அன்புள்ள வலைப்பூவிற்கு,
கமல் - ஒற்றை சொல்லே போதும் விஸ்வரூபத்திற்காக பேராவலுடன் காத்திருக்க. எனினும், விஸ்வரூபம் தமிழகம் தவிர்த்து மற்ற இடங்களில் வெளியாகி நாட்களான காரணத்தினால், ஏற்கனவே படத்தின் கதையை, தன்மையை பலரும் பலவிதமாக எழுதித்தள்ளிவிட்ட காரணத்தினால் எதிர்பார்ப்பு கொஞ்சம் குறைந்துவிட்டது என்பதே உண்மை. வடசென்னை மகாராணி திரையரங்கம் பாதியளவு கூட நிறையவில்லை. கமல் படத்துக்கு கூட்டம் வராது என்பதே ஒரு பெருமைதான்.
அமெரிக்காவின் மீதான அல்-காயிதா தீவிரவாதிகளின் சதி திட்டத்தை ஒரு அமெரிக்க-இந்திய கைக்கூலி முறியடிப்பதே கதை.
கமல் - விஸ்வநாதனாக தன்னுடைய வழமையான, செழுமையான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். கமலின் அறிமுகக்காட்சியும், விஸ்வரூபமெடுக்கும் காட்சியும் மாபெரும் பலம். அதற்குப்பின் கமல் மிகவும் அடக்கி வாசித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். வழக்கமாக கமல் படங்களில் வசனங்கள் மெய்சிலிர்க்க வைக்கும். உதாரணத்திற்கு, உ.போ.ஒவில் “எனக்கு இடது வலது பேதமில்லை... எழுதும்போது மட்டும்...!”, தசாவதாரத்தில் பல வசனங்கள். விஸ்வரூபத்திலும் இல்லாமலில்லை. ஆனால் ஒப்பீட்டளவில் குறைவு.
பூஜா குமார் - காதல் ரோஜாவே திரைப்படத்தில் இடம்பெற்ற நினைத்த வரம் கேட்டு என்ற பாடலில் லட்சணமாக தோன்றியிருப்பார். தற்போது நிறைந்த மனதுடன் தமிழ் சினிமாவுக்கே திரும்ப வந்திருக்கிறார். பார்ட்டி ப்ரச்சோதகம். அபிராமியின் பிண்ணனிக்குரல் வசீகரம். பூஜாவின் ஆங்கில வசனங்களை பூஜாவே பேசியிருக்கக்கூடும் என்று கருதுகிறேன். யூ.எஸ். அக்சென்ட் மணக்கிறது. ஆண்ட்ரியாவிற்கு டம்மி ரோல்தான். அறிமுகக்காட்சியில் மட்டும் ஈர்ப்பு. மற்றபடி ஒன்றுமில்லை.
ராகுல் போஸ் - பாலிவுட்டில் பெரிய வஸ்தாது என்று அறிகிறேன். தமிழில் அறிமுகம். சின்னச் சின்ன முகபாவனைகளில் அசத்துகிறார். அவருடைய குரல் இம்சிக்கிறது. சிறிய வேடமொன்றில் நாசர். நிறைய வட இந்திய, மேலை நாட்டு நடிகர்கள்.
ஷங்கர் மகாதேவன் குரலில், கமலுடைய ஜதியில், முகபாவனைகளில் உன்னை காணாது பாடல் பிடிக்கிறது. சண்டைக்காட்சியின் பிண்ணனியில் ஒலிக்கும் யாரென்று தெரிகிறதா பாடலை படம் பார்த்தபிறகு பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. சனு வர்கீஸ் ஒளிப்பதிவில் அமெரிக்க - ஆப்கன் போர்காட்சிகளில் கண்ட ஆப்கானிஸ்தானை கச்சிதமாக காட்டியிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் குறித்த காட்சிகள் ஜோர்டானிலும், சென்னையில் அரங்குகள் அமைத்தும் படம் பிடிக்கப்பட்டதாக அறிகிறேன்.
அபிராமியின் டப்பிங் இனிமைதான். ஆனால், பூஜா குமார் லொட லொடவென அய்யராத்து பாஷை பேஷிண்டே இருப்பது தசாவதாரம் அசினை நினைவூட்டுகின்றன. FBI விசாரணை காட்சிகளும் அவ்விதமே.
போகிறபோக்கில், தாலிபான்கள் அவர்களுடைய வீட்டுப்பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை, பிள்ளைகளின் எதிர்காலத்தை நசுக்குவது, அவர்கள் வளர்ந்து சிறுபிள்ளைத்தனமாக நடந்துக்கொள்வது என்று நிறைய தகவல்களை சொல்லியிருக்கிறார்.
சரி, விஸ்வரூபம் சொல்லும் விஷயத்துக்கு வருவோம். ஒரு காட்சியில் அப்பாவி இஸ்லாமியர் ஒருவரை தாலிபான்கள் தூக்கிலிடுகிறார்கள். அப்போது பாதிக்கப்பட்டவனுடைய தாயார் விஸாமைப் பார்த்து “உன் சகோதரனை என்ன செஞ்சிட்டாங்க பார்த்தியா ?” என்று கேட்டு அழுகிறார். அது விஸாமிடம் மட்டும் கேட்கப்பட்ட கேள்வியல்ல. உலகிலுள்ள அத்தனை அமைதி விரும்பும் இஸ்லாமியர்களையும் பார்த்து கேட்கப்பட்டுள்ள கேள்வி. மற்றொரு காட்சியில் விஸாம், அழிக்கமுடியாத பாவம் தன்னுடைய நெற்றியில் எழுதப்பட்டிருப்பதாக குறிப்பிடுகிறார். இஸ்லாமியர்களுள் மிகச்சிறிய அளவிலிருக்கும் ஜிகாதிகள் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்திற்கும் களங்கம் ஏற்படுத்தியிருப்பதாக சாடுகிறார். நியாயமாக பார்த்தால், தாலிபானை, ஜிகாதிகளை எதிர்க்கும் நேர்மையான இந்திய இஸ்லாமியர்கள் விஸ்வரூபத்தை ஆதரித்திருக்க வேண்டும். விஸ்வரூபத்தை எதிர்ப்பவர்கள் தாலிபானை ஆதரிக்கிறார்கள் என்றே அர்த்தம் கொள்ள வேண்டியிருக்கிறது.
ஒரு சினிமாவில் குரான் படித்துவிட்டு கொலை செய்வதுபோல அமைக்கப்பட்ட காட்சிகளை எதிர்க்கும் இஸ்லாமியர்கள், நிஜத்திலேயே குரான் படித்துவிட்டு கொலைகள், வன்முறைகளில் ஈடுபடும் தாலிபான்கள் தங்களுடைய மதத்தை இழிவுபடுத்துகிறார்கள் என்று ஏன் போராடக்கூடாது ?
அதே சமயம், விஸாம் உலகத்தை ரட்சிக்க வந்தவன் என்றெல்லாம் கற்பிதம் செய்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவன் அமெரிக்க - இந்திய கைக்கூலி என்று படத்திலேயே தெளிவாக சொல்லப்பட்டுவிட்டது. அதற்கு மன்மோகன் சிங் தொலைபேசி உரையாடல் காட்சியே சாட்சி. தாலிபான்களை கொஞ்சம் காட்டமாக சாடியிருக்கும் விஸ்வரூபம், அமெரிக்காவை பூசின மாதிரியும் பூசாத மாதிரியும் சாடியிருக்கிறது. அமெரிக்காவோ, ஆப்கானிஸ்தானோ எதுவாக இருப்பினும் பயங்கரவாதம் தவிர்க்கப்பட வேண்டியது என்று வலியுறுத்தியிருக்கிறது. நம்மில் யார் இறந்தாலும் ஒருதாய் அழுவாள் என்கிற கமலுடைய வரிகளும் அதைத்தான் வழிமொழிகின்றன.
Well. ஒரு வணிக சினிமாவாக விஸ்வரூபம் மேட்டுக்குடி வர்க்கத்தை மட்டுமே திருப்திப்படுத்தும். நிறைய ஆங்கில மயம். சாமான்ய ரசிகர்களால் சரிவர புரிந்துக்கொள்ள முடியவில்லை. கமலுக்கு வணிக ரீதியாக மற்றுமொரு தோல்விப்படமாக அமைய வேண்டியது, இஸ்லாமியர்களின் அவசியமற்ற போராட்டங்களின் வாயிலாக நல்ல விளம்பரம் கிடைத்து லாபம் பார்த்துக்கொண்டிருக்கிறது.
தனிப்பட்ட முறையில் படம் என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை, ஒருசில காட்சிகள் தவிர்த்து. கமல் விஸ்வரூபத்தை நேரடியாக ஹாலிவுட்டில் எடுத்திருந்தால் ஆஸ்கராவது கிடைத்திருக்கும். மேலும், ஆப்கானிஸ்தான் காட்சிகள், உண்மையிலேயே அதன் மீது ஈடுபாடு கொண்டவர்களுக்கு வேண்டுமானாலும் பிடிக்கலாம். எனக்கு அந்நியமாகவே தோன்றியது. விஸ்வரூபம் எனக்கான படம் அல்ல.
கமல் - ஒற்றை சொல்லே போதும் விஸ்வரூபத்திற்காக பேராவலுடன் காத்திருக்க. எனினும், விஸ்வரூபம் தமிழகம் தவிர்த்து மற்ற இடங்களில் வெளியாகி நாட்களான காரணத்தினால், ஏற்கனவே படத்தின் கதையை, தன்மையை பலரும் பலவிதமாக எழுதித்தள்ளிவிட்ட காரணத்தினால் எதிர்பார்ப்பு கொஞ்சம் குறைந்துவிட்டது என்பதே உண்மை. வடசென்னை மகாராணி திரையரங்கம் பாதியளவு கூட நிறையவில்லை. கமல் படத்துக்கு கூட்டம் வராது என்பதே ஒரு பெருமைதான்.
அமெரிக்காவின் மீதான அல்-காயிதா தீவிரவாதிகளின் சதி திட்டத்தை ஒரு அமெரிக்க-இந்திய கைக்கூலி முறியடிப்பதே கதை.
கமல் - விஸ்வநாதனாக தன்னுடைய வழமையான, செழுமையான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். கமலின் அறிமுகக்காட்சியும், விஸ்வரூபமெடுக்கும் காட்சியும் மாபெரும் பலம். அதற்குப்பின் கமல் மிகவும் அடக்கி வாசித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். வழக்கமாக கமல் படங்களில் வசனங்கள் மெய்சிலிர்க்க வைக்கும். உதாரணத்திற்கு, உ.போ.ஒவில் “எனக்கு இடது வலது பேதமில்லை... எழுதும்போது மட்டும்...!”, தசாவதாரத்தில் பல வசனங்கள். விஸ்வரூபத்திலும் இல்லாமலில்லை. ஆனால் ஒப்பீட்டளவில் குறைவு.
பூஜா குமார் - காதல் ரோஜாவே திரைப்படத்தில் இடம்பெற்ற நினைத்த வரம் கேட்டு என்ற பாடலில் லட்சணமாக தோன்றியிருப்பார். தற்போது நிறைந்த மனதுடன் தமிழ் சினிமாவுக்கே திரும்ப வந்திருக்கிறார். பார்ட்டி ப்ரச்சோதகம். அபிராமியின் பிண்ணனிக்குரல் வசீகரம். பூஜாவின் ஆங்கில வசனங்களை பூஜாவே பேசியிருக்கக்கூடும் என்று கருதுகிறேன். யூ.எஸ். அக்சென்ட் மணக்கிறது. ஆண்ட்ரியாவிற்கு டம்மி ரோல்தான். அறிமுகக்காட்சியில் மட்டும் ஈர்ப்பு. மற்றபடி ஒன்றுமில்லை.
ராகுல் போஸ் - பாலிவுட்டில் பெரிய வஸ்தாது என்று அறிகிறேன். தமிழில் அறிமுகம். சின்னச் சின்ன முகபாவனைகளில் அசத்துகிறார். அவருடைய குரல் இம்சிக்கிறது. சிறிய வேடமொன்றில் நாசர். நிறைய வட இந்திய, மேலை நாட்டு நடிகர்கள்.
ஷங்கர் மகாதேவன் குரலில், கமலுடைய ஜதியில், முகபாவனைகளில் உன்னை காணாது பாடல் பிடிக்கிறது. சண்டைக்காட்சியின் பிண்ணனியில் ஒலிக்கும் யாரென்று தெரிகிறதா பாடலை படம் பார்த்தபிறகு பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. சனு வர்கீஸ் ஒளிப்பதிவில் அமெரிக்க - ஆப்கன் போர்காட்சிகளில் கண்ட ஆப்கானிஸ்தானை கச்சிதமாக காட்டியிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் குறித்த காட்சிகள் ஜோர்டானிலும், சென்னையில் அரங்குகள் அமைத்தும் படம் பிடிக்கப்பட்டதாக அறிகிறேன்.
அபிராமியின் டப்பிங் இனிமைதான். ஆனால், பூஜா குமார் லொட லொடவென அய்யராத்து பாஷை பேஷிண்டே இருப்பது தசாவதாரம் அசினை நினைவூட்டுகின்றன. FBI விசாரணை காட்சிகளும் அவ்விதமே.
போகிறபோக்கில், தாலிபான்கள் அவர்களுடைய வீட்டுப்பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை, பிள்ளைகளின் எதிர்காலத்தை நசுக்குவது, அவர்கள் வளர்ந்து சிறுபிள்ளைத்தனமாக நடந்துக்கொள்வது என்று நிறைய தகவல்களை சொல்லியிருக்கிறார்.
சரி, விஸ்வரூபம் சொல்லும் விஷயத்துக்கு வருவோம். ஒரு காட்சியில் அப்பாவி இஸ்லாமியர் ஒருவரை தாலிபான்கள் தூக்கிலிடுகிறார்கள். அப்போது பாதிக்கப்பட்டவனுடைய தாயார் விஸாமைப் பார்த்து “உன் சகோதரனை என்ன செஞ்சிட்டாங்க பார்த்தியா ?” என்று கேட்டு அழுகிறார். அது விஸாமிடம் மட்டும் கேட்கப்பட்ட கேள்வியல்ல. உலகிலுள்ள அத்தனை அமைதி விரும்பும் இஸ்லாமியர்களையும் பார்த்து கேட்கப்பட்டுள்ள கேள்வி. மற்றொரு காட்சியில் விஸாம், அழிக்கமுடியாத பாவம் தன்னுடைய நெற்றியில் எழுதப்பட்டிருப்பதாக குறிப்பிடுகிறார். இஸ்லாமியர்களுள் மிகச்சிறிய அளவிலிருக்கும் ஜிகாதிகள் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்திற்கும் களங்கம் ஏற்படுத்தியிருப்பதாக சாடுகிறார். நியாயமாக பார்த்தால், தாலிபானை, ஜிகாதிகளை எதிர்க்கும் நேர்மையான இந்திய இஸ்லாமியர்கள் விஸ்வரூபத்தை ஆதரித்திருக்க வேண்டும். விஸ்வரூபத்தை எதிர்ப்பவர்கள் தாலிபானை ஆதரிக்கிறார்கள் என்றே அர்த்தம் கொள்ள வேண்டியிருக்கிறது.
ஒரு சினிமாவில் குரான் படித்துவிட்டு கொலை செய்வதுபோல அமைக்கப்பட்ட காட்சிகளை எதிர்க்கும் இஸ்லாமியர்கள், நிஜத்திலேயே குரான் படித்துவிட்டு கொலைகள், வன்முறைகளில் ஈடுபடும் தாலிபான்கள் தங்களுடைய மதத்தை இழிவுபடுத்துகிறார்கள் என்று ஏன் போராடக்கூடாது ?
