்டுவது என்ன எழவென்று புரியவில்லை. நிறைவே இல்லாமல்
தொபுக்கடீர்’ன்னு படத்தை முடித்துவிடுகிறார்கள். அதுவும் படுமொக்கையான க்ளைமாக்ஸ்.
தமிழ்
சினிமாவின் டெம்ப்ளேட் குப்பைகளுக்கு மத்தியில் வித்தியாசமான குப்பை ஒன்றை
கொட்டியிருப்பதற்க்காக மட்டும் இயக்குனரை பாராட்டலாம்...! மற்றபடி “எனக்கு
பிடிச்சிருக்கு ஆனா படம் நல்லாயில்லை” வகையறாவில் இதையும் சேர்க்கலாம்.
ஆரோகணம், 18 வயசு வருகிற வரைக்கும் பொல்லாங்கு தந்த பாதிப்பு போதும் என்று
நினைக்கிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
29 comments:
Off the record:
தேவிகலா திரையரங்கில் பார்த்தேன். தேவி கலா ஹோம் தியேட்டர் மாதிரியான அடக்கமான திரையரங்கம். அங்கே பின் வரிசைகளில் அமர்ந்து படம் பார்ப்பதை விட முன் வரிசையில் அமர்ந்து பார்ப்பது சிறப்பாக இருக்கும். நைட் ஷோ, திரில்லர் படம், கூட்டம் குறைவாக உள்ள திரையரங்கில் முதல் வரிசையில் அமர்ந்து பார்த்தால் எப்படி இருக்குமென யோசித்து பாருங்கள். ஆனால் சமீப காலமாகவே தேவி கவுண்ட்டரில் பத்து ரூபாய் டிக்கெட் தருவதில்லை. எனவே வேறு வழியில்லாமல் 95 ரூபாய் டிக்கெட் எடுத்துவிட்டு பத்து ரூபாய் சீட்டில் அமர்ந்து படம் பார்க்க வேண்டியதாகி விட்டது...!
அட - பட விமர்சனம் பதிவாகவும் - தியேட்டர் விமர்சனம் மறுமொழியாகவும் - ம்ம்ம் - நல்லாவே இருக்கு - நட்புடன் சீனா
நான் தமிழ படங்களை தியேட்டரில் பார்ப்பதை வழக்கமாக கொண்டவன்.
சமீப கால நிதிநெருக்கடி தியேட்டருக்கு போக முடிவதில்லை.
எனக்கு உங்கள் விமர்சனம்தான் இப்போது வடிகால்.
நிறைய பணம் மிச்சம் உங்களால்தான் நன்றி பிரபா.
இந்தப்படத்துக்கு போக ஆசைப்பட்டேன்.இனி மாட்டேன்.
பிரபா,
தியேட்டரில் நடக்கும் வழியில் வாந்தி எடுத்து இருந்தார்களா, எத்தனை சீட் காலியா இருந்தது ,கேண்டீனில் சமோசா சூடா இருந்ததா என்பது போன்ற தியேட்டர் சமாச்சாரங்கள் எல்லாம் கவனிச்சு போடணும் ;-))
அப்போ தான் பிரபல சினிமா விமர்சகர்னு சொல்வாங்க. ஆனாலும் இப்படியான பட போஸ்டர பார்த்தப்பிறகும் (போஸ்டரே செம கிலியா இருக்கு)முன்வரிசையில் உட்கார்ந்து படம் பார்த்த உமது மன உறுதியைப்பாராட்ட தமிழில் வார்த்தைகளே இல்லை ,நான் வேற எதாவது பாஷை கத்துக்கிட்டு வந்து பின்னர் பாராட்டுகிறேன் :-))
//சிலவற்றிற்கு படம் முடிந்தபின்னரும் கூட விடையே சொல்லாமல் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார் காந்தி மார்க்ஸ்//
அடடே! இங்க பார்ரா! :-)
//என்ன, ஹீரோயின் துண்டு கட்டிக்கொண்டு குளிப்பதில் தான் தர்க்க ரீதியான தவறு இருக்கிறது. //
என்னமா லாஜிக் பாக்கிறாய்ங்க! :-)
//தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட் குப்பைகளுக்கு மத்தியில் வித்தியாசமான குப்பை ஒன்றை கொட்டியிருப்பதற்க்காக மட்டும் இயக்குனரை பாராட்டலாம்...!//
செமையா எழுதியிருக்கீங்க பாஸ்! இந்த மாதிரி விமர்சனம் படிக்கிறதுக்காகவே நீங்க, நம்ம சிவகுமார் எல்லாம் நிறைய மொக்கைப் படத்துக்கு போகணும்னு ஆசைப்படுறேன். :-))
படம் பார்க்கவே தோணலை..உங்க விமர்சனமே படம் பார்த்த திருப்தி தருது....
