அன்புள்ள வலைப்பூவிற்கு,
ஒலிம்பியா வாசலில் உள்ள சிட்டிபேங்க்
ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதற்காக காத்திருந்தேன். அந்த இடத்தில் ஒரு சிலை
இருக்கிறது. ராமரோ, பெருமாளோ யாரென்று தெரியவில்லை. முன்ன பின்ன செத்திருந்தா தானே
சுடுகாட்டுக்கு வழி தெரியும்...? சட்டென ஒரு பெண் அந்த சிலைக்கு முன் வந்து நின்று
சிலையுடன் பேச ஆரம்பித்துவிட்டார். அதாவது சினிமாவில் எல்லாம் ஹீரோயின்கள் கடவுளை
நண்பனாக பாவித்து பேசுவார்களே (உ: ரோஜாவில் மதுபாலா) அதுபோல. நான் அவளையே
குறுகுறுவென பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தசமயம் என்னையே அறியாமல் என் உதட்டோரத்தில்
லேசாக புன்னகை கசிந்திருக்கும் போல தெரிகிறது. அவள் எதார்த்தமாக என்னைப் பார்த்ததும் நாக்கை
கடித்துக்கொண்டு டெம்ப்ளேட்டாக கைகூப்பி, கண்களை மூடி சாமி கும்பிட
ஆரம்பித்துவிட்டாள். அப்புறமென்ன, ஃபிகர் சுமாராக இருந்ததால் என் முகத்திற்கு நேரே
ப்ரொப்பெல்லர் காற்று வீசி, முன்னம்மயிரெல்லாம் சிலுசிலுத்து, டங்’கென மணியோசை
எல்லாம் கேட்டு என்றெல்லாம் எழுத முடியவில்லை.
கொஞ்சநேரத்திற்கு டைம்பாஸ் செய்ய ஏதாவது புத்தகம் கிடைக்குமா என்று
என்னுடைய பெட்டகத்தை துழாவியபோது கேபிள் சங்கரின் கொத்து பரோட்டா கிடைத்தது. 2008ன்
இறுதியில் துவங்கி 2009 வரை கேபிளார் எழுதிய கொத்து பரோட்டா பதிவுகளின் தொகுப்பு. வருங்காலத்தில்
‘ஒயின்ஷாப்பை’ புத்தகமாக வெளியிட்டால் (!!!) அது எப்படியிருக்க வேண்டும் என்று
தெரிந்துக்கொள்வதற்காக அந்த புத்தகத்தை வாங்கியதாக நினைவு. உல்டாவாக எப்படி
இருக்கக்கூடாது என்று சில விஷயங்களை தெரிந்துக்கொள்ள முடிந்தது. அடல்ட் ஜோக்குகள்
தவிர சொல்லிக்கொள்ளும்படி எதுவும் உருப்படியாக கிடையாது. கேபிளே புத்தகத்தை பற்றி சும்மா
‘டைம்பாஸ்’ மச்சி என்று சொல்லியிருப்பது பொருத்தம். கொ.ப வாங்கிப் படித்ததில்
ஒரேயொரு நல்ல விஷயம் – ஒருகாலத்தில் கேபிள் கூட அமெச்சூராகத்தான்
எழுதியிருக்கிறார். கலவை இடுகைகள் விஷயத்தில் கேபிளை ரோல் மாடலாக நினைக்கும் என்
போன்றவர்களுக்கு ஒரு சிறிய ஆறுதல். அம்புட்டுதேன்...!
கொ.ப.வில் டக்கீலா பற்றி கேபிள் சங்கர் :-
மெனுகார்டில் டக்கீலாவை பார்த்ததும்
ஷகீலாவை பார்த்தவன் போல் உற்சாகமாகி ஒரு ஸ்மாலை அர்டர் செய்தேன். பார்மேன் ஒரு
சின்ன டெஸ்ட் டூயூப் போன்ற ஓரு குடுவையில் ஓரு ஸ்மாலுடன் ரெண்டு எலுமிச்சையுடன்
உப்பை ஓரு டேபிளின் முன் வைத்தான். எதனுடன் அதை அடிப்பது என்று யோசித்து
கொண்டிருக்கும் போது, ’அப்படியே சாப்டணும்னு’ என்
நண்பர் ஹார்லிக்ஸ் பேபி போல் சொல்ல ஒரே ஷாட்டில் அடித்தேன். நெஞ்சுக்குள்
சல்லென்று இறங்கி, உடனடியாய் கீழே போய் ஓரு 'பக்' என
தீப்பிழம்பு போல் சர்ரென்று மேலேறி குப்பென்று வாய் வழியாய் தீ வர, உடனடியாய்
உப்பை எலுமிச்சையில் தோய்த்து நாக்கில் வைத்து தேய்க்க, சூப்பர்.