அதே சமயம், விஸாம் உலகத்தை ரட்சிக்க வந்தவன் என்றெல்லாம் கற்பிதம் செய்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவன் அமெரிக்க - இந்திய கைக்கூலி என்று படத்திலேயே தெளிவாக சொல்லப்பட்டுவிட்டது. அதற்கு மன்மோகன் சிங் தொலைபேசி உரையாடல் காட்சியே சாட்சி. தாலிபான்களை கொஞ்சம் காட்டமாக சாடியிருக்கும் விஸ்வரூபம், அமெரிக்காவை பூசின மாதிரியும் பூசாத மாதிரியும் சாடியிருக்கிறது. அமெரிக்காவோ, ஆப்கானிஸ்தானோ எதுவாக இருப்பினும் பயங்கரவாதம் தவிர்க்கப்பட வேண்டியது என்று வலியுறுத்தியிருக்கிறது. நம்மில் யார் இறந்தாலும் ஒருதாய் அழுவாள் என்கிற கமலுடைய வரிகளும் அதைத்தான் வழிமொழிகின்றன.
Well. ஒரு வணிக சினிமாவாக விஸ்வரூபம் மேட்டுக்குடி வர்க்கத்தை மட்டுமே திருப்திப்படுத்தும். நிறைய ஆங்கில மயம். சாமான்ய ரசிகர்களால் சரிவர புரிந்துக்கொள்ள முடியவில்லை. கமலுக்கு வணிக ரீதியாக மற்றுமொரு தோல்விப்படமாக அமைய வேண்டியது, இஸ்லாமியர்களின் அவசியமற்ற போராட்டங்களின் வாயிலாக நல்ல விளம்பரம் கிடைத்து லாபம் பார்த்துக்கொண்டிருக்கிறது.
தனிப்பட்ட முறையில் படம் என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை, ஒருசில காட்சிகள் தவிர்த்து. கமல் விஸ்வரூபத்தை நேரடியாக ஹாலிவுட்டில் எடுத்திருந்தால் ஆஸ்கராவது கிடைத்திருக்கும். மேலும், ஆப்கானிஸ்தான் காட்சிகள், உண்மையிலேயே அதன் மீது ஈடுபாடு கொண்டவர்களுக்கு வேண்டுமானாலும் பிடிக்கலாம். எனக்கு அந்நியமாகவே தோன்றியது. விஸ்வரூபம் எனக்கான படம் அல்ல.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
103 comments:
சாமான்ய ரசிகனுக்கு அக்மார்க் கமல் படத்தையே கொடுத்திருக்கிறார் கமல்.
நேர்மையான பார்வை . வாழ்த்துகள்
//ஒரு சினிமாவில் குரான் படித்துவிட்டு கொலை செய்வதுபோல அமைக்கப்பட்ட காட்சிகளை எதிர்க்கும் இஸ்லாமியர்கள், நிஜத்திலேயே குரான் படித்துவிட்டு கொலைகள், வன்முறைகளில் ஈடுபடும் தாலிபான்கள் தங்களுடைய மதத்தை இழிவுபடுத்துகிறார்கள் என்று ஏன் போராடக்கூடாது ?//
இதுவரை உங்களில் எத்தனை பேர் குஜராத்தில் நடந்த அநியாயத்திர்க்கு எதிராக குரல் குடுத்தீர்கள்,
உங்கள் மதத்தை இழிவு படுத்தும் மோடியை யென் இதுவரை நீங்கள் எதிர்க்கவில்லை!!!!!!!!!!!!!!!
அல்லது தமிழகத்தில் உள்ள ராமகோபாலனையாவது எதிர்த்தீர்களா??????????
ஹாஜா, நான் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் கூறாமல் பதில் கேள்வி கேக்குறேளே... பதில் இல்லையா ?
//விஸ்வரூபம் எனக்கான படம் அல்ல.//
இருக்கலாம்.
ஆனால், அது விதைக்க வேண்டிய விஷத்தை மிகச்சரியாக உங்கள் மனதில் நன்றாகவே விதைத்து விட்டது.
எப்படி..?
இப்படி ==>>//போகிறபோக்கில், தாலிபான்கள் அவர்களுடைய வீட்டுப்பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை, பிள்ளைகளின் எதிர்காலத்தை நசுக்குவது, அவர்கள் வளர்ந்து சிறுபிள்ளைத்தனமாக நடந்துக்கொள்வது என்று நிறைய தகவல்களை சொல்லியிருக்கிறார்.//
ஹா..ஹா...ஹா.... நம்பி விட்டீர்கள் அல்லவா..?
அப்படியே, 'அமேரிக்கா குழந்தைகளையும் பெண்களையும் கொல்லாது' என்ற கமலின் முல்லா உமரின் வசனத்தையும் நம்பி விடுவீர்கள்.
அடுத்த விஸ்வரூபம் part 2 இல்,
''ஹிரோஷிமா நாகசாகியில் அணுகுண்டு போட்டு ரெண்டு லட்சம் பேரை கொன்றது... அல்கொய்தாதான்'' என்று ஒசாமை பின் லேடனை விட்டு வசனம் பேச வைப்பார் கமல். அதையும் நம்பி விடுவீர்கள்..!
ஏற்கனவே, அமேரிக்கா வெளியிட்ட அனானி வீடியோக்கள், மற்றும் அமெரிக்க கைக்கூலி இந்திய மீடியா எல்லாம் உங்கள் மனதில் விதைத்த கருத்தான....//நிஜத்திலேயே குரான் படித்துவிட்டு கொலைகள், வன்முறைகளில் ஈடுபடும் தாலிபான்கள் தங்களுடைய மதத்தை இழிவுபடுத்துகிறார்கள்//==>> இதைப்போலவே எல்லாவற்றையும் ஒரு சார்பு ஆதாரத்தின் படி நம்புங்கள்..!
கண்ணுக்கு எதிரே ஆதாரபூர்வமாக கமல் செய்யும் 'கருத்து பயங்கரவாதத்தை' எதிர்க்க வக்கற்ற அறிவாளிகள்(?), யாரென்றே முகம் தெரியாத அமேரிக்கா தயாரித்த முகமூடிகளின் பயங்கரவாதத்தை எதிர்க்கச்சொல்வதுதான் கொடிய வேதனை..!
குட்டி தீவிரவாதிகளான தாலிபானை உருவாக்கிய பெரிய பயங்கரவாதி அமெரிக்காவுக்கு எனது கடும் கண்டனத்தை இங்கே பதிவு செய்கிறேன்.
இந்திய ராவை மிகவும் கேவலப்படுத்தி, அமெரிக்காவுக்கு சொம்படிக்கும் கமல் என்ற அமெரிக்க கைக்கூலிக்கு எனது ஊசிப்போன நாற்றமெடுத்த போன மாச பிரியாணியை சாப்பிடும் தகுதி இருக்கா என்றே யோசிக்கிறேன்.
ஆஷிக், நீங்கள் தாலிபான் ஆதரவாளரா ? இருப்பின், உண்மையில் தாலிபான்கள் அவர்கள் வீட்டுப்பெண்களை, குழந்தைகளை எப்படி மரியாதையுடன் நடத்துகிறார்கள் என்று எனக்கு சொல்லி கொடுக்கலாமே...
ஆஷிக், நான் எதையெல்லாம் நம்பிவிடுவேன் என்று நீங்களாகவே சொல்லி உங்கள் மீது நீங்களே சேற்றை அள்ளி பூசிக்கொள்கிறீர்கள்...
indha padathai paarungal. viswaroopam pol, vasanaththai MUTE seithaal Oomai padam aagi vidum
http://www.imdb.com/title/tt1793239/?ref_=sr_4
//ஆஷிக், நீங்கள் தாலிபான் ஆதரவாளரா ? //-----இல்லை.
//இருப்பின், உண்மையில் தாலிபான்கள் அவர்கள் வீட்டுப்பெண்களை, குழந்தைகளை எப்படி மரியாதையுடன் நடத்துகிறார்கள் என்று எனக்கு சொல்லி கொடுக்கலாமே...//-----மன்னிக்கவும். நான் ஆப்கானிஸ்தான் சென்றது இல்லை. எனவே என்னால் சொல்ல முடியாது.
ஆனால்... அங்கே சென்று விட்டு வந்த ''''இந்த இங்கிலாந்து பெண்ணின் செய்திகளை இங்கே சென்று தமிழில் படியுங்கள்.''''
கூகுளில் தேடினால் இதுபோல இன்னும் நிறைய உள்ளது, ஆங்கிலத்தில்.
படித்து விட்டு கண்ணாடியை பாருங்கள். நீங்கள் சொன்ன சேறு யார் முகத்தில் உள்ளது என்று தெரியும்.
பிரபாகர்,கேள்விக்கு பதில்தான் பதிலாகும் என்பதில்லை, சில சமயம் அதே கேள்வியே நம்மை நோக்கி கேட்டு பார்த்தால் பதில் கிடைத்து விடும்,
உங்களுக்கு வந்தால் ரத்தம், அதே எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா??????
மேலும் சகோதரர் ஆஷிக் குடுதுள்ள லிங்க்கில் போயி படித்து பார்த்துவிட்டு கூறுங்கள் தாலிபான்கள் பெண்களை எப்படி நடுத்துகிறார்கள் என்று????
பிரபா...
அமெரிக்கா காரன் பெண்களை கொல்ல மாட்டார்கள் என்ற வசனம் பொய். உண்மையில் ஆப்கானியர்களே அந்த பழக்கம் உடையவர்கள்.கவனிக்க தாலிபன்கள் மட்டும் அல்ல, மொத்த ஆப்கானியர்களும் பெண்களை போரில் கொல்ல மாட்டார்கள்(வடக்கு கூட்டணி, தெற்கு கூட்டணி, கிழக்கு கூட்டணி, தாலிபன் அனைவரும்). இதை தெரிந்து கொண்டே கமல் அப்படியே அதை எதிராக பயன்படுத்தியது கமலின் நேர்மையை சொல்கிறது.
இந்தியர்களில் தாலிபன் எதிர்ப்பு தேவையற்றது... தாலிபன்களை நாம் வெறுக்க எந்த காரணமும் இல்லை...அவர்களின் இலக்கு அவர்கள் நாட்டை பாதுகாத்து கொள்வது மட்டுமே... ஏன் அவர்கள் மீது இத்துனை வெறுப்பை கக்குகிறார்கள்..??? அது அப்பட்டமான இஸ்லாமிய எதிர்ப்பே அன்றி வேறில்லை... இந்தியாவில் தாலிபன் நடத்திய தாக்குதல் ஒன்றை சொல்லி விட்டு அவர்கள் மேல் சேற்றை வாரி இறைத்தால் அது நியாயம்... அதை விடுத்து அமெரிக்கா காரன் சொல்வதை வாந்தி எடுப்பது ஏன்?? இது தான் எங்கள் கேள்வி...
சிராஜ்
அகம்மது ஷா அப்தாலி இந்தியா மேல படையெடுத்தப்போ எந்த பெண்ணையும் கொல்ல வில்லையா?
ஹாஜா, நீங்கள் பதில் கேள்வி கேட்க விரும்பினால் இந்துக்களை பார்த்து கேளுங்கள்... மாறி மாறி சட்டையை கிழித்துக்கொள்ளுங்கள்...
சிராஜ், அமேரிக்காகாரன் பெண்களை கொல்லமாட்டான் என்பது வடிகட்டின பொய் என்று படத்திலேயே கூறிவிட்டார்கள்... அந்த வசனம் பேசிய அடுத்த கனத்தில் அமெரிக்கர்கள் பெண்கள் தங்கியிருக்கும் வீட்டின் மீது குண்டு போடுவதாக காட்சியமைத்திருக்கிறார்கள்...
இந்திய முஸ்லீம்களுக்கு தாலிபான் எதிர்ப்பு தேவையற்றதாக இருக்கலாம்... நான் ஒப்பீடுக்காக கேட்கிறேன்... அப்படியென்றால் தாலிபான் பற்றிய படத்தையும் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லையே...
///ஆப்கானியர்களே அந்த பழக்கம் உடையவர்கள்.கவனிக்க தாலிபன்கள் மட்டும் அல்ல, மொத்த ஆப்கானியர்களும் பெண்களை போரில் கொல்ல மாட்டார்கள்///
மலாலாவை சுட்டது யாருங்கோ ..பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும் நாதாரித்தனம் செஞ்சாலும் நாசூக்கா செய்யணும் ...
வாகாபிகள் மண்டையில் தாலிபான் வெறி ஏறி இருக்கு .
https://www.youtube.com/watch?v=tgAoBaFT7EU
சிராஜ் சித்தரே,
//இந்தியர்களில் தாலிபன் எதிர்ப்பு தேவையற்றது... //
இந்தியர்களின் தலிபான் ஆதரவும் தேவையற்றது எனவும் சொல்லலாமே :-))
//ஆப்கானியர்களே அந்த பழக்கம் உடையவர்கள்.கவனிக்க தாலிபன்கள் மட்டும் அல்ல, மொத்த ஆப்கானியர்களும் பெண்களை போரில் கொல்ல மாட்டார்கள்//
எப்படி அய்யா இப்படிலாம் கண்மூடித்தனமாக பேச முடிகிறது.
தலிபான்கள் பெண்களை கொலை செய்வதை சொல்லும் செய்தி.
//The victims were part of a large group that had gathered late Sunday in Helmand province’s Musa Qala district for a celebration involving music and dancing, said district government chief Neyamatullah Khan. He said the Taliban slaughtered them to show their “disapproval” of the event, leaving the bodies of 15 men and two women in a house near the Musa Qala district.//
http://www.theblaze.com/stories/2012/08/27/horrifying-taliban-behead-17-people-for-dance-and-music-party/
இது போல பல சம்பவங்கள் உண்டு.
சமீபத்தில் மலாலா என்ற பெண்ணையும் சுட்டது யார்?
//இந்தியாவில் தாலிபன் நடத்திய தாக்குதல் ஒன்றை சொல்லி விட்டு அவர்கள் மேல் சேற்றை வாரி இறைத்தால் அது நியாயம்..//
ஜெய்ஷ்-ஈ- முகமத்,லஸ்கர் தொய்பா போன்ற பல தீவிரவாத அமைப்புகளுக்கு பயிற்சியளிப்பது அவர்கள் தானே.
உடனே வழக்கம் போல ரா கட்டுக்கதைனு சொல்லுவீங்க :-))
அது எப்படி ரா,யூத சதி போன்ற ஆதாரப்புர்வமான தகவல்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுதோ தெரியலை :-))
--------------
ஆரம்பத்தில் இருந்தே நான் சொல்வது இதான்,இந்தப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காம இருந்தால் ,தானா ஊத்தி இருக்கும்னு.
இப்போ எல்லாரும் படத்தை ஹிட் ஆக்க காண்ட்ராவர்சியா இப்படி கதை செய்யலாம்னு நினைப்பாங்க.
மணிரத்னம் கூட ச்சே கடலில் சர்ச் கதைக்கு பதிலா மசூதி னு வச்சு கதை சொல்லி இருந்தா செம ஹிட் ஆகி இருக்குமேனு யோசிக்கிறாராம் :-))
அனேகமா அடுத்த படம் பம்பாய்,ரோஜா போல எடுக்கப்போறார் ,எல்லாம் மார்க்கப்பந்துக்கள் மேல இருக்கும் நம்பிக்கை தான் :-))
இந்தியர்களில் தாலிபன் எதிர்ப்பு தேவையற்றது... தாலிபன்களை நாம் வெறுக்க எந்த காரணமும் இல்லை...//////
ஏன் இல்லை அவர்கள் மனித குல விரோதிகள் அவன் அங்கே இருந்து தாண்டி வந்து என் பிடரியில் கை வைக்கும் வரை நான் சும்மா இருக்க வேண்டும் என்கிறேர்களா .?
இதோ என் கண் முன்னே உருவாகி கொண்டிருக்கிறார்களே.
