14 November 2012

துப்பாக்கி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சமீப காலங்களில் வெளிவந்த முகமூடி, பில்லா 2, தாண்டவம், சகுனி, மாற்றான் வகையறாக்களை நினைத்தால் திரையரங்கிற்கு செல்லவே திகிலடிக்கிறது. அந்த வரிசையில் துப்பாக்கி நம்மை மிரட்டினாலும் காஜலுக்காக நமது சமூக கடமையை நிறைவேற்றியே ஆகவேண்டிய சூழ்நிலை. அதிக எதிர்பார்ப்பெல்லாம் இல்லை. ஏதோ காஜல் நான்கு பாடல்களில் தோன்றினால் சரி என்றே சென்றேன்.


ராணுவ அதிகாரியாக வித்தியாச விஜய். குத்து வசனங்கள் கிடையாது, ஒலிம்பிக் சாகசங்கள் இல்லை, பாடல்காட்சிகளில் எப்போதுமிருக்கும் நடன துள்ளலும் குறைவு. அறிமுகக்காட்சி, பாடல் தவிர்த்து விஜய் முழுக்க முழுக்க இயக்குனரின் கதாநாயகனாக மாறியிருக்கிறார்.

காஜல் - அகர்வால் ஸ்வீட்ஸ் காஜூ கத்லி. காஜல் மணப்பெண்ணாக அறிமுகமாகும் காட்சியிலேயே ப்ளாக்கில் கொள்ளை விலை கொடுத்து டிக்கெட் வாங்கிய கவலை நம்மை நீங்கிச்செல்கிறது. பொசுக்கென்று குத்துச்சண்டை வீராங்கனையாக மாறி இளைஞர்களின் இதயத்தை மணல்மூட்டையாக்கி குத்து குத்தென்று குத்துகிறார். அண்டார்டிகா பாடல்காட்சியில் ரக்பி பந்தை தூக்கிக்கொண்டு காஜல் ஓடிவரும்போது ரசிகர்களின் நெஞ்சங்கள் மகிழ்ச்சியில் பூத்து குலுங்குகின்றன. இரண்டாம் பாதியில், காஜல் கண்கலங்கும்போது, “உனக்கு நான் இருக்குறேன் தாயி... அழாதடா தங்கம்...”ன்னு கட்டியணைத்து சமாதானம் செய்யத்தோன்றுகிறது. சின்மயியுடைய பின்னணிக்குரல் சலிப்பு.

பில்லா வில்லன் வித்யுத் ஜம்வால் நடித்திருக்கிறார். சத்யனுடைய மாடுலேஷன் கடுப்படிக்கிறது. அரிதாக நல்ல ஜோக்ஸ் எட்டிப்பார்க்கிறது. ஜெயராம் கேரக்டரை பார்க்கும்போது ஏனோ ஏகன் படம் ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது.


தீப்தி, சஞ்சனாவை பார்க்கும்போது விஜய்யை உரிமையோடு ‘மச்சான்' என்றழைக்க தோன்றுகிறது. ஐட்டத்தை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கிறதே என்று யோசித்தால், அடடே அக்ஷரா கவுடா...!

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கூகுள் கூகுள் குதூகலிக்கிறது. பாடல் தொடங்கியதிலிருந்து முடியும்வரை திரையரங்கமே உற்சாக கூப்பாடு போடுகிறது. அலேக்கா, அண்டார்டிகா பாடல்கள் காஜலின் விஷுவல் ட்ரீட். பின்னணி இசை ஹாரிஸின் முந்தய படங்களோடு ஒப்பிடும்போது தேவலை.

சிற்சில குறைகள் தவிர்த்து வெகுஜன மக்கள் விரும்பும் வகையில், திரையரங்குகளில் நிஜமாகவே வெற்றிநடை போடும் வகையில் வெடித்திருக்கிறது துப்பாக்கி...!

குறைகளில் ரெண்டு சாம்பிள்:
- நான்கைந்து தீவிரவாதிகள் ஏ.கே 47 ரக துப்பாக்கியை வைத்துக்கொண்டு டுப்பு டுப்புன்னு சுடுறாங்க. ஆனா, விஜய் ஒரே ஒரு பிஸ்டலை வச்சே அம்புட்டு பேரையும் காலி பண்றாரு...!
- ஹீரோ ராணுவ வீரருன்னா காஷ்மீர்ல இருந்து வரும்போது கூட சீருடையிலேயே வருவாங்கன்னு இன்னமும் நம்மாளுகள நம்ப வைக்கிறீங்களே... நீங்க திறமைசாலிகளய்யா...!


உச்சக்கட்ட காட்சியில் என்ன நடக்குமென்று அவதானிக்க முடிந்தபிறகும் நீட்டி முழக்கி மொக்கை போடாமல் இருந்திருக்கலாம். படத்தின் நீளம் கருதி, ஜெயராம் காட்சிகளையும், க்ளைமாக்ஸில் சிறுபகுதியையும் சில நாட்களில் கத்தரிக்கலாம். அது ரிப்பீட் ஆடியன்ஸை வரவழைக்கும் யுக்தியாகவும் இருக்கலாம்.

