அன்புள்ள வலைப்பூவிற்கு,
படத்தின் தலைப்போ விளம்பரங்களோ ஒரு துளி எதிர்பார்ப்பை கூட ஏற்படுத்தவில்லை. நண்பர் ஒருவர் கேட்காமல் கொள்ளாமல் டிக்கெட் எடுத்து வைத்துக்கொண்டு அழைத்ததால் வேறு வழியில்லாமல் பார்க்க நேர்ந்தது.
நண்பர் ஒருவருடைய காதலுக்கு உதவப்போய் தானே காதலில் சிக்கிக்கொள்கிறார் சசி. அதற்கு ஏற்படும் தடைகளும் விடைகளும் மீதிக்கதை.
மதுரக்காரய்ங்க, மண்ணு வாசனை, பன்னு வாசனை, பாசக்கார பயலுவ, அட்வைஸ் ஒப்பனிங் சாங், கிழவிகளோடு கட்டிப்பிடித்து டான்ஸ் என்று சூர மொக்கையாக ஆரம்பித்தது. ஆனால் ஒப்பனிங் சாங் முடிந்ததுமே நம்மையறியாமல் படத்தில் ஒன்றிவிடுகிறோம்.
சசிகுமார் தமிழில் நடித்திருக்கும் நான்காவது படம். கிட்டத்தட்ட நான்கிலுமே நண்பர்களுக்கு உதவி செய்து ரிவிட் வாங்கும் கேரக்டர் தான் என்று நினைக்கிறேன்.
ஹீரோயின் நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இருக்கா'ன்னு சொல்லுவாங்க. ஆனா நெஜமாவே பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி ரொம்ப சுமாராக இருந்தால் என்னதான் செய்வது ? பெயர் லக்ஷ்மி மேனன். உண்மையிலேயே இவர்தான் ஹீரோயின் என்று நம்புவதற்கே நேரமானது. ஹீரோயின் தோழி, குரூப் டான்ஸ் ஆடும் ரோஸ் கலர் தாவணி, வகுப்பறை முன் பெஞ்ச் ஊதா தாவணி என்று ஆங்காங்கே தென்படும் நல்ல ஃபிகருகள் ஆறுதல்.
பொரொட்டா சூரி ப்ரமோஷன் வாங்கியிருக்கிறார். ஏற்ற இறக்க வசன உச்சரிப்புகளும் உடல் மொழியும் தந்து முதல்பாதி முழுக்க லந்து பண்ணுகிறார். இனி வருங்காலத்தில் இவருக்காகவே கூட ஆடியன்ஸ் வரலாம்.
அப்புக்குட்டி கேரக்டர் சர்ப்ரைஸ் ட்விஸ்ட். நண்பர்களாக நடித்திருப்பவர்கள் அனைவரும் மிகச்சரியான தேர்வு. படத்தின் இன்னொரு மிகப்பெரிய ப்ளஸ், உறவுக்காரர்கள் கேரக்டர்களில் வாழ்ந்திருக்கும் பெண்கள்.
இரண்டரை மணிநேரத்திற்குள் நீங்கள் நான்கு சிகரெட் பிடிப்பதற்கு இசையமைப்பாளர் ரகுநாதன் உத்தரவா “தம்"மளிக்கிறார்.
ஒரு பெரிய வீட்டு பொண்ணை, இன்னொரு பெரிய வீட்டுப்பையன் காதலித்துக்கொண்டால் தவறேதும் இல்லை என்று சொல்லாமல் சொல்லும் ஹீரோ தந்தையாரின் பேச்சு உறுத்துகிறது.
ஒருவேளை படத்தினுடைய கதை முன்னதாகவே தெரிந்திருந்தாலோ அல்லது எ சசிகுமார் ஃபிலிம் என்ற எதிர்பார்ப்போடு சென்றிருந்தால் படம் பிடிக்காமல் இருந்திருக்கக்கூடும். மற்றபடி மனதிற்கு டூலெட் போர்டு மாட்டிக்கொண்டு சென்றால் சுந்தரபாண்டியன் வசதியாக குடியமர்ந்துவிடுகிறார்.
