12 August 2012

அதிசய உலகம் 3D


அன்புள்ள வலைப்பூவிற்கு,

தமிழின் முதல் டைனோசர் 3D படம் என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள். ஜுராஸிக் பார்க் மாதிரி நம்மாளுங்க படமெடுக்க ஆரம்பிச்சிட்டாங்க டோய்’ன்னு போய் தியேட்டர்ல உட்காருபவர்களை கக்கிசில் உட்கார்ந்த மார்டின் ஃபெரேரோ மாதிரி கடித்து துப்பியிருக்கிறார்கள். இயக்குனர் ஷக்தி ஸ்காட் சர்வ நிச்சயமாக ஹாலிவுட் இயக்குனர் ரிட்லி ஸ்காட்டுக்கு ஒன்று அல்லது இரண்டு விட்ட சகோதரராகத்தான் இருக்க முடியும். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மட்டும் அதிசய உலகத்தை பார்த்தால் அவமானம் தாங்க முடியாமல் முகத்தை முதுகு பக்கம் திருப்பி வைத்துக்கொள்வார்.

லிவிங்ஸ்டன் கண்ணாடி, குறுந்தாடி அப்புறம் ஆண்டாள் அழகர் கல்லூரி மாணவர்களிடம் இரவல் வாங்கிய லேப் கோட் சகிதம் வந்து கம்ப்யூட்டர் முன்பு அமர்கிறார். எஸ், அவர் ஒரு சயின்டிஸ்ட். அதுவும் “காலையில யார் மூஞ்சியில முழிச்சேன்னே தெரியல”, “கடவுளே எல்லாரையும் பத்திரமா கொண்டு வந்து சேர்த்திடுப்பா” போன்ற கருத்தாழம் மிக்க வசனங்கள் பேசும் பகுத்தறிவு பொங்கி வழியும் சயின்டிஸ்ட். அவர் மெமரி கார்டில் பாட்டு ஏற்றுவது மாதிரி மனிதர்களை சல்லிசாக காலக்கடத்தல் செய்யும் ஆராய்ச்சியொன்றில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். பேரக்குழந்தைகள் தெரியாத்தனமாக இவருடைய காலச்சக்கரத்தில் கால் வைக்க, அது ஏதோ ஒரு எட்டு இலக்க கிறிஸ்துவுக்கு முன் ஆண்டுக்கு இட்டுச்செல்கிறது. தாத்தாகளுக்கெல்லாம் பேரப்பிள்ளைகள் மீது பாசம் அதிகமாயிற்றே...! அவர்களை காப்பாற்ற இவரும் காலம் கடக்கிறார். பலசரக்கு டைனோசர்கள் நிறைந்த அந்த அதிசய உலகில் இருந்து மீண்டு வந்தார்களா என்பதை திரையரங்கு சென்று மாண்டு தெரிந்துக்கொள்ளலாம்.

லிவிங்ஸ்டன் ஒரு காலத்தில் ரம்பா, குஷ்பூவிற்கெல்லாம் ஜோடியாக நடித்தவர். அவருக்கு போய் எந்திரன் ரஜினி கெட்டப் போட்டு, இரு பேரக்குழந்தைகள் என்று காட்டியதோடு நில்லாமல் லதாராவுக்கு மாமனாராக வேறு காட்டியிருப்பது காலம் செய்த கேவலம்.

3D படத்தில் சீரியல் ஆண்ட்டி லதா ராவை சிங்கிள் ஃப்ளீட் சேலையுடன் நடமாட விட்டிருக்கும் இயக்குனரின் சூட்சுமத்தை புரிந்துக்கொள்ள முடிகிறது. லதா ராவ் தோன்றும் சில காட்சிகளில் நம்மால் திரையின் மேல்பாதியில் கவனம் செலுத்த முடியவில்லை. 3D படமென்பதால் பொருட்கள் மிக அருகாமையில் தெரிந்து நம் நெஞ்சை புடைக்கச்செய்கிறது. டைனோசர்களை உலவவிட்டதற்கு பதிலாக லதாவை ஒன்றரை மணிநேரத்திற்கு செய்தி வாசிக்கவாவது விட்டிருக்கலாம். BTW, இது சிறுவர்களுக்கான படம்...!

