வணக்கம் மக்களே...
கொஞ்சம் மொக்கையாகத்தான் இருக்கும். என்ன செய்வது...? பூமிக்கும் பண்டோராவுக்கும் உள்ள இடைவெளியை விட எனதிரு பதிவுகளுக்கும் உள்ள இடைவெளி அதிகமாக இருப்பதாக நண்பர்கள் கண்டித்ததால் அவசரமாக இந்த பதிவைப் போடுகிறேன். அது மட்டுமல்ல. மருவத்தூர் பதிவு, அதற்கு ஷிவு போட்ட பின்னூட்டங்கள், சுரேஷுக்கு ஒரு கடிதம் என்று தொடர்ந்து சீரியஸாக போய்க்கொண்டிருந்தால் நமது ஹியுமர் இமேஜ் டேமேஜ் ஆகிவிடுமென்ற பயத்தில் இந்த பதிவைப் போடுகிறேன்.
படம் வெளிவந்து கிட்டத்தட்ட ஐம்பது நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இப்போதுதான் படத்தை பார்க்க முடிந்தது. படத்தில் கதை என்று சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை. ஆனால் விக்கிப்பீடியாவில் மட்டும் பக்கம் பக்கமாக என்னதான் போட்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. எல்லோரும் தமிழ்ப்படத்தை எப்படி ரசித்தார்களோ, அப்படித்தான் நான் வழக்கமாக பேரரசு, ஹரி படங்களையும் ரசிப்பேன். அந்த வரிசையில் சிவகாசி படத்திற்குப்பின் நான் குலுங்கிச்சிரித்த ஒன்றுதான் தமிழ்ப்படம்.
நாலு லொள்ளு சபா எபிசோடை ஒரே டேக்கில் பார்த்த ஒரு பீலிங். டைட்டில் கார்டு போடுவதில் இருந்தே கலாய்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள். கமல் சொன்னது போல கடைசி வரை அதை மெயின்டெயின் பண்ணவும் செய்திருக்கிறார்கள். ஈவன், நாயகன் மற்றும் நாயகியின் பாத்திரங்களின் பெயரில்கூட கலாய்ப்பதை விட்டுவைக்கவில்லை. கொஞ்சம் யோசித்து பாருங்களேன், முக்கால்வாசி கமர்ஷியல் சினிமாக்களில் நாயகன் பெயர் ஷிவாவாகவும் நாயகியின் பெயர் ப்ரியாவாகவும் தான் இருக்கும்.
கிழக்கே போகும் ரயில், கருத்தம்மாவில் ஆரம்பித்து கந்தசாமி வரை கிழித்திருந்தார்கள். நடிகர்களில் பாக்யராஜ், ராமராஜன் தொடங்கி சிம்பு வரை கலாய்த்திருக்கிறார்கள். முப்பதிற்கும் மேற்ப்பட்ட படங்கள் பஞ்சராக்க பட்டிருக்கிறது. அவற்றுள் எனக்கு பிடித்த நான்கினை மட்டும் போல்ஸில் இணைத்துள்ளேன். உங்களுக்கு பிடித்த காட்சியில் வாக்களித்து விடுங்கள்.
ஏற்கனவே படத்தை பார்த்தவர்களுக்கும் இனி பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் சில எச்சரிக்கைத்துளிகள்:
1. சிறுவர்கள் யாரும் ஸ்டாண்ட் போடப்பட்டிருக்கும் சைக்கிளின் மீது ஏறி அமர்ந்து பெடலை சுற்ற வேண்டாம். பின்னர் பின் விளைவுகள் மோசமாக இருக்கும்.
2. சிவாவைப் போல பரதம் ஆட யாரும் முயற்ச்சிக்க வேண்டாம். படத்தில் காட்டப்பட்ட காட்சிகள் தேர்ந்த நிபுணர்களால் பலத்த பாதுக்காப்புகளுக்கு மத்தியில் செய்யப்பட்டது.
3. படத்தில் காட்டப்படும் P.R.S. கள்ளிப்பால் விற்பனைக்குட்பட்டது அல்ல. டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு சென்று P.R.S கள்ளிப்பால் தான் வேண்டுமென யாரும் அடம் பிடிக்க வேண்டாம்.
படம் பார்த்த பின்பு இன்னமும் கூட கலாய்த்திருக்கலாமோ என்று தோன்றியது. அவ்வாறாக இயக்குனர் தவறவிட்ட சில சிக்சர்கள்:
1. வண்டிக்கடைகள் சிதற, மண்பானைகள் நொறுங்க, பொதுமக்கள் தெறித்து ஓட, என்பதுகளில் வெளிவந்த கிராமத்து படங்களில் காட்டப்பட்ட சந்தைக்கடை சண்டைக்காட்சி மிஸ்ஸிங்.
2. பாய்ஸ் பட பாணியில் யூத்துக்கள் பட்டாபி, வெண்ணிறாடை மூர்த்தி, மனோபாலா அறிமுகமாவது அமர்க்களம். ஆனால் பார்த்திபன் அல்லது கெளதம் மேனன் வாய்ஸில் ஒவ்வொரு யூத்துக்கும் ஒரு இன்ட்ரோ கொடுத்திருக்கலாம்.
