அன்புள்ள வலைப்பூவிற்கு,
இணையவெளியில் அதிகமாக கேலி செய்யப்படுபவர்களில் ஒருவர். சமகாலத்தில்
அவருடைய ரசிகர் என்று யாரேனும் சொன்னால், சொன்னவர் சர்வநிச்சயமாக எள்ளி
நகையாடப்படுவார். அவருடைய உருவம், வசன உச்சரிப்பு, சண்டைமுறை, ஆங்கிலம் பேசும்
முறை என்று அரசியல் வரைக்கும் எல்லா வகையிலும் அவரை ஜாலியாக கிண்டலடிப்பதில்
துவங்கி சீரியஸாக விமர்சிப்பவர்கள் உண்டு. ஆனாலும் போகிறபோக்கில் எல்லாம் அவரை அவ்வளவு
எளிதாக புறக்கணித்துவிட முடியாது. தமிழகத்தில் மிமிக்ரி கலைஞர் என்றால் கண்டிப்பாக
அவருக்கு நாக்கை மடித்து, “ஆங்...!” என்று சொல்லும் அவருடைய ஸ்டைல் தெரிந்திருக்க
வேண்டும். சிகப்புநிற தோல் இல்லை, புஜபல பராக்கிரமசாலியும் இல்லை, சினிமாவில் பெரிய
பின்புலம் இல்லை. ஆனாலும், ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு
அடுத்த நிலையில், குறிப்பாக பி, சி செண்டர்களின் பேராதரவை பெற்று பிசியாக
நடித்துக்கொண்டிருந்தவர். கேப்டன் விஜயகாந்த் !
யாரிந்த விஜயகாந்த் ?
விஜயகாந்த் அறுபத்தியொரு ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற ஒரு ஆகஸ்ட்
இருபத்தி ஐந்தில் நாராயணனாக பிறந்தார். ஆண்டாள் அழகர் தம்பதியர் ஈன்றெடுத்தனர். பிறந்த
மண் மதுரை. நாராயணன் என்பது அவருடைய தாத்தாவின் பெயர். அந்த பெயரைச் சொல்லி
அழைக்கும் சங்கடத்தை தவிர்ப்பதற்காக விஜயராஜ் என்ற கூப்பிடுபெயரையும் சூட்டி
வைத்தனர். சினிமா அவரை காந்தம் போல ஈர்த்து ராஜ் என்பதற்கு பதிலாக ‘காந்த்’ என்ற
பின்னொட்டை சேர்த்துக்கொண்டது. பின்னாளில் இயக்குநர் விஜயன், அமிர்தராஜ் என்ற
புதுப்பெயரை சூட்டினாலும் கூட விஜயகாந்த் என்பதே நிலைத்துவிட்டது.
விஜயகாந்தின் குடும்பம் பெரியது. உடன்பிறப்புகளில் அக்கா, தங்கை,
அண்ணன், தம்பி என்று எல்லோரையும் வாய்க்கப்பெற்றவர் விஜயகாந்த். ஆண்டாள் – அழகர்
தம்பதியருக்கு விஜயகாந்துடன் சேர்த்து மொத்தம் எட்டு குழந்தைகள். விஜயகாந்துக்கு ஒரு
அண்ணன், ஒரு அக்கா. மூன்றாவதாக விஜயகாந்த். ஒரு தங்கை, நான்கு தம்பிகள். கேட்கவே
மலைப்பாக இருக்கிறது. விஜயகாந்த் அவருடைய வீட்டில் ஒரு ஆறிலிருந்து அறுபது வரை
ரஜினிகாந்த். தங்கை, தம்பிகளுக்கெல்லாம் திருமணம் செய்து வைத்துவிட்டு
திரைப்படத்துறையிலும் முத்திரையை பதித்துவிட்டு தன்னுடைய முப்பத்தி ஏழாவது வயதில்
தான் அண்ணியாரை கை பிடித்தார்.