ஆனந்தகண்ணனை உண்மையிலேயே யாராவது டைம் மிஷினிலோ வாஷிங் மிஷினிலோ வைத்து கற்காலத்திற்கு கடத்திவிட்டார்களோ என்று அச்சப்பட வேண்டியிருக்கிறது. படம் முடிந்து வெளியே போகும்போது பல குழந்தைகளும் சில பெரியவர்களும் “பூபூ பூபூ” என்று கத்திக்கொண்டு சென்றதே இவருடைய நடிப்பிற்கு கிடைத்த வெற்றி.

மாயா மாதிரியான ஏதோ ஒரு அனிமேஷன் மென்பொருளை வைத்துக்கொண்டு முக்கால்வாசி படத்திற்கு மேல் எடுத்திருக்கிறார்கள். அதையாவது உருப்படியாக செய்திருக்கிறார்களா என்றால் இல்லையென்றே சொல்லவேண்டும். இதில் பதினைந்து வகையான டைனோசர்களை ஜுராஸிக் பார்க்கில் கூட பார்த்திருக்க மாட்டீர்கள் என்று பெருமை வேறு. பிரம்மாண்டமான ராஜசாரஸ் என்னும் டைனோசரை ஒரு ஷாட்டில் பெரிய சைஸில் காட்டுகிறார்கள், அடுத்த ஷாட்டிலேயே எருமைமாடு சைஸில் காட்டுகிறார்கள்.

பெரும்பாலான காட்சிகள் ஆத்திச்சூடி, நர்சரி ரைம்ஸ் சிடி பார்த்த உணர்வையே தருகிறது. நல்லவேளையாக பாடல்கள் எதுவும் படத்தில் இல்லை. இறுதிக்காட்சியில் டைம் மிஷினை ஆஃப் செய்யாமல் போக, டைனோசர் அதனை நெருங்கி வருவதோடு முடித்திருந்தால் இரண்டாம் பாகத்திற்கு லீட் கிடைத்திருக்கும். அந்த சாமர்த்தியம் இயக்குனருக்கு இல்லாதது நம்முடைய அதிர்ஷ்டம்.

குழந்தைகளை டார்கெட் செய்து எடுத்திருக்கிறார்கள். அதேபோல 3Dயில் அடிக்கடி பொருட்களை கண்ணுக்கு அருகாமையில் கொண்டு வந்து (இந்தமுறை லதா ராவை சொல்லவில்லை) பயம் காட்டுகிறார்கள் என்பதால் சில குழந்தைகளுக்கு பிடிக்கலாம். GTA, Age of Empire என்று பயணிக்கும் சமகால குழந்தைகள் “மூடிட்டு படுங்கடா நொன்னைகளா...” என்று சொல்லிவிட்டு போகவும் வாய்ப்பிருக்கிறது.

டைனோசர்களுக்கும் நன்றியுணர்ச்சி இருக்கிறது, தற்கால மனிதனுக்கு கற்காலம் அதிசய உலகம் என்றால் கற்கால மனிதனுக்கு தற்காலம் அதிசய உலகம் தான் போன்ற கருத்துகளை உலக மக்களுக்கு எடுத்துச்சொல்லிவிட்டு திரை இருள்கிறது.

படம் முடிந்ததும் “திரைக்கு அப்பால்” காட்சிகள் காட்டினார்கள். அடப்பாவிகளா உங்க பட பட்ஜெட்டே ஒரு பச்சை கலர் ஸ்க்ரீன் மட்டும்தானா...???

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

25 comments:

Philosophy Prabhakaran said...

