3 March 2013

நான்காம் பிறை 3D

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சில வாரங்களாகவே தினத்தந்தியின் கடைசி பக்கத்தில் கவன ஈர்ப்பு செய்துவந்த படம். டிராகுலா என்கிற மலையாள படத்தின் டப்பிங் என்று தெரிய வந்தது. அதனாலென்ன, இருக்கட்டுமே. 3Dயில் ஹாரர் படம் என்ற ஒன்றே போதும் நான்காம் பிறையை நாடுவதற்கு. ஆனால் என்னிடம் அதனைத் தாண்டியும் இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று மோனல் கஜ்ஜார், இரண்டாவது ஷ்ரதா தாஸ். யாரு பாஸு இவங்க ரெண்டு பேரு என்று தமிழ் சினிமா ரசிகர்கள் சுலபமாக கேட்டுவிடலாம். தெலுங்கு சினிமா பார்ப்பவர்களுக்கு தெரிந்திருக்கக்கூடும். ஐடில்ப்ரைன், ராகலஹரி கேலரி விரும்பிகளாக இருப்பின் நிச்சயமாக தெரிந்திருக்கும். தேவி பாலாவில் எனது ஆஸ்தான முதல் வரிசை, நடு இருக்கையை முன்பதிவு செய்தேன்.



ஹாரர் படங்களுக்கென்று சில கதைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் நான்காம் பிறையில் சொல்லப்பட்டிருக்கிறது. என்ன ஒன்று, அதற்கு கொஞ்சம் ரூமேனிய சாயம் பூசி சொல்லியிருக்கிறார்கள். சுருக்கமாக சொல்வதென்றால், ரத்த காட்டேரிக்கும் வேம்பயருக்கும் உள்ள வேறுபாடு. ஏதோ ஒரு புகழ்பெற்ற, வாயில் நுழையாத பெயரைக் கொண்ட ஆங்கில நாவலிலிருந்து கதை அதிகாரப்பூர்வமாக திருடப்பட்டுள்ளது.

தன்னுடைய காதல் இளவரசி இறந்த சோகத்தில் ரத்த காட்டேரியாக மாறிய ஒரு இளவரசன் தற்போது ருமேனியாவின் பிரான் கேஸில் எனும் கோட்டையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறான். ஹனிமூனுக்காக அந்த கோட்டைக்கு செல்லும் நாயகன், ரத்த காட்டேரியை விடுவிக்கிறான். விடுவிக்கப்பட்ட ர.கா நாயகனை கொன்று அவருடைய உடலிலேயே புகுந்து இந்தியாவிற்கு வந்து விடுகிறது. வந்த இடத்தில் இறந்துபோன இளவரசி சாயலில் நாயகி மோனல். இளவரசியை அடைய துடிக்கிறது ரத்த காட்டேரி. அதனை கிறிஸ்தவ, இந்துத்துவ ஆன்மிக சக்திகள் அறிவியலோடு இணைந்து முறியடிப்பதே மீதிக்கதை.



ஷ்ரதா தாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... யப்பா சான்ஸே இல்லை. முதல் பாதியில் ஆன்மிக சக்தியாகவும், மறுபாதியில் தீய சக்தியாகவும் தோன்றும் ஷ்ரதா நம்முடைய சக்தியை வீணடித்துவிடுவாரோ என்று அச்சப்பட வேண்டியிருக்கிறது. ஷ்ரதா ஒற்றைக்காலில் நின்றபடி பூஜை செய்யும் காட்சி - அடடா சர்வநிச்சயமாக ஷ்ரதாவின் முன்னோர்கள் சிற்பக்கலை வல்லுனர்களாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஷ்ரதாவின் சேலை விலகியும் விலகாத சமயங்களில் திரைக்கு பக்கவாட்டில் சென்று பார்க்கலாமா என்ற ஆர்வம் மேலிடுகிறது. வெண்ணிற சேலையில் சிங்கிள் ஃப்ளீட் வைத்து ஷ்ரதா நடந்துவரும்போது இன்னும் நான்கைந்து 3D கண்ணாடிகள் கேட்டு வாங்கி மாட்டிக்கொள்ளலாமா என்றெல்லாம் தோன்றுகிறது. மேடம்... நீங்க எப்போ தமிழுக்கு வர்றீங்க ? ஐயம் வெயிட்டிங்...!