///தாலிபன்களை நாம் வெறுக்க எந்த காரணமும் இல்லை...அவர்களின் இலக்கு அவர்கள் நாட்டை பாதுகாத்து கொள்வது மட்டுமே...///
ஓமர் இந்தியாவின் மீதும் ஜிகாத் அறிவித்திருக்கிறார்.இஸ்லாமிய நாடுகள் அல்லாத நாடுகள் எல்லாம் அப்படித்தான்...இன்னொன்று ஆப்கானிஸ்தானில் ஏகப்பட்ட குழுக்கள் உண்டு. இங்கு பின்னூட்டம் போட்டவர்கள் ஷியா-சுன்னி ஒருவரை ஒருவர் வெடிகுண்டுகளை சிதறடிப்பதை குறிப்படிவே இல்லை. ரஷியா,சீனா,இந்தியா எல்லா நாடுகள் மீதும் ஜிகாத்தான்.
பாகிஸ்தானின் முக்கியபகுதிகள் தாலிபானின் கட்டுப்பாட்டில்.அதில்தான் பெண்கள்மீதான அடக்குமுறை.
அமெரிக்காவின் மீதான எதிர்ப்பை நான் குறை சொல்லவே மாட்டேன்.அது போர். தன் மக்களின் மீதான முட்டாள்தனமான மனித தன்மையற்ற அடக்குமுறைக்கு மதத்தை பயன்படுத்துவது எப்படி?
இங்கே குஜராத் கலவரத்தை பற்றி அதிகம் பேசியது யார். முஸ்லிம்கள் மட்டும்தானா என்ன...அபத்தம்.
ஜிகாத் என்றால் என்ன..அதற்கு தீவிரவாதிகள் என்ன அர்த்தம் கற்பித்திருக்கிறார்கள் இதையெல்லாம் பேசக்கூடாது...பேசினால் என் மனம் புண்படும் என்பது அபத்தமோ அபத்தம். இது உலகளாவிய இஸ்லாம் என்ற உளறலில் வந்த பிரச்னை.
உலகாளவிய இஸ்லாம் பற்றி என் பதிவு ; http://chilledbeers.blogspot.in/2013/02/blog-post.html
வினவில் வந்த இந்த கட்டுரை பிரச்னையை முழுவதுமாக அலசுகிறது.அமெரிக்காவின் அட்டூழியத்தையும் சேர்த்து.இதில் அவர்கள் பம்முவது ரஷ்யாவின் பங்கை.அது நமக்கே தெரியும் ஏன் என்று...
http://www.vinavu.com/2013/02/07/afghan-central-asia-oil-islamic-terrorism/
உலகிலேயே சினிமா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒரே மாநிலம் தமிழ்நாடுதான், சினிமாவையும் வாழ்வையும் பிரித்துப் பார்க்கத் தெரியாத ஒரே இனம் தமிழ் இனமே, இங்குதான் சினிமாவில் வள்ளலாக நடித்தவர் முதல்வராக முடியும், ஒரு கதாநாயகர் நினைத்தால் ஆட்சிமாற்றமே கொண்டு வார முடியும். அது அறிவு வளர்ச்சியா? அறிவு வளர்ச்சியா? இத்தகைய சிறப்புவாய்ந்த தமிழ் சமுதாயத்தில் விஸ்வரூபம், துப்பாக்கி போன்ற அறிவுஜீவி படங்கள் எதுவும் செய்யலாம்.
அவர்களின் இலக்கு அவர்கள் நாட்டை பாதுகாத்து கொள்வது மட்டுமே... ஏன் அவர்கள் மீது இத்துனை வெறுப்பை கக்குகிறார்கள்..??? அது அப்பட்டமான இஸ்லாமிய எதிர்ப்பே அன்றி வேறில்லை..////
நாட்டை காப்பதா .. அவர்களிடம் இருந்து நாட்டை யார் காப்பது . இப்போ தான்யா ஆப்கன் மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கிறார்கள் ஓமரும் லேடனும் ஆப்கனில் இருந்து கொண்டு என்ன தெய்வீக ஆட்சியா பண்ணி கொண்டிருந்தார்கள் . இருக்கிற பள்ளிகூடங்களை எல்லாம் உடைத்து விட்டு மதராசா கட்டிகொண்டிருந்தார்கள் .பாகியான் புத்தர் சிலை என்னையா பாவம் பண்ணிச்சி ....அதை முன்மாதிரியாக எடுத்து கொண்டுதானே நீங்கள் எல்லாம் இங்கு ஆடுகிறீர்கள் . தர்காவை இடிக்க வேண்டும் என்று கூச்சல் வேறு .
அப்படியென்றால் தாஜ்மஹலையும் இடிக்க சொல்லும் கூட்டம் தான் வாகாபி கூட்டம்.. மாற்று மத கோயில்கள் சிலைகளை உடைப்பது வாகாபிக்களுக்கு சரி என்றால் பாபர் மசூதியை இடித்ததற்கு எந்த கேள்வியும் கேட்க்கும் தார்மீக உரிமை கிடையாது .
முஸ்லிம்களில் மட்டும்தான் இருக்கிறார்களா?.
http://flypno.blogspot.com/2012/11/blog-post_5495.html
இஸ்லாமியநாடுகளுக்கு இரண்டு மையங்கள்.
ஒன்று சவுதி.இன்னொன்று இரான். சவுதி-சுன்னி; இரான்-ஷியா; இந்த இரண்டு மையங்களுக்கும் இடையிலான போர் அமெரிக்கா இல்லாவிட்டாலும் நடக்கும் என்பது கசப்பான உண்மை. அமெரிக்கா இதில் நாட்டாமை வேலை. அபாரமான ஆயுத விற்பனை. பணம் கொட்டுகிறது. உசுப்பேத்தி உசுப்பேத்தி விடுவதில் கில்லாடி வேறு. மோசமான இரக்கமற்ற நாட்டாமை. அமெரிக்காவுக்கு தேவையான பெட்ரோல் இருக்கிறதே...
இந்த இரு குழுக்களும் அடித்துக் கொள்வதில் ரத்த ஆறுதான் ஓடுகிறது.இதைப்பற்றி இன்னும் இந்திய மீடியா பேசவே ஆரம்பிக்கவில்லை.
சிரியாவில் சுன்னி'பிரிவு பெண்கள்மானாவாரியாக கற்பழிக்கப்படுகிறார்கள். பாகிஸ்தானில் ஷியா பிரிவின் மீது வெடிகுண்டுதாக்குதல் அடிக்கடி. ஏன் மசூதிகளில் தொழுகை நிம்மதியாக செய்யமுடியாது. பயம்தான். வெடிகுண்டுகள் மசூதிகளில் வெடிக்கின்றன. அதுவும்தற்கொலைப் படையினரால்...இம்ரான்கான் கொடுத்த பேட்டியை படியுங்கள். புரியும்.
இந்த நிலையில் இந்தியா தன்னை காத்துக் கொள்ளவே முயலும். பாகிஸ்தானில், அரசு-ராணுவம் தவிர நிறைய அதிகார மையங்கள் இருக்கு. அமெரிக்கா வேறு இதில் நாட்டாமை.
மொத்தத்தில் வளைகுடா நாடுகள் நிலையான அரசை கொண்டிருக்கவில்லை. நிலையான அரசு என்றால் அது ஷியாவா இல்லை சுன்னியா என்ற கேள்வி வந்ததுமே பலப்பிரச்னை வந்து சண்டை வருகிறது. அமெரிக்காவுக்கு பிரச்னை தீராமல் இருப்பது ரொம்ப நல்லது.
இப்ப இந்தியா என்ன செய்ய என்பதுதான் கேள்வி. நம்மால் அவர்களுக்கு உதவவே இயலாது...இதை இந்திய முஸ்லிமகள் புரிந்துகொள்ளும்போது, சவுதி-ஆதரவால் உணர்ச்சி வசப்பட்டு தாலிபான்களை வியந்தோதுகிற மனப்பான்மை போகும். உலகளாவிய இஸ்லாம் என்பது மாயை. அதற்கு வாய்ப்பே இல்லை.
150 கோடி முஸ்லிம்கள் உலகம் முழுதும் பலநாடுகளில் இருக்கிறார்கள்.அதோடு ஒப்பிட்டால் தமிழகம் சிறு பகுதிதான். அதிலேயே தெரிந்த அளவில்(தெரிந்த அளவில்தான்..தெரியாமல் நிறைய்ய) 24 அமைப்புகள். இந்த லட்சணத்தில் எப்படி உலகளாவிய இஸ்லாம் சாத்தியம்.
உலகளாவிய இஸ்லாம் ஆன்மீகதளத்தில் சாத்தியம். இஸ்லாமிய நாடுகளை விட, பொதுவான மதம் சாராமல் தன்னை அறிவித்துக் கொண்ட நாடுகளில் முஸ்லிம்களால் நல்ல வாழ்க்கை நடத்தமுடியும் என்பதே நிதர்சனம். வெளிப்படை...
////உலகிலேயே சினிமா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒரே மாநிலம் தமிழ்நாடுதான், சினிமாவையும் வாழ்வையும் பிரித்துப் பார்க்கத் தெரியாத ஒரே இனம் தமிழ் இனமே/////
சந்தேகமே வேண்டாம்...இது உண்மைதான். ஆனால் தாலிபான்களை ஆதரிப்பவர்களிடம் நிஜமாகவே எனக்கு பயம் வருகிறது. ஆதரித்ததால் அவர்கள் செய்வதை எல்லாம் சரி என்பவர்களிடம் பேசவேபயமாக இருக்கிறது. இதுவும் உண்மை.
மதத்தின் பெயரால் தாலிபான்களை ஆதரிப்பதை விட,காவி அடிப்படைவாதிகளை ஆதரிப்பதைவிட, கமல்,ரஜினி,அஜீத்,விஜய் மோகத்தால் இருப்பது 1000மடங்கு மேல்.
'ஷியாக்களை கொன்று தீர்!' விதிக்கப்பட்ட ஃபத்வாக்கள் உங்கள் கண்ணில் படுகிறதா இல்லயா? வெளிப்படையான மதபிரிவு மோதல். இதை இந்திய மீடியா வெளிச்சம் போடும்போது-அப்போது நமக்கு புரியும் ஜனநாயகம் என்பது என்ன என்பது?
//நாட்டை காப்பதா .. அவர்களிடம் இருந்து நாட்டை யார் காப்பது . இப்போ தான்யா ஆப்கன் மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கிறார்கள் ஓமரும் லேடனும் ஆப்கனில் இருந்து கொண்டு என்ன தெய்வீக ஆட்சியா பண்ணி கொண்டிருந்தார்கள் . இருக்கிற பள்ளிகூடங்களை எல்லாம் உடைத்து விட்டு மதராசா கட்டிகொண்டிருந்தார்கள் .பாகியான் புத்தர் சிலை என்னையா பாவம் பண்ணிச்சி ....அதை முன்மாதிரியாக எடுத்து கொண்டுதானே நீங்கள் எல்லாம் இங்கு ஆடுகிறீர்கள் . தர்காவை இடிக்க வேண்டும் என்று கூச்சல் வேறு .
அப்படியென்றால் தாஜ்மஹலையும் இடிக்க சொல்லும் கூட்டம் தான் வாகாபி கூட்டம்.. மாற்று மத கோயில்கள் சிலைகளை உடைப்பது வாகாபிக்களுக்கு சரி என்றால் பாபர் மசூதியை இடித்ததற்கு எந்த கேள்வியும் கேட்க்கும் தார்மீக உரிமை கிடையாது .//
இதுவரை இந்தியாவில் எத்தனை கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன, மஸ்ஜிதீர்க்கும், தர்காவிர்க்கும் வித்தியாசம் தெரியாத உங்களிடம் பேசி ஒரு பயனும் இல்லை,
//சந்தேகமே வேண்டாம்...இது உண்மைதான். ஆனால் தாலிபான்களை ஆதரிப்பவர்களிடம் நிஜமாகவே எனக்கு பயம் வருகிறது. ஆதரித்ததால் அவர்கள் செய்வதை எல்லாம் சரி என்பவர்களிடம் பேசவேபயமாக இருக்கிறது. இதுவும் உண்மை.//
கண்டிப்பாக நான் தாலிபான்களை ஆதரிக்கவில்லை, அவர்களை எடுத்துக்காட்டி இந்தியா முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாக சித்தரிக்கும் இது போல காவி சிந்தனையாளர்களைதான் கேட்கிறோம், மேலும் கமல் ஆப்கானிஸ்தான் குறித்து படம் எடுத்துவிட்டார் என்று கோபா படவில்லை, அதில் அவர் எங்களின் குரான் வார்த்தைகளை தவறுதலாக சித்தரித்துவிட்டார் என்றே ஆதங்கப்படுகிறோம்,
மேலும், காய்கறி விர்க்கின்ற கடைகளில், துப்பாக்கி தோட்டாக்கள் விர்க்கபடுவதாக காட்டியுள்ளார்????
இதுவரை அப்படி ஒரு செய்தி எந்த ஒரு நாளிதழ்களில் வந்தது உண்டா?
இன்னும் நாங்கள் தீவிரவாதிகள் என்று நீங்களும் நினைத்தால், இந்த நாட்டிர்க்காக ஆயுத முறையில் போராட்டம் நடத்திய நெத்தாஜியும் தீவிரவாதிதான்!!!!!!!!!!!!!!!
Blogger haja sadiq said...//இதுவரை இந்தியாவில் எத்தனை கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன, மஸ்ஜிதீர்க்கும், தர்காவிர்க்கும் வித்தியாசம் தெரியாத உங்களிடம் பேசி ஒரு பயனும் இல்லை,//
இந்தியாவில் எண்ணிக்கையில் அடங்காத அளவிற்கு கோயில்கள் உடைக்க பட்டுள்ளது ..
கஜினியாகட்டும் கோரியாகட்டும் . கோவிலில் மணி ஆட்ட வரவில்லை ..
விவாதமா ,...? அப்படி நீங்கள் எதுவும் பண்ணிய மாதிரி தெரியவில்லை .
பதிவில் பிரபா கேட்டிருக்கும் கேள்விக்கு ஒரு பதிலும் இல்லை . உடனே குஜராத் சம்பவத்தை வைத்து உங்களை நியாய படுத்த முனைகிறீர்கள் ..குஜராத் சம்பவம் தவறு என்று இங்கு இருப்பவர்கள் அனைவரும் ஒத்து கொள்பவர்கள் தான் .
ஏன் நீங்கள் சும்மா இருந்தாலும் அதற்காக போராட இங்கு ஏராளமான நடுநிலையாளர்கள் உள்ளார்கள் . ஆனால் ரிசானா கொலைக்கு வக்காலத்து வாங்கும் வாகாபிகளுக்கு தாலிபானிசம் தான் பிடித்திருக்கிறது . அது சரி வாகாபிகள் ஏன் இஸ்லாமியர்கள் பின்னால் மறைந்து கொள்கிறார்கள்? இவர்கள் கொள்கையை தாக்கினால் இஸ்லாத்தை தாக்குகிறார்கள் என்று திரித்து சொல்வதற்கு வசதியாக இருக்கும் என்றா .? என்னை பொறுத்தவரை இவர்கள் இஸ்லாத்தில் இருந்து கவனமாக களை எடுக்க படவேண்டிய விஷ செடிகள் ..
அஞ்சா சிங்கம் அவர்களே, கஜினியும், கோரியும் கோவில்களை இடிக்கத்தான் வந்தார்கள் என்பதற்க்கு உங்களிடம் ஆதாரம் உண்டா???
மேலும் நீங்கள் புரிந்துவித்துள்ள வாகாபியின் அர்த்தத்தை சொல்லுங்கள்!!!!!!!!!!!!!!
இதுவரை எத்தனை நடுநிலையாளர்கள், குஜராத் படுகொலை குறித்து பதிவிட்டுள்ளார்கள், சொல்லுங்கள்????????????? நாங்கள் ஒண்ணும் குஜராத் குஜராத் என்று சொல்லி உங்களிடம் சமாளிக்க வேண்டிய அவசியமில்லை.
