1 January 2015

டைரி

அன்புள்ள வலைப்பூவிற்கு,


டைரி எழுத வேண்டும் என்பது என்னுடைய நீண்டகால அவா என்றாலும் அதில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் உள்ளன. மனம் தளராமல் தொடர்ச்சியாக எழுத வேண்டும். யார் கையிலும் சிக்கி விடாமல் பொத்திப் பொத்தி பாதுகாக்க வேண்டும். அப்படியே பாதுகாத்தாலும் கூட ஒரு insecured feeling இருக்கும். அதனால் எல்லா ரகசியங்களையும் அப்பட்டமாக எழுத முடியாது. சரி, சங்கேத மொழியில் எழுதலாம் என்றால் அது பின்னாளில் நமக்கே புரியாமல் போகக்கூடிய அபாயம் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக எழுதுவதற்கு தேவையான அரை மணிநேர தனிமை கிடைக்காது. இது போன்ற காரணங்களுக்காக நான் இதுவரையில் ஹார்ட் காப்பியாக டைரி எழுதியது கிடையாது. (கூகுள் நோட்புக் என்ற சேவை இருந்தபோது சுமார் ஓராண்டுகாலம் சாஃப்ட் காப்பியாக டைரி எழுதியிருக்கிறேன்).

தேடிக் கண்டுபிடித்து வாங்கிய நோட்புக்
சமீபகாலமாக ஒரு எண்ணம். டைரி எழுதினால் வாழ்க்கையின் பல அற்புதமான தருணங்களை பதிவு செய்யலாமே என்று தோன்றுகிறது. குறிப்பாக எனது மகளுடைய குழந்தை பருவத்தை எனது வார்த்தைகளில் பதிவு செய்து வளர்ந்த பிறகு அவளிடம் காட்ட வேண்டும் என்கிற பேராவல். நியாயமாக பார்த்தால் இரண்டு வருடங்களுக்கு முன்பே நான் டைரி எழுத ஆரம்பித்திருக்க வேண்டும். யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் வருத்தமாகத் தான் இருக்கிறது. இப்போதும் ஒன்னும் கெட்டுவிடவில்லை, கொஞ்சம் ஃப்ளாஷ்பேக்கையும் சேர்ந்து டைரியில் எழுதிக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். எனக்கு வரிசையாக தேதி போட்டு, ஞாயிற்றுக்கிழமைகளுக்கு அரைநாள் மட்டும் ஒதுக்கும் ஒழுங்குமுறை டைரிகள் ஒத்துவராது. சுதந்திரமாக எழுத வேண்டும். தேவைப்பட்டால் ஆறு பக்கமும், இல்லையென்றால் அரை பக்கமும் எழுதிக்கொள்ளும் சுதந்திரம் வேண்டும். அதற்காகவே தேடிக் கண்டுபிடித்து ஸ்பெஷலாக ஒரு நோட்டு புத்தகம் வாங்கியிருக்கிறேன். கீ-போர்டில் நடனமாடிய எனது விரல்கள் இனி மகளுக்காக பேனாவும் பிடிக்கப் போகிறது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

8 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நல்ல முடிவு. புத்தாண்டு வாழ்த்துக்கள்
டைரி எழுதுகிறோமோ இல்லையோ. ஒவ்வொரு வருடமும் ஓசியில் வருபவற்றை வாங்கி வைத்து விட வேண்டும். பின்னாளில் குழந்தைகளுக்கு ரஃப் நோட்டாகப் பயன்படும்

Ponmahes said...

// கொஞ்சம் ஃப்ளாஷ்பேக்கையும் சேர்ந்து டைரியில் எழுதிக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.


ண்ணா...பிளாஷ்பேக் ன்னா க.முவா(கல்யாணத்துக்கு முன்) இல்ல க.பி யா(கல்யாணத்துக்கு பின்).

இல்ல க.மு ன்னா நம்மள பத்தி நாமளே கழுவி கழுவி ஊத்த வேண்டியிருக்கும் அதான் தெரிஞ்சிக்கலாம் ன்னு கேட்டேன்....

saamaaniyan said...

இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr

unmaiyanavan said...

அட! ரொம்ப நல்ல விஷயமுங்க. சூப்பர்.
"//கீ-போர்டில் நடனமாடிய எனது விரல்கள் இனி மகளுக்காக பேனாவும் பிடிக்கப் போகிறது.//"
விரல்கள் பேனாவைப் பிடிப்பதற்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.
ஏனென்றால், இன்றைக்கு பேனா பிடித்து எழுதும் பழக்கமே மறைந்து கொண்டு வருகிறதே!

'பரிவை' சே.குமார் said...

நல்ல விஷயம்... முடிவு செய்ததை செயல் படுத்துங்கள்... வாழ்த்துக்கள்...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இது உனது நானூறாவது பதிவு. வாழ்த்துக்கள்

Philosophy Prabhakaran said...

ஆமாம் முரளிதரன்... கவனித்து குறிப்பிட்டமைக்கு நன்றிகள்..

N.H. Narasimma Prasad said...

நானூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள். டைரி எழுதுவது நல்ல பழக்கம். காரணம், அந்த பழக்கம் எனக்கில்லை.