டக்கீலா.. ஒரு வெளிநாட்டு சாராயம்...!
நையாண்டி பார்த்தேன், தொப்புள் காட்சி
உட்பட. நஸ்ரியா கதாபாத்திரம் அரை லூசெல்லாம் இல்லை. முழு லூஸு. அதற்கு மிக
பொருத்தமாக ஓவியாவுக்கு வாய்ஸ் கொடுப்பவரே டப்பிங் பேசியிருக்கிறார். படத்தில் புன்முறுவல்
அளவுக்கு ஆங்காங்கே சிரிப்பு வருகிறது. மனம் விட்டு சிரித்த ஒரே காட்சி சத்யனின்
லுங்கி டான்ஸ் மட்டும்தான்.
குடிப்பழக்கம் உள்ள ஒருவன் மதுக்கூடத்திற்கு
சென்று ஒரு துளி கூட குடிக்காமல், குடிப்பவரை வாய்பார்த்து விட்டு வருவது எவ்வளவு
மோசமான அனுபவம். சனியன்று மாலை கிடைத்தது. சிறுதூறல், சில்லென காற்று, சில்ட் பீர்
கிடைத்தால் எப்படி இருக்கும்...? ஆனால் பார்க்க மட்டும் என்றால்...? சிங்கம் ஒரு
கிங்ஃபிஷர் பியரோடு என் முன்னால் அமர்ந்திருந்தார். எனக்கு அடிக்க வேண்டும்
போலிருந்தது. ஒன்று, பியரை எடுத்து ‘பாட்டம்ஸ் அப்’ அடிக்க வேண்டும். அல்லது
பாட்டிலை எடுத்து சிங்கத்தின் மண்டையில் அடிக்க வேண்டும். மிகுந்த சிரத்தை எடுத்து
பொறுத்துக்கொண்டேன். கூடுமான வரை சிங்கத்திடம் பேச்சு கொடுக்காமல், குறிப்பாக
வரலாறு சம்பந்தமாக பேச்சு கொடுக்காமல் உட்கார்ந்திருந்து வேடிக்கை மட்டும்
பார்த்தேன். FYI, நான் திரவ உணவு உட்கொள்வதை நிறுத்தி / நிறுத்தப்பட்டு ஐம்பது
நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது :)
சனியிரவு தூர்தர்ஷனில் ஸ்போர்ட்ஸ்
க்விஸ் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. எங்கள் வீட்டில் கேபிள் இணைப்பு இல்லாத
காலகட்டத்தில் எனக்கு கிடைத்த ஒன்றிரண்டு பொ.போ நிகழ்ச்சிகளில் ஸ்போர்ட்ஸ் க்விஸ்
முக்கியமானது. அந்த நிகழ்ச்சி இன்னமும் (பன்னிரண்டு வருடங்களாக) தொடர்ந்துக் கொண்டிருப்பது
சர்ப்ரைஸ். சுமந்த் சி ராமன் நிகழ்ச்சியை நடத்திச்செல்லும் விதம் அலாதியானது.
ஒருமணிநேர நிகழ்ச்சி என்றால் அதில் விளம்பர இடைவேளை தவிர்த்து ஒரு நொடியைக் கூட
வீணாக்கமாட்டார் என்று நினைக்கிறேன். என்ன ஒன்று, சில நேயர்கள் லைன் கிடைத்து
பதில் தெரியாமல் நேர விரயம் செய்கிறார்கள். அது போன்றவர்களை அல்லையில் போட்டு
மிதிக்கலாம். சுமந்த் சி ராமன் அதிகம் கவனிக்கப்படாத ஒரு லெஜன்ட் என்றுதான் சொல்ல
வேண்டும்.
வணக்கம் சென்னை படத்தின் ஒசக்க பாடல் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது.
