15 December 2014

கவர்ச்சி

அன்புள்ள வலைப்பூவிற்கு,


சமீபத்தில் ஒருநாள் தொலைக்காட்சியில் மஸ்காரா போட்டு மயக்குறியே என்கிற திரைப்பாடல் ஓடிக்கொண்டிருந்தது. அதில் ஆடிக்கொண்டிருந்த நடிகையின் முகத்தை பார்த்தால் ஒரு வாரத்திற்கு சோறு இறங்காது. ஏனய்யா ஐட்டம் சாங்கில் ஆட வைக்க வேறு ஆளே கிடைக்கவில்லையா ? முதிர்ச்சி பெற்ற அந்த அம்மணியின் பெயர் அஷ்மிதா. This is my first film என்று ஒரு பேட்டியில் திருவாய் மலர்ந்திருக்கிறார். அஷ்மிதாவின் திருமுகத்தை ஏதோ ஒரு பி-கிரேடு படத்தில் பார்த்திருக்கிறேன். படத்தின் பெயர் சரியாக நினைவுக்கு வரவில்லை. ஒன்றிரண்டு பார்த்திருந்தால் தானே ? கூகுள் செய்தேன். அஷ்மிதா இதுவரை (கூகுளுக்கு தெரிந்து) நடித்திருக்கும் பி-கிரேடு படங்களின் பட்டியல் –
  • கலப்படம்
  • இயக்குநர் (சமீபத்தில் மறைந்த சுருளி மனோகர் இயக்கியது)
  • உனது விழியில்
  • காணும் கனவுகள்
  • என்னைப் பிரியாதே
  • தேள் 
  • காதல் வலி (தெலுங்கில்: இந்த்லோ ராமுடு வீதிலோ மன்மதுடு)
  • கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு

மஸ்காரா பாடலை தொடர்ந்து பார்த்தபோது தொலைக்காட்சி திரையில் குறுக்க மறுக்க ஒரு உருவம் அசந்தர்ப்பமாக நடனமாடிக்கொண்டிருந்தது. பற்றாத குறைக்கு அடிக்கடி பாடலின் வரிகள் திரையில் எழுத்துகளாக தோன்றியது. கராவோக்கேவாம். கருமம் டா. லைட்டிங் வேறு ஏடாகூடமாக இருந்தது. பாடலில் ஏதோ ஒரு குறை இருப்பதை உணர்ந்து யூடியூபில் தேடினால் அதில் இந்த சிக்கல்கள் எல்லாம் இல்லாமல் காட்சிகள் பளிச்சிடுகின்றன. விஷயம் என்னவென்றால் தொலைக்காட்சிக்காக பாடலை சென்ஸார் செய்திருக்கிறார்களாம்.

முன்னொரு காலத்தில், ஜில்லா படத்தில் ஜிங்குனமணி ஜிங்குனமணி என்று ஒரு பாடல். அதனை சென்ஸார் அதிகாரிகள் கதறக் கதற கற்பழித்திருந்தார்கள். அதைப் பார்த்த ரசிகர்கள் பலர் போங்கய்யா உங்க பூசாரித்தனமும் வேண்டாம் உங்க பொங்கச்சோறும் வேண்டாம் என்று விரக்தியுற்றார்கள். ரசிகர்களை விடுங்கள். எங்கேயோ ஆங்கில மண்ணில் பிறந்து நமக்காக கலைச்சேவையாற்ற வந்த அந்த இரண்டு அம்மாள்கள் மனம் என்ன பாடுபட்டிருக்கும் ? 

அதேபோல சிங்கம் படத்தில் அனுஷ்கா திறந்த மனதுடன் நடித்த ஒரு பாடல். அதை ஒருமுறை தொலைக்காட்சியில் பார்த்தபோது திரையில் யாரோ வனஸ்பதியையோ டால்டாவையோ ஈஷியிருக்கிறார்கள் என்றெண்ணி அவசர அவசரமாக ஒரு துணியை கொண்டுவந்து துடைக்கலானேன். அப்புறம் தான் தெரிந்தது அதுவும் சென்ஸார் ஆசாமிகளின் வேலை என்று. அந்தப் பாடலை அப்படியே விட்டிருந்தால் கூட அதிலிருந்த விஷயத்தை அனேகர் கவனித்திருக்க மாட்டார்கள். அதன் மீது வானவில்லில் உள்ள அத்தனை வண்ணங்களையும் பூசி அனைவரது பார்வையையும் பதிய வைத்துவிட்டீர்களே அய்யா. ஆமாம் உங்களுக்கு ஏனிந்த அக்கறை ? அனுஷ்காவுக்கு இல்லாத அக்கறை ? சென்ஸே இல்லாதவர்களுக்கு சார் போடுவது தான் சென்ஸார் என்று அன்றே சொன்னார் எஸ்.ஜே.சூர்யா.

