அன்புள்ள வலைப்பூவிற்கு,
கலவை இடுகை என்பது எழுதுவது நின்றுபோய் விடக்கூடாது என்பதற்காக
நானாகவே ஏற்படுத்திக்கொண்ட கமிட்மென்ட். எதுவுமே கிடைக்கவில்லை என்றாலும் கூட
டைரி எழுதுவது போல எதையாவது பதிந்து வைக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும். அதையும்
மீறி கடந்த வாரம் எழுத முடியாத அளவிற்கு அலுவலகத்தில் ஆணி. ரிவெட் என்றுகூட சொல்லலாம்.
வாரத்துவக்கத்தில் இரண்டு நாட்கள் காலையிலிருந்து இரவு வரை பன்னிரண்டு மணிநேரம்
பணிபுரிய வேண்டிய சூழல். பன்னிரண்டு மணிநேரம் என்பதில் சிக்கல் இல்லை. போக வர பயண
நேரத்தையும் சேர்த்தால் பதினாறு மணிநேரம். ஆனால் இந்த இரண்டு நாட்களில், பீக்
அவர்ஸில் அலுவலகம் நோக்கி பயணிப்பவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை உணர
முடிந்தது. மூட்டு வலி, முதுகு வலி போன்ற சங்கடம் உள்ளவர்கள் அரசு பேருந்தில்
பயணம் செய்தால் பூரண குணமாகிவிடும். அவை இல்லாதவர்கள் பயணம் செய்தால் எல்லா
வலியும் வந்து சேர்ந்துவிடும். பேச்சிலர் ரூம்களில் இருக்கும் டூத்பேஸ்டை போல
பிதுக்கிவிடுகிறார்கள். கிண்டி சுரங்கப்பாதை அருகில் நடந்து செல்பவர்களிடையே கூட
போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதிலும், சில கூறு கெட்ட குக்கர்கள்
முண்டியடிக்கும் நோக்கில் எதிரில் வருபவர்களுக்கான பாதையில் புகுந்து அட்ராசிட்டி
செய்கிறார்கள். நடந்து செல்பவர்களை ட்ராபிக் போலீஸ் மடக்கி லைசென்ஸ் இருக்கா ?
என்று கேள்வி கேட்கப்போகிற நாள் வந்தாலும் வரலாம்.
ஆரூரார் வீட்டிலிருந்து எடுத்து வந்த புத்தகங்களில் முதலாவதாக
சுஜாதாவின் வண்ணத்துப்பூச்சி வேட்டையை துவங்கினேன். ரேகா மணவயதை அடைந்த
ஆர்த்தோடாக்ஸ் குடும்பத்து பெண். மணமகன் தேடுதல் நடைபெறுகிறது. கை நிறைய சம்பளம்
வாங்கும், கெட்ட பழக்கங்களில்லாத என்று சொல்லப்படும் அர்ஜுனுக்கு மணமுடித்து
வைக்கப்படுகிறாள். அர்ஜுன் மேலைநாட்டு நாகரிகத்துடன் வாழ்பவன். அவனுக்கு
சீட்டாட்ட, சிகரெட், மது, மாது பழக்கங்கள் இருப்பது ஒவ்வொன்றாக ரேகாவுக்கு தெரிய
வருகிறது. அர்ஜுனின் நடத்தைகளால் நிம்மதியின்றி தவிக்கிறாள் ரேகா. இறுதியில்
விவாகரத்து என்னும் புரட்சிகரமான முடிவை எடுக்கிறாள். இருபது வருடங்களுக்கு முன்பு
எழுதிய கதை. அப்போதைய காலகட்டத்திற்கு விவாகரத்து என்பதே புரட்சியானதாக
இருந்திருக்கலாம். சமகாலத்தோடு ஒப்பிட்டால் ரேகாவின் விவாகரத்து முடிவை இயற்கையான
எதிரொலிப்பு என்று தான் எடுத்துக்கொள்ள முடியும். வேண்டுமானால் ரஞ்சனி செய்ததை
புரட்சியென எடுத்துக்கொள்ளலாம். அடுத்து படிக்க வேண்டிய லிஸ்டில் இருப்பவை :-
ஜே.கே, ஒரு நடுப்பகல் மரணம், கொலை அரங்கம், நிர்வாண நகரம். பரிசீலனைகள்
வரவேற்கப்படுகின்றன.
கலிபோர்னியாவில் புதியதாக ஒரு ரெஸ்டாரென்ட் துவங்கப்பட்டுள்ளது. சரி
அதற்கென்ன என்கிறீர்களா ? உணவகம் கழிவறையுடன் தொடர்புபடுத்தி அமைக்கப்பட்டுள்ளது.
