அன்புள்ள வலைப்பூவிற்கு,
ஆடியோ போஸ்ட் வெளியிட வேண்டுமென்பது என்னுடைய நீண்டநாள் அவா. ஏற்கனவே
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருமுறை முயற்சி செய்தேன். தோல்வி. மொத்தம் நூற்றி
எழுபத்தைந்து முறை அந்த ஆடியோ கேட்கப்பட்டிருப்பதாக தரவு சொல்கிறது. அதில் நானே
ஐம்பது முறை கேட்டிருப்பேன். எத்தனை பேர் முழுவதுமாக கேட்டிருப்பார்கள் என்று
சொல்ல முடியாது. அதற்குப் பிறகு ஆடியோ முயற்சி ஏதும் செய்யவில்லை.
ஆடியோ போஸ்ட் வெளியிடுவதில் நிறைய சிரமங்கள் உள்ளன. முக்கியமானது இரைச்சல்.
நள்ளிரவில் அறையில் மின்விசிறியை எல்லாம் கூட நிறுத்திவிட்டு பதிவு செய்ய தயாரானேன்.
சி.பி.யூவிலிருந்து ஒரு சத்தம், கடிகாரம் டிக் டிக் என்று அடிக்கிறது. ‘நிசப்தத்தை’
புறக்கணித்துவிட முடியாத இடத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன். கடிகாரத்தை
நிறுத்தியிருந்தால் இன்னும் கூட சத்தம் குறைந்திருக்கும். அதிகம் அலட்டிக்கொள்ள
வேண்டாமென விட்டுவிட்டேன். அடுத்தது குரல். சென்ற முறை பதிவிட்டபோது வாய்ஸ் சர்பத்
சாப்பிட்டு பேசியது போல இருக்கிறது என்று சிலர் சொன்னார்கள். என்னுடையது இயல்பிலேயே
அப்படித்தான். சாதாரணமாக பேசும்போது பிரச்சனையில்லை. ஏதாவது திட்டமிட்டு பேசினால்
நாக்கு குழறும். ஒவ்வொரு பத்தியாக பதிவு செய்து அடோசிட்டியில் ஒன்று
சேர்த்திருக்கிறேன்.
இரண்டு நிமிடங்களுக்குள் முடிக்க விரும்பினேன். ஆனால் அநியாயத்துக்கு
ஐந்தரை நிமிடங்கள் வரை நீண்டுவிட்டது. விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...!
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
N.R.PRABHAKARAN
|
14 comments:
பிரபா,
அடோசிட்டி ,சவுண்ட் ஃபோர்ஜில் , நாய்ஸ் கேன்செலேஷன் என ஒன்று இருப்பதை அறியவில்லையா?
எளிதாக நாம பேசும்/பாடும் வாய்சின் ரேஞ்சில் மட்டுமே பதிவு ஆகும் படி செய்யலாம், அல்லது பதிவு செய்த பின் ஒயிட் நாய்ஸ் ரிமுவல் மற்றும் நாய்ஸ் கேன்சலேஷன் என செய்துக்கொள்ளலாம்.
உம்ம வாய்ஸை எஸ்பிபி மாதிரி கூட பிட்ச் ஷிப்ட் செய்து எளிதாக மாற்றலாம் அடாசிட்டி,சவுண்ட் ஃபோர்ஜில் :-))
ஆடியோ பதிவெல்லாம் ஒன்னும் புதுசு இல்லையே ரொம்ப நாளாக பாட்காஸ்ட் என இருப்பது தானே, இப்போ அவனவன் வீடியோ பதிவு (விமோ) போட்டுக்கிட்டு இருக்கான்.
வீடு என்ன திருவொற்றியூர் ஹை ரோட் மேலயே இருக்கா? நைட்ல போற தண்ணி லாரி ஹார்ன் சத்தம்லாம் கேட்குது அவ்வ்!
பேஸ் வாய்ஸ் நல்லா இருக்கு,ஆனால் எதுவும் ட்ரிக்கா?
ஹை ஃபிடலிடி லோ நாய்ஸ் மைக்னு கொஞ்சம் குவலிட்டியா வாங்கினால் ஹிஸ்ஸ் சவுண்ட் இல்லாம பதிவு செய்ய முடியும், விலை 1500 ரூ வரை ஆகும்.
