அன்புள்ள வலைப்பூவிற்கு,
முதலிலேயே சொல்லி விடுகிறேன். நான் வீரம் படத்திற்கு டிக்கெட்
எடுக்கவில்லை. கிடைக்கவில்லை என்று சொல்லமுடியாது. பெருமுயற்சி செய்திருந்தால்
எடுத்திருந்திருக்கலாம். கொஞ்சம் மெத்தனமாக இருந்துவிட்டேன். இதற்கிடையே நண்பர்
ஒருவர் அவருடைய ஜில்லாவிற்கு அழைத்து நானும் ஒப்புக்கொண்டுவிட்டேன். ஆக, புது வருடத்தின் முதல் சினிமா கன்னுக்குட்டியினுடையது...! அஜித் படம்தான் பார்க்க
முடியவில்லை அவரைப் பற்றி எழுதவாவது செய்யலாமே என்பதால் ஒரு டைம்பாஸ் போஸ்ட்.
எதுக்கு மாமா வளவள'ன்னு ? புதுவருஷத்துல என் படத்தை தான் மொதல்ல பாக்கணும்'ங்குற ஒன் ஆசையை சொல்லிடேன் |
முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தாலும் சக முன்னணிகளோடு
ஒப்பிடும்போது அஜித்துக்கு ஹீரோயின்கள் அமைவதில் அப்படியொன்றும் நற்பேறு கிடையாது
பார்த்தீர்களா...? அவருடைய படங்கள் வெளிவரும் சமயம் அந்த படங்களின் நாயகி புகழின்
உச்சியிலிருப்பது மிகவும் அரிதாகவே நடந்திருக்கிறது. ஆமாம், சிம்ரன், ஜோதிகா, அசின்,
த்ரிஷா, நயன்தாரா போன்ற பிரபல நடிகைகளுடன் அஜித் நடித்திருக்கிறார். இருப்பினும்
சில விஷயங்களை வைத்து அஜித்துக்கு ஹீரோயின் ராசி இல்லை என்று திட்டவட்டமாக
கூறிவிடலாம்.
1. சமகால
ஆளுமைகளுடன் நடிக்காதது
விஜய்யை பாருங்கள். துப்பாக்கி, ஜில்லா என இரண்டு படங்களுடன் காஜலுடன்
ஜோடி போட்டுவிட்டார். சூர்யா மாற்றானில். நேற்று வந்த கார்த்தி கூட இரண்டு
படங்களில் நடித்தாகி விட்டது. ஆனால் அஜித்துக்கு இன்னமும் அந்த பாக்கியம்
கிட்டவில்லை. போலவே விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி என ஆர்யா வரை ரவுண்டு
கட்டிவிட்ட அனுஷ்கா இன்னும் அஜித்துடன் நடிக்கவில்லை. அது புறமிருக்க அமலா பால்,
நஸ்ரியா, சமந்தா என புதிதாக களம் இறங்கியவர்களுடனும் ஜோடி சேர்ந்த பாடில்லை.
2. இறந்தகால ஆளுமைகளுடன் நடிப்பது
உதாரணத்திற்கு வீரத்தில் நடித்திருக்கும் தமன்னாவையே எடுத்துக் கொள்ளலாம்.
பையா, சுறா படங்கள் வெளிவந்த காலகட்டத்தில் தமன்னா உச்சத்தில் இருந்தார்.
அப்போதெல்லாம் ஜோடி சேர முடியாத தமன்னா இப்போது காலம் கடந்து சேர்ந்திருக்கிறார்.
ஆரம்பத்தில் நயன்தாரா, மங்காத்தாவில் த்ரிஷா போன்றவர்களை இந்த பட்டியலில்
சேர்க்கலாம். சினேகா என்றொரு நடிகை இருந்தார். அவர் ஜனாவில் நடிக்க ஒப்பந்தமானபோது
பிரபலமாக இருந்தார். அஜித் – சினேகா ஜோடி அபாரமாக இருக்குமென ரசிகர்கள்
காத்திருந்தார்கள், வருடக்கணக்கில். இறுதியில் ஜனா வெளிவந்தபோது சினேகாவின் புகழ்
கிட்டத்தட்ட சரிந்து முடிந்திருந்தது.
