அன்புள்ள வலைப்பூவிற்கு,
உனக்கான நிறுத்தத்தை கடந்தபிறகு
பேருந்து ஊர்ந்து செல்கிறது
பேருந்து ஊர்ந்து செல்கிறது
நீ அமர்ந்த ஜன்னலோர இருக்கைக்கு
ஜன்னி வந்துவிட்டதாம் #ஐஸ்
ஜன்னி வந்துவிட்டதாம் #ஐஸ்
மழை நாட்களில் வேண்டுமென்றே
குடையை மறக்கிறேன்
குடையை மறக்கிறேன்
திருடி ஜாக்கிரதை
என்றுதானே எழுதியிருக்க வேண்டும்
என்றுதானே எழுதியிருக்க வேண்டும்
பிடித்திருந்தது - நீ என் கை
பிடித்திருந்தது
பிடித்திருந்தது
வேகத்தடைகளில் விரதம் கலைகிறது
காலேஜ் ஸ்டூடன்ட்ஸின் டப்பாங்குத்து கூட
உன்னிருப்பில் கண்ணே கலைமானே
உன்னிருப்பில் கண்ணே கலைமானே
உன்னெதிரில் வாய்தவறி வந்த கெட்டவார்த்தையை
அசிங்க அசிங்கமாக திட்டினேன்
அசிங்க அசிங்கமாக திட்டினேன்
அனுஷ்கா அப்படியொன்றும் அழகில்லை
அந்த லாங் சைஸ் நோட்டுக்கு மட்டும்
மன்னிப்பே கிடையாது
மன்னிப்பே கிடையாது
குழந்தையை ரசித்துக்கொண்டிருந்த
குழந்தையை ரசித்துக்கொண்டிருந்தேன்
குழந்தையை ரசித்துக்கொண்டிருந்தேன்
ஸ்டெர்லிங் ரோடும் வண்ணாரப்பேட்டையும்
ஒரு ஆயிரம் மைல் தொலைவில் இருந்திருக்கலாம்
ஒரு ஆயிரம் மைல் தொலைவில் இருந்திருக்கலாம்
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
33 comments:
"ஸ்டேர்லிங் ரோடும் வண்ணாரப்பேட்டையும் ஓராயிரம் மைல் இருந்திருக்கலாம்"
அது சரி, வாழ்த்துகள்.
அனுஸ்காவை அழகு இல்லை என்று சொன்ன காரணத்தால் மோகன் குமார் சார் உங்கள் மீது வழக்கு தொடர்ந்தாலும் தொடரலாம் ஜாக்கிரதை... கடைசி இரண்டு பாரா மிகவும் அருமை.....
கவிதை முயற்சி என்று கண்டதால் மனம் சற்றே உவகை அடைந்தது... நாமெல்லம் முயற்சி மட்டுமே செய்ய முடியும் :-)
வர்ர்ர்டட்டா
//பிடித்திருந்தது - நீ என் கை
பிடித்திருந்தது//
அட அட உங்க கவிதை பிடிச்சுருக்கே
//உன்னெதிரில் வாய்தவறி வந்த கெட்டவார்த்தையை
அசிங்க அசிங்கமாக திட்டினேன்//
கெட்ட வார்த்தைக்கு கெட்ட வார்த்தையா கலக்கல் பாஸ்
அனுஷ்கா அழகு இல்லையா?
உனக்கு கண் சரியில்லை.....
பிரபாகரன் உங்களுக்குள்ள இருக்கிற வைரமுத்துவ இவ்வளவு நாள் ஏன் ஒளிச்சு வச்சிருந்தீங்க? அதை வெளிக்கொணர்ந்த அந்த பேருந்து "தோழி"க்கு நன்றி..!
இந்த பசங்களுக்கு லவ் வந்தாலோ...!
அரேஞ் ஆனாலோ கவித எங்கிருந்துதா வருமோ..?
சிவா@செல்வின்
இந்த பயலோட சவகாசத்தை தொலைங்கலே..!வீனாப் போயிருவீங்க..!
நல்லாதான்யா கவிதை எழுதுறீரு. பிளீஸ் கண்டினியூ
என்ன தான் எங்க தலைவியை கிண்டல் பண்ணாலும் அவங்க போட்டோ ஒன்னுக்கு ரெண்டா போட்டீங்க பாருங்க. அங்கே
நிக்குறாங்க எங்க தலைவி
அழகு...
பயணங்கள் தொடரட்டும்...