Off the records:
தொடர்ந்து மூன்றாவது முறையாக தேவி திரையரங்கம் செல்ல வேண்டியதாகிவிட்டது. துக்கடா கண்ணாடியை கொடுத்துவிடுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் சத்யம் திரையரங்கில் வழங்கப்படும் அதே வகையறா கண்ணாடி கொடுத்ததில் மகிழ்ச்சி. கண்ணாடிக்காக நாற்பது ரூபாய் வசூலித்துக்கொண்டார்கள். 3D படம் வெளியிடுவதில் திரையரங்க உரிமையாளர்களுக்கு இப்படி ஒரு லாபம் இருக்கிறது போல.

திரையரங்கில் நூறு பேர் சேர்ந்திருப்பார்கள். அவற்றில் பாதி குழந்தைகள். குடும்பம் குடும்பமாக திரையரங்கம் வருவது ஒருபுறம் மகிழ்ச்சியளித்தாலும், அதுக படம் போட்டதும் ஆய் வருதுன்னு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும் போது எரிச்சல் வருகிறது. பின்வரிசையில் ஒருவர் நான்கைந்து குழந்தைகளை அழைத்துவந்து அவர்களுக்கு கண்ணாடி போடுவதில் ஆரம்பித்து டெமோ கொடுத்துக்கொண்டே இருந்தார்.

படம் மொத்தமே ஒன்றரை மணிநேரம் தான். நான்கு மணிக்கு ஆரம்பமான படம் இடைவேளையோடு சேர்த்து ஐந்தே முக்காலுக்கெல்லாம் முடிந்துவிட்டது.

Unknown said...

////அதுக படம் போட்டதும் ஆய் வருதுன்னு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும் போது எரிச்சல் வருகிறது.////

நீ கொழந்தையா இருக்குறச்ச

Prem S said...

//லதா ராவ் தோன்றும் சில காட்சிகளில் நம்மால் திரையின் மேல்பாதியில் கவனம் செலுத்த முடியவில்லை. //


வேற எதுல பாஸ்

எல்லா படமும் பாக்கும் உங்களை KING OF KOLLYWOOD என அழைக்கலாமா

Unknown said...

சீரியல் ஆண்ட்டி லதா ராவை....
/////////////////
அத்தை என்று அழைத்தால் கொஞ்சம் கிளுகிளுப்பா..இருக்கும்! ம்ம்ம்ம்!

Unknown said...

டைனோசர்கள் நிறைந்த அந்த அதிசய உலகில் இருந்து மீண்டு வந்தார்களா என்பதை திரையரங்கு சென்று மாண்டு தெரிந்துக்கொள்ளலாம்.
//////////////////////
ஆமாம்! ஆமாம்! குழந்தைகளை கூட்டிக் கொண்டு சென்றால் பே...டு விட்டும் வரலாம்!

ராஜ் said...

பாஸ்,
படத்தோட ட்ரைலர் பார்க்கலையா...??? சன் நியூஸ்ல கூட இந்த படத்தை பத்தி முன்னோட்டம் போட்டு இருந்தாங்க. அதை பார்த்து இருந்தாலாவது நீங்க தப்பிச்சு இருக்கலாம்.

ஹாலிவுட்ரசிகன் said...

படத்தோட போஸ்டரைப் பார்த்தாலே படம் மரண மொக்கைன்னு தெரியல? ஓ...நீங்கல்லாம் மேதை படத்தையே பர்ஸ்ட்டு ஷோ தியேட்டர்ல பார்த்தவுங்க...இதெல்லாம் ஜுஜுபி. :)

ஜெட்லி... said...

thaniyaathaan poniyaa???

அனுஷ்யா said...

//கக்கிசில் உட்கார்ந்த மார்டின் ஃபெரேரோ மாதிரி //

//பொருட்கள் மிக அருகாமையில் தெரிந்து நம் நெஞ்சை புடைக்கச்செய்கிறது//.

