14 January 2013

பிரபா ஒயின்ஷாப் - 14012013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

விகடன் டைம்பாஸ் பற்றி தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். கவர்ச்சி புகைப்படங்கள், கத்துக்குட்டி சினிமா விமர்சனங்கள், அதிகப்பிரசங்கித்தனமான பத்திகள், ஃபேஸ்புக் போட்டோக்கள், நியூஸ் கமெண்ட்ஸ், போட்டோ கமெண்ட்ஸ் என்று ஒரு மினி பதிவுலகம் என்று சொல்லலாம். டைம்பாஸில் காணப்படும் கான்செப்ட் என்கிற வஸ்து முழுக்க முழுக்க பதிவுலகில் இருந்து களவாடப்பட்டு காசாக்கப்படுகிறது. சமீபத்தில்  கும்கி - நான் இயக்கியிருந்தால் என்று ஒரு பதிவர் எழுதியிருந்தார். அது ஒரு சூரமொக்கை பதிவு என்பது வேறு விஷயம். எனினும் அந்த கான்செப்டை மட்டும் சுட்டு பக்கங்களை நிரப்பிவிட்டது டைம்பாஸ். இது உதாரணம் மட்டுமே. மூன்று மாதகாலம் டைம்பாஸை பின்தொடர்பவர்களுக்கு இன்னும் தெரியும். ஒரு பத்திரிகைக்கான எந்த ஒரு உழைப்பையும் பயன்படுத்தாத டைம்பாஸ் வெறுமனே நம்முடைய சிந்தனையை, ஃபேஸ்புக்கில் பகிரப்படும் புகைப்படங்களை, நம்மவர்கள் வெள்ளந்தியாய் அனுப்பி வைக்கும் படைப்புகளை கொண்டு லகரங்களில் புரள்கிறது. டைம்பாஸுக்கு படைப்புகள் அனுப்பச்சொல்லி கேட்கும்போது “ப்ரைஸு தர்றோம் பாஸு” என்ற வாசகம் தவறாமல் இடம் பெற்றிருக்கும். அதை படிக்கும் போதெல்லாம் எனக்கு ஏனோ வாலி படத்தில் விவேக் சொல்லும் “நீங்க ஒன்னும் சும்மா போட வேணாங்க... காசை இங்க போடுங்க... அட்ரஸை இங்கே எழுதிட்டு போங்க...” என்ற வசனம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது. பத்திரிகையில் என்னுடைய பெயர் / புகைப்படம் வெளிவந்திருக்கிறது என்று சிலிர்த்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. டைம்பாஸ் ரக சஞ்சிகைகளில் நம்முடைய பெயர் / புகைப்படம் வெளியாவதற்கு பதிலாக நாமே நம்முடைய வலைப்பூவில் சுதந்திரமாக எழுதிக்கொள்ளலாம்...!


புத்தகக்காட்சி அரங்கில் டோலு குருமா பேசப்போவதாக நண்பர்கள் காத்திருந்தார்கள். வெறுப்பாக இருந்தது. குருமா அப்படியென்ன பேசிவிடப் போகிறார். அவருக்கு அருகிலேயே லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அம்மையார் அமர்ந்திருந்தார். சுமார் ஒரு மணிநேர காத்திருப்புக்குப்பின் அம்மையார் பேசினார். கற்பழிப்பு சம்பவங்கள் பற்றியும், ஆண்பிள்ளைகளை ஒழுக்கம் கற்பித்து வளர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினார். அவருக்கு தமிழ் உச்சரிப்பு சரியாக வரவில்லை என்று மன்னிப்பு கேட்டுக்கொண்டார். தொகுப்பாளர் வந்து லக்ஷ்மி கிளியின் கொஞ்சல் குரலில் பேசியதாக சொன்னார். எனக்கென்னவோ கிளியின் கொஞ்சல் ஒன்றும் அவ்வளவு இனிமையாக தோன்றவில்லை. அம்மையார் கிளம்பும் தருவாயில் வழிமறித்தோம். சில அடிகள் தொலைவில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். சிலிர்த்துவிட்டேன். ஆரோகணம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது உற்சாகமாக இருந்தது என்று கூறினேன். (உங்களை பார்த்ததும் தான் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டேன்). ஆங்கில வசனங்களை குறைத்திருக்கலாம் என்றேன். அண்ணா திரையரங்கில் பார்த்தபோது தானும் அதையே உணர்ந்ததாக சொன்னார். அடுத்த படத்தில் பாருங்கள் என்று கட்டைவிரலை உயர்த்தி வெற்றிக்குறி காட்டிவிட்டு கிளம்பினார். காத்திருக்கிறோம்.

