வணக்கம் மக்களே...
சில வாரங்களுக்குப் பின்பு பதிவுலகத்திற்கு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறேன். காதல் தந்த மயக்கத்தில் சில வாரங்களாக உச்சி மண்டையில் காதல் உணர்வுகளைத் தவிர வேறொன்றும் உதிக்காமல் இருந்தது. பதிவுலகத்திற்கு பை சொல்லிவிடலாமா என்றுகூட தோன்றியது. அந்த நேரத்தில்தான் "கொத்துபரோட்டா" வைர விருதையும், "ஜெய்லானி" தேவதை விருதையும் கொடுத்து திக்குமுக்காட வைத்துவிட்டனர்.
கடந்த பதிவிற்கு பல தரப்பிலிருந்து வசைமொழிகள் குவிந்து மாபெரும் வெற்றியைத் தேடி தந்திருக்கின்றன. திட்ட வேண்டியதையெல்லாம் ஒரே பதிவிலேயே கொட்டி முடித்துவிட்டதால் இனி யாரைத் திட்டுவது என்று தெரியவில்லை. சரி வாங்கிய விருதுகளை நாலு பேருக்கு கொடுத்துப் பாராட்டலாம் என்று கிளம்பினேன். சும்மா ஏனோதானோ என்று விருதுகளை கொடுத்துவிடாமல், கெடுத்துவிடாமல் யாருக்கு கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று ஆராய்ந்து அனுபவித்து கொடுத்திருக்கிறேன்.
முதலில் வைர விருதுகள். விருது பெறும் வைரமான பதிவர்கள்: Phantom Mohan, ஜில்தண்ணி, வந்துட்டான்யா வந்துட்டான், விஜய் கவிதைகள்
இதுவரை எழுதியவை: 26
பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை: 30
வலைப்பூ தொடங்கியது: April 2010
வகையறா: நகைச்சுவை, பல்சுவை
முன்னர் பருப்பு - THE GREAT என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்த வளைகுடா பதிவர். தற்போது Phantom Mohan என்ற பெயரில் கலக்க ஆரம்பித்திருக்கிறார். எந்தப் பதிவு எழுதினாலும் அதில் சேட்டைக்காரன் ஸ்டைலில் நகைச்சுவையும் கலந்து எழுதி வருகிறார். இவர் இரண்டு பாகங்களாக எழுதியிருந்த "டேய்! எவன்டா அவன் கல்யாணத்த கண்டுபுடிச்சது?" பதிவுகளைப் படித்தபோது வியர்த்துக்கொட்டியது. ஆணாகப் பிறந்த யாராக இருந்தாலும் வியர்க்கத்தான் செய்யும்.
இதுவரை எழுதியவை: 26
பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை: 44
வலைப்பூ தொடங்கியது: April 2010
வகையறா: நகைச்சுவை, பல்சுவை, கொஞ்சம் கம்யூனிசம்
சுடுதண்ணியின் ஆஸ்தான சிஷ்யன் என்று இரண்டு மாதங்களுக்கு முன்பு பதிவெழுத ஆரம்பித்து வேகமாக வளர்ந்து வரும் பதிவர். ஏற்கனவே வைர விருதையும் தேவதை விருதையும் வாங்கிவிட்டார். இருப்பினும் என் சார்பாக மீண்டும் ஒரு வைர விருது. மறுக்காமல் வாங்கிக்கொள்ளுங்கள். பல்வேறு துறைகளிலும் புகுந்து விளையாடக்கூடிய ஆல் ரவுண்டராய் இருப்பினும் இவர் எழுதிய "புரட்சியின் மறுபெயர் சே" என்ற பதிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
இதுவரை எழுதியவை: 75
பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை:64
வலைப்பூ தொடங்கியது: October 2009
வகையறா: நகைச்சுவை, விழிப்புணர்வு
என்னைக் கவர்ந்த பதிவு: திரை விமர்சனம்
பெயர் சொல்ல விரும்பாத இந்தப் பதிவர் விருதினை வாங்கிக்கொள்வாரா என்றுகூட தெரியவில்லை. பலதரப்பட்ட பதிவுகளை எழுதிவரும் பதிவர் பெரும்பாலும் எழுதுவது அட்வைஸ் ரக பதிவுகள். அப்படிப்பட்ட பதிவருக்கு நாம் கொடுக்கும் சில அறிவுரைகள்: உங்கள் தளத்தில் பக்கவாட்டில் இருக்கக்கூடிய உபகரணங்கள் எழுந்திருக்க சிரமப்படுகின்றன அல்லது எழுந்திருக்கவே மாட்டேன் என்கிறது. குறைந்தபட்சம் பழைய பதிவுகளை படிப்பதற்கு மட்டுமாவது ஏதுவாக அமைத்தால் சிறப்பாக இருக்கும். இவர் மாத்தி மாத்தி யோசித்து எழுதிய "திரை விமர்சனம்" அருமை.
