அன்புள்ள வலைப்பூவிற்கு,
பொதுவாக சென்னையில் பதிவர் சந்திப்பு எப்படி இருக்கும் ?
ஞாயிறு மாலை நான்கு மணிக்கு திட்டமிடப்பட்டிருக்கும். நாலே முக்கால்,
ஐந்து மணிவாக்கில் ஒன்றிரண்டு தலைகள் டீக்கடையில் தென்படும். சுமார் அரைமணிநேரம்
கழித்து அங்கொன்றும் இங்கொன்றுமாக குழு விவாதம் செய்துக்கொண்டிருப்பார்கள். ஆறு
மணிக்கு அதே டிஸ்கவரி புக் பேலஸில் சந்திப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கும். சுரேகா
அல்லது கேபிள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள். காவேரி கணேஷ் முதல் வரிசையில்
அமர்ந்து தொகுப்பாளருக்கு தொடுப்பு எடுத்துக்கொண்டிருப்பார். கார்க்கி நடுவில்
எங்கேயாவது அமர்ந்துக்கொண்டு வரிக்கு வரி கலாய்த்துக்கொண்டிருப்பார். வரிசையாக
எல்லோரும் எழுந்துநின்று அறிமுகப்படுத்திக்கொள்ளும் போது “ம்ஹூம் நான் எழுந்து
நிற்க மாட்டேன்... இது என்ன ஸ்கூலா” என்று முரண்டு பிடிப்பார் ஒரு பி.ப.
பின்வரிசையில் இலக்கிய அணி தனியாவர்த்தனம் நடத்திக்கொண்டிருக்கும். எழரையை
கூட்டிவிட்டு எட்டரை மணிக்கு மறுபடியும் தனித்தனி குழுவாக டாஸ்மாக் நோக்கி நகரும்.
அதற்குப்பின் நடப்பதெல்லாம் வரலாறு...!
அப்படியெல்லாம் இல்லாமல் துல்லியமாக திட்டமிடப்பட்டு படு ப்ரோபஷனலாக
சென்னையில் ஒரு பதிவர் சந்திப்பு... தப்பு தப்பு வாயில அடி... உலகத் தமிழ்ப்பதிவர்கள்
மாநாடு (!) நடக்க இருக்கிறது. துள்ளி விளையாடும் மழலையின் உற்சாகத்தோடு
நடைபெறவிருக்கும் நம்முடைய மாநாட்டிற்கு அடிக்கோலிட்டது முதியோரணி என்று சொன்னால்
நம்பித்தான் ஆகவேண்டும். புலவர் சா.ராமானுசம், சென்னை பித்தன் மற்றும் மின்னல்
வரிகள் கணேஷ் மூவரும் சங்கமித்த ஒரு பொன்மாலைப்பொழுதில் பதிவர் சந்திப்பிற்கான
பொறி தட்டியிருக்கிறது. அது ஒவ்வொரு வாரமும் டிஸ்கவரி புக் பேலஸில் கொஞ்சம்
கொஞ்சமாக மூப்படைந்து தற்போது காட்டுத்தீயாக பரவியிருக்கிறது.
சில வாரங்களுக்கு முன்பு பதிவர் சந்திப்பு குறித்து ஆலோசனைகள் கேட்க
அடிமட்ட குழுவை அழைப்பதாக எனக்கு ஒரு தகவல் வந்தது. சம்பவ இடம் – டிஸ்கவரி புக் பேலஸ்.
வட்டமேசை மாநாடு துவங்கியதும் ஒருவர் எழுந்து யாராவது “Minutes of Meeting”
எடுக்குறீங்களா ? என்றார். எனக்கு குபுக்கென்று சிரிப்பு வந்தது. இது
எந்தமாதிரியான பதிவர் சந்திப்பு என்று ஓரளவுக்கு புரிந்துக்கொள்ள முடிந்தது. தமிழ்த்தாய்
வாழ்த்து, கவியரங்கம், மூத்த பதிவர்களுக்கு நினைவுப்பரிசு போன்ற பதங்களை கேட்டதும்
இது நமக்கான இடம் இல்லை என்பதை தெளிவாக புரிந்துக்கொண்டு டாக்டர் நாராயண ரெட்டி
எழுதிய ஒரு சமாச்சார புத்தகத்திற்குள் என்னை புதைத்துக்கொண்டேன்.