விஜயகாந்தின் தந்தையார் மதுரையில் ரைஸ்மில் முதலாளி. விஜயகாந்தும் பத்தாம் வகுப்போடு
பள்ளிக்கு நிரந்தர விடுப்பு எடுத்துக்கொண்டு ரைஸ்மில்லை கவனித்து வந்தார். அப்போது விஜயகாந்தின் நண்பர் எம்.ஏ.காஜா மதுரையில் சினிமா கம்பெனி வைத்திருந்தார். 1979ம்
ஆண்டு சினிமா பிரவேசம் செய்த எம்.ஏ.காஜா நட்பின் அடிப்படையில் தன்னுடைய இனிக்கும்
இளமை திரைப்படத்தில் விஜயகாந்துக்கு ஒரு முக்கிய வேடம் கொடுத்தார். விஜயகாந்த் என்ற
பெயரும் அவர் சூட்டியது தான். அப்படித்தான் விஜயகாந்தின் சினிமா வாழ்க்கை
துவங்கியது.
சராசரியாக போய்க்கொண்டிருந்த அவருடைய சி.வா.யில் திருப்புமுனை
ஏற்படுத்தியது யாரென்று நினைக்கிறீர்கள் ? தி ஒன் அண்ட் ஒன்லி – எஸ்.ஏ.சி !
பஸ்.ஏ.சியின் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த சட்டம் ஒரு இருட்டறை மாபெரும் வெற்றி
பெற்றது. எஸ்.ஏ.சி.க்கு அதுதான் முதல் படம். கிடைத்த நடிகரை கப்பென
பிடித்துக்கொண்டு தொடர்ந்து விஜயகாந்தை வைத்தே படங்கள் எடுக்கலானார். எஸ்.ஏ.சி,
விஜயகாந்தை வைத்து இதுவரையில் பதினேழு படங்களை இயக்கியிருக்கிறார் என்கிறது
புள்ளிவிவரம். எஸ்.ஏ.சி.யைப் போலவே விஜயகாந்துடன் இணைந்து வளர்ந்த இன்னொரு இயக்குநர்
ராம.நாராயணன். அவரும் விஜயகாந்தை வைத்து அதே எண்ணிக்கையில் படங்களை இயக்கியிருக்கிறார்.
புகழின் படிகளில் முன்னேறிய விஜயகாந்த், ஒரு கட்டத்தில்
ரஜினிகாந்துக்கு மாற்றாக இருந்திருக்கிறார். ரஜினியை வைத்து படம் பண்ண
முடியாதவர்கள் எல்லாம் நேரே வண்டியை விஜயகாந்த் வீட்டிற்கு
செலுத்தியிருக்கிறார்கள். சிறு முதலீட்டாளர்களின் பொன் முட்டையிடும் வாத்தாக
வாழ்ந்திருக்கிறார் விஜயகாந்த். 1984 மற்றும் 1985 ஆண்டுகளில் விஜயகாந்த் தன்னுடைய
புகழின் உச்சத்தில் இருந்திருக்கிறார். இரண்டே ஆண்டுகளில் முப்பத்தி ஐந்து
படங்கள். யோசித்துப் பார்த்தாலே தலை கிறுகிறுக்கிறது. சராசரியாக இருபது
நாட்களுக்கு ஒரு படம். அவற்றில் நூறாவது நாள், வைதேகி காத்திருந்தாள் போன்ற
ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களும் அடங்கும். தமிழ் சினிமா தன்னை முதன்முதலில்
விஜயகாந்த் மூலமாகத்தான் முப்பரிமாணத்தில் வெளிக்காட்டிக்கொண்டது. திரைப்படம்: அன்னை
பூமி. 1984-ம் வருடம் பதினெட்டு படங்களில் நடித்து உச்சத்தில் இருந்தார். அதில் சில… சுந்தர்ராஜன் இயக்கத்தில் வைதேகி காத்திருந்தாள், மணிவண்ணன் இயக்கத்தில் நூறாவது நாள் மற்றும் ஆபாவாணன் எழுதி தயாரித்த ஊமை விழிகள். 1984ல் மதுரை சூரன் முதல் ஜனவரி 1 படம் வரை 18 படங்களும் 1985ம் ஆண்டில் மட்டும் அலை ஓசை முதல் நானே ராஜா நானே மந்திரி வரை 17 படங்களும் ஹீரோவாக நடித்திருக்கிறார். வேறு எந்த ஹீரோவும் செய்யாத சாதனை இது. விஜயகாந்த் வில்லனாக நடித்த ஒரே படம் இனிக்கும் இளமை.
