5 November 2012

ஆரோகணம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஏதோ பைபோலார் டிஸார்டர் பற்றிய படமாம் என்று சொன்னபோதே எனக்குள் எதிர்பார்ப்பு எகிறியது. டைட்டில் தான் என்ன எழவென்று புரியாமல் உறுத்தியது. ஆனால் நம் அனைவருக்கும் விருப்பமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆண்ட்டி இயக்கியிருக்கும் முதல் சினிமா என்பதால் பார்க்க முடிவு செய்திருந்தேன். சிலபல காரணங்களால் இப்போது தான் பார்க்க முடிந்தது. தாமதமாக பார்த்ததாலோ, அயர்ச்சியின் காரணமாகவோ ஆரம்பத்தில் இருந்த எதிர்பார்ப்பு குறைந்திருந்தது.



பிரதான வேடத்தில் விஜி, பழைய நடிகை சரிதாவின் தங்கை. இவரை இதற்கு முன்பு விஜய் டிவி நிகழ்ச்சியொன்றில் பார்த்திருக்கிறேன். உண்மையிலேயே அவரா இது, அவரா இது என்று பலமுறை சரிபார்த்துக்கொள்ளும்படி தோற்ற மாற்றம். நிஜத்தில் கூட விஜி படிக்காத ஏழை காய்கறி வியாபாரியாக இருப்பாரோ என்று சந்தேகப்பட தோன்றுகிறது. தப்பாட்ட குத்தாட்டத்தில் விஜி பாறைகள்...!

நாயகிக்கு அடுத்தாற்போல நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் இயக்குனர் மாரிமுத்து. (பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும் படத்தின் இயக்குனராம்). விஜியின் மகளாக நடித்திருக்கும் புதுமுகம் பழைய நடிகை மாதவியை நினைவூட்டுகிறார். உமா பத்மநாபன், ராஜி (எந்திரனில் சனா தாயார்), ரித்திகா ஸ்ரீநிவாஸ் (வழக்கு எண் 18/9) என்று தன் சகவயது தோழிகளுக்கு வாய்ப்பு கொடுத்து மகிழ்ந்திருக்கிறார் இயக்குனர். ராஜியும் உமாவும் பேசிக்கொள்ளும் காட்சிகள் சாமான்ய ரசிகனுடைய கடுப்பை கிளப்புகின்றன. ஜே.பியும் கவிதாலயா கிருஷ்ணனும் லேசான புன்முறுவலை வரவழைக்க முயற்சிக்கிறார்கள்.

முதல் பாதி முழுக்க தாயை காணாமல் ஏங்கும் குழந்தைகளின் பரிதவிப்பு நமக்குள் ஊடுருவி தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. இரண்டாம் பாதியில் சட்டென கதை வேறேதோ பாதையில் பயணிக்க முற்பட்டு நாய் பெற்ற தெங்கம்பழத்தை நினைவூட்டியது. இறுதியில் சொல்ல வந்த கரு(ம)த்தை படம் பார்ப்பவர்கள் எளிதில் புரிந்துக்கொள்ள முடியாதபடி சொல்லி முடித்திருக்கிறார்கள்.

கே’யின் இசையில் தப்பாட்ட பாடல் கொலவெறி மாதிரி மிகப்பெரிய சென்சேஷனை ஏற்படுத்தியிருக்க வேண்டியது. சொல்லப்போனால் படத்தின் மையக்கருவே அந்த பாடல் தான். வழக்கமாக படம் நிறைவடைந்ததும் திரையரங்கில் வெடிகுண்டு வைத்திருக்கிறார்களாம் என்ற நினைப்புடனேயே சிதறும் தமிழ் சினிமா ரசிகர்கள் இறுதியில் மறுஒளிபரப்பு செய்யப்பட்ட தப்பாட்ட பாடலை பொறுமையாக நின்று ரசிக்கிறார்கள்.