அதாவது வெஸ்டர்ன் டாய்லெட் வடிவமைப்பில் இருக்கைகள், Golden Poop Rice, Smells
like Poop, Bloody Number Two போன்ற உணவுவகைகள். பதறாதீர்கள் உணவுவகைகளின் பெயர்
மட்டும்தான் இப்படி. உதாரணத்திற்கு Black Poop என்கிற பெயர் கொண்டது உண்மையில்
Chocolate Sundae என்ற சுவையான ஐஸ்க்ரீம் ! உணவுகளும் ஒரு மினியேச்சர் டாய்லெட்
பவுல் வடிவில் உள்ள ப்ளேட்டில் படைக்கப்படுகின்றன. தைவான், ஜப்பான் உட்பட
பன்னிரண்டு நாடுகளில் ஏற்கனவே பிரபலமான கழிவறை கான்செப்ட் தான் இப்போது அமெரிக்காவில்
என்ட்ரி அடித்திருக்கிறது. நம்மூரில் இப்படியெல்லாம் வராதா என்று
அலுத்துக்கொள்பவரா நீங்கள் ? கவலை வேண்டாம். இங்கே சுகாதாரமற்ற முறையில்
செயல்படும் ஏராளமான உணவகங்கள் உள்ளன. அங்கு சாப்பிட்டால் கழிவறையில் அமர்ந்து
சாப்பிடுகிற உணர்வு தாராளமாக கிடைக்கும். புகைப்படங்கள்.
மூடர் கூடம் பார்க்கக் கிடைத்தது. அபவ் ஆவரேஜ் என்று சொல்லலாம். கதாபத்திரங்களுக்கு சூட்டப்பட்ட பெயர்கள், ஆங்காங்கே சிறுசிறு காட்சிகள்
என ரசிக்க வைக்கின்றன. ஒட்டுமொத்த படத்தில் ஒரு பத்து வசனங்கள் க்ளாப்ஸ் அடிக்க
வைக்கிற ரகம். அவை தவிர நிறைய சலிப்பூட்டுகின்றன. எனினும் படத்தில் சிந்திக்க வைக்கிற விஷயங்கள் சில இருக்கின்றன, நேரமில்லை. ஓவியாவின் தங்கையாக வரும் குட்டியை பிடித்துவிட்டது. இன்னும் நான்கே வருடங்களில் அட்டகாசமான ஹீரோயினாக வருவார் பாருங்கள். டவுன்லோட் செய்த வெர்ஷனில்
ஃபஸானா போர்ஷன் வரவில்லை.
வார இறுதியில் சுட்ட கதை படம் பார்த்தேன். நேரம் கிடைப்பின் தனி இடுகை
எழுதுகிறேன். ஆரம்பம் படத்திற்கு FDFS டிக்கெட் எடுத்தாயிற்று !
Hunt for Hint விளையாடிய அனுபவத்தை சொல்லியாக வேண்டும். முதல் ஆண்டு
அந்த பக்கமே போகவில்லை. இரண்டாம் ஆண்டு விவரம் தெரியாமல் மெதுவா விளையாடிக்கலாம்
என்று ரெஜிஸ்டர் மட்டும் செய்துவிட்டு சோம்பேறித்தனமாக இருந்துவிட்டேன். இந்த
ஆண்டு, தேதிக்காக காத்திருந்து விளையாடத் துவங்கினேன். சில லெவல்கள் கடந்தபின்பு தான்
புலி வாலை பிடித்துவிட்டதை உணர்ந்தேன். இரண்டு நாட்கள் கணினியை விட்டு எங்கேயும்
நகரவில்லை / நகர முடியவில்லை. அப்படி இப்படியென போராடி இருபது லெவல்களை
தாண்டியிருந்தபோது இரண்டு விஷயங்கள் நிகழ்ந்திருந்தன. ஒன்று, திங்கட்கிழமை
விடிந்து அலுவலகத்திற்கு அழைத்தது. இரண்டு, ஒரு கட்டத்திற்கு மேல் மூளை சரிவர வேலை
செய்யாமல் போனது. குடும்ப நலன் கருதி அத்துடன் விளையாட்டை நிறுத்திக்கொண்டு இனி
வரும் வருடங்களில் ஹண்ட் ஃபார் ஹிண்ட் விளையாடுவதாக இருந்தால் அலுவலகத்திற்கு
நான்கு நாட்கள் விடுமுறை சொல்லிவிட்டு, தயிரில் சர்க்கரை கலந்து சாப்பிட்டபடி
ஹாயாக விளையாட வேண்டும். HFHஐ தயார் செய்த குழுவினருக்கும், வெற்றி பெற்ற மூளைக்காரர்களுக்கும் வாழ்த்துகள் :)
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
15 comments:
பல்சுவைக்கதம்பம் பகிர்வுக்கு நன்றி மூடர்கூட்டம் பார்க்கவில்லை இனித்தான்!
// ஓவியாவின் தங்கையாக வரும் குட்டியை பிடித்துவிட்டது.
அந்த புள்ள கிட்டதட்டஉன்னோட சாயல் லே இருக்குது டா... தம்பி.உனக்கு பொண்ணு வேசம் போட்டா அப்பிடித் தான் இருப்ப ன்னு நெனைக்கிறேன்...
ரெஸ்டாரென்ட் பற்றிய தகவல் ஓகே...ஆனா நெனைச்சி பார்த்தா உள்ள போன சாப்பாடு அப்படியே போன வழியே ரிவிட் ஆன பீலிங்....
பதிவு ஓகே ரகம்....வாழ்த்துக்கள்....
