அன்புள்ள வலைப்பூவிற்கு,
நான் மூட்டை மூட்டையாக புத்தகங்கள் வாங்கி அவற்றை லிஸ்ட் போடும் ஆசாமி
கிடையாது. மிகவும் செலக்டிவ். எனக்கென ஒரு ஸ்டைல் இருக்கிறது, புத்தகங்கள் வாங்குவதில்
கூட. புத்தகக்காட்சியை எடுத்துக் கொண்டால், முதலில் ஒருநாள் யாரையும் அழைத்துச்
செல்லாமல் தனியாளாக சென்று ஒன்றிலிருந்து தொடங்கி எல்லா கடைகளையும் பார்வையிட்டு
ஒரு சுற்று வருவேன். இடையிடையே நல்லதாக ஏதாவது கண்ணில் பட்டால் (புத்தகங்கள் தான்)
குறித்து வைத்துக்கொள்வேன். இரண்டாவது நாள், யாராவது ஒரு நண்பருடன் சென்று அவர்
புத்தகங்கள் வாங்குவதையும் கையில் எடுத்து பார்த்துவிட்டு நிராகரிக்கும்
செய்கைகளையும் மானிட்டர் செய்வேன். அவர் புத்தகங்கள் பற்றி ஏதாவது சொன்னால் அதை
வாங்கி காதில் போட்டு வைத்துக்கொள்வேன். மூன்றாவது நாள், காலையிலேயே துரிதமாக
சென்று நான் ஏற்கனவே குறித்து வைத்திருந்த பதிப்பகங்களிலிருந்தும் முக்கியமானவை
எனக் கருதப்படும் பதிப்பகங்களிலிருந்தும் விலைப்பட்டியல்களை சேகரிப்பேன்.
அன்றிரவு எல்லா விலைப்பட்டியல்களையும் ஆராய்ந்து வாங்க வேண்டிய புத்தகங்களை
பட்ஜெட்டுக்கு தகுந்தாற்போல ஷார்ட்லிஸ்ட் செய்வேன். நான்காவது நாளில், பட்டியலிட்ட
புத்தகங்களை சமர்த்தாக வாங்கிவிடுவேன். வளவளவென மொக்கை போடாமல் சுருங்கச்
சொல்வதென்றால் – புத்தகங்கள் வாங்குவதில் நான் சிரிப்போ சிரிப்பு ஒலிப்பேழையில்
வரும் ஜனகராஜ் போல. எல்லா இனிப்பு வகைகளையும் ஒரு டின்னில் கொட்டச் செய்து
அதுல இருந்து ஒரு நூறு கிராம் கொடு என்று அசடு வழிவேன்.
அப்படி ஷார்ட்லிஸ்ட் செய்து நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் :-
திசை கண்டேன் வான் கண்டேன் – சுஜாதா – கிழக்கு பதிப்பகம் – ரூ.75
மனிதனும் மர்மங்களும் – மதன் – கிழக்கு பதிப்பகம் – ரூ.140
ஜாலியா தமிழ் இலக்கணம் – இலவசக் கொத்தனார் - கிழக்கு பதிப்பகம் – ரூ.75
புக் மார்க்ஸ் – என்.சொக்கன் – மதி நிலையம் – ரூ.75
பாம்புத்தைலம் – பேயோன் – ஆழி பப்ளிஷர்ஸ் – ரூ.100
இழந்த நாகரிகங்களின் இறவாக்கதைகள் – ஆர்.எஸ்.நாராயணன் – நியூ செஞ்சுரி
புக் ஹவுஸ் – ரூ.145
கி.பி.2087இல்... – முனைவர் மலையமான் – அன்புப் பதிப்பகம் – ரூ.25
தமிழா ! நீ ஓர் இந்துவா ? – மஞ்சை வசந்தன் – புரட்சிக்கனல் வெளியீடு –
ரூ.30
கேப்டன் பிரின்சின் பயங்கரப் புயல் – லயன் முத்து காமிக்ஸ் – ரூ.60
ஒரு சிப்பாயின் சுவடுகளில் – லயன் முத்து காமிக்ஸ் – ரூ.100
சூப்பர் சுப்பு 3D (இரண்டு கண்ணாடிகளுடன்) – ரூ.200
அலமாரி – மாத இதழ் – ஓராண்டு சந்தா – ரூ.50
ஃபெமினா தமிழ் – மாத(ர்) இதழ் – ஓராண்டு சந்தா – ரூ.180
கிளம்பிவிடாதீர்கள். பினாமி பெயரில் வாங்கிய பட்டியல் இரண்டு உள்ளன.