பிரபா ஒயின்ஷாப் என்று கலவை பதிவிற்கு தலைப்பு வைத்துவிட்டு டெம்ப்ளேட் பின்னூட்டக்காரர்களிடம் நான் அனுபவிக்கும் துயரங்கள் சொல்லி மாளாது. ஏதோ என்னளவில் கொஞ்சம் சிரத்தையெடுத்து பதிவு போட்டால், “போதை ஏறவே இல்லை”, “சரக்கு சுமார்தான்”, “சரக்கில் காரம் கம்மி”, “சரக்கு சப்புன்னு இருக்கு" என்று பொத்தாம் பொதுவாக அடித்துவிட்டு போகிறார்கள். அதுகூட பரவாயில்லை. சரக்கு சுமார் என்று ஒருத்தர் முன்மொழிந்தால் பின்வருபவர்கள் அதையே வழிமொழிகிறார்கள். என்னுடைய எழுத்து மொக்கையாக இருக்கலாம் அது விஷயமில்லை. உண்மையில் பதிவில் என்ன குறைபாடு, சரக்கு சூப்பர் என்று சொல்வதற்கு உங்களுடைய எதிர்பார்ப்பு என்ன என்று வெளிப்படையாக சொன்னால் தானே அது Constructive Criticism.

நம்மூரில் ஆட்டோ என்றழைக்கப்படும் மஞ்சள்நிற மங்கள வாகனம், வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு பெயரில் அழைக்கப்படுகிறது. தாய்லாந்து, இந்தோனேசியா உட்பட சில கிழக்காசிய நாடுகள் மற்றும் சில உலக நாடுகளில் டுக்-டுக். காரணம் - வாகன செயல்பாட்டின் போது ஏற்படுத்தும் டுக்-டுக் சத்தம். சில இடங்களில் புட்-புட் என்றும் அழைக்கப்படுகிறது. தாய்லாந்து, இந்தோனேசிய நாடுகளில் ஒரேயொருவர் பயணிக்க வேண்டிய சமயங்களில் ஆட்டோவை நாட வேண்டியதில்லை. ஒட்டுனருடன் கூடிய பைக் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். ஓட்டுனருக்கு உணவு, கூலி,பெட்ரோல் பணம் கொடுத்துவிட்டால் விரும்பியபடி ஊர் சுற்றலாம். இந்தியாவிலும் இனி வரும் காலங்களில் வாடகை டூ-வீலர் யுக்தியை பயன்படுத்தலாம். போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம். இதையெல்லாம் ஏன் இப்போது சொல்கிறேன் என்றால் சமீபத்தில் வெளிவந்த பாரசீக மன்னன் என்ற குப்பை மேற்படி எண்ணத்தை விதைத்தது.

என்ன இது தமிழனுக்கு வந்த சோதனை ? தமிழனுடைய பாரம்பரிய உடையை அணிவதில் தான் எத்தனை சிரமம். ஏற்கனவே சிலமுறை வேட்டி கட்டியிருந்தாலும், அதிகபட்சம் பக்கத்து தெரு வரை மட்டுமே. இன்று ஏதோ ஆர்வக்கோளாறில் காலையிலிருந்து வேட்டி கட்டுவதற்காக பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெல்ட் வாங்கி வைத்துவிட்டேன். அப்படியே அலுவலகத்திற்கு வேறு செல்லப் போகிறேன். என்னென்ன நடக்கப் போகிறதோ ?

நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...!

என்னது தமிழ் புத்தாண்டா ? யோவ் நாங்க தெலுங்குய்யா...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

33 comments:

அஞ்சா சிங்கம் said...

சரக்கில் கிக்கு கம்மியாக இருக்கிறது தண்ணி ஜாஸ்தி ஆகிடுச்சி ....
வாங்கையா பின்னாடி இப்படியே லைன் கட்டுங்க.........

Philosophy Prabhakaran said...

நீங்கள்லாம் நல்லா வருவீங்க செல்வின்...

CS. Mohan Kumar said...

நம்ம ரெண்டு பேருக்கும் ஒரு விஷயத்தில் டேஸ்ட் ஒரு மாதிரி இருக்கு. நேத்து தானா? மிஸ் பண்ணிட்டேனே ! சே !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரக்கு கிக்கு கம்மிதான்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பட் ஆண்ட்டி ஓக்கே....... அட ஆண்ட்டி மேட்டரை சொன்னேங்க....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சமீபத்தில் கும்கி - நான் இயக்கியிருந்தால் என்று ஒரு பதிவர் எழுதியிருந்தார். அது ஒரு சூரமொக்கை பதிவு என்பது வேறு விஷயம்./////

யோவ் அவருலாம் சொந்தப்பதிவு போடுறதே பெருசு, அத போய் சூர மொக்கை கார மொக்கைன்னா என்ன பண்ணுவாரு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////உண்மையில் பதிவில் என்ன குறைபாடு, சரக்கு சூப்பர் என்று சொல்வதற்கு உங்களுடைய எதிர்பார்ப்பு என்ன என்று வெளிப்படையாக சொன்னால் தானே அது Constructive Criticism. //////

அது, நீங்க எழுதுனது மொக்கையா இருக்கா இல்ல எழுதுன விஷயம் மொக்கையா இருக்கான்னே கண்டுபுடிக்க முடியறதில்லீங்க. அதான் பொத்தாம் பொதுவா சொல்லிட்டு ஓடிடுறோம், நாங்களும் எத்தன கட ஏறி இறங்க வேண்டி இருக்கு, ஒரே இடத்துல உக்காந்து மண்டைய ஒடச்சிக்கிட்டு இருக்க முடியுங்களா?

இப்படிக்கு
டெம்ப்ளேட் கமெண்ட்டர்கள் சங்கம்

Philosophy Prabhakaran said...

மோகன் குமார், உங்கள் மனதை நான் அறிவேன்... இருப்பினும் நேற்று நீங்கள் அங்கே வந்திருந்தால் உங்கள் ஹவுஸ் பாஸிடம் அகப்பட்டிருப்பீர்கள்....

கேரளாக்காரன் said...

bike taxi available in goa

Philosophy Prabhakaran said...

Wow... i need to be there...

Unknown said...

அது, நீங்க எழுதுனது மொக்கையா இருக்கா இல்ல எழுதுன விஷயம் மொக்கையா இருக்கான்னே கண்டுபுடிக்க முடியறதில்லீங்க. அதான் பொத்தாம் பொதுவா சொல்லிட்டு ஓடிடுறோம், நாங்களும் எத்தன கட ஏறி இறங்க வேண்டி இருக்கு, ஒரே இடத்துல உக்காந்து மண்டைய ஒடச்சிக்கிட்டு இருக்க முடியுங்களா?/////////// பன்னிகுட்டி அண்ணே எப்டி இப்படியெல்லாம் யோசிக்க முடியுது ஹிஹி

rajamelaiyur said...