அப்படியிருந்தும் என்னையும் நடக்கவிருக்கிற வரலாற்று சிறப்புமிக்க
பதிவர் மாநாட்டின் விழாக்குழுவினர்களுள் ஒருவராக இணைத்துக்கொண்ட நல்ல
உள்ளங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. வருகிற 26ம் தேதி, உலகின் பல
மூலைகளில் இருந்தும் பதிவர்கள் சென்னைக்கு வந்து குவியப்போகிறார்கள், பல
பிசிராந்தயார்களும் கோப்பெருஞ்சோழர்களும் சந்தித்துக்கொள்ள போகிறார்கள், உற்சாக
வெள்ளம் (!!) கரைபுரண்டு ஓடப்போகிறது...! என்ன ஒன்று, உலகம் என்ற சிறு உருண்டையில்
பதிவர் மாநாட்டை குறுக்கிவிட்டதால் ஜூபிடர், நெப்ட்யூன், ப்ளுட்டோ வாழ் பதிவர்கள்
வருத்தப்படுவார்களோ என்றுதான் அச்சப்படவேண்டியிருக்கிறது...!
மாநாடு அழைப்பிதழ் |
மேலும் விவரங்களுக்கும் உங்களுடைய வருகையை உறுதி செய்வதற்கும்
கீழ்காணும் பெரியவர்களுள் யாரையாவது தொடர்பு கொள்ளலாம் :-
சென்னை பித்தன் - 94445 12938
புலவர் சா.இராமாநுசம் - 90947 66822
மதுமதி 98941 24021
பாலகணேஷ் 73058 36166
ஜெயகுமார் 90949 69686
இளைஞரணியிடம் மட்டுமே பேசுவேன் என்பவர்கள்
8015899828 என்ற எண்ணில் என்னை அழைக்கலாம்...!
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
64 comments:
off the records ஒன்னும் சொல்லலையா?
விழா குழுவில் இருந்துகிட்டே இப்படி அதை கலாய்ப்பது....... பிரபாத்துவம்....:)
mmmm.....
Vetha.Elangathilakam.
@ மயிலன்
// விழா குழுவில் இருந்துகிட்டே இப்படி அதை கலாய்ப்பது....... பிரபாத்துவம்....:) //
ஏன்யா இப்படி ? மேற்படி பதிவை நான் எழுத ஆரம்பித்து பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது... யாருடைய மனதையும் புண்படுத்தக்கூடாதென பலமுறை அடித்து திருத்தி எழுதி முடிப்பதற்கு இத்தனை நாட்களாகிவிட்டது...
// off the records ஒன்னும் சொல்லலையா? //
அதுக்கும் ஒரு மேட்டர் தயார் செய்து வைத்திருந்தேன், இப்ப வேண்டாம்ன்னு விட்டுட்டேன்...
@ kovaikkavi
// mmmm.....
Vetha.Elangathilakam. //
கோவைக்கவி அருள்கூர்ந்து தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கமென்டவும்...
How about Blog readers like me. Am not blogger. Shall i join the meet
சென்னை வந்து இந்த நம்பருக்கு அழைக்கிறேன்.நம்மள கவனிப்பிங்க தானே...ஒயின்ஷாப் ஓனர் வேற...
தம்பி தங்கள் விஷயம் கேள்விப்பட்டேன் வாழ்த்துகள்
தம்பி உனக்கு பொறுப்பேயில்லை....!நாங்கள் குழந்தைகள் லிஸ்ட் யாரை அழைக்கின்றது!
விரைவில் மணமேடையில் அமர இருக்கும் தங்களுக்கு, முன்கூட்டியே,
என் உளங்கனிந்த வாழ்த்துக்கள்!!
பல் வேறு பணிகளுக்கு இடையிலும் விழா பற்றி அறித்தமைக்கு மிக்க நன்றி!
பதிவர் சந்திப்புக்கு முன்பே களை கட்டுதே. ம்ம் நடத்துங்க நடத்துங்க.
@ சில்க் சதிஷ்
// How about Blog readers like me. Am not blogger. Shall i join the meet //
சிலுக்கு... பெயர் மட்டுமே பதிவர்கள் மாநாடு... வாசகர்கள், ஃபேஸ்புக், கூகுள் +, டிவிட்டர் பயனாளர்கள் அனைவரும் வரலாம்...
பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள நண்பர்களில் யாருக்காவது கால் செய்து தங்கள் வருகையை உறுதி செய்துக்கொண்டால் விழாக்குழுவினர் உங்களுக்கான ஏற்பாடுகளை செய்வதற்கு ஏதுவாக இருக்கும்...
@ கோவை நேரம்
// சென்னை வந்து இந்த நம்பருக்கு அழைக்கிறேன்.நம்மள கவனிப்பிங்க தானே...ஒயின்ஷாப் ஓனர் வேற... //
கண்டிப்பாக நண்பா... உங்களுக்காகவே பெசல் கவனிப்பு காத்திருக்கிறது...
@ மோகன் குமார்
// தம்பி தங்கள் விஷயம் கேள்விப்பட்டேன் வாழ்த்துகள் //
நன்றி அண்ணா...
@ வீடு சுரேஸ்குமார்
// தம்பி உனக்கு பொறுப்பேயில்லை....!நாங்கள் குழந்தைகள் லிஸ்ட் யாரை அழைக்கின்றது! //
இருக்கவே இருக்கிறார் குழந்தைப் பதிவர் கேபிள் சங்கர்... ஆனால் என்னை தம்பி என்று அழைத்ததால் உங்களை குழந்தைகள் லிஸ்டில் சேர்த்துக்கொள்ள முடியாது...
பாஸ்,
உங்க கேரக்டரையே புரிஞ்சிக்க முடியலே....என்னமோ போங்க !!!!
@ புலவர் சா இராமாநுசம்
// விரைவில் மணமேடையில் அமர இருக்கும் தங்களுக்கு, முன்கூட்டியே,
என் உளங்கனிந்த வாழ்த்துக்கள்!!
பல் வேறு பணிகளுக்கு இடையிலும் விழா பற்றி அறித்தமைக்கு மிக்க நன்றி! //
நன்றி பு.சா.ரா... பல்வேறு ஆணிகள் இருந்தாலும் கூட நிகழ்ச்சியில் கண்டிப்பாக கலந்துக்கொள்வேன்...
@ Lakshmi
// பதிவர் சந்திப்புக்கு முன்பே களை கட்டுதே. ம்ம் நடத்துங்க நடத்துங்க. //
நன்றி அம்மையாரே...
@ ராஜ்
// பாஸ்,
உங்க கேரக்டரையே புரிஞ்சிக்க முடியலே....என்னமோ போங்க !!!! //
என்ன தல சொல்றீங்க... கொஞ்சம் விளக்கமா தான் சொல்லுங்களேன்...
//விரைவில் மணமேடையில் அமர இருக்கும் தங்களுக்கு//
நீங்களும் எலைட்(Marriage) கிளபில் சேருகிறேர்கள் போல் தெரிகிறது. வாழ்த்துக்கள் பாஸ்... :)
@ ராஜ்
// நீங்களும் எலைட்(Marriage) கிளபில் சேருகிறேர்கள் போல் தெரிகிறது. வாழ்த்துக்கள் பாஸ்... :) //
நன்றி ராஜ்... இன்று திங்கட்கிழமை... வளையல் ஸ்டாண்ட் தினம்... மறந்துடாதீங்க ராஜ்...
//என்ன தல சொல்றீங்க... கொஞ்சம் விளக்கமா தான் சொல்லுங்களேன்...//
ஒன்னும் இல்ல தல..எல்லாரோட பதிவர் சந்திப்பு அழைப்பையும் பார்த்தேன். அதுல உங்க அழைப்பு ரொம்பவே வித்தியாசமாக இருக்கு. அது தான் அப்படி சொன்னேன்.. :)
இன்னைக்கு நாளு மணிக்கு ஓல்ட் சிட்டி போறேன் தல....கண்டிப்பா வங்கிருவேன். 99% சென்னை உலக தமிழ்பதிவர் மாநாட்டுக்கு வருவேன். வந்து உங்க கையிலே குடுத்துடுறேன்.
நாளைக்கு என்னோட வருகையை conform பண்ணிடுறேன்..
யோவ்... சந்தடி சாக்கில முதியோரணில என் பேரையும் சேர்த்துட்ட உன்னை... விழாவுல வெச்சு ‘கவனி‘ச்சுடறேன், இரு...