தோழர் செல்வின் இம்முறை மிகவும் குறைந்த அளவில் புத்தகங்கள் வாங்கினாலும் அறிவியல்
சார்ந்த புத்தகங்களாக வாங்கினார்.
அவருடைய லிஸ்ட்:
பூமி எனும் கோள் – ஜார்ஜ் கேமாவ் – தமிழில் தி.ஜானகிராமன்
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன ? – ராஜ் சிவா
எப்போது அழியும் இந்த உலகம் ? – ராஜ் சிவா
விஞ்ஞானத்தில் சில விந்தைகள் – முனைவர் மெ.மெய்யப்பன்
குமரிக்கண்டமா ? சுமேரியமா ? – பா.பிரபாகரன்
சில புத்தகங்களை வாங்கலாம் என்ற ஆவல் இருக்கும், ஆனால் கொள்ளை விலை
இருக்கும். அல்லது இதைப்போய் காசு கொடுத்து வாங்க வேண்டுமா என்று தோன்றும். அல்லது
வாங்கியபின் நன்றாக இல்லையென்றால் என்ன செய்வது என்ற அவநம்பிக்கை இருக்கும். அப்படிப்பட்ட
புத்தகங்களை எல்லாம் நமக்காக வாங்கிக் குவிக்க ஒரு ஆபத்பாந்தவன் இருந்தால் எப்படி
இருக்கும்...?
தோழர் ஆரூர் மூனா என் பரிந்துரையின் பெயரில் வாங்கிய புத்தகங்கள் :-
வெள்ளையானை - ஜெயமோகன்
ஓநாய் குலசின்னம் - ஜியாங்ரோங்
கொசு - பா.ராகவன்
நாயுருவி - வா.மு.கோமு
பிலோமி டீச்சர் - வா.மு.கோமு
57 ஸ்னேகிதிகள் ஸ்னேகித்த புதினம் -
வா.மு.கோமு
எட்றா வண்டிய - வா.மு.கோமு
மரப்பல்லி - வா.மு.கோமு
சோளகர் தொட்டி - ச. பாலமுருகன்
உப்புநாய்கள் - லக்ஷ்மி சரவணகுமார்
கர்ணனின் கவசம் - கே.என். சிவராமன்
ராஜீவ்காந்தி சாலை - விநாயக முருகன்
கம்ப்யூட்டர் கிராமம் - சுஜாதா
லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்
- வா.மணிகண்டன்
அண்டார்டிகா மர்மக் கண்டத்தின் வரலாறு
- முகில்
பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம்
வேதநாயகம் பிள்ளை
அறைகள் நிறை உள்ள வீடு - குட்டிரேவதி
நிழல் முற்றம் - பெருமாள் முருகன்
தண்ணீர் - அசோகமித்திரன்
வெல்லிங்டன் – சுகுமாரன்
பட்டியல் முடிந்தது. அடுத்த சிக்கல் வாசிப்பை எங்கிருந்து துவங்க
வேண்டும் என்பதுதான். பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன...!
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
23 comments:
ஆஹா, பயங்கிரமான ஆளா இருக்கீங்க. புத்தகம் வாங்குவதுல கூட இப்படி ஒரு வரைமுறையா!!!!
