5 November 2013

ஆல் இன் ஆல் அழகுராஜா


அன்புள்ள வலைப்பூவிற்கு,

நான் அழகுராஜாவை பார்த்ததற்கு ஒரேயொரு காரணம் இருக்குமானால் அது அழகுராணி காஜல் மட்டுமே...! இயக்குநர் ராஜேஷின் முந்தய படங்கள் மூன்றையும் நான் சிரித்து ரசித்திருக்கிறேன். இருப்பினும் “ராஜேஷ் படமென்றால் கண்டிப்பாக பார்த்தாக வேண்டும்...” என்பது போன்ற அபிப்ராயமெல்லாம் கிடையாது. அவருடைய படங்களில் ஒருவித பொறுப்பின்மை ஆங்காங்கே விரவிக்கிடப்பதை காண முடியும். எனக்கும் உங்க பொண்ணுக்கும் மேட்டர் ஆயிடுச்சு’ன்னு சொன்னாக்கூட பேக்கு மாதிரி ஏதாவது பேசிக்கொண்டிருப்பார் ஒரு அப்பா. நான் வேலைக்கே போகாம வெட்டியா இருந்தா நீ என்னை லவ் பண்ணுவியா’ன்னு ஹீரோயினிடம் கேட்கும் அரைலூஸு ஹீரோ போன்ற irritating காட்சிகளை அவருடைய படங்களில் பார்க்கலாம். அழகுராஜாவின் ட்ரைலர் பார்த்தபோதே அது மொக்கையென்று தெரியும். படம் வெளியான சில மணிநேரங்களில் சூரமொக்கை என்று தெரிந்துவிட்டது. காஜலுக்காக தாங்கிக்கொள்ள மாட்டேனா என்ன ?

எல்லா ராஜேஷ் படங்களைப் போலவே இவருதாங்க நம்ம ஹீரோ என்ற வாய்ஸ் ஓவரில் படம் ஆரம்பிக்கிறது. கார்த்தி ஒரு லோக்கல் சேனல் வைத்து நடத்திக்கொண்டிருக்கிறார். அவருடைய பணியாளர் சந்தானம். பட்ஜெட் மீட்டிங் என்று சில வேடிக்கைகள், நகைக்கடை அதிபராக கோட்டாஜி. படம் துவங்கி ஒரு இருபது நிமிடங்கள் இருக்கும். ஏதோ சுமாராக பார்க்கக்கூடிய அளவில் போய்க்கொண்டிருப்பதாக தோன்றியது. போகப் போக என்னடா இது எழவு வீட்டுக்கு வந்துட்டோமா ? என்று தோன்ற ஆரம்பிக்கிறது. எதற்கெடுத்தாலும் வாயைப் பொத்திக்கொண்டு ஒப்பாரி வைக்கிறார்கள். காமெடியாம் ! ஆளாளுக்கு லபோ திபோவென்று கத்திக்கொண்டே இருக்கிறார்கள். கோட்டா சீனிவாசராவுடைய சின்னச் சின்ன மேனரிசங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவரே ஹை-பிட்சில் பேசிக்கொண்டே இருந்தால் எப்படி இருக்கும் ?

காஜல் காட்சிகளை பார்க்கும்போது கோபம் தான் வருகிறது. ப்ரதர் ராஜேஷ், உங்களுக்கு காமெடி பீஸ் வேண்டுமென்றால் அனுயா பகவத், ஹன்சிகா மோத்வாணி போன்ற சீமாட்டிகளை போட்டு, விடிய விடிய காமெடி செய்யலாமே ? எங்கள் காஜல் உமக்கு என்னய்யா துரோகம் செய்தார் ? காஜல் ஃபீல்ட் அவுட் ஆனால் கூட பரவாயில்லை. ஆனால் இந்தமாதிரி கேவலமான வேடங்களை ஏற்று நடிப்பதை பார்த்தால் சங்கடமாக இருக்கிறது.

யாருக்கும் சொல்லாம... என்றொரு பாடல் வருகிறது. அதில் காஜலை பார்க்கும்போது காஜல் ஃபீல்ட் அவுட் ஆனால் பரவாயில்லை என்று எழுதிய கைகளை கருக்கிவிடத் தோன்றுகிறது. புத்திசாலி காஜல் ரசிகர்கள் அந்த பாடல் முடிந்ததும் கொஞ்சம் கூட கூச்சப்படாமல் கிளம்பி வந்துவிடலாம். அல்லது அந்த பாடல் யூடியூபில் வெளிவந்ததும் பதிவிறக்கி காஜல் கலெக்ஷனில் சேர்த்துக்கொள்ளலாம். காஜலுக்காக மட்டும் சொல்லவில்லை. உண்மையில் பாடல் நன்றாகயிருக்கிறது. தவில் இசை கின்னென்று இருக்கிறது.