பதிவர் சந்திப்பு குறித்து தாங்கள் அளித்த பல ஆலோசனைகள் மட்டுமே இந்த நிகழ்ச்சி நடக்க சாத்தியமானது. நக்கீரரை ‘கட்டி’ மேய்க்கும் குழுத்தலைவராக தாங்கள் நியமிக்கப்பட்டு உள்ளீர்கள்.
// பால கணேஷ் said...
யோவ்... சந்தடி சாக்கில முதியோரணில என் பேரையும் சேர்த்துட்ட உன்னை... விழாவுல வெச்சு ‘கவனி‘ச்சுடறேன், இரு...//
ஹா..ஹா..ஹா...
Philosophy Prabhakaran said...
@ புலவர் சா இராமாநுசம்
// விரைவில் மணமேடையில் அமர இருக்கும் தங்களுக்கு, முன்கூட்டியே,
என் உளங்கனிந்த வாழ்த்துக்கள்!!
பல் வேறு பணிகளுக்கு இடையிலும் விழா பற்றி அறித்தமைக்கு மிக்க நன்றி! //
நன்றி பு.சா.ரா... பல்வேறு ஆணிகள் இருந்தாலும் கூட நிகழ்ச்சியில் கண்டிப்பாக கலந்துக்கொள்வேன்...//
முதல்ல சமைக்க கத்துக்க தம்பி. அஞ்சாசிங்கம் தம்பிக்கு காய்கறி வெட்ட ட்ரெயினிங் குடுய்யா.
அட.. இது என்ன கலாட்டா...!!!
சூப்பர் மாமு..!!
சினிமா விமர்சனம் மாதிரியே சூப்பரா இருந்தது..!
****
"முதியோரணியா?" இவங்களை விட்டா ஓட்டப்பந்தயத்தில் 100 மீட்டர் தூரத்தை 3 செகண்ட்ல ஓடி முடிச்சுடுவாங்கய்யா...!
இனிமே மறந்தும் முதியோரணின்னு சொல்லிடாதீங்க.. பால கணேஷ் சார் என்னம்மா எதிர்ப்பு தெரிவிச்சிருக்கார் பாருங்க...!!
எப்படியும் உனக்கு பதிவர் சந்திப்பு இருக்குன்னு சொல்லியிருக்கார்.. பார்த்து சூதானமா நடந்துக்க தத்துவம்..!
பிரபா,
எல்லாத்தையுமே காமெடி ஆக்குறீர் :-)) மேட்ச்சிங்கா புரோஃபைலில் எம்.ஆர்.ராதா படம் சரியான தேர்வுதான்!
எல்லாத்தையும் சொல்லிட்டு முகமூடிப்பதிவர்கள் யாரை தொடர்பு கொள்ளனும், அவர்கள் வரலாமானு சொல்லாம விட்டுப்புட்டீரே :-))
பின்.குறிப்பு:
முகமூடிப்பதிவர்களுக்கு இலவசமாக முகமூடி கொடுப்பீங்களா?
வாழ்த்துக்கள் பதிவர் சந்திப்புக்கும் உங்கள் திருமண வாழ்க்கைக்கும் ..
நிறைய கலாய்க்களாம்ன்னு தோனுச்சு ஆனா அந்த வேலைய நீயே பண்ணிட்ட. நீ பெரிய ஆளுயா!!
உன்னோட Post மீட்டிங் பதிவுக்கு வெயிட்டிங். :-)
//டாக்டர் நாராயண ரெட்டி எழுதிய ஒரு சமாச்சார புத்தகத்திற்குள் என்னை புதைத்துக்கொண்டேன்.//
இப்போது அவசியம்தான்!
வாழ்த்துகள்,பிரபா!
அருமை..அருமை..
அருமையான பகிர்வு! நன்றி!
இன்று என் தளத்தில்
அஞ்சு ரூபாய் சைக்கிள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_20.html
முதல் முறை உங்களின் தளம் வருகிறேன் என்று நினைக்கிறேன் ...
உங்க பாணியிலே பிச்சு உதறி இருக்கீங்க நண்பா ,..
செம கலக்கல் பிளஸ் நக்கல் ..