ஒரு நாள் மட்டும் நடக்கிற கண்காட்சியாக இருந்தால் என்ன செய்வீர்கள்???
"// சில புத்தகங்களை வாங்கலாம் என்ற ஆவல் இருக்கும், ஆனால் கொள்ளை விலை இருக்கும். அல்லது இதைப்போய் காசு கொடுத்து வாங்க வேண்டுமா என்று தோன்றும். அல்லது வாங்கியபின் நன்றாக இல்லையென்றால் என்ன செய்வது என்ற அவநம்பிக்கை இருக்கும். அப்படிப்பட்ட புத்தகங்களை எல்லாம் நமக்காக வாங்கிக் குவிக்க ஒரு ஆபத்பாந்தவன் இருந்தால் எப்படி இருக்கும்...?//"
நீங்களும், ஆரூர் மூனாவும் தான் எனக்கு இவ்விஷயத்தில் ஆபத்பாந்தவனாக இருக்கிறீர்கள்.
இருவரிடமிருந்தும் சில புத்தகங்களை குறித்து வைத்துள்ளேன். இந்தியா வரும்போது, உங்களிடிமிருந்து வாங்கி படித்துப்பார்த்துவிட்டு தான் அந்த புத்தகங்களை வாங்குவதா,வேண்டாமா என்று முடிவு எடுக்க வேண்டுண்டும்.
// அடுத்த சிக்கல் வாசிப்பை எங்கிருந்து துவங்க வேண்டும் என்பதுதான். பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன...!//
முடிந்தால் முதல் பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும்.
பட்டியல் முடிந்தது. அடுத்த சிக்கல் வாசிப்பை எங்கிருந்து துவங்க வேண்டும் என்பதுதான். பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன..
>>
புத்த்கங்களை என்கிட்ட கொடுங்க, நான் படிச்சுட்டு கொடுக்குற ஆர்டர்படி நீங்க படிங்க.
(எப்படியோ) வாசித்து விட்டு விமர்சனமும் பகிர்ந்து கொண்டால் பலருக்கும் பயன் தருமே...!
Bayangaramana philosophy !
ungalai neril santhithathu migavum magizhchiyaga irundhadhu
கர்ணனின் கவசம் - கே.என். சிவராமன்
ராஜீவ்காந்தி சாலை - விநாயக முருகன்
இந்த இரண்டுமே என் அண்ணன் படித்துவிட்டான்,அவன் பார்வையில்முந்தையது சூப்பர் பிந்தையது சுமார்...
ராஜீவ் காந்தி சாலை ஆரம்பித்தேன், சுவாரசியம் இல்லாது சென்றதால் தற்போதைக்கு ஒத்தி வைத்துள்ளேன்
பிரபா,
// முதலில் ஒருநாள் யாரையும் அழைத்துச் செல்லாமல் தனியாளாக சென்று ஒன்றிலிருந்து தொடங்கி எல்லா கடைகளையும் பார்வையிட்டு ஒரு சுற்று வருவேன். இடையிடையே நல்லதாக ஏதாவது கண்ணில் பட்டால் (புத்தகங்கள் தான்) குறித்து வைத்துக்கொள்வேன். இரண்டாவது நாள், யாராவது ஒரு நண்பருடன் சென்று அவர் புத்தகங்கள் வாங்குவதையும் கையில் எடுத்து பார்த்துவிட்டு நிராகரிக்கும் செய்கைகளையும் மானிட்டர் செய்வேன். அவர் புத்தகங்கள் பற்றி ஏதாவது சொன்னால் அதை வாங்கி காதில் போட்டு வைத்துக்கொள்வேன். மூன்றாவது நாள், காலையிலேயே துரிதமாக சென்று நான் ஏற்கனவே குறித்து வைத்திருந்த பதிப்பகங்களிலிருந்தும் முக்கியமானவை எனக் கருதப்படும் பதிப்பகங்களிலிருந்தும் விலைப்பட்டியல்களை சேகரிப்பேன். அன்றிரவு எல்லா விலைப்பட்டியல்களையும் ஆராய்ந்து வாங்க வேண்டிய புத்தகங்களை பட்ஜெட்டுக்கு தகுந்தாற்போல ஷார்ட்லிஸ்ட் செய்வேன். நான்காவது நாளில், பட்டியலிட்ட புத்தகங்களை சமர்த்தாக வாங்கிவிடுவேன். //
இப்படிலாம் வாங்கினா "வாசிப்பனுபவம்"
ஏற்படாது, நல்ல புத்தகம் வாசிக்க கிடைப்பது என்பது தற்செயலாக நிகழும் ஒரு நல்ல சம்பவம் போல நமக்கு நிகழனும்.