சிறந்ததொரு படமாக அமைந்திருக்க வேண்டியது. என்ன ஒன்னு, க்ளைமாக்ஸ் காட்சியில் யாரோ என்னுடைய பிடறியில் இரும்புக்கம்பியால் பலமாக அடித்து போலவும், முதுகில் கடப்பாறையை கொண்டு குத்திக் குதறியது போலவும் உணர்வு ஏற்பட்டது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
31 comments:
என்ன மாமா, பதினெட்டு வயசு பத்தி எழுதுவேன்னு வெயிட் பண்ணா சூனா பானா வ பத்தி எழுதியிருக்கே?
இது அஜால் குஜால் விமர்சனத்துக்கு லாயக்கு இல்லாத படம்... ரொம்ப நல்ல படமும் இல்ல, மொக்க படமும் இல்ல... அப்புறம் எப்படி நாம விமர்சனம் எழுதி பொழப்ப நடத்துறது...?
உத்திரவா"தம்"- இரசித்தேன்... :)
அப்புறம், அந்த ஈரோயின் பிரெண்டு, களவாணில வரும்ல...விமல் தங்கச்சியா... அந்த புள்ளதான்.. அதுக்குள்ள நெடுநெடுன்னு 'வளந்துருச்சு'....
//இரண்டரை மணிநேரத்திற்குள் நீங்கள் நான்கு சிகரெட் பிடிப்பதற்கு இசையமைப்பாளர் ரகுநாதன் உத்தரவா “தம்"மளிக்கிறார்.//
:)
யோவ் பிரபா உனக்கு மயிலன் நடுராத்திரியெல்லாம் வந்து பின்னூட்டம் போடுறாப்லனாக்கா நீ எவ்வளவு பெரிய பிரபல பதிவர்னு தெரிஞ்சிக்கோ.
சரி பாக்குறேன்
பிரபா, நமக்கு இந்த 'தம்' பழக்கம் இல்லையே - அப்ப என்ன செய்வது???
வழக்கமான படம் ...கடைசி அரை மணி நேரம் சுத்தமா பிடிக்கலா.... ஏண்டா போனோம்னு ஆய்ருச்சு... நமக்கு இந்த ட்ரஜடி படமே ஆகாது....
உத்திரவா "தம்" உண்டு போல....!
/////மதுரக்காரய்ங்க, மண்ணு வாசனை, பன்னு வாசனை, பாசக்கார பயலுவ, அட்வைஸ் ஒப்பனிங் சாங், கிழவிகளோடு கட்டிப்பிடித்து டான்ஸ்/////
தடி தடியா ஆண்ட்டிகளோட சிங்கம் புலி தொடைய காட்டிக்கிட்டு ஆடுற மாதிரி பாட்டு எதுவும் இல்லையாண்ணே?
/////ஹீரோயின் நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இருக்கா'ன்னு சொல்லுவாங்க. ஆனா நெஜமாவே பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி ரொம்ப சுமாராக இருந்தால் என்னதான் செய்வது ? //////
கவலப்படாதீங்க...... கொஞ்ச நாள் ஆந்திரா பக்கம் அனுப்பிச்சோம்னா பட்டி, டிங்கரிங் பண்ணி சரி பண்ணிடுவானுங்க....!
///////சிறந்ததொரு படமாக அமைந்திருக்க வேண்டியது. என்ன ஒன்னு, க்ளைமாக்ஸ் காட்சியில் யாரோ என்னுடைய பிடறியில் இரும்புக்கம்பியால் பலமாக அடித்து போலவும், முதுகில் கடப்பாறையை கொண்டு குத்திக் குதறியது போலவும் உணர்வு ஏற்பட்டது. ///////
அய்யய்ய்யோ... அப்போ இதுவும் விளிம்பு நிலை படமா..........?
/////மனசாட்சி™ said...
பிரபா, நமக்கு இந்த 'தம்' பழக்கம் இல்லையே - அப்ப என்ன செய்வது???/////
கஞ்சா அடிங்க.......
@ மயிலன்
// என்ன மாமா, பதினெட்டு வயசு பத்தி எழுதுவேன்னு வெயிட் பண்ணா சூனா பானா வ பத்தி எழுதியிருக்கே? //
பதினெட்டு வயசு நான் மிஸ் பண்ணிட்டேன் தல...