இப்படியொரு பாடல் ‘மொக்கை’ சிவாவிடம் வந்து கிடைத்திருப்பது காலக்கொடுமை. அதிலே
குற்றாலத்துண்டை வைத்து ஒரு பெசல் ஸ்டெப் போடுகிறார் பாருங்கள் அடடா அவசியம்
பார்க்கவும்.
வருகிற சனிக்கிழமை துவங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு புனே வாசம்.
ஒயின்ஷாப் திறக்கப்படாது என்பதை அறிக :)
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
15 comments:
புனே பற்றியும் எழுதுங்க பாஸ்:)))
பிரபா,
//ஒருகாலத்தில் கேபிள் கூட அமெச்சூராகத்தான் எழுதியிருக்கிறார்.//
இப்ப மட்டும்?
//ஒரே ஷாட்டில் அடித்தேன். நெஞ்சுக்குள் சல்லென்று இறங்கி, உடனடியாய் கீழே போய் ஓரு 'பக்' என தீப்பிழம்பு போல் சர்ரென்று மேலேறி குப்பென்று வாய் வழியாய் தீ வர, உடனடியாய் உப்பை எலுமிச்சையில் தோய்த்து நாக்கில் வைத்து தேய்க்க, சூப்பர். டக்கீலா.. ஒரு வெளிநாட்டு சாராயம்...! //
இந்த டக்கீலா மேட்டருக்கே நாடுகடத்தலாம் அவ்வ்.
வெளிநாட்டுக்காரன் இதை எல்லாம் லார்ஜ் கணக்கில ஏகமா குடிக்கிறான், டெக்யூலா நிறைய குடிக்கிறவன் "மட்டமான குடிகாரன்" ஏன்னா அது ஹேங்வர் அதிகமா கொடுக்கும் அதிகமா குடிச்சு பழக்கமானவங்களுக்கு தான் ஹேங் ஓவர் பிரச்சினை வராது :-))
#//பியரை எடுத்து ‘பாட்டம்ஸ் அப்’ அடிக்க வேண்டும்//
ஹ...ஹி அப்படி என்னிக்காச்சும் அடிச்சு இருக்கிறா? பியர எல்லாம் பாட்டம்ஸ் அப் அடிக்க முடியாது, வழக்கமா இதை வச்சு பெட் கட்டி கலாய்க்க தான் பயன்ப்படுத்துவாங்க.
அது சரி திடீர்னு சைவப்பூனையா ஆகியாச்சஆவ்வ்.
அப்ப ஒயின்ஷாப் போர்ட எடுத்துட்டு டீ ஷாப்னு வையும் :))
// ஃபிகர்
சுமாராக இருந்ததால் என்
முகத்திற்கு நேரே ப்ரொப்பெல்லர் காற்று வீசி,
முன்னம்மயிரெல்லாம் சிலுசிலுத்து,
டங்’கென மணியோசை எல்லாம்
கேட்டு என்றெல்லாம் எழுத முடியவில்லை.//
அப்புறம் வீட்டில் டமால் னு அடியோசை விழும். . . .
// நான் திரவ
உணவு உட்கொள்வதை நிறுத்தி /
நிறுத்தப்பட்டு ஐம்பது நாட்களுக்கு மேல்
ஆகிவிட்டது :)//
ஏன் இரண்டு மாசமா ஓவரா மழை பொழியுதுனு இப்பதான் தெரியுது.
அப்போ புனே பயண கட்டுரை எதிர்பார்க்கலாம்????
இன்னுமா காமெடி கும்மியடிச்சிட்டு இருக்கு பிரபா? சென்ற வருட புத்தக சந்தையில் அவுட் ஆஃப் ஸ்டாக் ஆன புத்தகம் கொ.பரோட்டா.
சுமந்த் ஒரு காம்ப்ளான் பேபி. இன்னும் அப்படியேத்தான் இருக்காப்ல.
"சுமந்த் சி ராமன் அதிகம் கவனிக்கப்படாத ஒரு லெஜன்ட் என்றுதான் சொல்ல வேண்டும்."
உண்மைதான் . .
உண்மைத்தமிழன் கூட ஒருமுறை இவர் பெயர் மற்றும் விவரம் தெரியவில்லை
என்று எழுதியதாக ஞாபகம் . .