நீங்க செய்வது,ஏதோ போட்டித்தேர்வுக்கு ,இதான் விருப்பப்பாடம்,இந்த இந்த ரெபரென்ஸ் புக்,இவங்க தான் ஆதர்னு பட்டியல் தயாரிச்சுக்கிட்டு,அதை எல்லாம் தேடி வாங்கிப்படிப்பது போல இருக்கு அவ்வ்!
எனது அபிப்பிராயம் மட்டுமே, ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ஃபீலிங்ஸ்!
என்னைப்பொறுத்த வரையில்முன் முடிவெல்லாம் இல்லாமல் கையில இருக்க காசுக்கு புக்க வாங்க வேண்டியது, புத்தகத்தின் விலையை தீர்மானிக்க நான் கையாளும் வழி என்னவெனில் ஒரு பக்கத்துக்கு 50 காசு என விலை வர்வது போல இருக்கனும் :-))
அதிகப்பட்சம் ஒரு பக்கத்துக்கு 75 பைசா விலை தாண்டக்கூடாது.
எந்தப்புக்கா இருந்தாலும்,ஒன்றுக்கு மேற்பட்ட பிரசூரங்களால் வெளியிடப்படும் புத்தகமெனில் விலை வேறுபாடு,மலிவு பதிப்பு இருக்கும் என்பதால் "போனா வராது"என்றெல்லாம் பயப்படத்தேவையே இல்லை.
அதை தாண்டி விலை வருவது போல வச்சிருந்தா எவ்வளவு தான் நல்ல புத்தகம், படிக்காட்டி செத்துடுவோம்னு சொன்னாக்கூட வாங்க மாட்டேன் :-))
ஹி...ஹி அவசியம் படிக்கனும் என இருந்தால் "வேற வழியில்" செலவேயில்லாமல் படிச்சிறுவேன்ல ,நாங்கல்லாம் 10,000 ருவானு விலை போட்ட புக்க 100 ரூவா செலவுல ஜெராக்ஸ் போட்டு படிச்சவய்ங்க :-))
# ரேண்டமா ஏதோ ஒரு புக்க எடுத்து ,ரேண்டமா ஏதோ ஒரு பக்கத்தில் இருந்து படிக்க ஆரம்பிச்சால் எவ்ளோ மொக்கையான புக்கா இருந்தாலும் சுவாரசியமாக இருக்கும் :-))
# பிரதாப முதலியார் சரித்திரம் புக்கு பேரு கூட கண்ணில படுது, அதை யாரு முழுசா படிச்சு முடிக்கிறாங்க என அறிய காத்திருக்கிறேன் அவ்வ்!
தலைவர் சுஜாத்தாவிடம் இருந்தே துவங்குங்கள். . . திசைகண்டேன், வான் கண்டேன் அருமையாக இருக்கும்.
வித்தியாசமான தேடல்தான்! வாங்கியிருக்கும் புத்தகங்களும் பிரமிக்க வைக்கின்றன! நன்றி!
மனிதனும் மர்மங்களும் – மதன் – கிழக்கு பதிப்பகம் – ரூ.140: I EXPECTED A LOT BUT NOT UPTO MARK.IT TEST UR PATIENCE.