பின்னர் ஒயிட் நாய்ஸ் ரிமுவல்,நாய்ஸ் ரெடெக்ஷன் என டச் அப் செய்தால் பக்காவா வரும்.
பிரபா,
உங்கள் குரலை அதிகம் கேட்டதில்லை, நாம் சந்தித்திருக்கும் ஓரிரு நாட்களிலும் கூட அதிகம் பேசிக்கொண்டதில்லை, Men of few words!
ஆடியோ தெளிவோ தெளிவு. குரலில் ஏற்ற இறக்கங்கள் மட்டும் கொஞ்சம் மாற்றினால் இன்னும் அருமையாக இருக்கும் என்று நினைக்கிறேன். இருந்தாலும் உங்கள் எழுத்துக்களை வாசிக்கும்போது இருக்கும் கிக் இதில் குறைவே! மற்றபடி ஆடியோ பதிவுகள் வரவேற்கப்படுகின்றன.
voice is nice...keep it up
இதுல "அரசியல்" ஒண்ணும் இல்லையே.. அக்கவுண்ட்ஸ் படிச்ச ஆட்டுக்குட்டியா..! ம்ம்ம் என்னவோ போடா மாதவா ஒண்ணுமே புரிய மாட்டீங்குது..
அசத்தல்
நல்ல முயற்சி பாராட்டுகள்
ம்
நல்லாதான்யா கோர்க்றீங்க
sign in பண்ண சொல்லி கேட்கிறதே!
பிரபா.... நல்ல பதிவுதான்....நீயும் ஆட்டுகுட்டிகளோட success meet போயிருந்த போல... பேச்சுலயே தெரியுது... ஹி...ஹி...
//"நிசப்தத்தை’ புறக்கணித்துவிட முடியாத இடத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்.//
மேற்படி வரிக்கும் , இந்த ஆ.ப விற்கும் எதுனா தொடர்பிருக்கும்போல , எனக்கு தான் ஒன்னும் வெளங்க மாட்டீங்குது ...
வாய்ஸ் மாடுலேஷன் சுமார்தான் . நாலஞ்சு எடத்துல வெக்கம்? தொண்டையை அடைத்துவிட்டது :) ...
கவுதம் பட ஹீரோ மாதிரியான வாய்ஸ் ...
எதுனா லவ் ஸ்டோரிய ஆ.ப போடுங்க , வாய்ஸ்க்கு சூட்டாகும் ...
வவ்வால்,
எனக்கு ஆடோசிட்டியில் வெட்டுவது, ஓட்டுவது மட்டும்தான் தெரியும்... மிஞ்சி மிஞ்சி போனால் வாய்ஸ் பூஸ்ட் செய்வேன்... அவ்வளவே...
பாட்காஸ்ட் எல்லாம் ரொம்ப நாளாக இருந்தாலும் வலைப்பதிவர்கள் மத்தியில் ஆடியோ போஸ்ட் குறைவுதானே... வீடியோ பதிவு கூட அரிதாக சிலர் சினிமா விமர்சனம் போடுகிறார்கள்...
வீடு திருவொற்றியூர் ஹை ரோட்டோரமாக இருக்கிறது... வாகன இரைச்சல் இதுவே குறைவு... ஒரு கண்டெயினர் லாரி போனால் முப்பது நொடிகளுக்கு இடைவிடாமல் இரைச்சல் கேட்டுக்கொண்டிருக்கும்...
ஜீவன் சுப்பு,
நிசப்தத்திற்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது... ஒரு ஃபிளாவில் நிசப்தம் என்ற வார்த்தை வந்தது... அதனை மேற்கோள் குறிக்குள் போட்டால் நன்றாக இருக்குமென போட்டேன்...
I remember ur previous voice post.. It was based on a book fair if am correct..
Ur reference to "pee kathaigal" and "pin- naveenaththuvam".. Few clusters i can recollect..
This one s really nice..
U wud ve rather tried this one as a video post.. With two candles.. Cud ve been funnier.. :)
அனுஷா மாதிரியான எந்த மொழியும் தெரியாதவங்களுக்கு இது போன்ற ஆடியோ போஸ்டுகள் உதவியா இருக்கும்..என்ன நா சொல்றது?
Post a Comment