வேட்டியை இழுத்து கட்டி முடிச்சு போடுங்க அவுராது .

rajamelaiyur said...

பேன்ட் போட்டு வேட்டி கட்டுன்க்க அதுதான் சென்னை மக்களுக்கு நல்லது

பட்டிகாட்டான் Jey said...

இருக்கிறது நண்டு மாதிரி... சைட் அடிக்கிரது ஆண்டிகளை..... ரைட்டூ....

”எனக்கு பைக் ஓட்டத்தெரியாது, சென்னையில்ஓட்டுனரோடு பைக் வாடகைக்கி விட்டால், என்னபோன்ற பைக் ஓட்டிக் காயம்பட்டு டவுசரோட சுத்துரவிய்ங்களுக்கு அது உதவியா இருக்கும்”, இப்படி நேரடியா எழுதவேண்டியதுதான பக்கி, ஏன் பக்கத்து இலைக்கி பாயசம் கேக்கே... கர்ர் தூ :-))).

பட்டிகாட்டான் Jey said...

// யோவ் நாங்க தெலுங்குய்யா...! //

May This Sankranthi Bring Peace, Prosperity, Love & Happiness in your life

Happy Day 1 – Bhogi
Happy Day 2 – Makara Sankranti (Pedda Panduga)
Happy Day 3 – Kanuma
Happy Day 4 – Mukkanuma

HAPPY SANKRANTHI TO ALL MY TELUGU SPEAKING BROTHERS.

வவ்வால் said...

பிரபா,

//Constructive Criticism. //

விலாவாரியா விமர்சனம் செய்தா நீ என்ன அம்மாம் பெரிய அப்பாடாக்காரான்னு சண்டைக்கு வராங்க சில டோமர்கள் :-))

மக்களுக்கு தேவை இத்துப்போன தமிழ்மணம் வேட்டும், மகுடம்,நெம்பர் போட்ட தமிழ்மணம் தரவரிசை போஸ்டர்கள் மட்டுமே, இதுல குறை,நிறைகளை சொன்னா கொறைஞ்சாப்போயிடும்னு ஆசைப்பட்டு கேட்கும் பதிவர்கள் வெகு சிலரே.

சரி ஆசைப்பட்டு "Constructive Criticism." வேண்டும்னு கேட்டாப்பொறகும் சும்மா போகலாமா.

ஜெர்மன் டெக்னாலிஜின்னு சூரியா சொல்லுற சிமெண்ட் - ஒரு பங்கு.

திரிசூலம் மலையை வெடி வச்சி உடைச்ச ஜல்லி - 2 பங்கு,

தண்ணியில்லாத பாலாத்துல பொக்கலைன் வச்சு அள்ளிய மணல் - 4 பங்கு,

இதோட சிமெண்டு அளவில் 35 சதவீதம் நல்ல தண்ணி கலந்து குழப்பினா தரமான கான்கிரிட் கலவை கிடைக்கும். இதனை வச்சு வீடு, அலுவலகம் ,ஆசுபத்திரின்னு Construct செய்யலாம்.

இந்த கான்கிரீட் கலவைக்கு பேரு M-15 that means 15 Newton per square inchs அளவுக்கு pressure , தாங்கும்.

இதே போல M-20 ,M-25 கான்கிரிட் மிக்சர் எல்லாம் இருக்கு, தேவையான வலிமைக்கு ஏற்றார்ப்போல கான்கிரிட் மிக்சர் தயாரிச்சு பயன்ப்படுத்தணும்.

எப்பூடி நம்ம "Constructive Criticism" :-))

இன்னும் டீடெயிலா ,அஸ்த்திவாரம் தோண்டுவது, பைல் ஃபவுண்டேஷன் போடுவது, செங்கல்,சிமெண்ட் வச்சு வீடு கட்டுறது என நிறைய Constructive Criticism செய்யலாம், தேவைப்பட்டால் விரிவாக இன்னொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்.