// ரொம்ப நல்ல படமும் இல்ல, மொக்க படமும் இல்ல... அப்புறம் எப்படி நாம விமர்சனம் எழுதி பொழப்ப நடத்துறது...? //
முதல் பத்து நிமிடம், கடைசி பத்து நிமிடம் தவிர்த்து எனக்கு பிடித்திருந்தது...
// அப்புறம், அந்த ஈரோயின் பிரெண்டு, களவாணில வரும்ல...விமல் தங்கச்சியா... அந்த புள்ளதான்.. அதுக்குள்ள நெடுநெடுன்னு 'வளந்துருச்சு'.... //
தவறான தகவல்... களவாணி விமல் தங்கச்சி ஒரு மொக்கை ஃபிகரு... இது வேற...
@ ஆரூர் மூனா செந்தில்
// யோவ் பிரபா உனக்கு மயிலன் நடுராத்திரியெல்லாம் வந்து பின்னூட்டம் போடுறாப்லனாக்கா நீ எவ்வளவு பெரிய பிரபல பதிவர்னு தெரிஞ்சிக்கோ. //
அவருக்கு நைட் ஷிப்டா இருக்கும் போல...
@ மனசாட்சி™
// பிரபா, நமக்கு இந்த 'தம்' பழக்கம் இல்லையே - அப்ப என்ன செய்வது??? //
டீ அடிக்க வேண்டியது தான்...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// தடி தடியா ஆண்ட்டிகளோட சிங்கம் புலி தொடைய காட்டிக்கிட்டு ஆடுற மாதிரி பாட்டு எதுவும் இல்லையாண்ணே? //
இல்லை தல... முதல் பத்து நிமிட வாய்ஸ் ஓவரில் மதுரையை பத்தியும் அந்த ஊர் சனங்கள பத்தியும் சும்மா வெளக்கு வெளக்கு'ன்னு வெளக்குறாங்க... அவ்வளவுதான்...
// அய்யய்ய்யோ... அப்போ இதுவும் விளிம்பு நிலை படமா..........? //
விளிம்பு நிலை படமெல்லாம் இல்லை... க்ளைமாக்ஸில் ஹீரோ நான் குறிப்பிட்டது மாதிரி அடி வாங்குகிறார்... அதற்கப்புறமும் வந்து எதிரிகளை புரட்டி எடுக்கிறார்...
சூர மொக்கை
பிரபா,
சசிகுமார், பேருக்காக பார்கலைனாலும் இயக்குனர் பேருக்காக போனாப்ப்பொல தெரியுதே... இயக்குனர் பேரு.எஸ்.ஆர் பிரபாகரனுல்ல போட்டிருக்கு :-))
ஈரோயினு சூப்பரா இருக்குன்னு ரெண்டு பெரும்பதிவர்கள் புளகாங்கிதப்பட்டிருந்தாங்களே?
குத்து வாங்கினாப்போல இருப்பதால் புடிக்கலையா? ஐ மீன் முகத்தில யாரோ குத்தி தழும்பு இருப்பதை சொன்னேன் :-))
இன்னும் எத்தினி நாளிக்கு தான் மதுரை மண்ணு ஒரு பொண்ணு, நாளு பிரண்டுன்னு கதைய எடுப்பாங்களோ, கொஞ்ச நாளைக்கு மதுரைக்கு அந்த பக்கம் என கதைய சொன்னாலே சசிக்குமார் ரிஜெக்டட் என சொல்ல வேண்டும் இல்லைனா, அடுத்த ராமராஜன், டி.ஆர் போல ஒரு வளையத்தில் சிக்கிடுவார்.
பிராபா,
உமது வாட்டத்தினை போக்கிட "இளமை ஊஞ்சல்"னு ஒரு ஒலக படம் தமிழில் வருதாம், தமிழில் முதன் முறையாக 9 ஈரோயினு என போட்டு இருக்கான், எப்போ வருதுன்னு நோட் செய்து,டிக்கெட் புக் செய்யவும், என்ன ஒலக அதியசம்னு பார்க்க வேண்டாம் :-))
Your Critics is ok;
Screen play is not that much worked
All songs are copied
BG is very Bore
But heroine Lakshmi Menon is very good artist :
I think Heroine means You want to see the Physique
Her age is only 15 Now she is studying 9 th std
When i was watching shoot of this film she never go for retake.