//சாமர்த்தியம் இயக்குனருக்கு இல்லாதது நம்முடைய அதிர்ஷ்டம்.//

//சமகால குழந்தைகள் “மூடிட்டு படுங்கடா நொன்னைகளா...” என்று சொல்லிவிட்டு போகவும் வாய்ப்பிருக்கிற//

//அதுக படம் போட்டதும் ஆய் வருதுன்னு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும் போது எரிச்சல் வருகிறது. //


சில வாரங்களுக்கு பிறகு உங்களுக்கு உரிய அக்மார்க் ஸ்டைலில் ஒரு விமர்சனம்... சூப்பர் பிரபா....

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஏதோ செஞ்சிருக்காங்க பாவம் நல்லதா நாலு வார்த்தை பாராட்டுவியா?

Unknown said...

///இறுதிக்காட்சியில் டைம் மிஷினை ஆஃப் செய்யாமல் போக, டைனோசர் அதனை நெருங்கி வருவதோடு முடித்திருந்தால் இரண்டாம் பாகத்திற்கு லீட் கிடைத்திருக்கும். அந்த சாமர்த்தியம் இயக்குனருக்கு இல்லாதது நம்முடைய அதிர்ஷ்டம்.///

கவலை வேண்டாம். லீட் இல்லாமலே இரண்டாம் பாகம் எடுக்கும் அளவுக்கு நம் இயக்குனர்கள் வல்லவர்கள். எனவே அதிர்ச்சிக்கு தயாராக இருக்கவும்.

Maddy said...

// மெமரி கார்டில் பாட்டு ஏற்றுவது மாதிரி மனிதர்களை சல்லிசாக காலக்கடத்தல் செய்யும் ஆராய்ச்சியொன்றில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்//

நல்ல உவமை ! விமர்சனம் அருமை!

Vadakkupatti Raamsami said...

க்கிசில் உட்கார்ந்த மார்டின் ஃபெரேரோ மாதிரி //
.
.
அது யார் அந்த அப்பாடக்கர் மார்டின் பெரேரா??
**
இயக்குனர் ரிட்லி ஸ்காட்டுக்கு ஒன்று அல்லது இரண்டு விட்ட சகோதரராகத்தான் இருக்க முடியும்//
.
.
இது தெரிந்தால் ரிட்லி ஸ்காட் நாண்டுகிட்டு செத்துடுவாறு....ஏய்யா இப்படி??
**
படத்தோட போஸ்டரை பார்த்தாலே உட்டாலக்கடின்னு தெரியுது...இது கூட உனக்கு தெரியலியா இல்ல நான் அம்புட்டு அப்பாவி என்று டகுள் உட பாக்குறியா??

Philosophy Prabhakaran said...

@ N.Mani vannan
// நீ கொழந்தையா இருக்குறச்ச //

மணி... நான் குழந்தையா இருக்குறப்ப ரொம்ப சமத்தாம்... இப்பவும் தான்...!

Philosophy Prabhakaran said...

@ பிரேம் குமார் .சி
// வேற எதுல பாஸ் //

இதுதான் என்னோட விரல்... எங்க கடிங்க பார்ப்போம்...

// எல்லா படமும் பாக்கும் உங்களை KING OF KOLLYWOOD என அழைக்கலாமா //

திரைக்கு வரவே வராத மொக்கைகளை பார்த்துவிட்டு இன்னமும் உயிரோடு இருப்பவர்கள் பற்றி உங்களுக்கு தெரியாதா பிரேம்...

Philosophy Prabhakaran said...

@ வீடு சுரேஸ்குமார்
// அத்தை என்று அழைத்தால் கொஞ்சம் கிளுகிளுப்பா..இருக்கும்! ம்ம்ம்ம்! //

எனக்கு ஆண்ட்டி தான் பிடிச்சிருக்கு மாம்ஸ்...

Philosophy Prabhakaran said...