மோனல் கஜ்ஜார் குஜராத் குல்கந்து. பெயரில் மட்டுமல்ல தோற்றத்திலும் கூட சிம்ரன் தங்கையை நினைவூட்டுகிறார். கனியிருப்ப காய் கவர்ந்தற்று எனும் வள்ளுவனின் கூற்றுக்கேற்ப மோனல் நம்மை அதிகம் ஈர்க்கவில்லை என்றாலும் ம்ம்ம் அடிக்கடி குட்டை பாவாடை அணிந்தபடி உறங்கி நம் உறக்கத்தை கெடுக்க முயற்சிக்கிறார். சோனா ஒப்ராயும், ப்ரியா நம்பியாரும் ஸ்டார்ட்டர்ஸ்.

நாயகன் பெயர் சுதிர் சுகுமாரனாம் - படுபாவி அனுபவிச்சி நடிச்சிருக்கான். நீளமான தலைமயிர், ஷார்ப் நோஸ், பெண்களை கண்டாலே அலேக்கா தூக்கிட்டு போயிடுறார். திரையரங்கை விட்டு வெளியில் வந்ததும் ஒரு அட்டை ஜெலுசில் வாங்கி விழுங்கிக்கொண்டேன்.

இந்திய ஹாரர் படங்களில் கண்டிப்பாக சாமியாரும், சயின்டிஸ்டும் இடம்பெறுவார்கள். ஆரம்பத்திலிருந்தே இருவருக்கும் முட்டிக்கொள்ளும். உச்சக்கட்ட காட்சியில் ஆன்மிகமும் உண்மை, அறிவியலும் உண்மை என்று ஈயம் பூசாத மாதிரி பூசி முடிப்பார்கள். நான்காம் பிறையில் சாமியார் நாசர், சயின்டிஸ்ட் பிரபு. நாசர் சட்டையில்லாமல் வலம் வருவதையெல்லாம் 3Dயில் காட்ட வேண்டுமா டைரக்டர் சார் ? 3D படம் என்பதாலோ என்னவோ பிரபு 3D கண்ணாடி போன்ற ஒன்றை கழுத்தில் கட்டி தொங்கவிட்டிருக்கிறார். கூடவே மெக்சிகன் ஹேட், குறுந்தாடி. சில காட்சிகளில் தோன்றினாலும் பெருந்தச்சன் மிளிர்ந்திருக்கிறார்.

கஞ்சா கருப்பு, மனோ பாலா சம்பந்தப்பட்ட காட்சிகள் தமிழுக்காக இணைக்கப்பட்டது போல. முடியல பாஸ் இணைக்காமலே இருந்திருக்கலாம். டப்பிங் படம் என்பது தெரியாமலிருக்க நிறைய வேலைப்பாடுகள் செய்திருக்கிறார்கள். சில காட்சிகளின் ரீ-ஷூட், பிரபு, நாசர் சொந்தக்குரல், காரில் தமிழ்நாடு ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர். இருப்பினும் சில நடிகர்களின் முகத்தில் மலையாலக்களை காட்டி கொடுத்துவிடுகிறது.

அடிக்கடி கிராபிக்ஸில் தோன்றும் ரத்த காட்டேரியின் உடல் மொழி ரசிக்க வைக்கிறது. தூக்கி வைத்து கொஞ்சலாமா என்று கூட தோன்றுகிறது. விஷுவல் எபக்ட்ஸை பொறுத்தவரையில் இந்திய சினிமாக்கள் கடக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. பாரிஜாத பூவே பாடலில், பா.விஜயின் வரிகளில் காமத்துப்பால் பொங்குகிறது. படத்தின் தொடக்கத்திலும் சரி, இறுதியிலும் சரி தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் மட்டுமே திரையில் காண்பிக்கப்பட்டது. ஏன் என்று தெரியவில்லை ?

மொத்தத்தில் சிறப்பு ஒளியமைப்பு, கவர்ச்சி, பகடி என்று எந்த நோக்கத்திற்காக பார்த்தாலும் நான்காம் பிறை முதலுக்கு மோசமில்லாமல் திருப்தியளிக்கிறது. தரமான 3D கண்ணாடிகள் தரும் திரையரங்கை நாடுவது நல்லது.


பார்க்க... ரசிக்க...
ஷ்ரதா தாஸ் I
ஷ்ரதா தாஸ் II
மோனல் கஜ்ஜர்
 
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

11 comments:

Prem S said...

//முதல் பாதியில் ஆன்மிக சக்தியாகவும், மறுபாதியில் தீய சக்தியாகவும் தோன்றும் ஷ்ரதா நம்முடைய சக்தியை வீணடித்துவிடுவாரோ என்று அச்சப்பட வேண்டியிருக்கிறது//


ஹா ஹா வீண் அடிச்சுடீன்களா பாஸ்

வவ்வால் said...
This comment has been removed by the author.
Philosophy Prabhakaran said...