The others only did mistake.
Next time brad your mind
Ashiq
முதன் முதலா வலைபதிவில் ஒரு உண்மையான விமர்சனம்.
படத்தை பார்க்காலம்னு சொல்லுறீங்க
//உத்தரவா “தம்"மளிக்கிறார்//
நாளை அடிக்கலாம் என்று இருக்கிறேன்! :)
@ Narendran Rajan
// சூர மொக்கை //
நரேன்... என்னுடைய பதிவா அல்லது படமா...???
@ வவ்வால்
தல, இயக்குனர் பெயர் பிரபாகரன் என்பதையே திரையரங்க வாயில் பேனரை பார்த்தே தெரிந்துக்கொண்டேன்...
// ஈரோயினு சூப்பரா இருக்குன்னு ரெண்டு பெரும்பதிவர்கள் புளகாங்கிதப்பட்டிருந்தாங்களே? //
அவங்களுக்கு வயசு நாற்பதுக்கு மேல் இருக்குமே...
// குத்து வாங்கினாப்போல இருப்பதால் புடிக்கலையா? ஐ மீன் முகத்தில யாரோ குத்தி தழும்பு இருப்பதை சொன்னேன் :-)) //
இருக்கலாம் தல... ஒரு ஃபிகரை பார்த்ததும் ஸ்பார்க் வரணும்... அது வரலை...
// உமது வாட்டத்தினை போக்கிட "இளமை ஊஞ்சல்"னு ஒரு ஒலக படம் தமிழில் வருதாம், தமிழில் முதன் முறையாக 9 ஈரோயினு என போட்டு இருக்கான், எப்போ வருதுன்னு நோட் செய்து,டிக்கெட் புக் செய்யவும், என்ன ஒலக அதியசம்னு பார்க்க வேண்டாம் :-)) //
9 ஈரோயின்னு சொல்றதுல ஏதாவது உள்குத்து இருக்கா...???
@ Ashiq
உங்களுடன் பேசியதில் மிக்க மகிழ்ச்சியோ நண்பா... புதிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி...
@ சேக்காளி
// முதன் முதலா வலைபதிவில் ஒரு உண்மையான விமர்சனம். //
மிக்க நன்றி சேக்காளி...
பிரபா,
பொல்லாங்கு படத்தின் மார்க்ஸ் காந்தியையே கழுகு போல புடிச்சுட்டு , பிராபகரனை மிஸ் பண்ணிட்டதா சொன்னா எப்பூடி:-((
இனிமே ஹீரோயின்னு கையில லைட்டெர் கொடுத்து அடிக்கடி ஸ்பார்க் வர வைக்க சொல்லணும் :-))
ஏம்பா அது பொண்ணா இல்லை ஸ்பார்க்பிளக்கா :-))
இளமை ஊஞ்சலில் 10-1 அல்லது 8+1 , ஈரோயின்னு சொல்லணும் போல :-))
தமிழ் சினிமாவில் முதல் முறைனு சொன்ன எத்தனையோ வில்லங்கம் பார்த்தாச்சு இதை பார்க்க மாட்டோமா :-))
அதாவது நம்ம வயசு பசங்களுக்கு அந்த ஹீரோயின் சரிவர மாட்டான்னு சொல்றீங்க... அப்போ அந்த பொண்ண ரொம்பவே வர்ணிச்ச பிரபல பதிவர்கள என்னன்னு சொல்றது..
#இரண்டரை மணிநேரத்திற்குள் நீங்கள் நான்கு சிகரெட் பிடிப்பதற்கு இசையமைப்பாளர் ரகுநாதன் உத்தரவா “தம்"மளிக்கிறார்.# உண்மை தான் , ஆனால் இப்பொழுது கேட்கும் போது பாடல்கள் பிடிக்கின்றன
#மற்றபடி மனதிற்கு டூலெட் போர்டு மாட்டிக்கொண்டு சென்றால் சுந்தரபாண்டியன் வசதியாக குடியமர்ந்துவிடுகிறார்#
நேர்மையான விமர்சனம் ...
Thank you and looking for more posts. I am really satisfied with this posting that you have given us. This is really a stupendous work done by you ptrl hd
Post a Comment