அப்படி கஜினியும், கோரியும் கோவில்களை இடித்துதான் இங்கு இஸ்லாத்தை பரப்பினார்கள் என்று நீங்கள் நினைத்தால், இன்று இந்தியாவில் இந்துக்கள்தான் சிறுபான்மையினராக இருந்திருப்பார்கள் உங்களியும் சேர்த்து............(நீங்கள் இந்துவாக இருப்பின்).
வரலாற்றை சற்று லாஜிக்காக யோசித்துபாருங்கள்.
உண்மையான நிதர்சன விமர்சனம்
http://veeduthirumbal.blogspot.com/2013/02/blog-post_7933.html
ஹாஜா,
// கஜினியும், கோரியும் கோவில்களை இடிக்கத்தான் வந்தார்கள் என்பதற்க்கு உங்களிடம் ஆதாரம் உண்டா???//
அவங்க வேற என்ன செய்ய வந்தாங்கன்னு நினைக்கிறீங்க, ஆதாரம் நீங்களே காட்டிடுங்க ,என்ன சொன்னாலும் செல்லாதுன்னு சொல்லப்போறிங்க அப்புறம் எதுக்கு ஆதாரம் கேட்டுக்கிட்டு :-))
//அப்படி கஜினியும், கோரியும் கோவில்களை இடித்துதான் இங்கு இஸ்லாத்தை பரப்பினார்கள் என்று நீங்கள் நினைத்தால், இன்று இந்தியாவில் இந்துக்கள்தான் சிறுபான்மையினராக இருந்திருப்பார்கள் உங்களியும் சேர்த்து............(நீங்கள் இந்துவாக இருப்பின்).//
கொஞ்சமாச்சும் பகுத்தறிவு இருந்தா இப்படிலாம் பேச வாய் வருமா?
இந்தியாவில் அப்போவே கோடிக்கணக்கில் மக்கள், எங்கே எல்லாரையும் மாற்ற.
கஜினி,கோரி எல்லாம் சிற்றரசர்கள் ,அப்போ இந்தியாவில இருந்த சில சிற்றசர்களுடன் போரிட்டு தான் வென்றார்கள்,அனைவரையும் அல்ல. அவர்கள் சண்டையிட்டது கொள்ளை அடிக்கவே என்பதால் வந்தவுடன் ஓடிவிட்டார்கள்.
கோரி முகமதாவது ஆள் வைத்துவிட்டு சென்றான், கஜினி வர வேண்டியது,கொள்ளை அடிக்க வேண்டியது ஓட வேண்டியது இதான் செஞ்சான்,இதுல எங்கே இருந்து இந்தியாவில் இந்துக்களை சிறுபான்மையாக்க?
கஜினி முகமது இந்தியாவுக்கு வந்த காலத்தில் தென்னிந்தியா முழுவதும் ஆன்டது ராஜராஜ சோழன், அவரது எல்லை மகராஷ்டிராவில் உள்ள கல்யாண் என்ற இடம் வரை. கொஞ்சம் கஜினி உள்நாட்டுப்பக்கம் வந்திருந்தா ராஜராஜ சோழன் பொளந்து கட்டியிருப்பான் :-))
அப்போ எல்லாம் அது இன்னொரு நாட்டு பிரச்சினை நம்ம பக்கம் வந்தா பார்த்துக்கலாம்னு விட்டு வச்சிட்டாங்க.
மிகப்பெரிய சம்ராஜ்யமாக ஆனப்பிறகு ,அவுரங்கசீப்பால் கூட ஒன்னியும் புடுங்க முடியலை.
வரலாற்றை படிச்சிட்டு வந்து பேசுங்க, அவுரங்க சீப் வீழ்ச்சிக்கு பின் 50 ஆண்டுகளில் இஸ்லாமிய ஆட்சியே ஒன்னும் இல்லாமல் போச்சு,அப்போ மீண்டும் உருவான இந்து மன்னர்கள் இஸ்லாமியர்களை அழிக்கணும்னு நினைச்சிருந்தா ,இன்னிக்கு இஸ்லாமே இந்தியாவில் இல்லாம போயிருக்கும்,ஆனால் அப்படி எதுவும் நடக்கலை, காரணம் இந்திய மன்னர்களை பொறுத்தவரையில் எல்லாருமே நாட்டின் மக்கள், ஏதோ ஒரு மதம்னு தான் இருந்தார்கள்.
@haja sadiq
கஜினியும் கோரியும் கொள்ளை அடிக்க வந்தவர்கள்தான் சரி கொள்ளை அடித்த பின் கோயிலை விட்டு வைத்திருக்கலாமே .அதை ஏன் இடித்து தள்ள வேண்டும் .
அவ்ரங்கசீப் கோயில்களை உடைக்க வில்லையா ...?
நீங்கள் சரியாக மார்க்கத்தை புரிந்து கொள்ள வில்லை குரானை ஒழுங்காக படிக்க வில்லை என்று பின்னால் சாவர்கன் வந்து பாடம் நடத்துவார் பாருங்கள் ..
எந்த ஒரு மதமும் தான் உருவான இடத்தில் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தான் இருக்கும் அதே நேரம் அது மற்ற நாடுகளில் பரவும்போது அந்த மண்ணின் கலாசாரத்தை சிறிதளவிலாவது சுவீகரித்து கொள்ளும் . இஸ்லாமும் இதற்க்கு விதி விலக்கல்ல .
ஆனால் தூய இஸ்லாம் என்று அரேபிய காட்டுமிராண்டித்தனத்தை . அதை விட கலாசார ரீதியாக மிகவும் முன்னேறிய மக்களிடம் அவர்கள் தேசத்தில் புகுத்த பார்ப்பது .
இந்த மண்ணில் பிறந்து இஸ்லாமியனாக மாறிய அதே நேரம் இந்த மண்ணின் கலாசாரத்தை ரத்ததில் கலந்திருப்பவர்களிடம் . பழைய அழுக்கு கவுனை குடுத்து நீ முஸ்லீமாக மாறினால் மட்டும் போதாது அரபியாகவும் மாறவேண்டும் என்று கட்டாய படுத்துவது தான் தூய இஸ்லாம் என்கிற வாகாபிஇசம்..
நீங்கள் கொஞ்சம் விளக்கினால் இன்னும் தெரிந்து கொள்வேன் .
அதில் அவர் எங்களின் குரான் வார்த்தைகளை தவறுதலாக சித்தரித்துவிட்டார் என்றே ஆதங்கப்படுகிறோம்,/////
நியாயமான கோரிக்கையாகவே எனக்கும் படுகிறது. இங்கே கீதையை வில்லன் படிப்பதாக காட்டி படம் எடுக்க முடியும். அதை கீதையை அதிகம் நேசிப்பவர்கூட கண்டுகொள்ளாமல் போய்விடுவார். ராம்கோபால் படங்களில் இது வரும். அந்த சென்ஸிடிவிடி இந்த விஷயத்தில் இல்லை. இது சரியான விஷயம்தான். அதை மட்டுமே வலியுறுத்துங்கள்.
இனி உலக விஷயங்கள் இந்திய மீடியாக்களில் பேசப்படவே செய்யும். இந்தியா என்பது இட-எல்லை மட்டுமே. ஆனால் வளைகுடா நாடுகளில் இல்லாத அரசியல் ஸ்திரத்தன்மை புற்றீசல் போல தீவிரவாத குழுக்களை கிளப்பிவிட்டிருக்கிறதா இல்லையா? இதை இல்லை என்று சொல்லவேமுடியாது. இது நம் இட-எல்லையை பாதிக்கும் அபாயம் உள்ளதா இல்லையா? கண்டிப்பாக இருக்கிறது.
என் பதிவில் சொன்னமாதிரி முஸ்லிம்கள் உலக அளவில் சிறுபான்மையினர் கிடையாது.150 கோடி. அதில் ஒரு பின்னூட்டமிட்டவர் சொன்னார்...150கோடிகளில் எவ்வளவோ நடக்கும்.நடக்கிறது.நடந்துகொண்டே இருக்கிறது .எல்லாவற்றுக்கும் இந்தியமுஸ்லிம்கள் ரீ-ஆக்ட் செய்துகொண்டிருப்பார்களா என்று. அதே பின்னூட்டத்தில் அவர் சொன்னார்...அப்படி இந்த இட-எல்லை(இந்தியா)க்கு வெளியே முஸ்லிம் என்று சொல்பவனால் நடத்தபடுவதற்கு இந்திய முஸ்லிம்களை பலியாடு ஆக்காதீர்கள் என்று.இதுதான் சரியான கருத்துஎனப் படுகிறது.
இங்கே ம்...என்றதும் சவுதி பற்றிய பேச்சாகத்தான் இருக்கிறது. ஆனால் உலக இஸ்லாமிய அரசியலில் சவுதியின் பங்கு நாமறிவோம்.(மறுபடியும் இது அமெரிக்க மீடியா சதி என்று காதில் பூ சுற்றவேண்டாம்)...அது இந்தியாவை பாதிக்கிறது.பாகிஸ்தானின் வழியாக இது இந்தியாவின் பாதுகாப்பை பாதிக்கிறது.சவுதி அளிக்கும்பணம் பாகிஸ்தான் மதரசாக்களில் இளைஞர்களை ஜிகாத்துக்காக தயார்படுத்துவதற்காக பயன்படவே செய்கிறது.அமெரிக்கா தன் நலனை மட்டுமே பார்க்கும்.
இதற்கு ஒரே தீர்வு, இந்திய முஸ்லிமகள் அவர்கள் முஸ்லிம்கள் என்று குழுவாக திரளுவதை மட்டும் செய்யாமல், இங்கே பல குழுக்கள் வெவ்வேறு குறிக்கோள்களுடன் உண்டு. அதிலும் இருப்பது நல்லது.
திராவிட இயக்கம்,கம்யூனிச இயக்கம் இவர்களெல்லாம் -நீங்கள் அச்சுறுத்தல் என்கிற இந்துமத-இயக்கங்களை துவைத்து போட்டுக்கொண்டு இருப்பவர்களே...
நம் முதல் பிரச்னை வாழ்வாதாரம்...மதத்தை நாம் எல்லோரும் வீட்டுக்குள் வைத்துவிட்டு வாழ்வாதாரத்துக்கு அதற்கு என்று போராடும் குழுக்களோடு இணைவதுதான் தீர்வு.
இதைவிட்டு உலகளாவிய இஸ்லாம் என்று சவுதி குழுவிலோ,இரான் குழுவிலோ சேர்ந்தால்...அங்கே என்ன நடக்குமோ அதுதான் நடக்கும்.
நரேந்திரமோடி பிரதமவேட்பாளர் என்பதை கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்றுக்கொள்ளுமா...எதிர்ப்பு தெரிவிக்கவேயில்லை என்கிறீர்களா...காங். எதிர்ப்பு தெரிவிக்கவேயில்லை என்கிறீர்களா...எத்தனை கட்டுரைகள் எழுதப்படுகிறது...ரத்தம் தோய்ந்த கரம் என்று...நீங்களும் சேர்ந்துதான் போராடணும். சிவில் சொஸைட்டி என்பதில் போராட்டமே இல்லை என்பது இல்லை. இங்கே உள்ள குளறுபடி ஒரு அரசியல் தலைவனும் தண்டிக்கப்பட்டதே இல்லை என்பதுதான்.ஒரு பயல் கூட தண்டிக்கப்பட்டதேயில்லை...இதை வசதியாக அவன் இந்து அதனால் தண்டிக்கப்படவில்லை என்கிறீர்கள்...என்ன சொல்ல..?
////எந்த ஒரு மதமும் தான் உருவான இடத்தில் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தான் இருக்கும் அதே நேரம் அது மற்ற நாடுகளில் பரவும்போது அந்த மண்ணின் கலாசாரத்தை சிறிதளவிலாவது சுவீகரித்து கொள்ளும் . இஸ்லாமும் இதற்க்கு விதி விலக்கல்ல//// இந்த பாராவை மட்டுமாவது புரிந்து கொண்டுவிட்டால் போதும். அப்போது இந்து மத அடிப்படைவாதிகளை சுலபமாக விரட்டி அடித்துவிடமுடியும். ஆனால் பிரச்னை இஸ்லாத்தை ஒரு பன்னாட்டு நிறுவனம் போலவும் அதன் தலைமையகம் சவுதியில் என்பதுபோலவும் பேச்சு தென்படுவது நிச்சயம் பிரச்னைதான்...ஆன்மீகத்தில் தலைமையகம் என்பதே கிடையாது...இங்கே உள்ள ஒரு கிராமத்து முஸ்லிம் ஐந்து கடமைகளை மட்டும் ஒழுங்காக செய்துவிட்டு,இந்த நிலத்தில் உள்ள கலாச்சாரத்தோடும் வாழ்ந்து ஆன்மீக வாழ்வையே வாழ்வார். இதை இந்துமதகலாச்சாரம் என்று ஒதுக்குவீர்கள் என்றால்...ஒன்றுமே சொல்ல தெரியவில்லை. அப்ப நாத்திகர்கள் என்ன செய்ய...அவர்களும் அப்ப இந்துதான் போலிருக்கு...
கஜினி,கோரி எல்லாம் சிற்றரசர்கள் ,அப்போ இந்தியாவில இருந்த சில சிற்றசர்களுடன் போரிட்டு தான் வென்றார்கள்,அனைவரையும் அல்ல. அவர்கள் சண்டையிட்டது கொள்ளை அடிக்கவே என்பதால் வந்தவுடன் ஓடிவிட்டார்கள்.
இதுதான் சரியான காமெடி, வந்தவர்கள் அப்பவே ஓடி இருந்தார்கள் என்றாள் எப்படி முகலாயர்கள் 800 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்திருக்க முடியும், நீங்க போயி முதல்ல ஒழுங்கா வரலாற்றை படிங்க, நீங்க சொன்ன ராஜா ராஜ சோழன் அரசாண்ட தென்னித்தியாவில்தான், கான் சாகிப்,ஹைதர் அலி, திப்பு சுல்தான் போன்றவர்கள், ஆட்சி செய்தார்கள் இதை ஏன் குறிப்பிட மறந்து போனீர்கள், காவி சிந்தனை தாவி குதிக்கிறதோ???????????????
@ Chilled Beers said.
உண்மைதான் நண்பரே நாம் இவர்களை பிரித்து பார்ப்பது இல்லை ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர் அவர்களாக பிரிந்துகொண்டு . நாம் உயர்ந்தவர்கள் மற்றவர்கள் எல்லாம் காபீர்கள் என்கிற உயர்வு மனப்பான்மையை ஊட்டும் போது தான் பிரச்னை ஆரம்பம் ஆகிறது .
அடிப்படை வாதிகளுக்கும் இது வசதியாகி விடுகிறது ...
நீங்கள் உங்கள் பதிவில் சிக்சர் அடித்திருக்கிறீர்கள் ......எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் உளவியல் சார்ந்த துறையில் இருகிறீர்கள் என்று நினைக்கிறேன் . மிக அழகாக கோர்த்து எழுதுகிறீர்கள் ..
முடிந்தால் கீலே உள்ள லிங்க்கில் இஸ்லாத்தை பற்றி முழுவதும் அறிந்துக்கொள்ளுங்கள்,
http://onlinepj.com
நீங்கள் ஒன்றை புரிந்துக்கொள்ளுங்கள், முஸ்லிம்களுக்கு, நீங்கள் கூறுவது ஒரு சௌதியோ, ஈரானஓ, ஆப்கானிஸ்தானோ முன்மாதிரி கிடையாது, திருமறை குர்ஆனும், முஹம்மத் அவர்களின் வலிக்கட்டுதலுமே தான் முன்னோடி...............???????