சென்ஸார் கூத்துகள் ஒரு பக்கம் என்றால் அதற்கு நேர் மாறாக ஒரு சிக்கல். கவர்ச்சிக்கும் ஆபாசத்திற்கும் இடையே ஒரு மெல்லிசான கோடு என்று நடிகைகள் பேட்டியில் அடிக்கடி கேட்டிருப்போம். அந்த கோட்டினை பற்றியது தான். ப்ரியா ஆனந்தை எனக்கு பிடிக்கும். எதிர்நீச்சலில் அந்தமான் கடற்கரையில் காட்சியாக்கப்பட்ட ஒரு பாடலில் இருந்து பிடிக்க ஆரம்பித்துவிட்டது. அந்த மெல்லிசான கோடு சமாச்சாரத்திற்கு ஒரு நல்ல உதாரணம் அந்த பாடல். ஆனால் சமீப படத்தில் ப்ரியா ஒரு ஆட்டம் போட்டிருக்கிறார் பாருங்கள். கவர்ச்சி என்றால் அரைகுறையாக உடுத்திக்கொண்டு தங்கு புங்கென்று குதிப்பது என்று ப்ரியாவுக்கு யாரோ தவறாக சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். உடன் ஆடுவது யாரென்று பார்த்தால் தமிழ் சினிமாவின் தற்போதைய தலைசிறந்த நடிகர் விமல். அன்னாருடைய கைகளை எடுத்து தம்முடைய இடுப்பில் வைத்துக்கொள்கிறார், யாருக்காகவோ புட்டத்தை வெடுக் வெடுக்கென ஆட்டுகிறார் (பார்க்க 3:18). இது தற்காலிகமாக கொஞ்சம் கிளுகிளுப்பூட்டுகிறது என்றாலும் கூட ப்ரியாவின் கேரியருக்கு நல்லதல்ல. இப்படியே ஆடிக்கொண்டிருந்தால் (அதுவும் விமல் போன்ற மகாநடிகர்களுடன்) கூடிய விரைவில் அஞ்சலி லிஸ்டில் நீங்களும் சேர வேண்டியது வரும் ப்ரியா ஆனந்த் !

என்றும் அன்புடன்,
N.R.Prabhakaran

Post Comment

11 comments:

Ponmahes said...

பிரியா ஆனந்த்துக்கு இல்லாத அக்கறை உனக்கு எதுக்கு லே...

பதிவு அருமை. வாழ்த்துக்கள்....

NSK said...

அஸ்மிதாவின் லிஸ்ட் கொடுத்தமைக்கு நன்றி

அனுஷ்யா said...

சமூக அக்கறை கொண்ட எழுத்துகளுடன் ஒவ்வொரு வரியும் விரைத்து நிற்கின்றன.. அநியாயத்திற்கு எதிராக உச்சம் அடைந்திருக்கும் பதிவு..

அனுஷ்யா said...

C.S.அமுதன் 'தமிழ்ப்படத்தில்' கவரிமான் கஸ்தூரி ஆடும் 'குத்துவிளக்கு' பாடலில் சென்சாரின் இந்த கோமாளித்தனத்தை அருமையாக Spoof செய்திருப்பார்..

அனுஷ்யா said...

அப்றம் ப்ரியா ஆனந்த்...

சகப் போராளிகளை சீண்டிப்பார்ப்பதில் அப்படி என்னமய்யா உமக்கு ஆனந்தம்??

எதிர்நீச்சல் வெளியான சமயத்திலேயே அம்மணிக்கு காப்புரிமை கோரி மதுபாலாவுடனெல்லாம் ஒப்பிட்டு மூஞ்சிபுக்கில் பதிவு எழுதியிருந்தேன்.. ஏற்கனவே காஜல், சம்மு வழக்குகளே 2,40,000 பக்கங்களுடன் வாய்தா வாங்கிக்கொண்டிருக்க இப்போ இன்னொரு அவதூறு வழக்கு...

எங்கெய்யா அந்த மலானி பய...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒரு தமிழ் நடிகை முன்னுக்கு வர்ரதுல உமக்கு என்னய்யா கோவம்?

Philosophy Prabhakaran said...

மயிலன், அநேகமாக நாம் காஜல், சம்மு, ப்ரியா ஆனந்த் போன்றவர்களை கடந்து அடுத்தகட்டத்திற்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

Philosophy Prabhakaran said...

ப.ரா, தமிழ் நடிகைகள் தான் இவ்வாறு சூது வாது தெரியாமல் கட்டவிழ்த்துவிட்டு துரிதமாக காணாமல் போகிறார்கள். ஒரு விழிப்புணர்வு வேண்டுமில்லையா...?

'பரிவை' சே.குமார் said...

பதிவு அருமை...
இடுப்பை வெட்டு வெட்டுன்னு வெட்டுறதைப் பார்த்தேன்...
அதுக்கு பணமுடை போல கடை விரிச்சிப் பாக்குது...

N.H. Narasimma Prasad said...

தொடர்ச்சியா பதிவு எழுதுறீங்க? உங்க மனைவி ஊர்ல இல்லையா? இல்ல இப்போ தான் பதிவு எழுதுற ஞாபகம் வந்ததா?

Philosophy Prabhakaran said...

ரெண்டும்தான் பிரசாத் :)