அஞ்சா சிங்கம் said...

@ வவ்வால்
நான் கண்டு பிடிச்சிட்டேன் டோய் ....இந்த ஆளு கொத்தனாரேதான் ............

M (Real Santhanam Fanz) said...

Telugar Thirunal Vaazhthukkal boss.. Thailandla Rental Bike mattumilleenganna, Rental Cycle Sevice kooda irukkuthunganna(in university campuses).. (btw ethunaacham template comment poduratha patthi pathivula sonna, appuram thodarnthu ellarume athaiye comnenttaa poduraangale, athuvum template commentngura categoryla varumaa boss)

வவ்வால் said...

ஓய் அஞ்சாஸிங்கம்,

ஏன் மேஸ்திரின்னு சொன்னா ஒத்துக்க மாட்டிகளோ?

கட்டுமானமா விமர்சனம் பண்ணவோனும்னு பிரபா பகுமானமா கேட்டுக்கிட்டதால தான் "கட்டுமானமா" விமர்சனம் செய்தோம் :-))

சரியான கட்டமைப்பு உள்ள நாடு வளர்ச்சியை ஊக்குவிக்கும் ,

சரியான கட்டமைப்புள்ள கன்னியர் கிளர்ச்சியை ஊக்குவிப்பர் :-))

எப்பூடி!!!

எனவே கட்டமைப்பு ரொம்ப முக்கியம்:-))

நாய் நக்ஸ் said...

vavvaalu.....

enna m20,,m25,,m30 பத்திஎல்லாம் பெசியாறது...???
டெஸ்ட் பண்ண என்கிட்டே தான் வரணும்...

CUBE-எடுத்துகிட்டு வர்றது.....

@பிரபா.....

ஜட்டி போட்டிரிக்கீறுள்ள?????
அப்ப நம்ம ராஜ்கிரண் மாதிரி போகலாம்ல ....!!!!

வவ்வால் said...

//bike taxi available in goa//

கென்யாவில சைக்கிள் டாக்சியே இருக்காம், காசு கொடுத்தா சைக்கிளிலில் டபுள்ஸ் வச்சு கூப்பீட்டு போவாங்களாம் :-))

கோவா வில் ஸ்கூட்டர் வாடகைக்கு தராங்க ,ஒரு மணி நேரம்,ரெண்டு மணி நேரம்னு சைக்கிள் போல வாடகைக்கு எடுத்து ஓட்டி சுத்திப்பார்த்துக்கலாம் :-))

வவ்வால் said...

நக்ஸ் அண்ணாத்த,

யு மீன் ஐஸ் கியூப்?

ஹி..ஹி ... ஐஸ் கியூப் எடுத்தா வந்தா அதுக்கு சரக்கு கொடுப்பீங்களோ :-))

ராஜ் கிரண் போல வேட்டிக்கட்ட பட்டாப்பட்டி டவுசர் போடணும் :-))

Philosophy Prabhakaran said...

ராஜபாட்டை, பெல்ட் பக்காவா வேலை செய்யுது கவலை இல்லை...

சுஜாதா புத்தக விஷயத்தில் நான் சொன்னது போலவே மொத்த புத்தகங்களையும் அள்ளிவிட்டார்கள்... மீண்டும் 21ம் தேதிக்கு மேல் புத்தகங்கள் வரலாம்...

Philosophy Prabhakaran said...

ம்ஹூம் தலை சுத்துது...

Anonymous said...

@வவ்வால்,
Hope you are not a civil engineer :-),as the mix ratio for M15 (1:2:4)concrete should be,
Cement-1; Fine aggregate(Sand)-2; Course aggregate(Metal)-4 and W/C ratio-0.4.

BTW,Wish you all a very Happy Pongal!!

Balasubramanian

பட்டிகாட்டான் Jey said...