இதுவரை எழுதியவை: 55
பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை: 54
வலைப்பூ தொடங்கியது: August 2009
வகையறா: கவிதைகள்
ஏற்கனவே பல விருதுகளை வாங்கிக் குவித்திருக்கும் சீனியர் பதிவர். வாரத்திற்கு ஒரு கவிதை... நச்சென்று... நறுக்கென்று... நிதானமாகவும் நிலையாகவும் ஐம்பது பதிவுகளை கடந்திருக்கிறார். காதல் பற்றி விஜய் எழுதிய கவிதைகள் அனைத்துமே எனக்கு பிடித்திருந்தது. ஆனால் அவற்றையும் மீறி "பிறவா மகள்" என்ற தலைப்பில் எழுதியிருந்த ஏக்கக்கவிதை உருக வைத்தது.
அடுத்தது தேவதை விருதுகள். தேவதை என்றாலே பெண்கள்தான். எனவே தேவதை விருதுகளை பெண்பதிவர்களுக்கு மட்டும் கொடுத்திருக்கிறேன். விருது பெறும் தேவதைகள்: அன்புடன் ஆனந்தி, என்னுள்...!, காகித ஓடம், தகவல் தொழில்நுட்ப செய்திகள்
இதுவரை எழுதியவை: 22
பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை: 80
வலைப்பூ தொடங்கியது: March 2010
வகையறா: சமையல் குறிப்பு, கவிதைகள்
நெல்லையில் பூத்த முல்லை. குறுகிய காலத்தில் பதிவர்கள் பலரது பாசத்தைப் பெற்று பரபரவென்று வளர்ந்து வரும் பதிவர். பல்சுவை பதிவுகள் எழுதினாலும் சமையல் குறிப்பிலும் கவிதைகளிலும் அம்மணி எழுத்துக்கள் பொன்மணி. அதிலும் காதல் கவிதைகளில் உருக வைத்துவிடுகிறார். ஏற்கனவே சில விருதுகளை வாங்கியவர் இதுவரை தேவதை விருதினை வாங்கவில்லை என்று நம்புகிறேன். இந்த தேவதை எழுதிய "எனக்காய்ப் பிறந்தவனே...!" என்ற கவிதை என்னை மிகவும் கவர்ந்தது.
இதுவரை எழுதியவை: 57
பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை: 13
வலைப்பூ தொடங்கியது: March 2010
வகையறா: ஈழம், கம்யூனிசம்
ஈழம், கம்யூனிசம், நாத்திகம் என்று ஆழமான கருத்துக்களை எழுதி வருபவர். எல்லாப் பதிவுகளிலும் ஏதோ ஒரு வலி ஒளிந்திருக்கும். தந்தை பெரியாரைப் பற்றி அதிகம் எழுதுவதால் பிடித்துவிட்டது. குறுகிய காலத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதியிருக்கிறார்."காதல் பற்றி பெரியார்" குடியரசுவில் எழுதிய கட்டுரை சிறப்பாக இருந்தது.