துப்பாக்கி - ஒரு பக்கா கமர்ஷியல் / மசாலா / டைம்பாஸ் படம் எப்படியிருக்க வேண்டுமோ அப்படியிருக்கிறது. மற்றபடி கில்லியை சாப்ட்ருச்சு, விஜய்'ஸ் பெஸ்ட் ஆக்குசன் மூவி எவர் என்றெல்லாம் அடித்து விடுவது டூ மச்...!

விஜய்யின் ஃபேமிலி, காஜல் காட்சிகளை அதிகப்படுத்திவிட்டு, ஆக்குசனை குறைத்திருந்தால் படம் கில்லியா இருக்கிறதென பாராட்டியிருக்கலாம்.



என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

25 comments:

Philosophy Prabhakaran said...

Off the records:
துப்பாக்கி டிக்கெட் கிடைத்த கதையையே தனி பதிவாக போடலாம். கழுத, விஜய் படம்தானே சாவகாசமா டிக்கெட் எடுத்துக்கலாம்'ன்னு விட்டா அம்புட்டு திரையரங்குகளும் நிறைந்துவிட்டன. அதாவது நிறைந்த மாதிரி சிகப்பு பலகை போட்டு அவர்களே வெளியில் மும்மடங்கு விலையில் விற்கிறார்கள். சரி போய்த்தொலையட்டும் விட்டாச்சு. நேற்று காலை சும்மா ஒரு எட்டு போய் பார்த்திட்டு வருவோமே’ன்னு ராயபுரம் ஐ-ட்ரீம் திரையரங்கிற்கு சென்றேன். கொள்ளை கூட்டம். அங்கே ஒரு அப்பாவி நண்பர் இரண்டு டிக்கெட் எச்சா இருக்கு வேண்டுமா'ன்னு கேட்க, கபாலுன்னு கவ்விக்கிட்டு உள்ளே போயாச்சு.

ஜாலியா ஒரு படம் எடுக்கலாமுன்னு முடிவு செஞ்சதுக்கப்புறம் தேசபக்தி ஜல்லி, கருத்து குருமாவெல்லாம் தேவையா ? ‘அர்ப்பணிக்கிறேன்’ ஸ்லைடு போடுவதற்கு பதிலாக படத்தின் லாபத்தில் பாதியை இந்திய ராணுவத்துக்கு கொடுத்து உதவிடுங்கள். முடியாது’ன்னா மூடிட்டு படுங்கடா நொன்னைகளா...!

அதென்னவோ தெரியல... என்ன மாயமோ புரியல... விசையை ஸ்க்ரீன்’ல காட்டினதுமே குபுக்குன்னு சிரிப்பு வந்திடுதுய்யா... நல்லவேள அம்புட்டு பயபுள்ளைகளும் விசிலடிச்சிக்கிட்டிருந்ததால எவனுக்கும் நான் சிரிச்சது கேக்கல...!

Unknown said...

பிக்காலி பய

Unknown said...

இதுல பட விமர்சனத்த விட ஜொள்ளு அதிகமா இருக்குதுய்யா...!

சீனு said...

ஆகா ஓகோ என்றார்கள் விஜயகாந்த் வேடத்தில் விஜய் தோன்றி இருப்பது மட்டுமே ஆகசிறந்த மாற்றங்களாக இருக்க முடியும்

// நல்லவேள அம்புட்டு பயபுள்ளைகளும் விசிலடிச்சிக்கிட்டிருந்ததால எவனுக்கும் நான் சிரிச்சது கேக்கல...!// same thing here too :-)

முரளிகண்ணன் said...

படிக்கவே குளுகுளுன்னு இருக்கு

இப்படிக்கு

காஜல் ரசிகர் மன்றம்
மதுரை

CS. Mohan Kumar said...

சமூக கடமையை ஆற்றி விட்டீர்கள் தம்பி நன்றி

Anonymous said...


//N.Mani vannan said...
பிக்காலி பய//

பிரபாகரன் மேல ஏன் இம்புட்டு காண்டு?

rajamelaiyur said...

விடுங்க பாஸ் , கன்னுகுட்டிகாக இன்னொரு தடவ போகலாம்.

rajamelaiyur said...

விஷயம் தெரியுமா?
துப்பாக்கி பட சர்சை. முஸ்லிம் எதிர்ப்பு நியாயமா?

http://rajamelaiyur.blogspot.in/2012/11/
vijay-movie.html

rajamelaiyur said...

உங்க பிளாக்ல விளம்பரம் போட்டா உங்கலுக்கு பிடிக்காதுனு தெரியும்.மேலே போட்டது விளம்பரம் அல்ல ஒரு தகவல்.

முத்தரசு said...