நிர்வாண நகரம் படியுங்கள் பிரபா
பின்னும்
நிர்வாண நகரம் பெஸ்ட் சாய்ஸ்
பிரபா,
ஒயின் ஷாப்புனு பேரு வச்சிக்கிட்டு நாயர் டீக்கடைப்போல போகுது, பரவாயில்லை, எதாவாது எழுதியாகனும்னு எழுதுறேன்னு ஜாமின் போட்டதால் சொல்வதற்கொன்றுமில்லை.
//சில கூறு கெட்ட குக்கர்கள் முண்டியடிக்கும் நோக்கில் எதிரில் வருபவர்களுக்கான பாதையில் புகுந்து அட்ராசிட்டி செய்கிறார்கள். நடந்து செல்பவர்களை ட்ராபிக் போலீஸ் மடக்கி லைசென்ஸ் இருக்கா ? //
உண்மையில அவனுங்க தான் கூறுள்ள குக்கர்கள்... நல்லாக்கவனிச்சு பார்த்தால் "அவங்க உழைப்பு" தெரியும்"
இப்படிக்கூட்டத்தில புகுந்து புறப்படும் போது டைம்பார்க்கிறது, செல்போன் பேசுறதுனு சில பல வேலைகள் செய்வார்கள்,அப்படியே எதிர்க்க வர பிகர்களையும் உரசிக்கொள்வார்கள் ,ஹி..ஹி விவேக் சொல்லுற பங்களா போர்ட்டிகோவால இடிச்சுப்போச்சு கதை தான் :-))
ரெங்கநாதன் தெருவில போய் டைம் பார்த்ததேயில்லையா அவ்வ்! என்னய்யா சென்னை வாசி நீர்?
# சுஜாதாக்கதையெல்லாம் இப்பவும் படிக்கனும்னு ஆசைப்படுறதா பார்த்தா ஆச்சர்யமாத்தான் இருக்கு எல்லாக்கதையிலும் இப்ப ஏற்பட்ட அனுபவமே ஏற்படும் ,ஏனெனில் காலம் மாறிடுச்சு அவ்வ்!
இஸ்கோல் படிக்கச்சொல்ல 'நிர்வாண நகரம்" கதைய படிச்சதுக்காக "செக்ஸ்' புக் படிக்கிறதா சொல்லி திட்டுவாங்கினது தான் நியாபகம் வருது அவ்வ்.
ஜே.கே வை முதலில் படியுங்கள் பிரபா.. பேயோன் எல்லாம் தற்போது உருவானவர், வாத்தியார் அப்போதே அந்த நடையை சுவாரசியமாக எழுதி இருப்பார்.. நான் சமீப காலத்தில் பல முறை படித்து லயித்த புத்தகம்
பொன் மகேஸ்,
இதெல்லாம் டூ மச்... அந்த பொண்ணு என்ன அழகா இருக்கு ?
வவ்வால்,
சுஜாதாவின் சொர்க்கத்தீவு, இயந்திரா, ஜீனோவெல்லாம் எனக்கு அவுட்டேட்டடா தெரியல. தவிர, அவுட்டேட் ஆகியிருந்தாலும் இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே என்னமா எழுதியிருக்கிறார் என்ற வியப்பு ஏற்படும்...
நான் தேகம் படிச்சப்ப அதன் தலைப்பையும், அட்டைப்படத்தையும் பார்த்து வீட்டில் சந்தேகப்பட்டார்கள்...
ஜே.கே அருமையாக உள்ளது பிரபா
சுவையான பகிர்வு! நன்றி!
மூடர்கூடம் எனக்கு ஏனோ பிடிக்கவில்லை...
அனைத்தும் அருமை...
வாழ்த்துக்கள்...
//இதெல்லாம் டூ மச்... அந்த பொண்ணு என்ன அழகா இருக்கு ?
உன்ன விட யாரு ல இங்க அழகா இருக்கா????
படத்துல அந்த புள்ளைய பாக்கும் போது எனக்கு உன் ஞாபகம் தான் வந்துச்சி லே.....
Hunt for Hint -ல் முதல் இடத்தில் உங்கள் பெயர் இருந்ததைப் பார்த்தேன் ,பின்பு விலகிவிட்டீர்கள் என நினைக்கிறேன்...
அந்த ரெஸ்டாரன்ட் படத்தைப் பார்த்தேன்.. ஷப்பா..அதில் எப்படி சாப்பிடத்தோணும்...? :-)))
மணிமாறன்,
நான் Hunt for Hintல் இருந்து விலகவில்லை... அதில் 25 லெவல்களை தாண்டிவிட்டால், அதாவது 26 - 30 லெவல்களில் இருப்பவர்கள் லீடர் போர்டில் தெரிய மாட்டார்கள்...
லீடர் போர்டில் பெயர் தெரிவது சங்கடமாக இருந்ததால் கஷ்டப்பட்டு 26வது லெவல் வரை வந்துவிட்டு நிறுத்தினேன்...
ஜே கே செமையா இருக்கும்.. அப்புறம் கொலை அரங்கம் ..))
Post a Comment