வணக்கம் மக்களே...
இரண்டே நாட்களில் பதிவர்கள் அனைவரும் பாரபட்சம் பார்க்காமல் நித்யானந்தரைப் (ர் என்ன ர்... ன் னுன்னே சொல்லலாம்) நித்யானந்தனைப் பற்றி புகழ்ந்து தள்ளிவிட்டனர். நான் புதிதாக சொல்வதற்கு எதுவும் இல்லை. வலையில் உலவியபோது ஒரு வரலாற்று சிறப்புமிக்க செய்தி கிட்டியது.
இப்போது ஆசாமியாரை வறுத்தெடுத்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் ஒரே நடுநிலையான நாளிதழ் "தினகரன்" பிப்ரவரி 18 அன்று வெளியிட்டுள்ள செய்தி:
கோவை: கோவை வ.உ.சி பூங்கா மைதானத்தில், பெங்களூர் நித்யானந்த தியான பீட நிறுவனர் பரமஹம்ச நித்யானந்தர் நேற்று நிகழ்த்திய அருளுரை:
"மனிதன் துன்பத்தில் சிக்கி தவிக்கிறான். துன்பத்துக்கு காரணம், நாம் செய்த தவறுகள் குறித்த குற்ற உணர்ச்சி, அடைந்த வெற்றிகள் குறித்த பெருமிதம் ஆகியவைதான்.
மனம் என்பது பொருள் அல்ல. அது ஒரு செயல். செயலுக்குள் சிக்காமல் இருப் பது விடுதலை உணர்வை தரும். தோல்வி வந்தால், அதை தைரியமாக சமாளித்து விடுவோம். அது நிகழும் வரையிலான பயமே அதிக துன்பம் தரும். வெளி மனம் தெளிவு. உள்மனம் தவிப்பு.
சரணாகதி என்பது, துன்பம், கோபம், ஆற்றாமை, இயலாமையை விட்டுவிடுவது. என்னை நம்பி சரணடைபவனுக்கு துக்கம் இல்லை என்கிறார் பகவான். மனதை உற்றுநோக்கி கட்டுப்படுத்தும் முயற்சி சிரத்தை. இதுவே தியானம்.
இந்த கணத்தில் வாழ்வதே ஆனந்தம். நிஜம். முடிவு பற்றிய சிந்தனை இல்லாதவனுக்கு வாழ்க்கை குறித்த பயம் இருக் காது. மனதுக்கு முதுமை வராது. 100 சதவீதம் உற்சாகத்துடன் கடைசி வரை செயலாற்றுபன் தலைவன் ஆகிறான். தியாகம் செய்கிறோம் என்ற எண்ணத்தை விடுவதே உண்மையான தியாகம்."
இவ்வாறு பரமஹம்ச நித்யானந்தர் பேசினார்.
source: http://www.dinakaran.com/nagaramdetail.aspx?id=5897
யாரு உண்மையான தலைவன்னு நீங்களே சொல்லுங்க மக்களே...!!!
|
3 comments:
/quote/தியாகம் செய்கிறோம் என்ற எண்ணத்தை விடுவதே உண்மையான தியாகம்."/quote/
அதுதான் தன் துறவு வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டாரா? உண்மையான துறவு வாழ்க்கை என்பது யாது சுவாமிகளே
நித்தியானந்தா...
இனி ஒரு விதி செய்வோம் - அதை
எந்த நாளும் காப்போம்
தனி ஒரு மனிதனுக்குக்
காயடித்த பின்னரே - இனிக்
காவி அணிவிப்போம்...
தனியொரு மனிதனின் லீலையைப்
படம் பிடித்து
வினியோகிப்பவனைத்
தரணியில் துரோகி என்போம்...
காமத்தை உணராத சன்னியாசி
முற்றும் அறிந்தவனாக முடியாது...
முற்றும் துறக்காத துறவி
பரமஹம்சனாக முடியாது...
காமம் செய்யும் குரு என்பவன்
கெட்டவனுமில்லை...
தொலைக் காட்சியில்
ஒளிபரப்புவோன்
புனிதனுமில்லை...
ஊரான் சொத்து 90 ஏக்கரை
தன் குடும்பம் என்ற கலைக்
குடும்பத்திற்குக் கொள்ளை அடித்ததை
கவனச் சிதறல் செய்ய
அஜீத் டயலாக் எபிசோட்...
மாணவர்கள் கொலை,
ஸ்டாலின் புத்தக சுயபாராட்டு
கவனச் சிதறலுக்கு
பேரம் படியாத
நித்தியானந்தா - ரஞ்சிதா
பழைய வீடியோ
ஒளிபரப்பு...
வாழ்க தமிழகம்!
நித்தியானந்தா
தற்கொலை வேண்டாம்..
துறவைத் துறந்து
ரஞ்சித்தாவை
அவர் விவகாரத்துப்
பெற்றபிறகு
முறைப்படி
மணந்து இன்புறுவாயாக...
பிறக்கும் குழந்தைக்கு
பரமானந்தன்
எனப் பெயர் சூடுக...
யார் யாரோ வாழ்கிறார்கள்
அட
நீங்களும்தான் வாழ்ந்துவிட்டுப்
போங்களேன்...
நடந்த அவமானமே
உங்களுக்குப்
போதிய தண்டனை!
Post a Comment