ஹைக்கூ அழகு.
நன்றி கும்மாச்சி...
சீனு... அடுத்ததாக அனுஷ்காவிற்கு பெசல் போஸ்ட் ஒன்று போட்டு மோகன் குமார் சாரை மகிழ்வித்து வழக்கில் இருந்து தப்பித்துவிடலாம்...
ஆரம்பத்தில் கவிதைகள் என்றுதான் tag வைத்திருந்தேன்... ஒருகட்டத்தில் மயிலன் மாதிரி ஆட்களின் கவிதைகளை படித்துவிட்டு, மல்லாக்க படுத்து காறித்துப்பிவிட்டு கவிதை முயற்சி என்று மாற்றிக்கொண்டேன்...
நன்றி ப்ரேம்...
பொன் மகேஸ்... அனுஷ்கா அழகில்லை என்று சொல்லவில்லை... தோழியோடு ஒப்பிடும்போது அனுஷ்கா அப்படியொன்றும் அழகில்லை என்று சொன்னேன்...
நன்றி ஆவி...
சுரேஷ்... லவ்வுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை... அழகியல் ரசனை கொண்ட அனைவருக்கும் கழுதை வரும்...
மோகன் குமார் உங்களுக்கு மொத்தம் எத்தனை தலைவிகள்... ஏன்யா இப்படி அநியாயம் பண்றீங்க...
நன்றி செளந்தர்... நன்றி கஸாலி...
//சீனு said...
கவிதை முயற்சி என்று கண்டதால் மனம் சற்றே உவகை அடைந்தது... நாமெல்லம் முயற்சி மட்டுமே செய்ய முடியும் :-)
வர்ர்ர்டட்டா/
உங்க ஏரியால சிட்டுக்குருவி லேக்கியம் அவுட் ஆப் ஸ்டாக்கா???
//வீடு சுரேஸ்குமார் said...
இந்த பசங்களுக்கு லவ் வந்தாலோ...!
அரேஞ் ஆனாலோ கவித எங்கிருந்துதா வருமோ..?
சிவா@செல்வின்
இந்த பயலோட சவகாசத்தை தொலைங்கலே..!வீனாப் போயிருவீங்க..!//
பயபுள்ள ஷாப்பிங் போற எடத்துல எல்லாம் டயப்பர், பொம்மை கார், கிளுகிளுப்பை..சாரி கிலுகிலுப்பைன்னு வாங்கிட்டு கெடக்கு.
// மோகன் குமார் said...
நல்லாதான்யா கவிதை எழுதுறீரு. பிளீஸ் கண்டினியூ //
என்ன கொடும பிரபாகரா?
//சுரேஷ்... லவ்வுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை... அழகியல் ரசனை கொண்ட அனைவருக்கும் கழுதை வரும்..//
யம்ம யம்மா!!!!
//மோகன் குமார் உங்களுக்கு மொத்தம் எத்தனை தலைவிகள்... ஏன்யா இப்படி அநியாயம் பண்றீங்க...//
மொத்தம் 3.
//உனக்கான நிறுத்தத்தை கடந்தபிறகு
பேருந்து ஊர்ந்து செல்கிறது//
பேருந்து ஊர்ந்து. 'து'வுக்கு 'து' வா? ம்ம்ம்...
//நீ அமர்ந்த ஜன்னலோர இருக்கைக்கு
ஜன்னி வந்துவிட்டதாம் #ஐஸ்//
எலேய். அது ஏ.சி பஸ்ஸுதான?
//பிடித்திருந்தது - நீ என் கை பிடித்திருந்தது//
இய்ய்ய்ய்ய்....... முடியல.
//குழந்தையை ரசித்துக்கொண்டிருந்த
குழந்தையை ரசித்துக்கொண்டிருந்தேன்//
போதும். நிறுத்திக்க. நான் வேற பஸ்ல போறேன்.
//////மோகன் குமார் said...
நல்லாதான்யா கவிதை எழுதுறீரு. பிளீஸ் கண்டினியூ ///////
அண்ணன் நல்லா ஏத்திவுடுறாருய்யா.......
ஆங்... கவிஞ்சரே....... கவித நல்லாருக்குங்கோ..... அப்படியே மல்லாக்க படுத்துக்கிட்டு இன்னும் யோசிங்கங்கோ......
// உங்க ஏரியால சிட்டுக்குருவி லேக்கியம் அவுட் ஆப் ஸ்டாக்கா??? //
சிவா... இது பெண்கள் வந்து போற இடம்... பார்த்து கமென்டவும்...