நன்றி
///// எழரையை கூட்டிவிட்டு எட்டரை மணிக்கு மறுபடியும் தனித்தனி குழுவாக டாஸ்மாக் நோக்கி நகரும். அதற்குப்பின் நடப்பதெல்லாம் வரலாறு...!/////
தம்பி வரலாறு பல கண்டவர்... அவர் சொன்னா சரியாத்தான் இருக்கும்....!
//// வட்டமேசை மாநாடு துவங்கியதும் ஒருவர் எழுந்து யாராவது “Minutes of Meeting” எடுக்குறீங்களா ? என்றார்.//////
ஓ இத வெச்சி அப்போ பலநூறு பதிவுகள் தேத்த போறாங்கப்போ......
///// தமிழ்த்தாய் வாழ்த்து, கவியரங்கம், மூத்த பதிவர்களுக்கு நினைவுப்பரிசு போன்ற பதங்களை கேட்டதும் இது நமக்கான இடம் இல்லை என்பதை தெளிவாக புரிந்துக்கொண்டு டாக்டர் நாராயண ரெட்டி எழுதிய ஒரு சமாச்சார புத்தகத்திற்குள் என்னை புதைத்துக்கொண்டேன்.///////
அத விடுங்க, அந்த ரெட்டி பொஸ்தக சமாச்சாரத்த பத்தி ஒரு பதிவு எழுதுறது.....?
/////அப்படியிருந்தும் என்னையும் நடக்கவிருக்கிற வரலாற்று சிறப்புமிக்க பதிவர் மாநாட்டின் விழாக்குழுவினர்களுள் ஒருவராக இணைத்துக்கொண்ட நல்ல உள்ளங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை./////
யோவ் விழாக்குழுவுல சேர்த்தே இப்படின்னா... சேர்க்காம விட்டிருந்தாங்கன்னா என்னாகுறது..?
///// நக்கீரரை ‘கட்டி’ மேய்க்கும் குழுத்தலைவராக தாங்கள் நியமிக்கப்பட்டு உள்ளீர்கள்./////////
வெளங்குன மாதிரிதான்.... கமிட்டில இருந்து ஃபைனான்ஸ் பண்ணி ரெண்டு செல்போனு, நாலு சிம் கார்டு வாங்கி கொடுங்கய்யா....!
தமிழினத் தலைவர கூப்புடுவீங்களாப்பா......??????தலைவர் இல்லாம தமிழா..???தமிழினத் தலைவி...அதாம்ப்பா சின்னவூட்டு சின்னம்மா... அதான் தம்பி நம்மா...கவிதாயினி க(ன்)னி மொழி கூப்புடுவீங்களா...?????
என்னை போன்ற அறைகுறை பதிவர்களும் கலந்து கொள்ளலாமா????
@ ராஜ்
// இன்னைக்கு நாளு மணிக்கு ஓல்ட் சிட்டி போறேன் தல....கண்டிப்பா வங்கிருவேன். 99% சென்னை உலக தமிழ்பதிவர் மாநாட்டுக்கு வருவேன். வந்து உங்க கையிலே குடுத்துடுறேன்.
நாளைக்கு என்னோட வருகையை conform பண்ணிடுறேன்.. //
சூப்பர் ஜி... சனிக்கிழமையே வந்திடுங்க... கொண்டாடலாம்...
@ பால கணேஷ்
// யோவ்... சந்தடி சாக்கில முதியோரணில என் பேரையும் சேர்த்துட்ட உன்னை... விழாவுல வெச்சு ‘கவனி‘ச்சுடறேன், இரு... //
அய்யா... பெயருக்கு முன்னாடி "பால" வச்சிருக்குறவங்க எல்லாம் பாலகன் ஆகிட முடியாது :)
@ ! சிவகுமார் !
// நக்கீரரை ‘கட்டி’ மேய்க்கும் குழுத்தலைவராக தாங்கள் நியமிக்கப்பட்டு உள்ளீர்கள். //
சிவா... நானே சொல்றேன்... நக்கீரன் என்னுடைய தீனி... நக்கீரனுக்கு கெடா வெட்டும்போது நீங்க யாரும் கிட்டக்க வரக்கூடாது சொல்லிட்டேன்... வேணும்னா போட்டதுக்கப்புறம் தலையை ஃபுட்பால் விளையாட தர்றேன்...