இதுவரை எழுதியவை: 75
பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை: 120
வலைப்பூ தொடங்கியது: February 2007
வகையறா: காதல், கவிதைகள்
மூன்று வருடங்களுக்கு மேலாக நிலையாக பதிவுலகில் நடைபோட்டு வருபவர். நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள், எழுபத்தி ஐந்து பதிவுகள். ஏற்கனவே பல விருதுகளை வாங்கியவர். அநேகமாக தேவதை விருதினைத் தவிர எல்லாவற்றையும் வாங்கிவிட்டார் என்று நினைக்கிறேன். இவர் எழுதிய பதிவுகள் பலதும் காதலைப் பற்றி கவிதையாய் சொன்னது. இவர் எழுதிய கவிதைகளும் காதல் பற்றியதாகவே இருந்தன. "ஒரு கடிதம் - என்னவனுக்கு" என்று அவர் எழுதிய கடிதம் மிகவும் பிடித்திருந்தது.
இதுவரை எழுதியவை: 105
பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை: 49
வலைப்பூ தொடங்கியது: March 2009
வகையறா: தொழில்நுட்பம்
விதூஷிகா, பிரஷா என்று கடந்த ஆறுமாத காலமாக தகவல் தொழில்நுட்பம் பற்றி எழுதி வரும் இரட்டை தேவதைகள். நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகள். ஒவ்வொன்றுமே பயனுள்ள பதிவு. தளம் மிகவும் மெதுவாக இயங்குவது மட்டும் கவலை அளிக்கிறது. எல்லாமே சிறந்த பதிவுதான். இருப்பினும் "மொபைலில் தமிழ் தளங்களை காண உதவும் ஸ்கைபயர் உலாவி" அபாரமான பதிவு.
ஒரு வழியாக விருதுகளை சுமந்த பாரத்தை இறக்கி வைத்துவிட்டேன். விருது பெற்றவர்கள் அவ்விருதை மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்வியுங்கள். மகிழ்வித்து மகிழ்வியுங்கள்.
என்றும் அன்புடன்,
N R PRABHAKARAN
|
20 comments:
vaalthukkal
அட இப்படி ஒரு பதிவு நாமளும் போடலாம் போல சூப்பர்....
முதல் முறையாக வெறுங்கையுடன் உங்கள் தளத்திற்கு வந்து விருதோடு திரும்புகிறேன். எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை ?
எனதருமை தம்பிக்கு நன்றிகள்
விஜய்
@ LK, soundar
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பர்களே...
@ விஜய்
உங்களுக்கு விருது கிடைத்ததில் மகிழ்ச்சி... எனக்கு ஒரு அண்ணன் கிடைத்ததில் மகிழ்ச்சி...
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
// இருப்பினும் என் சார்பாக மீண்டும் ஒரு வைர விருது. மறுக்காமல் வாங்கிக்கொள்ளுங்கள் //
இதோ அலாக்கா எடுத்துகிட்டேன்
அப்பறம் காதல் தந்த மயக்கத்தில் இருக்கறேன் என்று கூரியிருக்கிறீர்- பாத்து மாப்ள
எல்லோருடைய ஜாதகத்தையே எழுதிட்டீங்களா நல்லா இருக்கு
ரொம்ப சந்தோசம்
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி! உணர்ச்சிவசப்பட வச்சிட்டீங்க.
நீங்க குடுத்த இன்ட்ரோ படிச்சு எனக்கு லைட்டா நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு. நீங்க சொன்ன பதிவு என் நண்பர்கள் உதவியுடன் எழுதியது, அவனுங்களுக்கு தான் இந்த விருதுன்னு நெனைக்கிறேன். உடுங்க அவனுங்களுக்கு என்ன தெரியவா போகுது, நான் கமுக்கமா முக்காடு போட்டு தூக்கிட்டுப் போய்டுறேன்.
Phantom Mohan
June 16, 2010 4:02 PM
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி! உணர்ச்சிவசப்பட வச்சிட்டீங்க.
நீங்க குடுத்த இன்ட்ரோ படிச்சு எனக்கு லைட்டா நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு. நீங்க சொன்ன பதிவு என் நண்பர்கள் உதவியுடன் எழுதியது, அவனுங்களுக்கு தான் இந்த விருதுன்னு நெனைக்கிறேன். உடுங்க அவனுங்களுக்கு என்ன தெரியவா போகுது, நான் கமுக்கமா முக்காடு போட்டு தூக்கிட்டுப் போய்டுறேன்.//////
இந்த டகால்டி வேண்டாம்,அதான் நான் பார்த்துட்டேனே இரு எல்லோரிடமும் சொல்லுறேன்,
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
எப்பேர்ப்பட்டவருக்கும் அங்கீகாரம் என்பது பெருமைக்குரிய விஷயம். உங்கள் விருதைப் பெருமளவுக்கு நான் தகுதியுடையவன்தானா என்று புரியவில்லை. உங்கள் விருதுக்கும் அங்கீகாரத்திற்கும் நன்றி!
what should I do, to be awarded..