கடைசிக்கு துண்டாவது தக்னூன்டு இருந்துச்சா...?
காந்தி மார்க்ஸ் ஒரு ஓவியர்! இது கன்னிமுயற்சி!
@ cheena (சீனா)
// அட - பட விமர்சனம் பதிவாகவும் - தியேட்டர் விமர்சனம் மறுமொழியாகவும் - ம்ம்ம் - நல்லாவே இருக்கு - நட்புடன் சீனா //
நன்றி அய்யா...
@ உலக சினிமா ரசிகன்
// நான் தமிழ படங்களை தியேட்டரில் பார்ப்பதை வழக்கமாக கொண்டவன்.
சமீப கால நிதிநெருக்கடி தியேட்டருக்கு போக முடிவதில்லை.
எனக்கு உங்கள் விமர்சனம்தான் இப்போது வடிகால்.
நிறைய பணம் மிச்சம் உங்களால்தான் நன்றி பிரபா.
இந்தப்படத்துக்கு போக ஆசைப்பட்டேன்.இனி மாட்டேன். //
ஹி ஹி... நீங்கள் சொல்வது மிகைப்படுத்தாத வார்த்தைகளாக இருக்கும் பட்சத்தில் ரொம்பவும் பெருமையாக இருக்கிறது தல... மிக்க நன்றி...
@ வவ்வால்
// தியேட்டரில் நடக்கும் வழியில் வாந்தி எடுத்து இருந்தார்களா, எத்தனை சீட் காலியா இருந்தது ,கேண்டீனில் சமோசா சூடா இருந்ததா என்பது போன்ற தியேட்டர் சமாச்சாரங்கள் எல்லாம் கவனிச்சு போடணும் ;-))
அப்போ தான் பிரபல சினிமா விமர்சகர்னு சொல்வாங்க. ஆனாலும் இப்படியான பட போஸ்டர பார்த்தப்பிறகும் (போஸ்டரே செம கிலியா இருக்கு)முன்வரிசையில் உட்கார்ந்து படம் பார்த்த உமது மன உறுதியைப்பாராட்ட தமிழில் வார்த்தைகளே இல்லை ,நான் வேற எதாவது பாஷை கத்துக்கிட்டு வந்து பின்னர் பாராட்டுகிறேன் :-)) //
வவ்வால்,
உண்மையிலே எனக்கு தியேட்டர் சம்பவங்களை விலாவரியாக எழுதுவதில் ஆசை தான்... ஆனால் அது படம் எப்படி இருக்கு என்று மட்டும் தெரிந்துக்கொள்ள விரும்புபவர்களுக்கு மொக்கையாக இருக்கும் என்பதால் பின்னூட்டத்தில் கொஞ்சூண்டு எழுதினேன்...
@ ஜீ...