3. விக்ரமன் படங்களில் வருவது போல "காதல்ங்கறது..." என்று ஆரம்பிக்கக்கூடிய தத்துபித்துவ வசனங்கள் இல்லாதது எனக்கு ரொம்பவே வருத்தம். அட்லீஸ்ட் பேக்ரவுண்டில் "லா லா லா... லா லா லா..." என்று பாடும் சியர் கேர்ள்ஸையாவது கூப்பிட்டிருக்கலாம்.
4. அதிகமாக ஷங்கர் தனது படங்களில் பொதுமக்களை ஊறுகாயாக பயன்படுத்தும் ஒரு காட்சி: நாயகன் கைதாகும் போதோ அல்லது இக்கட்டான சூழலில் இருக்கும்போதோ மக்களுள் லோ கிளாஸ் முதல் ஹை கிளாஸ் வரை நாயகனுக்கு ஆதரவாக கமென்ட் கொடுப்பார்கள். அத்தகைய காட்சி எதுவும் இந்தப்படத்தில் இல்லை.
இது தவிர்த்து நாயகன் புலி பொம்மையோடு சண்டையிடும் காட்சியை ஏற்கனவே ஷாருக்கான் கிழித்துவிட்டதால் அது தேவையில்லை.
சரி சீரியஸான விஷயத்திற்கு வருவோம். படத்தை பார்த்தோம், சிரித்தோம். போதுமா...? சிந்திக்க வேண்டாமா...?
தமிழ்ப்படம் கற்றுத்தரும் பாடங்கள் என்னென்ன...?
1. இனியாவது "அசிலி பிசிலி", "டோல் டப்பி மா" என்று அர்தத்தம் புரியாத அல்கஞ்சாரி குல்கா பாடல்களை ஹிட்டாக்கக் கூடாது.
முக்கியமாக சன் மியுசிக்குக்கு கால் பண்ணி அத்தகைய பாடல்களை அக்காப்பொண்ணு அருக்கானிக்கு டெடிகேட் பண்ணக்கூடாது.
2. தாமு, வையாபுரி, சார்லியெல்லாம் அரியர் பேப்பர் கிளியர் பண்ணலை என்று சொல்லிக்கொண்டு காலேஜ் பக்கம் வந்தால் கூட யாரும் சேர்த்துக்கொள்ளாதீர்கள்.
3. கழிவறையில் அமர்ந்தபடி ஒரே பாடலில் கோடீஸ்வரன் ஆவது போல கனவு காண்பது தவறு. அதிலும் தொழிலதிபர் கனவு மிகவும் ஆபத்தானது. வேண்டுமானால் ஏ.ஆர்.ரகுமானைப் போல ஒரே பாடலில் உலகப்புகழ் அடைய முயலுங்கள்.
4. இனியாவது கிழவிகளை கட்டிப்பிடிக்கும் நாயகர்களை கண்டு சிலிர்க்க வேண்டாம். இப்படித்தான் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே ஏமாற்றி வருகிறார்கள்.
5. the ultimate one: இனியாவது ஷங்கர், பேரரசு, ஹரி போன்றவர்களது படங்களைப் பார்த்து அடுத்தர்களது போதைக்கு ஊறுகாயாகாமல் இருங்கள்.
இது போல உங்களுக்கும் ஏதாவது தத்துபித்துவங்கள் தோன்றியிருந்தால் பின்னூட்டம் போட்டு பிதற்றிவிட்டு செல்லுங்கள். பதிவை மட்டும் படித்துவிட்டு பின்னூட்டம் போடாதவர்களை அந்த விரலை ஆட்டி நடிக்கும் தம்பி படத்தை நூறுமுறை போட்டுக் காட்டுங்கப்பா...
என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN
NR PRABHAKARAN
|
4 comments:
லேட்டா சொன்னாலும் லேட்டஸ்டா சொல்லி இருக்கீங்க.. நீங்க எதிர் பார்த்த விஷய்ஙகளை சேர்த்திருந்தா படம் இன்னும் தாறுமாறா எகிறி இருக்கும் போல
//எல்லோரும் தமிழ்ப்படத்தை எப்படி ரசித்தார்களோ, அப்படித்தான் நான் வழக்கமாக பேரரசு, ஹரி படங்களையும் ரசிப்பேன்.//
அதற்கும் மேலே நாங்கள் ரசிப்போம். வேட்டைக்காரனை நாங்கள் ரசித்த விதத்தை இந்த இடுகையில் படித்துப் பாருங்கள். இயக்குநர் எவ்வளவு அழகாக வடித்திருக்கிறார் என்பது புரியும்
http://kanavukale.blogspot.com/2010/01/31-1-10.html
சென்ற பின்னூட்டத்தில் இந்த இடுகை என்ற இடத்தில் தொடுப்பு கொடுக்கப் பட்டுள்ளது
http://philosophyprabhakaran.blogspot.com/2010/03/blog-post_18.html
supper picture...
join this picture in above polls
''அக்காப்பொண்ணு அருக்கானிக்கு டெடிகேட் பண்ணக்கூடாது.'' ha....ha...
Post a Comment