நண்பரே, என் வலைபூவிற்கு வருகை தருமாறு தங்களை அழைக்கிறேன்.(http://sriramsrinivasan.net)
தங்களின் கருத்துக்களை கேட்க ஆவலாக உள்ளேன்
ஸ்ரீராம்
http://sriramsrinivasan.net
மிக்க நன்றி பிரபாகர் .நான் எதிர்பார்க்கவே இல்லை .இன்று எனக்கு சந்தோஷமான நாள் .நன்றி
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...!!
அழகா ஒவ்வொருவரையும் விவரிச்ச விதம் அழகு !!சும்மா கலக்கிட்டீங்க..!!
அறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் . பகிர்வுக்கு நன்றி நண்பரே
என்ன சொல்வதென்றே தெரியவில்லை..
உங்கள் அன்பான வார்த்தைகளால்..
என்னை மௌனமாகி விட்டீர்கள்..!
உங்கள் விருதிற்கு, மிக்க நன்றி..
விருது வாங்கிய அனைவருக்கும்,
வழங்கிய உங்களுக்கும் நன்றி.. :):)
@ விஜய், jillthanni, Phantom Mohan, பெயர் சொல்ல விருப்பமில்லை, பத்மா, Ananthi
விருதை பெற்றுகொண்டதற்கு மிக்க நன்றி...
@ jillthanni
ம்ம்ம்... தெரியாம காதல் மயக்கத்துல விழுந்துட்டேன்... என்ன நடக்க போகுதுன்னு தெரியல... அவ்வ்வ்வவ்வ்வ்....
@ முத்து
உண்மையில் நீங்கதானா... இல்ல டகால்டியா...
@ Madhavan
நீங்கள் ஏற்கனவே விருதுக்கு நெருக்கமான இடத்தில் இருக்கிறீர்கள்... இதே பாதையில் பயணித்தால் சீக்கிரமே கிட்டிவிடும்... வாழ்த்துக்கள்...
@ sriram srinivasan
உங்களது தளம் கண்டேன்... bookmark எடுத்து வைத்திருக்கிறேன்... பின்னர் நிதானமாக படித்து பின்னூட்டமிடுகிறேன்...
@ ஜெய்லானி
வாங்க நண்பரே... எப்படி இருக்கீங்க... ரொம்ப நாளாச்சு...
@ பனித்துளி சங்கர்
என்னது...! பிரபல பதிவர் "பனித்துளி சங்கர்" என்னுடைய பதிவிற்கு பின்னூட்டம் போட்டிருக்கிறாரா,... என்னால் இதை நம்பவே முடியவில்லை... மீண்டும் ஒரு விருது கிடைத்தது போல இருக்கிறது...
Congratulations to everyone!
//பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை: தெரியவில்லை//
(தொடர்பவர்கள் : 64
//உங்கள் தளத்தில் பக்கவாட்டில் இருக்கக்கூடிய உபகரணங்கள் எழுந்திருக்க சிரமப்படுகின்றன அல்லது எழுந்திருக்கவே மாட்டேன் என்கிறது. குறைந்தபட்சம் பழைய பதிவுகளை படிப்பதற்கு மட்டுமாவது ஏதுவாக அமைத்தால் சிறப்பாக இருக்கும்.//
இப்பொழுது என் வலைத்தளம் சரியாக்கப் பட்டுவிட்டது என்று நினைக்கிறேன். முயற்சி செய்து பார்க்கவும்.
இதுவரை எழுதிய பதிவுகள் - 75)
@ Chitra
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி...
@ பெயர் சொல்ல விருப்பமில்லை
சரிதான்... இனி தடையேதும் இல்லை...
எனக்கும் விருது வழங்கி சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி தோழர்.
நல்ல விஷயம் வாழ்த்துக்கள்
Post a Comment