// செமையா எழுதியிருக்கீங்க பாஸ்! இந்த மாதிரி விமர்சனம் படிக்கிறதுக்காகவே நீங்க, நம்ம சிவகுமார் எல்லாம் நிறைய மொக்கைப் படத்துக்கு போகணும்னு ஆசைப்படுறேன். :-)) //
மிக்க நன்றி ஜி... அடுத்தவாரம் மதுபானக்கடை ரிலீஸ்...
@ கோவை நேரம்
// படம் பார்க்கவே தோணலை..உங்க விமர்சனமே படம் பார்த்த திருப்தி தருது.... //
நன்றி தல...
@ வீடு சுரேஸ்குமார்
// கடைசிக்கு துண்டாவது தக்னூன்டு இருந்துச்சா...? //
இல்லையே தல... அப்படியே இருந்தாலும் கூட அந்த ஹீரோயினியை ரசிக்க முடிஞ்சிருக்காது...
// காந்தி மார்க்ஸ் ஒரு ஓவியர்! இது கன்னிமுயற்சி! //
என்ன தல சொல்றீங்க...!
விமர்சனம்...படம் பார்த்த திருப்தி நன்றி
classic recview prabha :-)
"ஆரோகணம், 18 வயசு வருகிற வரைக்கும் பொல்லாங்கு தந்த பாதிப்பு போதும் என்று நினைக்கிறேன். "
அனைவரும் ஆவலுடன் எதிர் நோக்கி வரும்
மதுபானக்கடைய விட்டுடிங்களே தம்பி
பொல்லாங்குக்கு எல்லாருமே நல்ல விமர்சனத்தைத் தந்திருக்கிறீர்கள்.
"தேகம் நாவலின் அட்டைப்படத்தை நினைவூட்டும் காட்சி."
அட !!
@ மனசாட்சி™
// விமர்சனம்...படம் பார்த்த திருப்தி நன்றி //
நன்றி தல...
@ யுவகிருஷ்ணா
// classic recview prabha :-) //
நன்றி லக்கி...
@ குரங்குபெடல்
// அனைவரும் ஆவலுடன் எதிர் நோக்கி வரும்
மதுபானக்கடைய விட்டுடிங்களே தம்பி //
மதுபான கடை சைக்கோ படம் இல்லையே தல...
@ சே. குமார்
// பொல்லாங்குக்கு எல்லாருமே நல்ல விமர்சனத்தைத் தந்திருக்கிறீர்கள். //
ரைட்டு...
@ பார்வையாளன்
// அட !! //
உங்க கண்ணுக்கு இதெல்லாம் மட்டும் எப்படி தலைவரே கரீட்டா தெரியுது...
நிறுத்தனும்
நீ எல்லாத்தையும் நிறுத்தனும்...
ஆடுகளம் மாதிரி படத்த பாக்காம விடறது,
இதே மாதிரி எதாவது ஒரு குப்பையா தேடி போயி கிளறிட்டு வந்து ஒரு விமர்சனம் எழுதுறது,
அதுல சம்பந்தப்பட்ட ஈரோயினோட போட்டோவ நெறைய டிரஸ்ஸோ போடறது,
ரொம்ப முக்கியமா கடைசி பாராவுல படம் எனக்கு புடிச்சுருக்குன்னு சொல்றது...
எல்லாத்தையும் நிறுத்தனும்...
அவிங்க நிறுத்தலனாலும்...நீ நிறுத்தனும்...
எங்கே தான் கிடைக்கிறதோ இந்தப் படங்களெல்லாம் உங்களுக்கு.
இருந்தாலும் ஆனந்தவிகடன், குமுதம் விமர்சனம் போல தங்கள் விமர்சனத்தையும் இயக்குனர்கள் எதிர்பார்க்கும் காலம் வரும். வாழ்த்துக்கள்
எனக்கும் படம் பிடித்திருந்தது பிரபா
நண்பா இந்த படத்துக்கு எப்படி போனீங்க ?! விமர்சனத்துக்கு நன்றி ...
Post a Comment