// முதல்ல சமைக்க கத்துக்க தம்பி. அஞ்சாசிங்கம் தம்பிக்கு காய்கறி வெட்ட ட்ரெயினிங் குடுய்யா. //
குழந்தை வளர்ப்பது எப்படி ? புத்தகத்தை படிக்க ஆரம்பிச்சாச்சு... இப்ப போய் சமையல் அது இதுன்னு காமெடி பண்ணிக்கிட்டு...
@ தங்கம் பழனி
// அட.. இது என்ன கலாட்டா...!!!
சூப்பர் மாமு..!!
சினிமா விமர்சனம் மாதிரியே சூப்பரா இருந்தது..! //
நன்றி நண்பா...
@ வவ்வால்
// எல்லாத்தையுமே காமெடி ஆக்குறீர் :-)) மேட்ச்சிங்கா புரோஃபைலில் எம்.ஆர்.ராதா படம் சரியான தேர்வுதான்! //
அதிகப்படியான பாராட்டுதான்... இருப்பினும் நன்றி வவ்வால்...
// எல்லாத்தையும் சொல்லிட்டு முகமூடிப்பதிவர்கள் யாரை தொடர்பு கொள்ளனும், அவர்கள் வரலாமானு சொல்லாம விட்டுப்புட்டீரே :-)) //
முகமூடி பதிவர்கள் செவ்வாய், புதன் கிரகங்களில் இருந்தெல்லாம் வருவதில்லை வவ்வால்... பூரா பயலுவளும் இங்கனக்குள்ள இருக்குற ஆளுகதேன்... தெரியாத்தனமா என்னைக்காவது முகமூடி பிஞ்சிடுச்சுன்னா குமுறிடுவோம்...
@ Prem Kumar.s
// வாழ்த்துக்கள் பதிவர் சந்திப்புக்கும் உங்கள் திருமண வாழ்க்கைக்கும் .. //
நன்றி ப்ரேம்...
@ Katz
// நிறைய கலாய்க்களாம்ன்னு தோனுச்சு ஆனா அந்த வேலைய நீயே பண்ணிட்ட. நீ பெரிய ஆளுயா!!
உன்னோட Post மீட்டிங் பதிவுக்கு வெயிட்டிங். :-) //
நன்றி Katz... உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உடனடியாக லீவு சொல்லிவிட்டு வரவும்...
@ சென்னை பித்தன்
// இப்போது அவசியம்தான்!
வாழ்த்துகள்,பிரபா! //
நன்றி சார்...
@ மதுமதி
// அருமை..அருமை.. //
நன்றி.. நன்றி..
@ s suresh
// அருமையான பகிர்வு! நன்றி! //
நன்றி சுரேஷ்...
@ அரசன் சே
// முதல் முறை உங்களின் தளம் வருகிறேன் என்று நினைக்கிறேன் ...
உங்க பாணியிலே பிச்சு உதறி இருக்கீங்க நண்பா ,..
செம கலக்கல் பிளஸ் நக்கல் ..
நன்றி //
என்ன தல சொல்றீங்க... முதல் முறையாக என்னுடைய தளத்திற்கு வரும் உங்களுக்கு என்னுடைய பாணி இதுதானென்று எப்படி தெரியும்... பிச்சு உளறி இருக்கீங்க நண்பா...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// தம்பி வரலாறு பல கண்டவர்... அவர் சொன்னா சரியாத்தான் இருக்கும்....! //
வரலாறு கடல் கடந்து பரவியிருக்கு போல...
// ஓ இத வெச்சி அப்போ பலநூறு பதிவுகள் தேத்த போறாங்கப்போ...... //
அதெல்லாம் ஏற்கனவே ஆரம்பிச்சாசே... நீங்க அந்த பதிவருடைய பதிவுகளை படிப்பதில்லையா... அதாங்க அந்த பதிவர்... ஆங் அவரே தான்...
// அத விடுங்க, அந்த ரெட்டி பொஸ்தக சமாச்சாரத்த பத்தி ஒரு பதிவு எழுதுறது.....? //
நான் கேள்வியறிவு, நீங்கள் பகுத்தறிவு...
// வெளங்குன மாதிரிதான்.... கமிட்டில இருந்து ஃபைனான்ஸ் பண்ணி ரெண்டு செல்போனு, நாலு சிம் கார்டு வாங்கி கொடுங்கய்யா....! //
அங்க வரைக்கும் மிஸ்டு கால் கொடுக்க ஆரம்பிச்சிட்டாரா...