அந்த சமயத்தில் நடந்த ஒரு பட விழாவில் தான் கலைஞர் முன்னிலையில்
புரட்சிக்கலைஞர் என்ற பட்டம் விஜயகாந்துக்கு சூட்டப்பட்டது. சூட்டியவர் கலைப்புலி
தாணு.
நிறைய துணை நடிகர்களை தன்னுடன் சேர்த்து வளர்த்துவிட்டிருக்கிறார்
விஜயகாந்த். ஆனந்த் ராஜ், அருண் பாண்டியன் (என்கிற துரோகி), மன்சூர் அலிகான்
போன்றவர்களை நிறைய விஜயகாந்த் படங்களில் பார்க்கலாம். போலவே விஜய்யுடன்
செந்தூரப்பாண்டி, சரத்குமாருடன் கேப்டன் பிரபாகரன் போன்ற படங்களில் நடித்து
அவர்களை ஆரம்பகாலத்தில் உயர்த்தி விட்டிருக்கிறார். இதனை விஜய்யே பல மேடைகளில்
ஒப்புக்கொண்டுள்ளார். அந்தந்த காலக்கட்டங்களில் திரைப்பட கல்லூரி மாணவர்களின் திறமைகளை தட்டிக் கொடுத்து தானும் வெற்றிக் கண்டவர் நம்ம கேப்டன். அப்படி வெளிவந்த படங்களில் முக்கியமான படங்கள் செந்தூரப்பூவே மற்றும் ஊமை விழிகள்.
விஜயகாந்தின் நண்பர் அ.செ.இப்றாஹீம் ராவுத்தர், பால்ய பருவத்திலிருந்தே நண்பர் (இப்போது இல்லை). வேற்றுமொழிப்படங்களே நடிக்கக்கூடாது என்ற கொள்கையோடு இருந்த விஜயகாந்த் அவருக்காக மே டே என்னும் ஆங்கிலப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு பூஜையும் போடப்பட்டது. அசம்பாவிதமாக அதுவும் வெளிவரவில்லையாம்.
விஜயகாந்தின் நண்பர் அ.செ.இப்றாஹீம் ராவுத்தர், பால்ய பருவத்திலிருந்தே நண்பர் (இப்போது இல்லை). வேற்றுமொழிப்படங்களே நடிக்கக்கூடாது என்ற கொள்கையோடு இருந்த விஜயகாந்த் அவருக்காக மே டே என்னும் ஆங்கிலப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு பூஜையும் போடப்பட்டது. அசம்பாவிதமாக அதுவும் வெளிவரவில்லையாம்.
புகழின் உச்சியில் இருந்தபோதும் மற்ற மொழிப் படங்களில் நடிக்க சம்மதிக்காத விஜயகாந்த் ஒரு ஹிந்தி படத்தில் நடித்துள்ளார், அது 1975ல் வெளிவந்த Zakhmee. படத்தைப் பற்றிய செய்திகள் இணையத்தில் எங்கும் கிடைக்கப்பெறவில்லை. விஜயகாந்த் நடித்த படங்களில் முக்கியமான படம் சின்ன கவுண்டர். 1992ல் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் வெளிவந்து சக்கை போடு போட்டு ஓடியது. சின்ன கவுண்டரை பார்த்த ரஜினி, உதயகுமாரை அணுகி அதுபோன்றதொரு படம் தனக்கு வேண்டும் என்று வேண்டி விரும்பிக்கேட்டு வெளிவந்தது தான் எஜமான்.