மக்கள் தொலைக்காட்சியிலும் சில காலம்
சிறப்பாய் நிகழ்ச்சி நடத்தி உள்ளார்
// Cable சங்கர் said...
இன்னுமா காமெடி கும்மியடிச்சிட்டு இருக்கு பிரபா? சென்ற வருட புத்தக சந்தையில் அவுட் ஆஃப் ஸ்டாக் ஆன புத்தகம் கொ.பரோட்டா.//
@ cable sankar
சார் தம்பிக்கு ஏன் புடிக்கலைன்னு கேளுங்க. அது தர்மம். நியாயம். அத விட்டுட்டு அடுத்த கேபிள் ஆகிடுவாரோன்னு தலைல குட்ட பாக்கறீங்களா? அது நடக்காது.
ரெண்டு பேரையும் நேர்ல மீட் பண்ண வச்சி பஞ்சாயத்து பேசுவோம்.
இன்னாது ஒரு வாரத்திற்கு ஒயின் ஷாப் அடைப்பா. தாங்காது சாமியோவ். ஒரு வார சப்ளைய முதலில் எடுத்து வைத்து விட்டு கடையை அடைங்க.
நானே ரெண்டு, மூணு நாளைக்கு ஒரு தடவை உங்க கடைப் பக்கம் வரேன், நீங்க என்ன்டன்னா ஒரு வாரம் கடை மூடப்படும்ன்னு சொல்றீங்க. சரி போயிட்டு வந்து புனேயில ஒயின்ஷாப் திறந்ததைப் பற்றி எழுதுங்கள்.
\\சட்டென ஒரு பெண் அந்த சிலைக்கு முன் வந்து நின்று சிலையுடன் பேச ஆரம்பித்துவிட்டார். அதாவது சினிமாவில் எல்லாம் ஹீரோயின்கள் கடவுளை நண்பனாக பாவித்து பேசுவார்களே (உ: ரோஜாவில் மதுபாலா) அதுபோல. \\மாப்பு, இந்த புன்னைகையை சேமிச்சு வச்சுக்கோ, அடுத்த பெரியார் பிறந்த நாளைக்கு தி.க. கார "பகுதறிவாளிங்க" பெரியார் சிலைக்கு மாலை போட்டுட்டு கும்புடு ஒன்னு போடுவாங்க பாரு, அப்போ சேமிச்சு வச்ச புன்னகையை திரும்ப எடுத்து உடு. சிலையிடம் பேசுவது மட்டுமல்ல, அதற்க்கு மாலை போட்டு கும்பிடுவதும் முட்டாள் தனமே தான். வித்தியாசமெல்லாம் கிடையாது. [சிலர் "பகுதறிவாளிங்க" பெரியார் சிலையைப் பார்த்து பேசவும் செய்கிறார்களாம். ஐயோ........ஐயோ............]
//வணக்கம் சென்னை படத்தின் ஒசக்க பாடல் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது.//
மேற்படி பாடலை பார்க்கும்போதெல்லாம் கலகலப்பு படத்தில் நம்ம பிரபஞ்ச நாயகன் உதிர்த்த ஒரு வசனம்தான் நினைவிற்கு வரும் .
//டக்கீலா , சில்ட் பீர் ... //
பதிவின் தலைப்பை நல்லாவே Justify பண்ணியிருக்கீர் ...
சுமந்த் - சில எபிசோடுகள் பார்த்திருக்கிறேன் .நம்ம டக்குக்கும் மனுஷன் டக்குக்கும் ரெம்ப தூரம் ...
நினைச்சதை "நச்" ன்னு எழுதறதுதான் பிரபா ஸ்டைல்....
கடைசி வரி வரைக்கும் விறுவிறுன்னு படிச்சு முடிச்சுட்டேன்...அத்தனை வேகம்...
புனே அனுபவத்தையும் எழுதுங்க...
காத்திருக்கிறோம்....
என்னுடைய வலைத்தளத்தில் இன்று: கார்பன் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்
ஒயின்ஷாப் ஒரு வாரம் விடுமுறையா?
காந்தி ஜெயந்திக்கே பிளாக்குல விக்கிறானுங்க... இங்க பிளாக்குல புனே போறதுக்காக ஒரு வாரம் விடுமுறையா?
அப்ப விரைவில் புனே பற்றிய கட்டுரையை எதிர்பார்க்கலாம்.
Post a Comment