3. சுமார் மூஞ்சிகளுடன் நடிப்பது
இது கொஞ்சம் பெரிய பட்டியல். தீனாவில் லைலா, ஆஞ்சநேயாவில் மீரா
ஜாஸ்மின், அட்டகாசத்தில் பூஜா, திருப்பதியில் சதா, அசலில் பாவனா, சமீரா ரெட்டி என
பெரிய பிரபலங்கள் இல்லையென்றாலும் சந்தடி சாக்கில் அஜித்துடன் நடித்துவிட்டார்கள்.
குறிப்பாக அசல், திருப்பதி படங்களை எல்லாம் நான் சைவ உணவகத்தில் வேண்டா
வெறுப்பாக சாப்பிடும் மனோபாவத்துடனேயே பார்த்தேன்.
4. அதிகம் அறியப்படாதவர்களுடன் நடிப்பது
இதுவும் ஏறத்தாழ முந்தைய லிஸ்டை போன்றது தான். பில்லா 2ல் பார்வதி
ஓமனக்குட்டன், வில்லனில் கிரண், சிட்டிசனில் வசுந்தரா தாஸ், ரெட்டில் ஒரு மொக்கை
மூஞ்சி போன்றவர்கள் இந்த பட்டியலின் கீழ் வருகிறார்கள். ப்ரியா கில் என்பவர்
தமிழில் நடித்தது ஒரேயொரு படம் அதுவும் அஜித்துடன் என்றால் அவருடைய நற்பேறை
பார்த்துக் கொள்ளுங்கள். பார்வதி ஓமனக்குட்டன் ஒலக அழகி என்றாலும் நம்மூரை
பொறுத்தவரையில் புதுமுகம் தானே.
5. கிழவிகளுடன் நடித்தது
இரண்டாவது பட்டியலில் உள்ள த்ரிஷா, நயன்தாரா தவிர்த்து மீனா, தேவயானி,
தபு போன்ற ஒப்பீட்டளவில் அஜித்துக்கு அக்கா போல தோற்றமளிக்கக் கூடிய நடிகைகளுடன்
நடித்திருக்கிறார். ஆனந்த பூங்காற்றே படத்தில் நடிக்கும்போதே மீனா வயதில் அதிகம்
போல தோற்றமளித்தார். அதன்பிறகு மூன்றாண்டுகள் கழித்து வெளிவந்த வில்லன் படத்திலும்
மீனா அஜித்துடன் ஆட்டம் போட்டால் ஒரு ரசிகனுக்கு எப்படியிருக்கும்.
என்னது நான் தலைக்கு ஜோடியா ? பிரபா ஒன் வாய்க்கு சக்கரை போடணும்டா ! |
எதற்காக இப்படி சமந்தா சம்பந்தமில்லாமல் புலம்பிக் கொண்டிருக்கிறேன்
என்று கேட்காதீர்கள். எனக்கு என்னுடைய கட்டை வேகும் முன் அஜித்தும், காஜலும்
ஜோடியாக ஆடுவதை பார்க்க வேண்டும். அவ்வளவுதான்...!
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
15 comments:
ஹீஈஈஈ! கட்டை வேகணும் என்று சொல்லுவது கொஞ்சம் ஓவரூ......
//எல்லாம் நான் சைவ உணவகத்தில் வேண்டா வெறுப்பாக சாப்பிடும் மனோபாவத்துடனேயே பார்த்தேன்.//
:-)
எதற்காக இப்படி சமந்தா சம்பந்தமில்லாமல் புலம்பிக் கொண்டிருக்கிறேன் என்று கேட்காதீர்கள். எனக்கு என்னுடைய கட்டை வேகும் முன் அஜித்தும், காஜலும் ஜோடியாக ஆடுவதை பார்க்க வேண்டும். அவ்வளவுதான்...!
அப்புடி போடுண்ணே.
பிரபா சொல்றது எல்லாமே சரியாத்தான் இருக்கு... கூடிய சீக்கிரம் ஆசை நிறைவேறட்டும்...
கரெக்ட ப்ரோ...தல கூட காஜல், சமந்தா, அனுஷ்கா லாம் நடிச்சா செமயாக இருக்கும். ஆனா நீங்க சொல்ற மாதிரி இவங்க ஃபீல்ட் அவுட் ஆன பின்னாடி தான் நடக்கும் போலிருக்கே...
why Prabha why?! Nall thana poikittu irunthadhu!!