// மொத்தம் 3. //
அனுஷ்கா, அஞ்சலி அப்புறம் பூஜாவா...
// அண்ணன் நல்லா ஏத்திவுடுறாருய்யா...... //
அண்ணனை நம்ம எவ்வளவு ஏத்தி விட்டிருக்கிறோம்... அதுக்கு பதில் மரியாதை செய்ய மாட்டாரா ?
//Philosophy Prabhakaran said...
சிவா... இது பெண்கள் வந்து போற இடம்... பார்த்து கமென்டவும்...//
ஆமாய்யா. விக்ரமன், வி.சேகர் டைப் ப்ளாக் எழுதாத நமக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும். அப்பவே சொன்னேன் டோட்டல் பேமிலியை கவர் பண்றா மாதிரி பதிவு போடலாம்னு. கேட்டாத்தான!!
//பிடித்திருந்தது - நீ என் கை
பிடித்திருந்தது
உன்னெதிரில் வாய்தவறி வந்த கெட்டவார்த்தையை
அசிங்க அசிங்கமாக திட்டினேன்
அனுஷ்கா அப்படியொன்றும் அழகில்லை
அந்த லாங் சைஸ் நோட்டுக்கு மட்டும்
மன்னிப்பே கிடையாது//
கவிதை நல்லாருக்கு.
அனுஷ்கா அழகில்லைன்னு சொல்லிட்டு எதுக்குப்பா அவங்க போட்டோ போட்டிருக்க? தர்க்க பிழை.
அல்லக்கைகள் அதிகம்.
ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்க். நடந்தே தீரவேண்டிய விதியை யார் மாற்ற முடியும்? எஞ்சாய்
பிலாசபி: அழகு கார்னரில் படம் போட்டா தலைவி ஆகிட மாட்டாங்க. பூஜா எல்லாம் தலைவி கிடையாது
அனுஷ்கா தான் மெயின் தலைவி. இந்திய தலைவி: கத்ரினா கைப். ரம்யா நம்பீசனை மூணாவது தலைவியா சேர்க்கலாமான்னு சிந்திச்சிங்.
அஞ்சலி அப்பபோ மனசுலேந்து காணா போயிடுறாங்க. அதனால் தலைவி லிஸ்ட்டில் வருமான்னு தெரிலை
உங்களை மாதிரி எனக்கு கலாய்க்க தெரியாது மக்கள்ஸ். நிஜமாவே எனக்கு கவிதை பிடிச்சிருந்தது. குறிப்பா இந்த வரிகள் எல்லாம் ....
வேகத்தடைகளில் விரதம் கலைகிறது
பிடித்திருந்தது - நீ என் கை
பிடித்திருந்தது
அந்த லாங் சைஸ் நோட்டுக்கு மட்டும்
மன்னிப்பே கிடையாது
குழந்தையை ரசித்துக்கொண்டிருந்த
குழந்தையை ரசித்துக்கொண்டிருந்தேன்
*******
டாக்டர் மயிலனே வந்து இதை கவிதை என ஒப்பு கொள்வார். பாரும் !
அட அட அட அட.....
வைரமுத்து சொன்னது நிஜமாகிறதே... சூப்பர் தல...
என்னடா இந்த பக்கம் இன்னும் கவிதை வரலையே என்று .நினைச்சேன் .வந்துடுச்சி ..
இன்னும் அஞ்சாறு மாசம் கவிதை கொட்டும் என்று நம்பலாம்!
பிரபா....
முதல்ல எதிர் கவிதையை கமெண்ட் ஆகத்தான் எழுதினேன்....
பிறகு போஸ்ட் ஆகவே போட்டுட்டேன்....
பதிவு போட்டு சில மாதங்கள் ஆனதால்...
:)))))))
என்ன சொல்லி கமண்டுவதென்று தெரில,பயணம் தொடரட்டும்.
நாய் நக்ஸ் said...
Philosophy Prabhakaran said...
நக்ஸ்... பதிவு செமையா இருக்கு... ஆனா யாரு எழுதினது...
மண்டபத்துல யாரோ எழுதிக்கொடுத்தா மாதிரி இருக்குது...////////////////
தாங்கள் எழுதி வாங்கிய அதே மண்டபத்தில்தான் வாங்கினேன் மன்னா....!!!!!!!!!
புதிய கோணத்தில் அழகு கவிதை
Post a Comment