@ சிரிப்புசிங்காரம்
// தமிழினத் தலைவர கூப்புடுவீங்களாப்பா......??????தலைவர் இல்லாம தமிழா..???தமிழினத் தலைவி...அதாம்ப்பா சின்னவூட்டு சின்னம்மா... அதான் தம்பி நம்மா...கவிதாயினி க(ன்)னி மொழி கூப்புடுவீங்களா...????? //
நக்ஸ் இருக்கும்போது மற்ற பொழுதுபோக்கு தேவையிருக்காது தல...
@ உங்களுள் ஒருவன்
// என்னை போன்ற அறைகுறை பதிவர்களும் கலந்து கொள்ளலாமா???? //
மேற்படி பதிவை எழுதியிருக்கும் அரைகுறையே கலந்துக்கொள்ளும்போது நீங்கள் கலந்துக்கொள்ள கூடாதா ?
//நன்றி Katz... உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உடனடியாக லீவு சொல்லிவிட்டு வரவும்...//
ஒரு காது குத்து விழாவில் கலந்து கொள்ள செல்வதால் என்னால் வர முடியாது பிரபா!
யோவ் சாரயக்கடை மொதலாளி, நான் போட்ட கமெண்ட்ஸ் எங்கயா காணோம்???.
காக்கா தூக்கிட்டு போயிருச்சா?
சரி விடு, பதிவு கலக்கல்... அருமை... அட்டகாசம்...
[[ // ஓ இத வெச்சி அப்போ பலநூறு பதிவுகள் தேத்த போறாங்கப்போ...... //
அதெல்லாம் ஏற்கனவே ஆரம்பிச்சாசே... நீங்க அந்த பதிவருடைய பதிவுகளை படிப்பதில்லையா... அதாங்க அந்த பதிவர்... ஆங் அவரே தான்... ]]
ஓ அவரா???... அவரைத்தானச் சொன்னே?.. ஓகே...ஓக்கே..
@ பட்டிகாட்டான் Jey
// யோவ் சாரயக்கடை மொதலாளி, நான் போட்ட கமெண்ட்ஸ் எங்கயா காணோம்???.
காக்கா தூக்கிட்டு போயிருச்சா?
சரி விடு, பதிவு கலக்கல்... அருமை... அட்டகாசம்... //
ஜெய், இதுக்கு முன்னாடி நீங்க என்ன கமென்ட் போட்டீங்க... நான் ஸ்பாமில் கூட தேடிப் பார்த்துவிட்டேன்... கிடைக்கவில்லை... வேறு ஏதாவது தளத்தில் போட்ட பின்னூட்டத்தை இங்கே தேடுகிறீர்களா என்று நினைவுகூர்ந்து பார்க்கவும்... அல்லது நீங்கள் போட்ட பின்னூட்டத்தை மறுபடியும் போடவும்...
முதல் முறை உங்களின் தளம் வருகிறேன் என்று நினைக்கிறேன் ...
உங்க பாணியிலே பிச்சு உதறி இருக்கீங்க நண்பா ,..
செம கலக்கல் பிளஸ் நக்கல் ..
நன்றி //
என்ன தல சொல்றீங்க... முதல் முறையாக என்னுடைய தளத்திற்கு வரும் உங்களுக்கு என்னுடைய பாணி இதுதானென்று எப்படி தெரியும்... பிச்சு உளறி இருக்கீங்க நண்பா...///
hahaahaaaaaa..
வாழ்த்துக்கள் .....
பதிவர் சந்திப்புக்கு கண்டிப்பா வருகிறேன் நண்பா ! இப்பதான் பார்த்தேன் , நேர்ல பேசுவோம் பிரபா ! ரொம்ப நாளாச்சி ப்ளாக் பக்கம் வந்து , வேலை அதிகமாயடுச்சி நண்பா !
கலக்கல் நண்பா...
அன்பின் பிலாஸபி பிரபாகரன் - விழா சிறப்புற நடை பெற்றமைக்குக் காரணம் தங்களீன் பணி உள்ளிட்ட அமைப்பாளர்கழின் கடும் உழைப்புதான். நல்வாழ்த்துகள் பிரபாகரன் - நட்புடன் சீனா
மிகவும் அருமை..
நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Post a Comment