அப்புறம் இரண்டாவது பாதியில் எண்பதுகளின் பாணியில் சில காட்சிகள். அதற்காக நிறைய உழைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இருந்தாலும் எடுபடவில்லை. கடைசியில் ராதிகா ஆப்தே (காஜலின் அத்தை) என்ன ஆனார் என்றே சொல்லவில்லை.

ஆக, ஒரு பாடல், இடைவேளைக்குப் பின் சில காட்சிகள் தவிர்த்து படம் குப்பை. திரையரங்கில் பின்-டிராப் சைலன்ஸ் ! விறுவிறுப்பான ஒரு த்ரில்லரைக் கூட மக்கள் இவ்வளவு அமைதியாக ரசிக்க வாய்ப்பில்லை. படத்தில் அவர்களை அவர்களே கிண்டலடித்து நிறைய குறியீடுகளை வைத்திருக்கிறார்கள். ஓவர் கான்பிடன்ஸ் சித்ரா தேவிப்ரியா, அடிக்கடி ஓஹோன்னானாம் என்று நக்கல் விடும் சந்தானம், இந்த பணிவும் சமயோஜித புத்தியும் உங்களை எங்கேயோ கொண்டு போய் விடப்போகுது என்று சொல்லும் கார்த்தியின் வசனம் என அடிக்கடி ராஜேஷின் நிலையை எதிரொலிக்கின்றன.

ராஜேஷுக்கு வெ.மா.சூ.சொ நான்கில் ஏதேனும் ஒன்று இருந்தால் கூட தொலைக்காட்சியில் ப்ரோமோ என்கிற பெயரில் வந்து பல்லிளிக்க மாட்டார். காஜல் கதாநாயகி இல்லாத பட்சத்தில் ராஜேஷுடைய அடுத்த படத்தை நான் நிச்சயமாக திரையரங்கில் பார்க்கப்போவது இல்லை.

படம் பார்த்தபிறகு படத்தின் ட்ரைலர் பார்த்தால் ஒரு கேள்வி எழுகிறது. ட்ரைலரில், அழகு, இனிமையான குரல் இரண்டும் ஒருங்கே அமையப்பெற்றவள் கரீனா சோப்ரா என்று வர்ணிக்கிறார் கார்த்தி. சந்தானம் நம்பியார் பாணியில் கையைக் கசக்கிக்கொண்டே மும்பை கரீனா சோப்ரா’வா ? அம்பை தேவிப்ரியாவா ? என்று கேட்கிறார். மேலே சொன்ன காட்சிகள் படத்திலேயே இல்லையே ? அப்புறம் என்ன மா’ன்னாவுக்கு ட்ரைலரில் ? 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

6 comments:

Manimaran said...

சமீபத்தில் வந்த வ.ப.வா சங்கம் படத்தின் வெற்றி இவர் வசனத்தால் தான் என்று ஏகப்பட்ட பில்டப் வேறு. இவர் எப்படி எடுத்தாலும் மக்கள் அதைப் பார்த்து சிரிப்பார்கள் என நினைத்துவிட்டார்கள் போல.. BTW ..நான் இன்னும் படம் பார்க்கல... பொறுமையா நெட்ல பார்க்கலாம்னு இருக்கேன். :-))

தென்னவன் said...

எனக்கு என்னமோ தப்பு ராஜேஸ் கிட்ட இல்ல producer கிட்ட தன இருக்கும்
Rising star உதயநிதி வச்சு ஓகே ஓகே நல்ல movie.ரியல் ஹிட் பாண்டிய நாடு தான் பாஸ்....

Anonymous said...

காஜல் அவ்வளவு பெரிய அழகியா..!!!!!!!!!!!???????????.

Ponmahes said...

கண்ணுக்குட்டியோட அழகை இந்த படத்துல தான் நல்லா ரசிக்க முடிஞ்சிது..அதுக்காக மட்டும் இயக்குநருக்கும் ஒளிபதிவாளருக்கும் கோடி நன்றி சொல்லலாம்....குறிப்பாக பாடல்களில்......

//காஜலுக்காக தாங்கிக்கொள்ள மாட்டேனா என்ன ?

"காஜலுக்காக" என்கிற இடத்தில "கண்ணுக்குட்டி" க்காக ன்னு போட்டுருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்....

வழக்கம் போல பதிவில் அதே நய்யாண்டி..நக்கல்.....அருமை ...வாழ்த்துக்கள்.....தம்பி

SK said...

வேண்டுமென்றால் அனுயா பகவத், ஹன்சிகா மோத்வாணி போன்ற சீமாட்டிகளை போட்டு,........
Enyaa Prabha AAbaasamma Pesara.....

அனுஷ்யா said...

யோவ் அவ்வளவு சொல்லியும் நீர் அடங்கல?

( நீர் என்பது நீ என்ற பொருளில் பிரயோகிக்கப்பட்டுள்ளது... ஆமென்)