வவ்வால், அந்த நாவல் ஓப்பன் சோர்ஸ் என்று எனக்கு தெரியாது...

டெலீட் செய்யும் அளவிற்கு உங்கள் பின்னூட்டம் மோசமில்லையே :)

வவ்வால் said...

பிரபா,

//ஏதோ ஒரு புகழ்பெற்ற, வாயில் நுழையாத பெயரைக் கொண்ட ஆங்கில நாவலிலிருந்து கதை அதிகாரப்பூர்வமாக திருடப்பட்டுள்ளது.
//

அது என்ன அதிகாரப்பூர்வ திருடல், அதான் ஓபனா உரிமையே கொடுக்கிறாங்களே,

Bram stoker எழுதிய டிராகியூலா நாவல் ஒபன் சோர்ஸ்,அதோட காபிரைட் எல்லாம் முடிஞ்சு போச்சு, எனவே யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம்,இப்போ கல்கியின் பொன்னியின் செல்வனை கூட யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம்,அரசுடைமை ஆக்கப்பட்டு , ஓபன் சோர்ஸ் ஆகிடுச்சு,அதனால் தான் பொன்னியின் செல்வனை எல்லா பதிப்பகமும் புக்கு போட்டு புத்தக சந்தையில் விக்குது.
----------

நீர் என்னா பீப்பாக்களின் ரசிகனா, கண்ணுல பட்டதுக்கு எல்லாம் ஷக்தியை விரயம், செய்ய தயாரா இருக்கீரே அவ்வ் :-))
---------

ப்ரம் ஸ்டாக்கெர் என்ற பெயரை தவறாக எழுதிவிட்டதால் ,அதை நீக்கிவிட்டு இப்பின்னூட்டம்,மற்றபடி கருத்தெல்லாம் அதே தான் :-))
------
முன்னர் சொல்லாதது,

நாசர் முன்னர் எடுத்த தேவதை படம் கூட டிராகுலாவின் உல்டா தான் :-))

அதுல வினித் கூட நடிச்ச குட்டிப்பேரு தான் மறந்து போச்சு :-((

அதுல தீபங்கள் ஏற்றும் இது கார்த்திகை மாதம்னு ஒரு சாங்க் நல்லா இருக்கும்.(மேல் வாய்ஸ் எஸ்பி.சரண், பெண்குரல் யாரோ)

Anonymous said...


//ஷ்ரதாவின் சேலை விலகியும் விலகாத சமயங்களில் திரைக்கு பக்கவாட்டில் சென்று பார்க்கலாமா என்ற ஆர்வம் மேலிடுகிறது//

உணர்ச்சிவசப்பட்டு ஸ்க்ரீனை கிழிக்காம இருந்தா சரி.

Philosophy Prabhakaran said...

ம்ம்ம்... ஆங்கிலப்பெயர்களை தமிழில் டைப் செய்வது மிகவும் சிரமம் தான்... நானும் சில சமயங்களில் forvo சென்று சரியான உச்சரிப்பை தெரிந்துக்கொண்டு டைப் செய்வதுண்டு...

தேவதை படம் எனக்கு மிகவும் பிடிக்கும்... குட்டி பேரு கீர்த்தி ரெட்டி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஈ குட்டியை ஞான் முன்னே கண்டு..... பின்னேயும் காணும்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////! சிவகுமார் ! said...

//ஷ்ரதாவின் சேலை விலகியும் விலகாத சமயங்களில் திரைக்கு பக்கவாட்டில் சென்று பார்க்கலாமா என்ற ஆர்வம் மேலிடுகிறது//

உணர்ச்சிவசப்பட்டு ஸ்க்ரீனை கிழிக்காம இருந்தா சரி.//////

அடக்கம் அமரருள் உய்க்கும்.....

aavee said...

சிறந்த வழிசல் விமர்சனம்..

Unknown said...

///நம்முடைய சக்தியை வீணடித்துவிடுவாரோ என்று அச்சப்பட வேண்டியிருக்கிறது///

ஓவர் டு சிவராஜ் சித்த வைத்திய சாலை ,சேலம் .

Ashok said...

ஏதோ ஒரு புகழ்பெற்ற, வாயில் நுழையாத பெயரைக் கொண்ட ஆங்கில நாவலிலிருந்து கதை அதிகாரப்பூர்வமாக திருடப்பட்டுள்ளது.///

Bram Stoker's Dracula.