ஆக இந்த இரண்டிபடி நடப்பவனே உண்மையான முஸ்லிம், இதற்க்கு பெயர் அடிப்படை வாதி என்றாள்??/
தவறாக நினைக்க வேண்டாம் நீங்கள், எந்த மதத்தை சார்ந்தவர்???/
உடனே இந்தியர் என்று பதில் தறாதீர்கள்??????????
அஞ்சா நெஞ்சம் அவர்க்லே!!!!!!!!!
தவறாக நினைக்க வேண்டாம் நீங்கள், எந்த மதத்தை சார்ந்தவர்???/
உடனே இந்தியர் என்று பதில் தறாதீர்கள்??????????
http://anjaasingam.blogspot.com/
உங்கள் வலையில் இப்படி எழுதிவிடு இங்கு ஏன் இரட்டை வேடம் போடுகின்றீர்??????????????
ஹாஜா,
வரலாற்றின் அரிச்சுவடிக்கூட தெரியாத உங்களோடு பேசுவது நேர விரயம்னே நினைக்கிறேன்.
கஜினி வந்த போது ஆண்ட மன்னனை தானே சொல்ல முடியும்.
திப்பு சுல்தான், கான்சாஹிப் எல்லாம் ராஜராஜ சோழன் காலமா?
அப்புறம் கஜினியோ,கோரியோ முகலாய ஆட்சியை இந்தியாவில் நிறுவவில்லைனு கூட தெரியலை, அப்புறம் பாபர் வரணும்?
அவுரங்கசீப்புக்கு பின்னர் இஸ்லாமிய ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் யாரு இங்கே ஆண்டது?
கான்சாகிப்,திப்பு சுல்தான் எல்லாம் வெள்ளைக்காரன் காலத்திலே வெள்ளையருடன் போரிட்டுக்கிட்டு இருக்கும் படி ஏன் ஆச்சு? அப்போ நீங்க சொன்ன இஸ்லாமிய அரசர்கள் எல்லாம் எங்கே போனாங்க.
வெள்ளைக்காரன் காலத்திலும் மகாராஜாவா இந்தியாவில் நின்ன ஒரே அரசர் சீக்கிய மகாராஜா "ரஞ்சித் சிங்க்" தான்.
நீங்க பாகிஸ்தான்னு இப்போ சொல்லும் நாடு, கஜினி ஆண்ட இடம் எல்லாம் அவர் ஆட்சிக்கு கீழ தான்.வெள்ளைக்காரனே போரிட பயந்த ஒரே இந்திய அரசர் ரஞ்சித் சிங்க்.
அப்போ ரஞ்சித் சிங்க் மட்டும் வெள்ளையரை எதிர்த்திருந்தா வெற்ரிப்பெற்று இருப்பார்,ஆனால் வெள்ளைக்காரன் மற்ற நாட்டுடன் தான் சண்டைப்போடுறான் நமக்கென்னனு இருந்திட்டார். இதான் இந்தியா சிறு சிறு நாடாக இருந்ததன் விளைவு.
ஒவ்வொரு ராஜாவும் இது பக்கத்து நாட்டுப்பிரச்சினை, நமக்கு என்னனு இருக்க ,ஒவ்வொன்னா வெள்ளைக்காரன் பிடிச்சிட்டான்.
haja sadiq said...
முடிந்தால் கீலே உள்ள லிங்க்கில் இஸ்லாத்தை பற்றி முழுவதும் அறிந்துக்கொள்ளுங்கள்,
http://onlinepj.com////
இது தான் உலக காமடி சத்தியமாக உண்மையில் இஸ்லாத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இவர்களிடம் இருந்து விலகி இருங்கள் . உங்கள் சுய அறிவோடு குரானை படியுங்கள் . உங்களுக்கு அது என்ன சொல்கிறது என்று பாருங்கள். அடைப்பு குறிக்குள் புது அர்த்தம் குடுக்கும் இவரை போன்றவர்களை நம்பி மோசம் போக வேண்டாம் . குறைந்த பட்சம் அடுத்தவர்களுக்கு இப்படிப்பட்டவர்களை பரிந்துரை செய்யாமல் இருங்கள் இதுவே நீங்கள் தேசத்திற்கும் அல்லாவிற்கும் செய்யும் மிக பெரிய சேவையாக கருதப்படும் .......
////நீங்கள் கூறுவது ஒரு சௌதியோ, ஈரானஓ, ஆப்கானிஸ்தானோ முன்மாதிரி கிடையாது, திருமறை குர்ஆனும், முஹம்மத் அவர்களின் வலிக்கட்டுதலுமே தான் முன்னோடி...............???????//// ஆனால் நிஜம் அப்படி இல்லையே...குரானையும்,முகம்மதின் வார்த்தைகளையும் ஆயிரம் அர்த்தங்களோடு புரிந்துகொள்ளப்படலாம்.அப்படி ஆயிரம் அர்த்தம் கொண்டவர்கள் தங்களுக்குள் சண்டையிடுவது உலக இஸ்லாமிய அரசியலில் நடக்கிறதே..அதை மறுக்க முடியாதே. நூல் ஒன்று .அதை புரிந்துகொள்வது லட்சம் வழிகளாக...இதை நீங்களும் நானும் தீர்த்துவைக்க முடியுமா..அப்படி முயற்சிக்கும்போதே நிறுவனம் வருகிறது. அந்த நிறுவனம் ஈரானா..சவுதியாஎன்று அடுத்த கேள்வி...இதை சண்டையை வலுவாக்குகிறதா இல்லையா...
தஞ்சாவூரில் பிராமணர்கள் 100 வருடங்களுக்கு முன்பு இஸ்லாமுக்கு மதம் மாறிய கதைகள் உங்களுக்கு தெரியுமா...நடந்திருக்கிறது. அவர்கள் ஷேக் டிரஸ் போட்டு அராபியாவிலேர்ந்து வந்தவனை பார்த்து மனம் மாறி மதம் மாறவில்லை. உள்ளூரில் ஒரு முஸ்லிம்பெரியவர் அவர்களைப் பாதித்திருப்பார்...அதுவே அப்படிச் செய்யதூண்டியிருக்கும்.
நூலைப் படித்து மாறுவதை விட, மதமாற்றங்கள் ஓர் உயர்ந்த மனிதனை பார்த்து அவன் என்ன செய்கிறானோ அதையே செய்வோம் என்று மாறியவர்கள்தான் அதிகம்.
இதை வரலாற்றில் இந்து to முஸ்லிம்,இந்து to கிறித்துவம்,சமணம் to இந்து,இந்து to சமணம் என்று எந்த மதமாற்றத்தையும் கவனித்தால் புரியும். நூலை விட மிக அதிக அளவில் பாதிப்பை மனிதனால் நிகழ்த்தமுடியும் .அந்த பாதிப்பை நிகழ்த்தியவன் நூலினால் பாதிப்பை அடைந்திருக்கலாம்...நிறுவன அமைப்பை நிறுவிட முயற்சித்தால்,இந்த நுகர்வோர் கலாச்சாரத்தில்,பல்வேறு கலாச்சார சூழலில், இறுக்கமாய் கடைப்பிடிப்பவர்கள் மனநோய்க்கு ஆளாவார்கள்...இது உளவியல்..
என்னுடைய வாதம் திசை திருப்ப பட்டுவிட்டது,
மீண்டும் கூறிக்கொள்கிறேன், எனக்கு உங்களை போன்று வரலாறு முக்கிய அமைச்சர் எல்லாம் வேண்டியதில்லை,
இந்த விஸ்வரூபம் வேண்டியதில்லை என்பதே.
இன்றைக்கு நியாயமாக சொல்லுங்கள், உங்கள் நண்பர்களில் முஸ்லீம்கள் இல்லையா?
அவர்களில் எத்தனை பேர் கமல் கூறுவது போன்று தீவிரவாதிகளாக இருக்கிறார்கள்??????
@ haja sadiq .நான் பகுத்தறுவு வாதி எல்லா மதமும் எனக்கு ஒண்ணுதான் .
என்ன ரெட்டை வேடம் எனக்கு புரிய வில்லை . என் பதிவுகளில் நான் ஏதாவது ஒரு மதத்தை ஆதரித்து பதிவு போட்டிருக்கிரேனா ..?
மோடியை கூட திட்டிதான் பதிவு போட்டு இருக்கிறேன் . உங்கள் பார்வையில் ரெண்டு பேருதான் போல இருக்கு ஒன்னு அவங்க ஆளு இல்லை என்றாம் நம்ம ஆளு .போங்க பாஸ் நான் வேற ஆளு ...........
@ haja sadiq .
அது தான் பிரச்சனயா ..?
விஸ்வரூபம் படத்தில் வரும் கமலை போல் நல்ல முஸ்லீம்களை நண்பர்களாக வைத்திருக்கிறேன் . நீங்கள் உங்களை யாருடன் அடையாள படுத்த விரும்புகிறீர்கள் ..?
chill beers,
சகோதரர்கள் கூறியது போல எனக்கு வரலாற்று அறிவு குறைவுதான், ஆனால் புரிந்துகொள்வதில் பல ஆயிரம் ஆர்தங்கள் இருந்தாலும், நாமே சொந்தமாக படிக்கும் பொது கண்டிப்பாக நமக்கு புரியும்.
சகோதரர் அஞ்சா நெஞ்சம் கூறுவது போன்று ஒரு சிலரிடம் விலகி இருக்க சொல்கிறார், கண்டிப்பாக இவர் சொன்னவரிடம் இருந்து நான் விலக மாட்டேன், இத்துடன் இவரிடம் இருந்து விலகி விடுகிறேன். வாய்ப்பிர்க்கு நன்றி
உலகவிஷயத்தை பேசும் படங்கள் நிறைய்ய வரும்.சாட்டிலைட் டிவிக்கள் வந்தபோதே இதை நீங்கள் யூகிக்கவில்லையா...இன்டர்நெட்டை பயன்படுத்துபவர் எப்படி விமர்சனம் மட்டும் வேண்டாம் என்று சொல்லமுடியும். கமல் எங்கே அதில் இந்தியமுஸ்லிமை காட்டியிருக்கிறார். அதில் உள்ள இந்தியமுஸ்லிம் நல்லவராகவே காட்டிஇருக்கிறார். முஸ்லிமையே காட்டாதே என்பது தாலிபானிசம். அப்பட்டமான தாலிபானிசம். சிவில் சொஸைட்டிலே வாழ முடியாத ஒரு மனஅமைப்பை நீங்கள் இருக்கும் அமைப்பு உங்களுக்கு அளித்துக் கொண்டிருக்கிறது .அதை கேள்வி கேட்பது உங்கள் வேலை. 'தலைவனை சந்தேகி' இதை அரசியல் கட்சிதொண்டர்களுக்கும் மத அமைப்பில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்.
சினிமா கிடையாது, இலக்கியம் கிடையாது,இசை,பாட்டு கிடையாது,நடனம் கிடையாது - இதுவே தாலிபான்கள்.
NALLATHU SEIRATHA NENCHUKITTU IVANGA SEIRA ELLAMEY ETHIRA THAN POGUTHU. IVANGA ETHUVUMEY SEIYAMA IRUNTHALEY POTHUM.
SHAMEER AHAMED
DUBAI
சில்ட் பீர்,
//சினிமா கிடையாது, இலக்கியம் கிடையாது,இசை,பாட்டு கிடையாது,நடனம் கிடையாது - இதுவே தாலிபான்கள்.//
முக்கியமானதை விட்டுட்டீங்க,கல்வி கிடையாது, ஆண்கள் கூட மதக்கல்வி தான்,பெண்களுக்கு எதுவுமே கிடையாது.
அப்கானில் இப்போ பெரும்பாலோர் போதை மருந்து அடிமைகளாகிட்டாங்கன்னு ஒரு ஆய்வு சொல்லுது.
காரணம், போதை உற்பத்தி அதிகம், அப்புறம் சாப்பாடு இல்லை,பசிக்கும் போது கொஞ்சம் அபின்,கஞ்சா,ஹெராயின் போட்டுக்கிறது.
இன்றைய முஸ்லிம்கள் தேசம் என்பதை விட மதம் என்ற கோட்டில் நின்றுகொண்டு வெகுவாக நிறையவே பேச ஆரம்பித்துவிட்டார்கள். இந்தியாவில் முகலாயர்கள் வந்துதான் நல்லவிதமான அரசாட்சியை கொடுத்தார்கள் என்பதில் ஆரம்பித்து நாம் வரலாற்றில் படித்த எல்லா இஸ்லாமிய அரசனின் கொள்ளையையும் அப்படி நடக்கவே இல்லையே என்று சொல்லும் அளவுக்கு. ஆனால் அதே சமயம் அக்பரை இவர்கள் ஒரு முஸ்லிமாகவே ஏற்றுக்கொள்வது கிடையாது. ஏனென்றால் அவர் ஹிந்துக்களுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்று வெளிப்படையாகவே முழங்குவார்கள்.
இப்போது தாலிபண்கள் பற்றிய பிரச்சினை. தாலிபான்கள் உண்மையில் குரான்படி இஸ்லாமை வழிநடத்தி கொண்டிருப்பதால் இந்தியாவில் உள்ள ஒரு சிறு முஸ்லிம் (இணையத்தில் இவர்கள் அதிகம்)கூட்டம் இந்த தாலிபன்களை தங்களின் ஆதர்ச நாயகர்களாக முன் நிறுத்தி அவர்கள் செய்யும் எல்லா மனிதவிரோத செயல்களையும் நியாயப்படுத்துகிறது.
தாலிபன்களை பற்றி இந்தியர்கள் ஏன் கவலை கொள்ளவேண்டும் என்று கேட்கும் இந்த நபர் உண்மையில் ஒரு மத பிற்போக்குவாதி. தாலிபான்கள் பெண்களுக்கு செய்த கொடுமை,மக்களை அவர்கள் நடத்தும் விதம், ஷரியா என்று சொல்லி கட்டுமிராண்டி தண்டனை கொடுப்பது போன்ற கொடுஞ்செயல்களை வரவேற்கிறார். இவர்களால் நடுநிலைமையோடு இருக்கும் இந்திய போன்ற நாடுகளுக்கு ஆபத்து. கொஞ்சம் கொஞ்சமாக தாலிபான் இஸ்லாம் இங்கே வேரூன்ற இந்த மாதிரியான ஆட்கள் வழி அமைத்து கொடுக்கிறார்கள் என்பதே உண்மை. எதெற்கெடுத்தாலும் குஜராத் இன அழிப்பு என்று நரம்பு புடைக்க பேசும் இவர்களுக்கு இங்கே இருக்கும் முக்கால்வாசி இந்துக்கள் மோடியை ஒரு ஹிந்துத்த்வாவின் பிரதிநிதியாகவே பார்கிறார்கள் என்பது தெரிந்தும் தெரியாததுபோல நடிப்பது ஏன்? எங்களுக்கு பிடிக்கவில்லை என்று ஒரு இந்துவோ அல்லது கிருச்துவனோ ஒரு படத்தை பாகிஸ்தானில் தடை செய்ய முடியுமா? ஆனால் முஸ்லிமல் இந்தியாவில் இதைதான் செய்கிறீர்கள். இதுவே இங்கு இருக்கும் மக்களின் சகிப்புத்தன்மைக்கு மிக சிறந்த உதாரணம். இங்கே இருக்கும் நடுநிலமையாளர்களை நீங்கள் புரிந்துகொள்ளாவிட்டால் இழப்பு உங்களுக்குத்தான். கொஞ்சமாவது இருக்கும் நாட்டுக்கு விசுவாசமாக இருக்க முயல்வதே உங்களிடம் பெரும்பான்மையானவர்கள் எதிர்பார்ப்பது. அதை நீங்கள் செய்ய மறுக்கும் பட்ச்சத்தில் எதற்க்காக இங்கே இந்தியாவில் இருக்க விரும்ப வேண்டும்?