சராசரி ரசிகர்களை பொறுத்தமட்டிலும், “கடைசியா என்னதான்டா சொல்ல வர்றீங்க...?”, “இந்தமாதிரி ரெண்டு படம் பார்த்தா நானே மெண்டலாயிடுவேன்” போன்ற புலம்பல்களையும், இளைஞர்களின் கண்ணோட்டத்தில் படுமொக்கையான படமாகவும், கலைப்படமாகவும் வகைப்படுத்த முடியாமல் எந்த மாதிரியும் சொல்ல முடியாமல் வந்த மாதிரியே முடங்கிவிட்டது ஆரோகணம். இனி நீங்களே திரையரங்கம் சென்று ஆரோகணம் பார்க்க நினைத்தாலும் பார்ப்பது சிரமம் தான்.

மொத்தமே ஒன்றரை மணிநேரம் ஓடிய படத்திலிருந்து உருட்டி திரட்டி பார்க்கும்போது இரண்டு முக்கியமான விஷயங்களை ஆரோகணம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது. முதலாவது, “உங்க இமேஜ் என்னாகும்...?” என்று அங்கலாய்க்கும் உதவியாளரிடம் “என்னடா பெரிய இமேஜ் ? இன்னைக்கு நான் எவ்வளவு சந்தோஷமா இருந்தேன் தெரியுமா !” என்கிறார் அரசியல்வாதி வி.ஐ.பி. இரண்டாவது அளவுக்கு மீறி ஏற்படும் கோபமும் வைராக்கியமும் அல்லது எந்த ஒரு உணர்ச்சியும் ஆபத்தானது தான், ஆனால் அதையே பாஸிடிவ் எனர்ஜியாக மாற்றிக்கொண்டால் நீங்கதான் பாஸ்...!

ஆரோகணம் - நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் மனநோயாளியை தட்டிக்கொடுத்து, உங்களுக்கு ஒன்னுமில்லை பாஸ்... நீங்க நார்மலா தான் இருக்கீங்க....! என்று ஆறுதலூட்டுகிறது.


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

15 comments:

Unknown said...

தன் சகவயது தோழிகளுக்கு வாய்ப்பு கொடுத்து மகிழ்ந்திருக்கிறார் இயக்குனர்.////////////////
ஒரே சீரியல் ஆண்ட்டிகள் ராஜ்யம் போல......!

ஹாலிவுட்ரசிகன் said...

படம் ஆரோகணமா அவரோகணமா? பார்க்கலாமா? வேண்டாமா?

CS. Mohan Kumar said...

// நம் அனைவருக்கும் விருப்பமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆண்ட்டி //

:))

பட்டிகாட்டான் Jey said...

விமர்சனம் அருமை, இளமை துள்ளல் :-)))

சீனு said...

விமர்சனத்தின் கடைசி வரிகள் மிக அருமை...
// நீங்க நார்மலா தான் இருக்கீங்க....! //

Anonymous said...

குழப்பிட்டீங்களே பாஸ்! பார்க்கவா வேணாமா? அரோக(ரா)ணம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நம் அனைவருக்கும் விருப்பமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆண்ட்டி///

ஏல இது யாருலே? இதுக்கு ஒரு ஸ்டில்லு போடுலே........!

Thozhirkalam Channel said...
This comment has been removed by the author.
Thozhirkalam Channel said...

உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

http://otti.makkalsanthai.com

பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

settaikkaran said...

நல்ல வேளை, நான் பார்க்கவில்லை! ஒன்றரை மணி நேரமென்றாலும், நேரமும் காசும் மிச்சமானது மகிழ்ச்சி! நன்றி!

aavee said...

ஆண்ட்டி படத்துல ஆண்ட்டி கிளைமாக்ஸ் இருக்குதா? #டவுட்டு

Philosophy Prabhakaran said...

// ஏல இது யாருலே? இதுக்கு ஒரு ஸ்டில்லு போடுலே........! //

இரண்டாவது புகைப்படம் அம்மையாருடையது தான்...

ஆதி மனிதன் said...

Not related to this post. But did you noticed that goundamanifans.blogspot.in is also using the same photo as yours as their profile picture. Initially I was confused. May be a coincident. Just thought of sharing...

Anonymous said...

இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்...

Philosophy Prabhakaran said...

@ ஆதி மனிதன்
நண்பரே... கவுண்டமணி ரசிகர்கள் எங்களுடைய குழு வலைப்பூ... என்னுடைய தமிழ்மண கணக்கின் கீழ் இருப்பதால் அதே ஃப்ரோபைல் படம் தெரிந்திருக்கிறது...