I WISH U TO FINISH READ ALL THIS.
நல்லதொரு தேடல்...
//அவசியம் படிக்கனும் என இருந்தால் "வேற வழியில்" செலவேயில்லாமல் படிச்சிறுவேன்ல ,நாங்கல்லாம் 10,000 ருவானு விலை போட்ட புக்க 100 ரூவா செலவுல ஜெராக்ஸ் போட்டு படிச்சவய்ங்க :-))//
அடங்கப்பா ராசா வவ்வாலு, நீதானே ரீசன்டா காப்பி அடிக்குறத பத்தி பதிவு போட்ட புண்ணியவான்?
எங்க தலை போயும் போயும் ஒரு தலைப்பைச் சுட்டதுக்கு ஊமைக்குத்தா குத்தினே... அடுத்தவன் புக்கை திருட்டுத்தனமா ஜெராக்ஸ் போட்டு படிக்குறது மட்டும் ஓக்கேவாக்கும்? உன்னை மாதிரி பல பேரு தமிழ்நாட்டுல அவன் பேக்க ஒழுங்கா கழுவாம அடுத்தவன் கக்கூஸ்லா புகுந்து புத்தி சொல்லியே பொழப்ப ஓட்டுறானுவ! நல்லாவருவ!
இவன்
கேபுள்சங்கர் கொலைவெறி தாக்குதல் படை
பப்பரபே நாயக்கன்பட்டி
இருண்ட ஆப்பரிகா.
சொக்கன்,
இந்தியா வரும்போது எங்களை சந்திக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது... வாழ்த்துகள் :)
சரவ்,
உங்களை சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி...
சீனு,
கே.என்.சிவராமன் அடுத்ததாக சகுனியின் தாயம் தொடங்கிவிட்டார் :)
வவ்வால்,
// ரேண்டமா ஏதோ ஒரு புக்க எடுத்து ,ரேண்டமா ஏதோ ஒரு பக்கத்தில் இருந்து படிக்க ஆரம்பிச்சால் எவ்ளோ மொக்கையான புக்கா இருந்தாலும் சுவாரசியமாக இருக்கும் :-)) //
நீங்க எந்த சரக்கு கிடைச்சாலும் தண்ணி கூட கலக்காம மொடக்கு மொடக்கு'ன்னு குடிக்கிற ஆசாமியா இருப்பீங்க போல இருக்கே :)
// பிரதாப முதலியார் சரித்திரம் புக்கு பேரு கூட கண்ணில படுது, அதை யாரு முழுசா படிச்சு முடிக்கிறாங்க என அறிய காத்திருக்கிறேன் அவ்வ்! //
அதென்ன அவ்வளவு மோசமான புத்தகமா ?
நன்றி ராஜா,
திசை கண்டேன் வான் கண்டேனிலிருந்தே துவங்குகிறேன்...
சீன் கிரியேட்டர்,
மனிதனும் மர்மங்களும் வாங்கிய வேகத்தில் ஒரு நண்பர் லவட்டிக்கொண்டு போய்விட்டார்... அவர் திருப்பித் தந்ததும் தான் படிக்க முடியும்...
aha aha nice
// கேப்டன் பிரின்சின் பயங்கரப் புயல் – லயன் முத்து காமிக்ஸ் – ரூ.60
ஒரு சிப்பாயின் சுவடுகளில் – லயன் முத்து காமிக்ஸ் – ரூ.100//
அருமை! இரண்டுமே வெவ்வேறு பாணியிலான சுவாரசியமான கதைகள்!
//அடுத்த சிக்கல் வாசிப்பை எங்கிருந்து துவங்க வேண்டும் என்பதுதான். பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன...!//
மிகப் பெரிய பட்டியல் தான்! எளிமையான / வேகமான வாசிப்புடன் ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டுமானால், பயங்கரப் புயலுடன் துவங்குங்களேன்! :)
கார்த்திக்,
சிப்பாயின் சுவடுகளில் உங்களுடைய பரிந்துரையின் பெயரில் தான் வாங்கினேன்...