நடனம் ஆடுவதிலும் தலைவர் கில்லி. இதை ஏனோ பல இயக்குனர்கள் சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை. பரதன் படத்தில் வரும் புன்னகையில் மின்சாரம், மாநகர காவல் படத்தில் வரும் வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை இவரது நடனத்திறமையை வெளிக்கொண்டு வந்த பாடல்கள்.
விஜயகாந்த்துடைய கால்கள் உதைத்து பழக்கப்பட்டிருக்கலாம். ஆனால்
அவருடைய கைகள் கொடுத்து பழக்கப்பட்டவை. பொன்மனச் செம்மலை பார்த்து வளர்ந்த
அவருக்கும் அந்த குணம் இருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் அவருடைய அலுவலகத்தில்
குறைந்தது நூறு பேராவது சாப்பிடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். (விஜயகாந்த்
ஆபீசுல எப்போ கறிசோறு போடுறாங்க என்பதை டைரியில் குறித்து வைத்திருக்கும் அன்னவெறி கண்ணையனை நினைவுகூரவும்).
தமிழ் சினிமாவில் துரிதமாக நூறாவது பட இலக்கை எட்டியவர்களில் ஒருவர்
விஜயகாந்த். அவருடைய நூறாவது படம் கேப்டன் பிரபாகரன். பல எதிர்ப்புகளுக்கு
மத்தியில்தான் படத்திற்கு அப்பெயரை சூட்டினார். படம் இமாலய வெற்றி. அன்றிலிருந்து
புரட்சிக்கலைஞருடன் கேப்டன் என்கிற புனைப்பெயரும் இணைந்துக்கொண்டது. கேப்டன்
பிரபாகரன் என்பது சமகாலத்தில் சிலர் செய்வது போல வணிக நோக்கத்திற்காக சூட்டிய
பெயரல்ல. FYI, விஜயகாந்த்துடைய மூத்த மகனின் பெயர் விஜய பிரபாகரன் !
விஜயகாந்த்தின் அரசியல் நிலைப்பாட்டின் மீது ஆயிரம் விமர்சனங்கள்
இருக்கலாம். ஆனால் அவர் மற்றவர்களைப் போல வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்என்று சொல்லி யாரையும் ஏமாற்றவில்லை. இதுவரை, சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த நடிகர்களில், இவர் மட்டும் தான் எடுத்த எடுப்பிலேயே கட்சி ஆரம்பித்தவர். மற்றவர்கள் எல்லாம், ஏதேனும் ஒரு பெரிய கட்சியில் இருந்து பின் பிரிந்து கட்சி ஆரம்பித்தவர்கள். தன்னுடைய படம் வெளிவருவதில் சிக்கல்
ஏற்பட்டால் உடனே பம்மிக்கொண்டு ஓடி ஒளியும் கோழையும் அல்ல. ச்சும்மா Time to Lead
என்று கேப்ஷன் போட்டாலே துரத்தியடிக்கும் கேவலமான அரசியல் சூழல் கொண்ட
தமிழகத்தில், கட்சி துவங்கி, சில தேர்தல்களை சந்தித்து, எதிர்க்கட்சி தலைவராக
அமர்ந்திருக்கும் அவருடைய துணிச்சல், தன்னம்பிக்கை சர்வநிச்சயமாக
பாராட்டுக்குரியது தான் ! ஆங் !
நன்றி: மனோஜ், யுவ கிருஷ்ணா, கார்த்திகேயன், அன்புராஜா
ஓவியம்: விஜய்
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
29 comments:
சக குடிமகன் என்கிற வகையில்(மட்டுமே) ஜாலியாக கிண்டலடிப்பவர்கள் அதிகம்.
Follow up :)
அரசியல் பிரவேசத்துக்கான படங்களின் வரிசையில் A.R.முருகதாஸ் மீது நம்பிக்கை வைத்து ரமணாவில் நடித்தது ஆச்சர்யமளிதவர்.
Please anyone of you attach it to tamilmanam, if its not...