-Eswar
நேற்று Dr. மயிலன் ஐயாவை சந்தித்து பேசினீர்களோ...? ஹிஹி...
வருத்தப்படாதீங்க பாஸ், ஜில்லாவில் நம்ம கன்னுகுட்டிய அசிங்கப்படுத்திட்டாங்க.
வழி மொழிகிறேன்!
why this kolaveri :(
Make it simple :)
பிரபா,
அஜித் ரசிகரோ?
அஜித்துக்கு பெரிய மார்க்கெட் என்பது சமீபத்தில் தான் உருவானது, பலகாலமாக நிலையான மார்க்கெட் இல்லாமல் தடுமாறிக்கொண்டு தான் இருந்தார்,எனவே படத்தயாரிப்பு பட்ஜெட்டே சின்னது, எனவே நினைத்தபடி எல்லாம் காம்பினேஷனில் படம் தயாரிக்க முடியாமல் போச்சு.
ஆசை படம் எல்லாம் வந்த பின்னரும் ரஞ்சித் போன்றோருடன் இரு ஹீரோக்களில் ஒருவராக மைனர் மாப்பிள்ளை, வான்மதி,சும்மா மொக்கையாக நேசம்,பின்னர் உல்லாசமென விக்ரமுடன் நடித்தார். விஜயின் "ராஜாவின்பார்வையிலே படத்தில் துணைப்பாத்திரமே, பவித்ராவில் கேன்சர் பேஷண்ட்,பாசமலர்கள் (அரவிந்த்சாமி ஹீரோ) படத்தில் துண்டுகேரக்டர், சத்யராஜ் நடித்த பகைவன் படத்தில் ஒப்புக்கு சப்பாணிகேரக்டர், பிரசாந்த் நடித்த "கல்லூரி வாசல்" படத்திலும் அப்படியே.
காதல் கோட்டைஎல்லாம் வந்த பின்னும் ,நீ வருவாய் என, உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன் என துக்கடாவாக நடித்துக்கொண்டு தானிருந்தார், அமர்க்களம் வந்த பின்னர் தான் நிலையான மார்க்கெட்டே உருவாச்சு,எனவே தான் மார்க்கெடில்லாதா போது பிசியா இருந்தபழைய நடிகைகளுடன்,தனக்கு மார்க்கெட்வந்தபிறகு நடிச்சு நிறைவேறாத ஆசையை தீர்த்துக்கிட்டாரோ என்னமோ :-))
# பிரியாகில் காதல் கோட்டை ஹிந்தி வெர்ஷனில் நடித்தவர், அந்நேரத்தில் அஜித் விட நன்குஅறிமுகமான நடிகையாக இந்தியில் இருந்தார், ஹிந்தி நடிகைய நடிக்க வைக்கனும்னு தேடிப்புடிச்சு நடிக்க வச்சாங்க அவ்வ்!
குஷ்பு,சிம்ரன்,ஜோதிகா, ஹன்சிகா மோத்வானி எல்லாம் பாலிவுட்டில் வேண்டாம்னு தள்ளிவிட்டவங்க,தமிழில் ஓஹோனு கொண்டாடப்பட்டாங்க என்பது தான் நகைமுரண்!
படத்தின் பெயர் நேசம் அல்ல நேசம் புதுசு என நினைக்கிறேன்.
அப்பா! என்னா ஒரு அலசல். "//அஜித்துக்கு கதாநாயகிகள் அமைவதில் அபப்டி ஒன்றும் நற்பேறு கிடையாது பார்த்தீர்களா...?//" - அதற்கு காரணமும் இருக்கிறது. அவர் தனக்கு இன்னார் தான் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று கேட்பதே இல்லையாம்.
பார்க்கலாம் - உங்களுடைய அந்த சின்ன ஆசை நிறைவேறுகிறதா என்று???
அஜீத் படத்தில் கதாநாயகிக்கு பெரும்பாலும் முக்கியத்துவம் இருப்பதில்லை... அவரும் இவர்தான் வேண்டும் என்று கேட்பதும் இல்லை என்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்...
அலசல் நன்று. கருத்துக்களை ஆமோதிக்கிறேன். உங்கள் எழுத்து நடை ரசிக்கும்படி உள்ளது.
பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
Post a Comment