அன்புள்ள வலைப்பூவிற்கு,
கார்த்திக் சுப்பராஜ் கையில்
கிடைத்தால் கட்டி வைத்து உதைக்கவேண்டும். அந்த மனுஷன் ஒரு பீட்ஸா எடுத்தார். உடனே
ஆளாளுக்கு பொங்கல், உப்புமா, கெட்டிச்சட்டினி என்று வரிசையாக தூக்கிக்கொண்டு வர
ஆரம்பித்துவிட்டார்கள். பல பூனைகள் கொள்ளிக்கட்டையை எடுத்து உடலில் கோடுகள்
இழுத்துக்கொண்டு மியாவ் மியாவ் என்று கத்திக் கொண்டிருக்கின்றன. (வில்லா, யாமிருக்க
பயமே, ஆ போன்றவை மியாவ் லிஸ்டில் வராது). அந்த
லிஸ்டில் சமீபத்தில் வெளிவந்திருக்கும் பூனை - 13ம் பக்கம் பார்க்க. பாவம் பூனை, பார்க்கவே
பரிதாபமாக இருக்கிறது.
கதையின் கரு ஒரளவுக்கு பரவாயில்லை. ஒரு
எழுத்தாளர் ஒரு திகில் கதை எழுதுகிறார். தன்னுடைய வழக்கப்படி முதல் ஆளாக
மனைவியிடம் படிக்கக் கொடுக்கிறார். மனைவி மர்கயா. பதிப்பாளர் ஒருவர் கதையின்
ரைட்ஸ் வாங்கி பதிமூன்றாயிரம் காப்பி அச்சடிக்கிறார். (அடேங்கப்பா கதாசிரியருக்கு
அபார கற்பனை). பதிப்பாளரும், பதிமூன்றாயிரம் காப்பிகளும் தீக்கிரை. ஒரேயொரு காப்பி
மட்டும் தப்பிப் பிழைத்து ஒவ்வொரு கையாக மாறுகிறது. அதனை படிப்பவர்கள் எல்லோரும்
இறக்கிறார்கள். விஷயம் என்னவென்றால், அதன் பதிமூன்றாம் பக்கத்தில் ஒரு துஷ்ட
மந்திரம் எழுதப்பட்டுள்ளது. அதனை வாசித்தால் காட்டேரி வந்து ரத்தம் கேட்குமாம். கொடுக்காவிட்டால் படித்த நபரை ஆ போட்டுக் கொள்ளுமாம்.
படம் தொடங்கியதும் நிஜமாகவே
பயந்துவிட்டேன். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மூக்கையும் அதன் கீழுள்ள துவாரங்களையும்
க்ளோஸப்பில் காட்டி மிரள வைத்திருக்கிறார் இயக்குநர். அட்லீஸ்ட் கதாநாயகியின் துவாரங்களை
காட்டினாலாவது நேசோபிலியாக்கள் ரசிக்கக்கூடும். வையாபுரி, டெல்லி
கணேஷ், எம்.எஸ்.பாஸ்கர் போன்ற மூத்த துணை நடிகர்களின்
மூக்கையெல்லாம் க்ளோஸப்பில் காட்டினால் என்னத்துக்கு ஆவது ?
அப்புறம் ப்ரொடக்ஷன் யூனிட்டில் யாரோ
ஒரு பெண்மணி ஊட்டி குளுரில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுவிட்டு தொண்டையை செருமிக்கொண்டே
இருந்திருக்கிறார். அதையும் தவறுதலாக படத்தின் பின்னணி இசையோடு
சேர்த்துவிட்டார்கள். அந்த அம்மாளுக்கு யாராவது விக்ஸ் மாத்திரை வாங்கிக்
கொடுத்தால் உத்தமம். அடிக்கடி பேய்கள் வேறு டாக்கிங் டாம் குரலில் பேசி கிச்சு
கிச்சு மூட்டுகின்றன. கிராபிக்ஸ் குப்பை.
ஸ்ரீ ப்ரியங்காவுக்கு பாந்தமான முகம்.
விளக்கி வைத்த குத்துவிளக்கு போல இருக்கிறார். வசனம் அங்கொன்றும் இங்கொன்றுமாக
நன்றாக இருக்கின்றன. உதாரணமாக, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படத்தில் கே.ஆர்.விஜயா
பேசும் வசனம் ஒன்று. தாஜ் நூர் இசையில் டைட்டில் பாடல் சுமார்.
மொக்கையா படம் எடுங்க, வேணாம்ன்னு
சொல்லல. ஆனால் புதுசா ஏதாவது மொக்கை படம் எடுங்க'ன்னு தான் சொல்றேன். எத்தனை காலத்துக்கு
தான் ஹாண்டட் ஹவுஸ், நியூலி மேரீட் கப்பிள்ஸ் (மேட்டரும் கிடையாது), மனைவியை
பேய் பிடிக்கிறது, விபூதி, ருத்ராட்சம் போன்ற தெய்வ சமாச்சாரங்களை கண்டால்
பேய்கள் மிரளுவது, சாமியார் உதவியை நாடுவது, ஆன்மிக
உபயத்தில் பேயை விரட்டுவது, கடைசியாக இரண்டாம் பாகத்துக்கு லீட் கொடுக்கும் வகையில் ஒரு மொக்கை க்ளைமாக்ஸ் வைப்பது (ஆனாலும் இரண்டாம் பாகத்துக்கும்
உங்களுக்கு ஒரு ஈனா வானா ப்ரொட்யூசர் கிடைப்பார் என்கிற தன்னம்பிக்கை என்னை வியக்க
வைக்கிறது) போன்ற ஈய பித்தளை ஹாரர் படங்களை எடுப்பீர்கள் !
என்றும்
அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
11 comments:
பிரபா.. back to pavilion ah?
அப்போ இந்த பேயும் மொக்கைதானா??
Good to see you back.
பதிவு அருமை....
இந்த மாதம் அல்லது வாரம் பேய்ப் பட வாரம் போல, நான்கைந்து பேய்படங்கள் வந்துவிட்டன போலும்..
சீ(சி)ரியஸான விமர்சனம் ;-)
interesting review... again start the wineshop...
ஆமாம் இப்படி ஒரு படம் வந்ததா?....
back to the form prabha
Welcome Back Prabha...
vanthuttaya vanthuttaaan
தக்காளி நானும் இந்தப் படத்தை ஞாயிறன்று பார்த்தேன்.. சனி இரவு ஏற்கனவே “ர” பார்த்த கடுப்பில் இருந்தேன்.. இந்தப் படம் பார்த்த பின் “ர” எவ்வளவோ பரவாயில்லை..
ராம், என்னுடைய கெட்ட நேரம் இப்போதுதான் ர பார்த்துவிட்டு வீடு திரும்பியிருக்கிறேன்...
Post a Comment