இந்த போஸ்ட்டை நான் போட்ட மாதிரி எல்லா திரட்டியிலும் இணைத்து விட்டு பின்னூட்டம் வந்திருக்கான்னு பாத்துக்கிட்டு பாலோ பண்ணிக்கிட்டு இருக்கேன். இப்படி ஒரு கேள்வி உனக்கு தேவையா
சினிமாவில் நடிக்க தெரிந்த அளவுக்கு அரசியலில் நடிக்க தெரியாததால் கட்சி கரைந்து வருகிறது.
அருண்பாண்டியனுக்கு தேவன் படம் மூலம் பொருளாதார முன்நேற்றமுன், mla ஆக்கி அரசியல் முன்நேற்றம் தந்தார். ஆனால் அந்த பக்கி துரோகம் செய்துவிட்டது.
நடிக்க தெரியாத காரணத்தால் சட்டசபையிலேயே பல்லை கடித்து கோபபட்டு சஸ்பென்ட் செய்யபட்டுயுள்ளார். கருப்பு வைரத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். . .
Sorry aroor moona... Carry on...
super...ithai padicha v.kanth mela oru mariyathai varuthu... pirantha naal valthukkal captain..
வி.கா,பஸ்.ஏ.சின்னு போட்டது எரிச்சலடைய வைக்கின்றது...
ராமநாராயணன் சில படங்கள் இவரை வைத்து எடுத்த சில படங்கள் நன்றாக ஓடியது.
தமிழை நன்றாக ஆங்கிலக் கலப்பில்லாமல் அழகாக உச்சரிப்பு சுத்தமாக பேசுபவர்.
தைரியமான மனிதர் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் தைரியமாக எதிர்கொள்ளுவார்.
ஏழை சாதியில் பாட்டாளி மக்கள் கட்சியை சாடி பல வசனங்கள் வைத்தார்.
சின்ன கௌண்டர் இல்ல சின்ன கவுண்டர்...:)
என்னவோ போங்க, ennaku vivaram thrinji enga amma sonna kathai ithu, Veedu Manaivi Makkal padam pakka vidama Eeeti padam pakanumnu adam pidichennu enga amma solli irruku, appa irrunthe captain mela oru ithu, athu illama, enga ooru milluku velaiku pora payanga ellam , yaruku puranthanaal kondaduranglo illaiyo, captain ku naalu theru kulay katti appa release ana padathula irrunthu record ellam pottu engala ellam usupethe usupetheye avanga ellam kanama poitanga, ennaku thrinji captain captain nu life a tholaichi suthuna yarum katchiyila ippa yarum illa, ithuku enga oore satchi.. ellathiayum pannavaru eppadi pesurathunu kathukama mike pidichitaru atha problem..
// இவர் மட்டும் தான் எடுத்த எடுப்பிலேயே கட்சி ஆரம்பித்தவர். மற்றவர்கள் எல்லாம், ஏதேனும் ஒரு பெரிய கட்சியில் இருந்து பின் பிரிந்து கட்சி ஆரம்பித்தவர்கள்.//
அதனால் தான் மனைவிக்கும் மச்சானுக்கும் மாமனுக்கும் கட்சியில் அவ்வளவு முக்கியத்துவம். இவருக்கு காலகாலமாக ரசிகர்மன்றம் வச்சிகிட்டு இருந்தவங்க எல்லாம் நாக்கை வழிக்கிறார்கள்.
//தி ஒன் அண்ட் ஒன்லி – பஸ்.ஏ.சி !//
இவர் எடுத்த எல்லா படத்துலயும் யாராவது வி.கா உடைய சொந்தங்களை கொன்னுடுவாங்க இல்லை கற்பழிச்சிடுவாங்க. அதற்கு விகா பழிவாங்குவார்.
நீங்கள் பதிவில் குறிப்பிட்ட நானே ராஜா நானே மந்திரி, கேப்டன் பிரபாகரன், வைதேகி காத்திருந்தாள், ஊமைவிழிகள், செந்தூரப்பூவே, மாநகரக்காவல், சின்னக் கவுண்டர் (இவை எல்லாம் சில நல்ல டைரக்டர் படங்கள்) தவிர்த்து தற்போது ஒரு படம் கூட முழுமையாக பார்க்க முடிவதில்லை. அசுர மொக்கை.