பயங்கரப் புயல் பின்னட்டையை படித்துப் பார்த்துவிட்டு ஒரு நம்பிக்கையில் வாங்கினேன்...
நான் இதுவரை காமிக்ஸ் அதிகம் படித்ததில்லை... எடுத்ததும் அதை தொடங்கினால் எப்படி இருக்கும் என்று பயமாக உள்ளது...
பிரபா,
//நீங்க எந்த சரக்கு கிடைச்சாலும் தண்ணி கூட கலக்காம மொடக்கு மொடக்கு'ன்னு குடிக்கிற ஆசாமியா இருப்பீங்க போல இருக்கே :)//
எந்த சரக்கும் நல்ல சரக்கு தான் புட்டியில் இருக்கையிலே நல்லா இருப்பதும்,இல்லாததும் குடிப்பவரின் நாவைப்பொறுத்தே!
ஒரு மட்டமான சரக்கும் நமக்கொரு சேதி சொல்லும், இது போல மட்டமான சரக்கை இனிமேல் குடிக்காதனு அவ்வ்!
கண்டதை தின்றால் குண்டன் ஆவான்,கண்டதைப்படித்தால் ஞானியாவான்!
ஹி...ஹி ரொம்ப மொக்கை போடுறேன் போல இருக்கு, நல்லப்புக்கு,நல்லப்படம்னு அடுத்தவர் ரசனை வச்சு முடிவுக்கு வருவது எனக்கு புடிக்காது, எனவே நானே கண்டறிஞ்சு அனுபவம் பெறனும் என்பதால் ரேண்டம் சாம்ப்ளிங்க் தான் சரினு நினைப்பேன்.
#//அதென்ன அவ்வளவு மோசமான புத்தகமா ?//
ச்சே ச்சே அப்படிலாம் இல்லை,ஆனந்தரங்கப்பிள்ளை டயரிக்குறிப்புகள் வகையறா,படிக்கலாம்,நான் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் நூலகத்தில் இருந்து படிக்க எடுத்து 15நாட்களுக்குள் முழ்சா படிக்க முடியாம போன நூல், குர்க்கா கத்தி எடுத்தால் எப்படி ரத்தம் பார்க்காமல் வைக்க மாட்டானோ,அதே போல அடியேனும் நூலகத்தில புக்கு எடுத்தால் படிச்சு முடிக்காம குடுக்க மாட்டேன்,ஆனால் முதலியார் சரித்திரம் காலை வாரிடுச்சு அவ்வ்!
முன்விசாரனையில்லாமல் படிக்கிற நமக்கே அப்படியாச்சே,விசாரிச்சு படிக்கிற மக்களுக்கு எப்படியாகும்னு தெரிஞ்சிக்க தான்!
--------------------
# //நான் இதுவரை காமிக்ஸ் அதிகம் படித்ததில்லை... எடுத்ததும் அதை தொடங்கினால் எப்படி இருக்கும் என்று பயமாக உள்ளது...//
அடடா..சின்ன வயசில காமிக்ஸ் படிக்காமல் போயிட்டால் பெரியவங்களானப்பொறவு காமிக்ஸ்ல ஆர்வம் வராதே, எனக்கு எழத்துக்கூட்டி படிக்க கத்துக்கொடுத்ததே "கன்னித்தீவு" லைலா தான் :-))
ஹி...ஹி இன்னமும் சிந்துபாத் லைலாவ தேடிக்கிட்டுதான் இருக்கார் தினத்தந்தியில அவ்வ்!
காமிக்ஸ் ஆர்வத்துல சப்பான்காரங்கள அடிச்சுக்கவே முடியாது,அடல்ட்ஸ் ஒன்லி கதையா இருந்தாலும் காமிக்ஸா தான் படிக்கிறாங்க அவ்வ்!
-------------------------------------
Post a Comment