எலேய் பிரபா, சுஜாதாவோட நூல்கள் இ-புகஸா வேணும்னா என்னோட ட்ராப் பாக்ஸ்ல இருக்குது தரவிறக்கம் செய்துக்கோ. நான் இன்னொருத்தர் கிட்டேர்ந்து பெற்றது.

https://www.dropbox.com/home/Sujatha%20E-Books%20In%20Pdf

Philosophy Prabhakaran said...

பட்டிக்ஸ்... அந்த மின்புத்தக திரட்டு ஏற்கனவே என்னிடம் இருக்கிறது... மின்புத்தகமாக படிப்பது ஒரு கொடுமையான விஷயம்....

Unknown said...

டைம்பாஸ் பற்றி ஏற்கனவே சிவாகிட்ட சொல்லிவிட்டேன்..! அவங்க பொழப்பு! இதுல வலைப்பதிவர்களை ப்ரமோட் பண்ணக்கூடாதுன்னு ஒரு பிளாக் சர்க்கிள் பத்திரிக்கையுலகில் வலம் வந்ததாக ஒரு ஆந்தையார் சொன்னார்...!என் விகடன் ஸ்டாப் பண்ணியதை பார்த்தா அது உண்மைதான் போல.....

'பரிவை' சே.குமார் said...

ஒயின்ஷாப் எப்பவும் போல நல்லாயிருக்கு....

பொங்கலுக்கு 250 கோடிக்கு மேல விற்பனையானதுனால சரக்கு கம்மியான மாதிரி தெரியுது... இருந்தும் பிரபாகரனின் எழுத்து ஈர்க்கிறது....

Ponmahes said...

பாத்து தம்பி........... லக்ஷ்மி ராமகிருஷ்ணணுக்கு அம்மையார் பட்டம் கொடுத்ததற்காக அதிமுக ர.ராக்கள் பொங்கி விட போகிறார்கள் .....................

பதிவு ஓகே ...ஆட்டோ பற்றிய தகவலுக்கு நன்றி ............
//என்ன இது தமிழனுக்கு வந்த சோதனை ? தமிழனுடைய பாரம்பரிய உடையை அணிவதில் தான் எத்தனை சிரமம்.

//என்னது தமிழ் புத்தாண்டா ? யோவ் நாங்க தெலுங்குய்யா...!

என்ன இது முரண்பாடு தம்பி....
முன் பத்தியில் தமிழன் என்று சொல்லிவிட்டு பின் தெலுங்குன்னு சொன்னா எப்படி????????????

காமெடிக்காக எழுதியிருந்தாலும் இன்னும் கொஞ்சம் நல்லா நகைச்சுவை படுத்தியிருக்கலாம்.....................

தை 1 ஐ தமிழ் புத்தாண்டாக அறிவித்த கலைஞர் கூட தெலுங்கு தான் ...................



Philosophy Prabhakaran said...

பொன் மகேஷ், கலைஞர் இந்திய பிரஜையே கிடையாது... அவங்க அப்பாவுடைய அப்பப்பாவுடைய அப்பப்பா எல்லாம் நைஜீரியா நாட்டில் இருந்து மஞ்சள் பையோடு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள்...

Ponmahes said...

இது எப்போ ...சொல்லவே இல்ல....

வவ்வால் said...

பாலசுப்ரமணியன்,

உங்கள் திருத்தத்துக்கு நன்றி, ரேஷியோ இடம் மாத்திட்டேன் போல, நாம சைட் சூப்ரவைசரா தான் இருந்திருக்கோம், உங்க அளவுக்கு கலவை பக்குவம் தெரியாது.

ஆனா எனக்கு தெரிஞ்சு மணலையே அதிகம் கலக்குனாங்க.

கேப்புல கெடா வெட்டினாக்கூடா ,கெடாவுக்கு ஒரு கண்ணு தெரியலைனு கரெக்டா புடிக்கிறாங்களே, இனிமே உஷாராத்தான் இருக்கோணும் :-))