//ஆனந்த் ராஜ், அருண் பாண்டியன் (என்கிற துரோகி), மன்சூர் அலிகான் போன்றவர்களை நிறைய வி.கா படங்களில் பார்க்கலாம். போலவே விஜய்யுடன் செந்தூரப்பாண்டி, சரத்குமாருடன் கேப்டன் பிரபாகரன் போன்ற படங்களில் நடித்து அவர்களை ஆரம்பகாலத்தில் உயர்த்தி விட்டிருக்கிறார். //
உண்மை. நடிகர்களும் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.
80,90களில் வி.கா நடித்து சில நல்ல படங்கள் வந்துள்ளன. ஆனால் ஏனோ அவர் அதைத் தொடரவில்லை.
சினிமாவில் நடிக்க தெரிந்த அளவுக்கு அரசியலில் நடிக்க தெரியாததால் கட்சி கரைந்து வருகிறது.என்பதுதான் நிஜம்.
என்ன தம்பி... கேப்டனுக்கு நன்றிக் கடனா... நடத்து நடத்து...
பதிவு அருமை...
ஆபாவாணன் இயக்கிய உரிமைக்குரல்.////உழவன் மகனா..
சரியாச் சொல்லியிருக்கீங்க... இன்னைக்கு விஜயகாந்த் தும்மினாலும் கேலி செய்யத்தான் நினைக்கிறோம்...
You have left out one early filmvcalled
" thooratthu idi Muzhakkam"
Now that you are chronicling his life, he is not such a bad guy as most of us make him to be.
வீட்டுக்கு வெளியே தமிழ், வீட்டுக்குள் தெலுங்கு பேசுவதையும் சொல்லி இருக்கலாம்.
என்னதான் இருந்தாலும் ரஜினி கமலுக்கு ஈடு கொடுத்து மார்கெட் சரியாமல் இருந்தவர்தான், சம்மதிக்கணும்.
அண்ணே மேதாவி பிளாசபியோட சேர்ந்து பெரிய மேதைகள் பலர் (மனோஜ், யுவ கிருஷ்ணா, கார்த்திகேயன், அன்புராஜா) கேப்பிட்டனுக்கு சிங்கி அடிக்கிறானுக போல!!
***ஆனால் அவர் மற்றவர்களைப் போல வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்என்று சொல்லி யாரையும் ஏமாற்றவில்லை***
ஏமாத்திப்புட்டான் ஏமாத்திப்புட்டான்னு ஒப்பாரி வைக்கிறீங்களே..ஆமா என்னத்தை ஏமாந்தீங்க நீங்க? கட்சி ஆரம்பிச்சா எனக்கு எம் எல் எ சீட் கொடுக்கணும்னு உங்க பொண்டாட்டி தாலிய வித்து பணத்தை ரசினிட்ட கொடுத்து ஏமாந்து நிக்குறீங்களா??
அப்போ பாவம்தான் நீங்க! :(
வீடு மாம்ஸ்... நீங்கள் சொன்னபடி பதிவில் மாற்றங்கள் செய்திருக்கிறேன்...
Mr.Vijayakanth is an excellent person.
He doesn't act in politics. Wish you a happy birthday and long life Vijayakanth.
Captain has done a cameo along with Kamal Hasan in a movie titled “ManaKanaku“. Captain would hold the record for being the last solo hero to complete 150 films (for a very long time). Prabhu & Karthik are now character artists so they wouldn’t qualify. Among the current crop, if I do the math right, Vijay and Ajith would take another 36 years (by then they will be 70 years old) to get to 150. And actors who started in 2000s would have very little chance of getting to 150.
பிரபா...பதிவு அருமை...
ஆபாவாணன் இயக்கிய உரிமைக்குரல்///
Ithu Karthik, Prabhu acting...
Vijaikanth has been the only tamil hero to act as father of two children in early days. Also he has never minded his image in the costume n characters given to him. In real life too.
I love Vijayakanth so much. He is a good Man and actor.
Post a Comment