//விஸ்வரூபம் எனக்கான படம் அல்ல.//
ஆஹா! பிலாஸபி பிரபாகரன் பிளாக் தானே இது? :-)
வவ்வாலிடமே வரலாறா .........
ஒரே ஒருத்தர் தான் வந்திருந்தாரு அவரையும் விரட்டி விட்டுடீங்களே ...சரி காத்திருப்போம் ..
அஞ்சா ஸிங்கம்,
கஜினி,கோரிய எல்லாம் ஹீரோன்னு நினைச்சிக்கிட்டு இவங்க பேசினா என்ன செய்வது?
அப்புறம் ஏன் தலிபான்களை ஹீரோக்களாக கொண்டாட மாட்டார்கள்?
இவர்களுக்கு எல்லாம் உளவியல் ரீதியாவே ஏதோ பாதிப்பு இருக்கனும்.
சரி போகட்டும்,இன்னொரு ஆடு வராமலா போகப்போவுது,அதை பொறுமையா வெட்டிக்கலாம் :-))
. //கமலுக்கு வணிக ரீதியாக மற்றுமொரு தோல்விப்படமாக அமைய வேண்டியது, இஸ்லாமியர்களின் அவசியமற்ற போராட்டங்களின் வாயிலாக நல்ல விளம்பரம் கிடைத்து லாபம் பார்த்துக்கொண்டிருக்கிறது.///
உண்மை உண்மை
@ வவ்வால்
கஜினி வரும் போது சரியாக ராஜேந்திரன் வடநாட்டு படை எடுப்பை தொடங்கி இருந்தார் .
அப்போது சோழ நாட்டு எல்லை ஒரிசாவில் இருந்து இன்றைய தமிழக கேரளம் ஆந்திரா வை தாண்டி இலங்கை மாலதீவு என்று மிக பரந்த ஒரு கடல் சாம்ராஜிய வல்லரசாக இருந்தது .
கஜினி சட்னி ஆகி விடுவோம் என்று தெரிந்துதான் . தன மூக்கை இந்த பக்கம் நீட்டவில்லை ..
அவ்ரங்கசீப் காலத்தில்தான் தக்கான பீடபூமியை தாண்டி வரும் துணிச்சல் வந்தது .
அதற்குள் சோழ சாம்ராஜ்யம் முடிந்துவிட்டது . பாண்டியர்களின் அண்ணன் தம்பி தகராறில் மாலிக் கப்பூரின் உதவியை நாடியதால் இங்கே நுழைய முடிந்தது . இல்லை என்றால் உள்ளே நுழையும் தைரியம் தானாக வந்திருக்குமா என்பது சந்தேகமே ..
I start to hate Muslims after reading the comments in this blog :( Watching Viswaroopam would have had less effect.
ஹாஜா said "அப்படி கஜினியும், கோரியும் கோவில்களை இடித்துதான் இங்கு இஸ்லாத்தை பரப்பினார்கள் என்று நீங்கள் நினைத்தால், இன்று இந்தியாவில் இந்துக்கள்தான் சிறுபான்மையினராக இருந்திருப்பார்கள் உங்களியும் சேர்த்து............(நீங்கள் இந்துவாக இருப்பின்)."
சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்பதெல்லாம் அதை வைத்து ஆதாயம் பார்க்கும் விஷமிகளின் பிரச்சாரம்தானே தவிர ஒட்டுமொத்த இந்திய சமூகத்துக்கு இல்லை. நம் வறலாற்று பாடபுத்தகங்களில் கோரிமுகமது, அக்பர், பாபர், ராஜராஜ சோழன், மாமல்லன், நரசிம்ம பல்லவன் என ஆண்டவர்கள் அத்தனைபெயர்களும் சரிவிகிதத்தில் இடம்பெற்றிருப்பதை கவனித்தாலே தெரியும். எனவே பிரச்சனை சிறுபான்மையினரா பெரும்பான்மையினரா என்பது அல்ல என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
அஞ்சா ஸிங்கம் ,
அதைத்தான் சொல்லியிருந்தேன்,உள்ள வந்திருந்தா கஜினி கைமா ஆகியிருப்பான்.
கஜினிக்கு அப்புறம் கோரி முகமது படை எடுத்தான் என சொல்கிறார்கள்,ஆனால் இருவருக்கும் இடையே சுமார் 150 ஆண்டுகள் இடைவெளி ,ஏன் கஜினிக்கு அப்புறம் அடுத்த படை எடுப்பு எடுக்க அத்தனைக்காலம் என்பதில் மறைக்கப்பட்ட வரலாறு இருக்கிறது.
கடைசி படை எடுப்பின் போது ஏற்பட்ட காயத்தாலும் வயதானதாலும் கஜினி இறந்துவிட்டான் , ஆனால் அதன் பின்னர் மீண்டும் வலுப்பெற்ற இந்திய மன்னர்கள் கஜினிக்கே படை எடுத்து சென்று கஜினி முகமது சாம்ராஜ்யத்தினை அழித்துவிட்டார்கள்.
எனவே அடுத்த 150 ஆண்டுகளுக்கு இந்தியா பக்கம் வரணும்னு எந்த இஸ்லாமிய மன்னனுக்கும் ஆசையே வரவில்லை :-))
கோரி முகமது கூட, பிரித்வி ராஜிடம் தோற்று ஓடினான், பின்னர் பிரித்வி ராஜின் மாமனார் ஜயசந்திரன் கூட பகைமை ஏற்பட்டதால்(பொண்ணை தூக்கீட்டார் பிரித்விராஜ்) ஜயசந்திரன் உதவியுடன் பிரித்விராஜை கோரி தோற்கடிக்க முடிந்தது.
ஆனால் அதன் பின்னர் ஜாட் மன்னர்கள் உடன் ஏற்பட்ட போரில் கோரி முகமதுவை ஒரு 22 வயசு சின்னப்பையன் நெஞ்சில் ஈட்டியை விட்டு ஆட்டிட்டான் :-))
அதில் கோரி முகமது செத்துவிட்டான்.
போதும் இதுக்கும் மேலும் வரலாறு பேசினால் பிலாசிபி அடிக்க வந்தாலும் வருவார் :-))
@ VAVVAAL //அப்கானில் இப்போ பெரும்பாலோர் போதை மருந்து அடிமைகளாகிட்டாங்கன்னு ஒரு ஆய்வு சொல்லுது.//
Thaliban destroyed all the abin plants in afghan at first after they came to rule
for follow up comments!
avvvvvv :-)
ஒரு முஸ்லிம் என்ற முறையிலும், இந்த முஸ்லிம் அமைப்புகள் எதையும் சாராதவன் (உண்மையில் அவற்றை எதிர்ப்பவன்) என்ற முறையிலும் நான் சில கருத்துக்களை பகிர விரும்புகிறேன். தமுமுக, தவ்ஹீத் ஜமாத், பீஜே, ஜவாஹிருல்லா போன்றவர்களை முஸ்லிம்களின் பிரதிநிதியாக தயவு செய்து யாரும் எடுத்துக் கொள்ளாதீர்கள், பார்க்காதீர்கள். இவர்களுக்கு பெரும்பான்மை முஸ்லிம் சமூகத்தில் எந்த ஆதரவும் கிடையாது. இந்த அமைப்புகள் கிட்டத்தட்ட தலா 5000-10000 பேர் வரை தீவிர தொண்டர்களை வைத்திருக்கிறார்கள். (அதுவும் 2-3 அமைப்புகளுக்கே அவ்வளவு தொண்டர் பலமும் கூட). இவர்களை வைத்துக் கொண்டு ஆர்ப்பாட்ட அரசியல் நடத்தி, தங்கள் பலத்தை காட்டி காரியம் சாதித்துக் கொள்வதே இவர்கள் பிழைப்பு. திரும்ப திரும்ப அதே தொண்டர்கள், அதே கோஷங்கள், ஆர்ப்பாட்டங்கள். இது ஒரு மிகவும் சிறிய வட்டம்.
பெரும்பான்மையான தமிழக இஸ்லாமியர்கள் எல்லோரும் போல் அமைதியாக அவரவர் பிழைப்பை பார்த்து கொண்டிருக்கிறோம். எல்லாரையும் போல கழகங்களில் உறுப்பினராக இருக்கிறோம், சினிமா ரசிகர் மன்றத்தில் இருக்கிறோம்.
அமைதியாக இருந்து வந்த தமிழக இஸ்லாமிய சமூகத்தை பிளவுபடுத்தியே இந்த இயக்கங்கள் வளர்ந்தன. 90களின் முதற்பாதியில் வளைகுடாவில் வேலை செய்துவிட்டு வரும் நபர்கள் ஒருவித புதிய கொள்கைகளுடன் வந்தார்கள். உள்ளூர் முஸ்லிம்களை பழக்கவழக்கங்களை சாடினார்கள். ஆரம்பத்தில் அடக்கிவாசித்த அவர்கள்,அமைப்பு ரீதியாக வலுப்பெற்றதும் பிரச்சனைகள் அதிகாகின. ஓவ்வொரு இஸ்லாமிய ஜமாத்தும் (சர்ச்சுகளில் இருக்கும் திருச்சபை போன்று, பள்ளிவாயில்களை நிர்வகிக்க ஜமாத்துகள் இருக்கின்றன) இவர்களால் பிரச்சனைக்குள்ளானது. இருப்பினும் இப்போதுவரை இவர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே இருப்பதனால், பெரும்பாலான இஸ்லாமிய கிராமங்களில், ஜமாத்துகளில் இவர்கள் ஊர்விலக்கம் செய்யப்பட்டார்கள். இன்றும் எல்லா இஸ்லாமிய கிராமங்கள், நகர சமூகங்களிலும் உள்ள உள்ளூர் இஸ்லாமிய ஜமாத்துக்களால் இந்த அமைப்பினர் வெறுக்கப்படுகிறார்கள், ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது அராஜக போக்கினால் அங்குள்ள பள்ளிவாயில்களில் நுழையக்கூட இந்த அமைப்பினருக்கு அனுமதி இல்லை. இவர்களுக்கென்று தனிப்பள்ளிவாயில்கள், அடக்கவிடங்கள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே தயவு செய்து இந்த அமைப்பினர் சொல்வது செய்வதை எல்லாம் ஓட்டு மொத்த முஸ்லிம் தரப்பு விவாதமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இணையத்திலும் ஃபேஸ்புக்கிலும் இவர்கள் ஆதிக்கமே மேலோங்கி இருக்கிறது.
இது குறித்து இன்னும் விளக்கமாக ஒரு தனிப்பதிவு எழுதலாம் என நினைக்கிறேன்.
பீஜே என்ற ஒருவரின் பேச்சுத்திறமையில் மட்டுமே வளர்ந்த, வளர்க்கப்பட்ட கூட்டம் இது. இங்கும் அவரது சீடர்கள் சிலரது கருத்துகளை காண்கிறேன். அவர்களை மன்னியுங்கள், அவர்கள் சுயசிந்தனை அற்றவர்கள். பதிலளிக்கத் தெரியாவிட்டால் உடனே ஆன்லைன்பீஜே.காம் போய் படி என்று இணைப்பை கொடுப்பார்கள். அவர்களது திறன் அவ்வளவே.
பள்ளிக்கூடத்தில், கல்லூரியில் ஒழுங்காக படிக்கும் வழியை காணோம். 2.5% உள்கோட்டா கிடைத்தும் அதை நிரப்ப ஆள் இல்லை. இதற்கு மட்டும் வந்து வண்டி வண்டியாக குப்பை கொட்டுகிறார்கள். எந்திரன் படத்தில் ரோபோ, தன்னை போலவே ரோபோக்களை செய்து அதை கட்டுப்படுத்தி வைத்திருக்கும், அது போல்தான் இருக்கிறது இந்த பீஜே அன்ட் கோ.
சலீம், உங்களுடைய பின்னூட்டம் எனக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக படுகிறது... உங்கள் பதிவிற்காக காத்திருக்கிறேன்...
கடுப்பாய் கொமொன்ஸ் போடனும்போல இருந்துச்சு,ஆனால் சலீம் கொமொன்ஸ் அதை தடுத்துவிட்டது..! சலீம் பதிவை நானும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.!
சலீம் சொல்வதுதான் உண்மை.
எனது இஸ்லாமிய நண்பர்களிடம்
பேசி நான் தெரிந்து கொண்டதை சலீமும்
உறுதி படுத்தி இருக்கிறார்.
அஞ்சா சிங்கம் மற்றும் வவ்வால், நீங்கள் ஏதோ சமூக அக்கறையுடன் பேசுகிறீர்கள் என்று நினைத்தேன், ஆனால் ஒருத்தன் வேண்டாம் என்று ஒதுங்கியவுடன், குடுத்தீர்களே ரெண்டு கமெண்ட், // அஞ்சா சிங்கம் said...
வவ்வாலிடமே வரலாறா .........
ஒரே ஒருத்தர் தான் வந்திருந்தாரு அவரையும் விரட்டி விட்டுடீங்களே ...சரி காத்திருப்போம் ..//
//
வவ்வால் said...
அஞ்சா ஸிங்கம்,
கஜினி,கோரிய எல்லாம் ஹீரோன்னு நினைச்சிக்கிட்டு இவங்க பேசினா என்ன செய்வது?
அப்புறம் ஏன் தலிபான்களை ஹீரோக்களாக கொண்டாட மாட்டார்கள்?
இவர்களுக்கு எல்லாம் உளவியல் ரீதியாவே ஏதோ பாதிப்பு இருக்கனும்.
சரி போகட்டும்,இன்னொரு ஆடு வராமலா போகப்போவுது,அதை பொறுமையா வெட்டிக்கலாம்//
பகுத்தறிவு வாதி என்று நினைத்தேன், ஆனால் அழகாக உங்களிடம் விவாதம் செய்தேன், ஆனால் நீங்களோ பண்பாடே இல்லாதவர்கள் என்று இந்த இரண்டு கமெண்ட் சொல்லிவிட்டது!!!!!!!!!!! முடிந்தால் இந்த பகுத்தறிவாளரின் விமர்சனத்தை படியுங்கள் புரியும்!!!!!
http://mathimaran.wordpress.com/2013/02/07/613/
அதுலேயும் முஸ்லிம் பேரை வைத்துக்கொண்டு ஒருத்தன் எழுதுரான் மாணம்கெட்டவன்
@Mydeen...//Thaliban destroyed all the abin plants in afghan at first after they came to rule//
your comment is so funny...read more....watch this video's description...
http://www.youtube.com/watch?v=xXX9Y0bfirY
-----Maakkaan.
உங்களை போன்றவர்களுக்கு குடுக்கும் சரியான செருப்படி இந்த பதிவரின் வார்தைகள்:-
இது காங்கிரசின் விஸ்வரூபம்.
கமலின் அமெரிக்க பாசமும், இஸ்லாமியர் மீதான வெறுப்பும் கலந்த, விஸ்வரூபம் போன்றவைகளுக்கு ‘கருத்து சுதந்திரம்’ என்ற பெயரில் ‘அறிவாளிகளே’ ஆதரவு தெரிவித்தால், இஸ்லாமிய நாடுகளின் மனித உரிமை மீறல்களை, மதத் தீவிரவாதத்தை கமல்ஹாசனுக்கு ஆதரவாக மடை மாற்றினால்,
அப்சல் குருவை தூக்கில் போடாமல்..?
அமெரிக்க கம்பெனியான ‘யூனியன் கார்பைடு’ மூலம், விஷவாயு கசிவால் போபாலில் 15, ஆயிரம் ஏழை இந்தியர்களை கொன்று விட்டு, அமெரிக்காவில் பதுங்கி இருக்கும் ஆண்டர்சனையா தூக்கில் போட முடியும்?
விஸ்வரூபத்தை ஆதரித்த அதே ஆட்கள் அப்சல் குரு தூக்கையும் ஆதரிக்கத்தான் செய்வார்கள். அவர்களிடம் அதே அமெரிக்க, இந்து நியாயங்கள் குவிந்து கிடக்கின்றன.