@ ராஜ்
// பாஸ்,
படத்தோட ட்ரைலர் பார்க்கலையா...??? சன் நியூஸ்ல கூட இந்த படத்தை பத்தி முன்னோட்டம் போட்டு இருந்தாங்க. அதை பார்த்து இருந்தாலாவது நீங்க தப்பிச்சு இருக்கலாம். //

ராஜ்... எதைப் பார்த்தாலும் நீங்கள் என்னுடைய மொக்கைப்பட விமர்சனங்களில் இருந்து தப்பிக்க முடியாது...

Philosophy Prabhakaran said...

@ ஹாலிவுட்ரசிகன்
// படத்தோட போஸ்டரைப் பார்த்தாலே படம் மரண மொக்கைன்னு தெரியல? ஓ...நீங்கல்லாம் மேதை படத்தையே பர்ஸ்ட்டு ஷோ தியேட்டர்ல பார்த்தவுங்க...இதெல்லாம் ஜுஜுபி. :) //

ஆமாம் ஹாரன்... சரியா புரிஞ்சிக்கிட்டீங்க...

Philosophy Prabhakaran said...

@ ஜெட்லி...
// thaniyaathaan poniyaa??? //

ஆமாம் ஜெட்லி... பெரிய திட்டமிடல் எதுவுமில்லாமல் சாவகாசமாக கிளம்பிப்போனேன்... நாம் விரைவில் சந்திப்போம்... கவலை வேண்டாம்....

Philosophy Prabhakaran said...

@ மயிலன்
// சில வாரங்களுக்கு பிறகு உங்களுக்கு உரிய அக்மார்க் ஸ்டைலில் ஒரு விமர்சனம்... சூப்பர் பிரபா.... //

நன்றி மயிலன்...

Philosophy Prabhakaran said...

@ T.N.MURALIDHARAN
// ஏதோ செஞ்சிருக்காங்க பாவம் நல்லதா நாலு வார்த்தை பாராட்டுவியா? //

முரளி... ஏதோ செஞ்சிருக்காங்க என்னும் முயற்சியை ஊக்குவிப்பதற்காகத் படத்தை காசு கொடுத்து திரையரங்கில் பார்த்துவிட்டேன்... அது போதாதா...???

Philosophy Prabhakaran said...

@ அப்பு
// கவலை வேண்டாம். லீட் இல்லாமலே இரண்டாம் பாகம் எடுக்கும் அளவுக்கு நம் இயக்குனர்கள் வல்லவர்கள். எனவே அதிர்ச்சிக்கு தயாராக இருக்கவும். //

நீங்க சொல்லுறதும் சரிதான் அப்பு,...

Philosophy Prabhakaran said...

@ இரா.மாடசாமி
// நல்ல உவமை ! விமர்சனம் அருமை! //

நன்றி இராமா...

Philosophy Prabhakaran said...

@ வடக்குபட்டி ராம்சாமி
// அது யார் அந்த அப்பாடக்கர் மார்டின் பெரேரா?? //

வ.ரா... ஜுராசிக் பார்க் முதல் பாகத்தில் ஒருவர் கக்கிசில் உட்கார்ந்திருக்கும்போது டைனோசர் கவ்விக்கொண்டு போகுமே... அவர்தான் மார்டின் ஃபெரேரோ...

// படத்தோட போஸ்டரை பார்த்தாலே உட்டாலக்கடின்னு தெரியுது...இது கூட உனக்கு தெரியலியா இல்ல நான் அம்புட்டு அப்பாவி என்று டகுள் உட பாக்குறியா?? //

தெரியும் வ.ரா... ஒரு மொக்கைப்படம் நமக்கு கொடுக்கும் மனநிம்மதியை ஒரு நல்ல படம் என்றுமே தருவதில்லை...

'பரிவை' சே.குமார் said...

நல்ல விமர்சனம்....

லதாவை ரொம்ப நோக்கிட்டீங்களோ...