சரிங்... பாத்துடுவோம்

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

//அறிமுகக்காட்சி, பாடல் தவிர்த்து விஜய் முழுக்க முழுக்க இயக்குனரின் கதாநாயகனாக மாறியிருக்கிறார்.//


கேக்கவே எவ்வளவு சந்தோஷமா இருக்கு. வீக் எண்டு வரை வெயிட் பண்ணனும், அண்ணனே ஓகே சொல்லியாச்சு, வெயிட் பண்ணியாவது பாத்துர வேண்டியதுதான்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சத்திய சோதனை.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///- நான்கைந்து தீவிரவாதிகள் ஏ.கே 47 ரக துப்பாக்கியை வைத்துக்கொண்டு டுப்பு டுப்புன்னு சுடுறாங்க. ஆனா, விஜய் ஒரே ஒரு பிஸ்டலை வச்சே அம்புட்டு பேரையும் காலி பண்றாரு...!////

இந்த மாதிரி படம்னா இப்படித்தான் பண்ணனும்னு ஏற்கனவே அர்ஜுன், கேப்டன் எல்லாரும் பண்ணி காட்டி இருக்காங்க..... மக்களும் கைதட்டி ரசிச்சிருக்காங்க, அத மாத்த முருகதாஸ் என்ன கேனையா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஹீரோ ராணுவ வீரருன்னா காஷ்மீர்ல இருந்து வரும்போது கூட சீருடையிலேயே வருவாங்கன்னு இன்னமும் நம்மாளுகள நம்ப வைக்கிறீங்களே... நீங்க திறமைசாலிகளய்யா...!//////

சென்னைன்னு சென்ட்ரல் ஸ்டேசன காட்டி நம்ப வைக்கும் போது, இதெல்லாம் என்ன பிஸ்கோத்து.....!

Philosophy Prabhakaran said...

பில்லா 2வில் ஒரே ஒரு அப்பாஸிக்காகவே காறித்துப்பியவர்கள், துப்பாக்கியை துப்பாமலா இருப்பார்கள்...

ananthu said...

#விஜய்யின் ஃபேமிலி, காஜல் காட்சிகளை அதிகப்படுத்திவிட்டு, ஆக்குசனை குறைத்திருந்தால் படம் கில்லியா இருக்கிறதென பாராட்டியிருக்கலாம்.#

நீங்கள் காஜல் ரசிகராக இருக்கலாம் , அதற்காக இப்படியா ! .. பட விமர்சனத்தை விட காஜல் விமர்சனம் தூக்கலாக இருக்கிறது ...

வவ்வால் said...

பிரபா,

படத்தின் கதை சுருக்கமே கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் சொன்ன கதையா இருக்கே, இதில் எங்கே இருந்து திரைக்கதையால் தூக்கி நிறுத்தி இருக்க போறார்,படம் பார்க்கலாம்னு நினைச்ச ஆசையும் போயிட்டு.

எனக்கென்னமோ வேலாயுதம் கதையையே பட்டி,டிங்கரிங்க் பார்த்து துப்பாக்கி ஆக்கிட்டா போல இருக்கு :-))

வவ்வால் said...

அருளுக்கு சுருட்டுல நெருப்பு வச்சா புடிக்கலை ஆனால் தருமபுரியில் ஒரு கிராமத்தையே நெருப்பு வச்சு கொளுத்துறாங்க அதுக்குலாம் வாயே தொறக்க மாட்டார் ,நியாஸ்தன் :-))

JR Benedict II said...

Nice Review brother..

settaikkaran said...

//காஜலுக்காக நமது சமூக கடமையை நிறைவேற்றியே ஆகவேண்டிய சூழ்நிலை//

இதை வாசித்ததும் என் கண்களில் நீர் பனித்தன. உங்கள் வழியில் நானும் விரைவில் சமூகத்துக்கு ஆற்ற வேண்டிய கடமையைச் செவ்வனே நிறைவேற்றுவேன் என்ற எனது சூளுரையை இங்கு பதிவு செய்கிறேன்.

:-)

JR Benedict II said...

//சின்மயியுடைய பின்னணிக்குரல் சலிப்பு.//

சூப்பர் சிங்கர் ராகினி ஸ்ரீ தான் அண்ணா பின்னணி குரல். காஜல் விமர்சனம் கலக்கல் :)

பட்டிகாட்டான் Jey said...

// முகமூடி, பில்லா 2, தாண்டவம், சகுனி, மாற்றான் //


ஹிஹி இந்த லிஸ்ட்ல நான் சகுனி பார்த்துட்டேன் :-)))

பயபுள்ளை காஜல் நடிச்ச படம்னோடனே நல்லாருக்குனு தீர்ப்பு சொல்லிடான்...

aavee said...

நல்ல விமர்சனம்..! ஏம்பா சத்யனைப் பத்தியோ சந்தோஷ் சிவன் பற்றியோ எழுதாது சிறு குறை..

Ajith said...

துப்பாக்கி சுட்டத்தான் டுமீளு ஆனா இந்த துப்பாக்கி சுடமுதலே டுமிலு டமழு எண்டு இருக்குதையா . . .