அவர்களிடம் நாம் என்ன கேட்க முடியும்?
சவுதி அரேபியாவின் கொடூரமான தண்டனைக்கு பலியான அப்பாவி இலங்கை பெண்ணின் வீடியோவை பார்த்து கை நடுங்க; ‘விஸ்வரூப எதிர்ப்பு இந்திய முஸ்லிம்களுக்கு’ அறிவுரை சொன்ன இந்து அறிவாளிகள்,
அப்சல்குருவின் மரண தண்டனை வீடியோவை பார்த்தால் அதேப்போல் கை நடுங்க கருத்துச் சொல்வார்களா?
காட்சியாக பார்க்கும்போது எந்த மரணமும் கொடூரம்தான்.
கொடூரம் என்பது தலையை தனியாக வெட்டுவது மட்டுமல்ல; கயிறால் கழுத்தை இறுக்கி கொல்வதும்தான்.
சவுதிஅரேபிய அரசின் மனிதாபிமானமற்ற அந்தக் கொலைக்கும், ‘ஜனநாயக’ நாடான இந்திய அரசின் இந்தக் கொலைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
அவரவர்களின் ஜாதி, மத, வர்க்க அரசியல் கண்ணோட்டத்தைத் தவிர.
எது மனிதாபிமானம்?
அதுவும் இவைகளின் அடிப்படையிலேயே பரிசிலிக்கப்படுகிறது.
மரணத்திற்கு கண்ணீரா? கை தட்டலா? அதையும் அவரவர்களின் அரசியலே முடிவு செய்கிறது.
@Mydeen...//Thaliban destroyed all the abin plants in afghan at first after they came to rule//
your comment is so funny...read more....watch this video's description...
http://www.youtube.com/watch?v=xXX9Y0bfirY
Watch..time at 1.56 seconds...
by---
Maakkaan.
நாட்டில் வெடித்த குண்டுவெடிப்புகள் அனைத்திலும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்று விசாரணை சொல்கின்றது, அப்போ நான் அனைத்து இந்துக்களும் தீவிரவாதிகள் என்று எடுத்துக்கொள்ளலாமா. காஷ்மீரிலும், மனிபூரிலும் நம் வீட்டு பெண்களை சூறையாடியது இந்திய ராணுவம் இதனை எதிர்த்து அருந்ததி ராய் போன்றோர் குரல் கொடுத்தார்கள், இரோம் ஷர்மிளா என்பவர் பன்னிரண்டு ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருக்கின்றார், ஆகையினால் இந்திய ராணுவத்தில் உள்ளவர்களில் 99% பேர் மோசமானவர்கள் என்று கூறுவிர்களா ? இப்பொழுது புரிகிறதா நாங்கள் ஏன் எதிர்க்கிறோம் என்று, மீடியாவும் சினிமாவும் தவறான தகவலை மக்களிடம் பரப்பியதால் உதிர்ந்த வார்த்தைகளே இங்கே நீங்கள் குறிப்பிட்டு இருப்பது.
குஜராத்தில் என் வீட்டு பெண்களை கற்பழித்து கொன்றபோது யாரும் கேட்கவில்லை.....கர்பிணியின் வயிற்றில் உள்ள சிசுவை கீறி வெளியே எடுத்து வெட்டி வீசியபோது யாரும் கேட்கவில்லை.....சந்தர்ப்பம் கிடைத்தால் அதை இன்னும் அதிகமாக செய்திருப்பேன் என்று பாபு பஜ்ரங்கி என்ற ரத்தவெறி பிடித்த ஓநாய் கொக்கரித்தபோது யாரும் கேட்கவில்லை.....நாட்டில் நடைபெற்ற பெரும்பாலான குண்டு வெடிப்புகளுக்கு காரணம் முஸ்லிம் தீவிரவாதம் என்று கண்மூடித்தனமாக அறிவித்துவிட்டு பின் விசாரணையில் அதை செய்தது ஹிந்து தீவிரவாதம்(மன்னிக்கவும் அவர்களை அடையாளம் கூறவே உபயோகித்துள்ளேன்) என்று தெரியவந்தபோது யாரும் கேட்கவில்லை.....அமெரிக்காவும் இஸ்ரேலும் என்வீட்டு குழந்தைகளையும் பெண்களையும் கொன்று குவித்து குவிக்கும்போதும் கேட்கவில்லை......இன்னும் எத்தனையோ கேட்கவில்லை.... நல்லவேளை இன்னும் எங்களுக்கு மதம் பிடிக்கவில்லை
அப்பாவி மக்களை கொள்ளும் யாராக இருந்தாலும், அவர்கள் முஸ்லிம் பெயர் தாங்கியாக இருந்தாலும் அவர்களை வன்மையாக கண்டிக்கின்றேன்.
உங்கள் வீட்டு சுக துக்கங்களை பகிர்ந்துகொள்ளவே நாங்கள் விரும்புகிறோம். அண்டை வீட்டார் பசித்திருக்க நீங்கள் மட்டும் உண்ணாதீர்கள் என்று இஸ்லாம் கூறுகிறது.
அதன் அடிப்பயிலேயே பெரும்பாலான முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.இதனை மதவெறி என்றால் அப்படியே இருந்துவிட்டு போகட்டும்.
// நாட்டில் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகள் இஸ்லாம் மதத்தை சார்ந்தவர்களாக இருப்பதால் ஏன் இந்த இஸ்லாம் மதத்தை தடை செய்யக்கூடாது?//
என்ன சார்.. செய்திகளை வாசித்து தானே வருகிறீர்கள். இந்தியாவில் முஸ்லிம் தீவிரவாதிகள் குண்டு வைத்ததெல்லாம் காலம் கடந்து விட்டது. இப்பல்லாம் இந்து தீவிரவாதிகள் அந்த "கான்ட்ராக்ட்" டை எடுத்திருக்கிறார்கள். உங்களுக்கு தெரியாதா?? இந்து தீவிரவாதிகளுக்கு ஆர்.எஸ்.எஸ். பயிற்சி கொடுப்பதாக உண்மையை போட்டு உடைத்திருக்கிறார் உள்துறை அமைச்சர்.
ச்சே.. ச்சே அதற்காக 'இந்து " மதத்தை தடை செய்ய வேண்டும் என்ற விபரீத முடிவுக்கெல்லாம் போய்டாதீங்க சார்..
பாவப்பட்ட முஸ்லிம் பலி ஆடுகள்!!
@ 9:52க்கு பின்னூட்டம் போட்ட அனானி
பதிவிலோ பின்னூட்டத்திலேயோ எங்கேனும் அனைத்து இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதா ?
சாமான்ய இந்துக்கள், குறிப்பாக தமிழக இந்துக்கள் பெரும்பாலும் காவி கும்பலை ஆதரிப்பது இல்லை... அதே போல நேர்மையான இஸ்லாமியர்கள் ஜிகாதிகளை ஆதரிக்கவில்லை என்று சலீமின் பின்னூட்டம் சொல்கிறது... எதற்கு சம்பந்தமே இல்லாமல் ஏதோ ஒரு பதில் போட்டிருக்கிறீர்கள்...? வேறு ஏதேனும் பதிவிற்கு போடவேண்டிய பின்னூட்டமா ?
யாருக்கோ கொண்டை தெரியுறா மாதிரி இருக்கு...
எங்கப்பா அந்த கஞ்சா சாரி அஞ்சா சிங்கம், வந்து இந்த அனானிய கவனிப்பா????????????????
யோ பிலாசபி இங்க நடந்துருக்குற சண்டைய பாத்தா அநேகமா கமலுக்கு பதில் நீ தான் இந்தியாவ விட்டு போகணும்னு நினைக்கிறேன்..
அமெரிக்காவோ, ஆப்கானிஸ்தானோ எதுவாக இருப்பினும் பயங்கரவாதம் தவிர்க்கப்பட வேண்டும் ....
பொதுவாக படத்தை மட்டும்(அதாவது படம் எடுக்கப் பட்ட விதத்தை ) விமர்சனம் செய்யும் பிலாசபிக்கு எப்படி விஸ்வருபம் சொல்ல வந்த கருத்தை விமர்சனம் செய்ய தைரியம் வந்தது என்பதை யோசித்து பார்த்தால் கொஞ்சம் மகிழ்ச்சியாகவும் சிலிப்பாகவும் இருக்கிறது.
வாழ்த்துக்கள் பிரபா ..
எங்கேப்பா வவ்வாளையும் காணோம், சிங்கத்தையும் காணோம், வவ்வால் தலைகீழா யோசிச்சு யோசிச்சு மண்டையில் மூளை எல்லாம் மண்ணோடு மண்ணாகி போய்விட்டது என்று நினைக்கிறேன்,
அனானி ராசாக்களா,
எல்லாருமே மொட்டையா வந்தா யாருனு எப்படி தெரியும், அனானியா வந்தாலும்,அம்மாவாசை,அப்துல்காதர்னு ஏதோ ஒரு பேரைப்போடுங்கப்பா நொன்னைகளா?
அதைவிட்டுப்புட்டு ,எங்க ஆளக்காணோம்னு தேடுறாங்களாம் :-))
அனானியா வந்தது ஹாஜாவா?
//பகுத்தறிவு வாதி என்று நினைத்தேன், ஆனால் அழகாக உங்களிடம் விவாதம் செய்தேன், ஆனால் நீங்களோ பண்பாடே இல்லாதவர்கள் என்று இந்த இரண்டு கமெண்ட் சொல்லிவிட்டது!!!!!!!!!!! //
ஆகச்சிறந்த கண்டுப்பிடிப்பு ஆஸ்காரே கொடுக்கலாம் :-))
பண்பாடு என்ற பெயரில் காலத்துக்கு ஒவ்வாத காட்டுமிராண்டித்தனம் வேண்டாம் என சொல்வது உமக்கு பண்பாடு இல்லாதது போல தெரிந்தால் என்ன செய்ய?
கஜினி,கோரி முகமதுவை சிலாகித்து பேச வேண்டிய அவசியம் எப்படி வந்தது, ஏதேனும் ரத்த சொந்தமா அவர்கள்?இல்லை எல்லாம் ஒரே நாடுனு நினைக்கிறீங்களா?
இதுக்கு பதிலை சொல்லிட்டு அப்புறமா பண்பாடு பற்றி வகுப்பெடுக்கலாமே?
அமெரிக்காவையும்,அமெரிக்க அதிபரையும் நீங்கலாம் விமர்சிக்கிறிங்க,அதுக்காக இந்தியாவில் உள்ள கிருத்துவர்கள் எப்படி கிருத்துவர்களை விமர்சிக்கலாம்னு என்றாவது கேட்டதுண்டா?
ஏன் நானும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை விமர்சிக்கிறேன் எந்த கிருத்துவரும் அமெரிக்கா செய்வதை சரினு சொல்லி என்க்கிட்டே சண்டைக்கு வந்ததில்லை.
ஆப்கான் என்பது ஒரு நாடு,தாலிபான்கள் என்பவர்கள் அங்குள்ள அடிப்படைவாத குழு, அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களை குறிப்பிட்டால்,அதனை ஏன் இஸ்லாமியர்களை சொல்லிட்டாங்கன்னு குதிக்கணும்?
எதையும் கருத்தியல் ரீதியாக பார்க்க கற்றுக்கொண்டு பின்னர் பண்பாடு பற்றிலாம் பேச வாங்க.
நியாயம்னு ஒன்னு இருக்கு ஹாஜா!!!
எப்படி நம்ம அஞ்சா சிங்கம், பகுத்தறிவாளர் என்று தன்னை கூறினாரோ, அதே போல வைத்துக்கொள்ளுங்கள் இந்த அனானியை!!!!!!!!!!!!!!!!!
எதுக்குயா இந்த அனானி வேஷம் உங்க கமண்ட் தரத்தை வைத்தே நீர் யார் என்று யூகிக்க முடிகிறது ..
கடைசியில் இப்படி முக்காடு போட்டுக்கிட்டு வந்து கேள்வி கேக்குற அளவுக்கு அசிங்கமாகிட்டியே ..........கொண்ட வெளியில் தெரியுது அதயும் சேர்த்து மூடிக்கொண்டு போகவும் ..
உங்களுக்கெல்லாம் அழகான பதிலை சலீம் தமிழ் கூறியுள்ளார். அவரை போன்றவர்கள் மனம் புண்பட கூடாது என்று விரும்பி தான் கொஞ்சம் ஜாலியா விளையாடி கொண்டிருக்கிறோம். ........
ஹ்ம்ம் ...அப்புறம் தம்பி இந்த ரெண்டு பக்கம் சொறிஞ்சி விடுற பழக்கத்தை விட்டுடு அது ரொம்ப பேட் ஹேபிட் .....
பரமசிவன் என்ற படத்தில், பாரூக் என்ற பெயரில் ஒரு தீவிரவாதியை அறிமுகபடுத்தினான் தேச பக்தன் அஜித். படம் டப்பா அதுனால ஒருத்தனுக்கும் தெரியல. இப்போ நம்ம உலக்கை நாயகன், தேச பக்தனாக வாழ்த்திருக்கும் "விஸ்வரூபம்" படத்திலும் பாரூக் என்ற பெயரில் ஒரு தாலிபான் தீவிரவாதி.
விளைவு (இந்த சம்பவம் நடந்தது ஆப்கான் அல்ல, ஆஸ்திரேலியா): கடந்த ஞாயிறு (12.02.2013) எனது காரை சரி செய்வதற்கு ஒரு மெக்கானிக் கடைக்கு எடுத்து சென்றேன். அது ஒரு இலங்கை தமிழரின் மெக்கானிக் கடை. மெக்கானிக்கின் மனைவி என்னுடைய பெயர் "முஹமத் பாரூக்" என்றவுடன் முகத்தில் ஒரு சின்ன சுருக்கம். பின்பு சுதாரித்துகொண்டு, செயற்கையாக வரவழைக்க பட்ட சிரிப்பு முகத்தோடு "பாரூக்" என்பது தீவிரவாதியின் பெயர் தானே. விஸ்வரூபத்தில் பார்தேன் என்றவுடன் அதிர்ச்சி எனக்கு. பின்பு கமல் அதில் முஸ்லிமாக நடித்து உங்களுக்கு பெருமை தேடி தந்துள்ளார் என்றவுடன், அவர்களின் அறியாமையை நினைத்து வேதனைபடுவதா? அல்லது எல்லாம் தெரிந்து இருந்தும் ஒரு விபச்சரனை வைத்து இஸ்லாத்தை கண்ணியபடுத்துகிறோம் என்று திரும்ப திரும்ப சொல்லும் அவர்களின் காவி சிந்தனையை இகழ்வதா??
இந்நாள் வரையில் 5 நாடுகளுக்கு சென்றிருக்கிறேன். இதுவரை எனக்கு விமான நிலையங்களில் தனி கவனிப்பு இருந்ததில்லை. உலக்கை நாயகனின் விஸ்வரூபத்தின் புண்ணியத்தால் இனிமே விமான நிலையங்களில் தனி கவனிப்பு இருக்க வாய்ப்பு அதிகம். குறிப்பாக மதச்சார்பற்ற (???) இந்தியாவில் எனக்கு தனி கவனிப்பு நிச்சயம். அதுக்குள்ளே ஆஸ்திரேலியா பாஸ்போர்ட்-க்கு மாறனும்.
படத்தை படமா பாருங்க என்னும் அறிவாளிகளுக்கு, படம் என்பது படம் மட்டும் அல்ல. அது சமுதாயத்தில் பல விதைகளை மக்கள் மனதில் ஆழமாக விதைக்கிறது. ஒரு சமுதாயத்தை தீவிரவாதியாக சித்தரிக்கும் ஒரு படம், மக்கள் மனதில் அந்த சமுதாயமே தீவிரவாதி என்ற என்ற விதையையே விதைக்கிறது. பின்பு அந்த கருத்தே நிரந்தரமாக வேருன்றுகிறது. - Mohamed Farook
வரலாற்று ஆசிரியர் டி.லேசி ஓ.லியரி (De Lacy O'Leary) யின் கருத்து.
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்பது தவறான கருத்து என்பதை நிரூபிக்க -பிரபல வரலாற்று ஆசிரியர் டி.லேசி ஓ.லியரி (De Lacy O'Leary) எழுதிய 'இஸ்லாம் கடந்து வந்த பாதை' (Islam At The Cross Road) என்ற புத்தகத்தின் 8வது பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ள கருத்து சரியானதாக இருக்கும் என்று கருதுகிறேன். 'இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற கருத்து மீண்டும் - மீண்டும் உலகிற்கு தெரிவிக்கப் பட்டுக் கொண்டிருப்பது - வரலாற்று ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டக் கட்டுக்கதையேயன்றி வேறொன்றும் இல்லை என்பதை தெளிவான வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகின்றது.'
அஞ்சா அண்ட் வவ்வால், அனானியாக வரவேண்டிய அவசியம் எனக்கில்லை, இதோ உங்களுக்காக ஒரு லிங்க் என்னுடைய வலைப்பூவில் இருந்து.,
http://flypno.blogspot.com/2012/06/blog-post_19.html
என் கமெண்ட் நீக்கிய பிரபாகரன் வாழ்க.
அம்ம்புட்டுதானா உம் டக்கு?
முஸ்லிம்கள் இப்போது தந்திரத்தோடு செயல் பட்டு வருவது கண்கூடாக தெரிகிறது. அவர்களின் மறைமுக அஜெண்டா என்னெவென்றால்
1.இஸ்லாம் பற்றிய உலகம் அறிந்த விஷயங்களை அது அப்படி இல்லை என்று ஒரேடியாக மறுப்பது. உதாரணம் அமெரிக்க இரட்டை கோபுர இடிப்பு, இதை செய்தது பின் லாடன் இல்லை ஜார்ஜ் புஷ்ஷே இதை செய்தார் என்று சில அமெரிக்க கான்ஸ்பிரசி திரிஸ்ட் மேம்போக்காக சொல்லும் யூகமான கருத்துக்களை உண்மை போல எழுதுவது.
2.இஸ்லாமுக்கு எதிராக நடைபெற்ற எந்த விஷயத்தையும் அடிக்கடி மேற்கோள் காட்டி திரும்ப திரும்ப எழுதி அதை மக்கள் மனதில் இருக்கும்படி செய்வது. உதாரணம் குஜராத் இன அழிப்பு மற்றும்அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் ஈராக் படையெடுப்பு.
3.சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு பெர்சனலாக உதாரணம் கொடுப்பது. உதாரணம் தாலிபான் பற்றிய பிரச்சினைக்கு சம்பந்தமே இல்லாமல் புலிகள் பற்றி எழுதுவது. அல்லது உங்கள் மகன் மகள் என்று அநாகரீகமாக பேசுவது பீ ஜே போல.
4.உலகில் உள்ள அத்தனை அறிவியல் கண்டுபிடிப்புக்களும் குரானில் இருக்கிறது என்று சால்ஜாப்பு சொல்வது.
5.உலகில் இருக்கும் இத்தனை அறிவும் இஸ்லாமினால் வந்தது என்று வாய்கூசாமல் பொய் சொல்வது. உதாரனத்திற்க்கு உலகின் அறிவியல் அறிவு அரேபியாவில் கொடி கட்டி பறந்தது என்று உண்மைக்கு புறம்பாக எழுதுவது..(உண்மையில் கிரேக்க அறிவியலையே இந்த இஸ்லாமியர்கள் தன்னுடையது என்று வெட்கமில்ல்லாமல் சொல்லிவருகிறார்கள்.)
6.இஸ்லாமுக்கு எதிரான எந்த உண்மையையும் அப்படி இல்லை என்று மறுப்பது. உதாரணம் ரிஸான என்ற இலங்கை பெண் சவூதியில் தலை அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது. இதை இந்த இஸ்லாமிய மதவாதிகள் அது ஷரீயா படி நடை பெற்றது அதனால் அதை பற்றி விமர்சனமே செய்யகூடாது என்று தடை போட்டது.
7அப்சல் குரு, அஜ்மல் கசாப் போன்றவர்களுக்கு இந்தியாவிலேயே தொழுகை நடத்துவது கேட்டால் இது இந்தியாவின் மதசார்பின்மை என்று சொல்வது. இதே மதசார்பின்மையை பாகிஸ்தானிலோ அல்லது சவூதியிலோ நாம் எதிர்பார்க்ககூடாது என்று நம்மை மிரட்டுவது.
8.இஸ்லாமுக்கு ஆதரவாக பேசும் நடுநிலையாளர்களை கை தட்டி ஆதரித்துவிட்டு அவர்கள் தங்களுக்கு எதிராக பேசும் போது ஹிந்துத்வா வாதிகள் என்று சொல்லி வாயை அடைப்பது,
இன்னும் நிறைய இருக்கிறது. சொன்னால் பல இஸ்லாமிய மத பதிவர்களுக்கு கண்ணா பின்னா வென்று கோபம் வரும். இவர்களை ஒரேடியாக புறக்கணிப்பதே நாட்டுக்கு நலம். இவர்கள் இந்தியாவை இஸ்லாமிய நாடாக ஆக்குவதையே தங்கள் லட்சியமாக கொண்டவர்கள். நாட்டுபற்றை விட (அப்படீன்னா என்ன அது எங்கே கிடைக்கும் ) இஸ்லாமிய மத வெறியே உடல் நரம்பு முழுவதும் கொண்டவர்கள். இவர்களிடம் பேசி ஒரு பைசா பிரயோசனம் இல்லை. மத வெறி தலைக்கேறியவர்கள். காட்டுமிராண்டிகள். ஆனால் இவர்கள் இணையத்தில் மட்டுமே அதிகம்.நாம் பார்க்கும் உலகத்தில் இருக்கும் நல்ல இஸ்லாமியர்கள் இவர்களை ஒரு பொருட்டாகவே என்னுவது கிடையாது. அதுவே ஒரு ஆறுதல்.
///வடசென்னை மகாராணி திரையரங்கம் பாதியளவு கூட நிறையவில்லை. கமல் படத்துக்கு கூட்டம் வராது என்பதே ஒரு பெருமைதான்.///
இதை 500 தியேட்டர்ல ரிலீஸ் பண்ணியதால் ஏற்பட்ட விளைவுனு சொல்லி சமாளிக்கலாம்!
வவ்வால் மற்றும் அஞ்சா சிங்கம் இந்த பதிவை கண்டிப்பாக படிக்கவும்.
http://flypno.blogspot.in/2013/02/blog-post_12.html
***Well. ஒரு வணிக சினிமாவாக விஸ்வரூபம் மேட்டுக்குடி வர்க்கத்தை மட்டுமே திருப்திப்படுத்தும். நிறைய ஆங்கில மயம். சாமான்ய ரசிகர்களால் சரிவர புரிந்துக்கொள்ள முடியவில்லை. கமலுக்கு வணிக ரீதியாக மற்றுமொரு தோல்விப்படமாக அமைய வேண்டியது, இஸ்லாமியர்களின் அவசியமற்ற போராட்டங்களின் வாயிலாக நல்ல விளம்பரம் கிடைத்து லாபம் பார்த்துக்கொண்டிருக்கிறது.***
So, he succeeded as he planned and plotted?? ஊரறிய மீடியாவைக் கூட்டி வச்ச "ஒப்பாரி" எல்லாம் ஓரளவுக்கு காப்பாத்திப்புடுச்சு போல!
வா வருண் மாமா.உன் இங்கிலீஷ் வாந்தியை எடுத்துட்டு போகவும்.
ஆனா ஒண்ணு, ஒப்பாரி எல்லாம் ஒரு முறைதான் வொர்க் அவட் ஆகும். அடுத்த முறை இதே தப்பை திரும்ப செய்து "என்னை க்காப்பாத்துங்க"னு மறுபடியும் ஒப்பாரி வைக்கும்போது இது மாரி கொறைஅழுகை எல்லாம் வொர்க் அவ்ட் ஆகாது!
தமிழ் இஸ்லாமியர்களில் சிலர் ஏன் தாலிபான் எதிர்ப்புப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் என்பதை இன்னமும் பலர் புரிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கின்றேன் .. ! குறிப்பாக தமிழகத்தில் 50 லட்சம் முஸ்லிம் இருப்பார்களா> அவர்களில் இந்த 24 இயக்கங்களைச் சார்ந்தவர்களும், அவர்களது ஆதரவாளர்களும் ஒரு 5 லட்சம் தேறுமா ? இந்த 5 லட்சம் பேர் எப்படி 50 லட்ச தமிழக இஸ்லாமியர்களின் உணர்வுகளை பிரதிபலிக்க முடியும். இந்த 5 லட்சம் பேர் எவ்வாறு 650 லட்சம் பிற தமிழ்நாட்டவரின் விருப்பத்தை நிர்ணயம் செய்ய முடியும். இந்திய சட்டப்படி மதவசை தடை சட்டம் உள்ளது,. ஆனால் இப்படத்தில் இவர்கள் அச் சட்டத்தை பயன்படுத்தவே இல்லை, ஏனெனில் இப்படத்தில் மதவசை இல்லவே இல்லை. தமிழக அரசுக் கூட சட்டப் பிரச்சனை வரும் எனக் கூறி 24 இயக்கத்தவரை பேட்டை ரவுடிக் கணக்காக சித்தரித்துவிட்டது. இதுவரைக் காலமும் இஸ்லாம் குறித்து நடுநிலை பேசிய பலரும், இன்று இஸ்லாமியர் என்றாலே இப்படித்தானே என்று பேசத் தொடங்கிவிட்டார்கள். இது தமிழர்களை பிளவுபடுத்தி இந்து -,முஸ்லிம் என இந்துத்துவா, - இஸ்லாமியவாத அணிகளில் சேர்க்கும் ஒரு தொடக்கப்புள்ளியே ஆகும். இதில் இந்துத்வா - இஸ்லாமிய கூட்டுச் சதி உள்ளது என்பதே எனது கணிப்பு. இந்துக்கள், இஸ்லாமியர் இந்த எதிர்ப்பரசியலில் இருந்து விலகுவதும், அத்தகையவர்களை விலக்குவதுமே அமைதியான தமிழகத்துக்கு வழி வகுக்கும். கமல் மீது தணிப்பட்ட விருப்பு, வெறுப்புடையவர்கள் இம்முறை இந்த இரு அணியில் ஒன்றோடு இணைந்து மேலும் பற்ற வைப்பது வேடிக்கைத் தருகின்றது ..
சுதந்திர நாட்டில் படைப்புக்களை படைக்க முழு உரிமை உண்டு, அது பிடித்தால் போற்றுங்கள், பிடிக்கவில்லை எனில் தூக்கி எறியுங்கள். படைப்புக்களை தடை செய்வது நியாயம் இல்லை.
இது விஸ்வரூபம் மட்டுமல்ல லஜ்ஜா, சாத்தானிக் வேர்சஸ், என அனைத்து படைப்புக்களுக்கும் பொருந்தும். நன்றிகள் !
காரிகன்,
நீங்க சொன்ன பலக்கருத்துக்கள் இந்திய வகாபிக்களுக்கு நன்கு பொருந்தும் :-))
தேசப்பற்றுப்பற்றி எல்லாம் கேட்கக்கூடாது, இந்தியாவை ஒரு வஹாபி ஆண்டால் தான் தேசப்பற்றி இவர்களுக்கு வரும் :-))
இந்தியாவில் பெரும்பான்மையா யாரு இருக்கானே இவங்களுக்கு அடிக்கடி மறந்து போகுது, சரி இவங்களை விமர்சித்தா ஏன் எப்போதும் இந்துத்வானு சொல்லுறாங்க, நாத்திகனுக்கும் மதமில்லை, அப்போ அவனும் மதத்தினை விமர்சிப்பானு எப்போ புரிஞ்சிப்பாங்க?
அரைகுறை இஸ்லாமியர்களால் தான் எல்லா பிரச்சினையுமே :-))
---------
நீங்க சொன்ன பதிவை முன்னரே படிச்சு ,பின்னூட்டமும் போட்டேன் ,ஏனோ அவ்வீரன் இன்னும் வெளியிடலை,என்ன மனக்குழப்பமோ?
ஆமாம் அது ஹாஜாவோட பதிவு போல, அவரும் ,அதில் ஒரு சுட்டிக்கொடுத்து படினு சொல்லுறார்,ஆனால் எங்கேயும் ஹாஜானு பேரைக்காணோம்,நான் தான் சரியா பேரு எங்கே ஒளிஞ்சு இருக்குனு பார்க்கலையா?
என்ன எழவோ, என்னையெல்லாம் கேள்விக்கேட்க, கொஞ்சமாச்சும் மனசாட்சி ஹாஜாவுக்கு வேண்டாமா?
கிங்க் ஆஃப் போர்ட்டொநோவோனு போட்டுக்கிறார், ஏன் பறங்கிப்பேட்டைனு போட்டா தடை செய்வாங்களா?
போர்ட்டோ நோவோனு ஃப்ரெஞ்காரன் பேரு வச்சான்,டச் வந்தான் ,பின்னர் ஆங்கிலேயன் ,ஆனால் அவங்களாம் போனப்பிறகும் போர்ட்டொநோவொனு சொல்லிக்கிட்டு இருக்கார் ஹாஜா :-))
நான் பறங்கிப்பேட்டை, புதுச்சதிரம்,பொன்னம்த்திட்டு,பிச்சாவரம்,புவனகிரினு எல்லா ஊரும் பார்த்தவன்.:-))
100 உம் நானே அடிக்கிறேன் :-))
யோவ் அனானி ஒரே ஒரு வரலாற்று ஆசிரியர் சொன்னதையே பெருசா எடுத்துப்போட்டுக்கிறீர் ,ஆனால் பல வரலாற்று ஆசிரியர்கள் சொன்னதை என்ன செய்ய, குப்பைத்தொட்டியில் போடலாமா?
போயா போய் நல்லாப்படிச்சிட்டு வந்து பேசும், நாமல்லாம், ஒன்னுக்கு 10 ரெஃபெரென்ஸ் பார்க்கிறவங்க,உன்னோடா ஊசிப்போன போண்டாவை இங்கே விக்க வேண்டாம் ;-))
@ காரிகன்,
டைட்டிலில் மட்டும் கண்டனம்ன்னு போட்டிருக்கு உள்ளே ஒன்னும் சரக்கு இல்லையே .வவ்வால் நல்லா குனிஞ்சி கீழே பாருங்க சின்னதா போஸ்டட் பை haja sadiq ன்னு போட்டிருக்கு .
கலாசாரம் பண்பாடுன்னு என்னவோ உளறி இருக்காரு கிராமத்து பாஷை தெற்கத்திய பாஷை இதெல்லாம் என்ன வென்று தெரியாமல் முஸ்லீம்கள்தான் சோறு என்று தூய தமிழில் பேசுபவர்கள் என்று புலம்பி இருக்கிறார். இவ்வளவு அப்பாவியாகவா ஒரு மனுஷன் இருப்பான் .:-)
என்னுடைய பதிவை படித்தமைக்கு நன்றி. இனிமேல உங்களுடன் விவாதிக்க முடியாது, உங்கள் கொள்கை உங்களுக்கு என் கொள்கை எனக்கு.
நடந்தவைகள் மறந்திடுவோம். இனி நட்பாய் தொடர்வோம்.
கமல் விஸ்வரூபத்தை நேரடியாக ஹாலிவுட்டில் எடுத்திருந்தால் ஆஸ்கராவது கிடைத்திருக்கும்.\\ மாப்பு நீங்க ஒன்னும் காமடி கீமடி பண்ணலியே?!
Post a Comment