அன்புள்ள வலைப்பூவிற்கு,
பதிவர் சந்திப்பு:
சென்னையில் பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற்றது. எதிர்பார்த்த சிலர் வராமல் ஏமாற்றினார்கள். எதிர்பார்க்காத சிலர் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்கள். முந்தய பதிவர் சந்திப்புகளை போல அல்லாமல் இந்த பதிவர் சந்திப்பின் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிந்தது. அது பற்றிய இடுகைகள் கூடிய விரைவில்...
மிஸ் இந்தியா மிஸ்ஸிங்:
சென்ற வாரம் பட்டுக்கோட்டை பிரபாகரின் “மிஸ் இந்தியா மிஸ்ஸிங்” குறுநாவல் படித்தேன். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நாவல். இப்போது படிக்கும்போது கொஞ்சம் அவுட்டேட்டடாக இருந்தது. ஆனால், வார்த்தை பிரயோகங்கள், உருவகங்கள் ரசிக்க வைத்தன. அதே புத்தகத்தில் “மறக்கமாட்டேன் மாலினி” என்ற குறுநாவலும் இருந்தது. மறக்கமாட்டேன் மாலினி குறுநாவலும் சுஜாதாவின் மனைவி கிடைத்தாள் குறுநாவலும் ஒரே கதையை அடிப்படையாக கொண்டிருந்தது ஆச்சர்யமாக இருந்தது. இந்தமுறை காஜல் அகர்வாலோ அல்லது வேறு எந்த நடிகையோ நினைவுக்கு வரவில்லை.
பெங்களூர்:
திடீரென்று ஊர் சுற்றுவதில் ஒரு ஆசை பிறந்திருக்கிறது. உள்ளூரில் அல்ல வெளியூரில். (வெளிநாட்டிற்கு நினைத்தாலும் செல்ல முடியாது. ஏனென்றால் என்னிடம் பாஸ்போர்ட் இல்லை. சாஸ்திரி பவனில் வரிசையில் நிற்கும் கூட்டத்தை பார்த்தால் வெளிநாட்டு ஆசையே ஃப்ளைட் பிடித்து பறந்துவிடும்). அதனால் மூன்று, நான்கு நாட்கள் சேர்ந்தாற்போல விடுமுறை கிடைத்தால் பெங்களூர் அல்லது கோவா சென்று வர வேண்டுமென்று முடிவு செய்திருக்கிறேன். மேலும், அந்தமான் செல்ல வேண்டுமென்றும் ஒரு தீராத ஆசை உண்டு. ட்ராவல் ஏஜென்சி நடத்தும் யாருக்காவது இதுபற்றி தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்.
சாந்திலால்:
என்னையும் மதித்து என் வலைப்பூவை தொடர்ந்து படித்து என்னை ஊக்கப்படுத்தும் சிலர் இருக்கிறார்கள் என்று சொன்னால் நம்பித்தான் ஆகவேண்டும். அவர்களில் ஒருவர் மருத்துவர் சாந்திலால். அவர் ஒரு எழுத்தாளரும் கூட என்று பிற்பாடு சாட்டில் தெரிந்துக்கொண்டேன். அவர் எழுதிய புத்தகங்களில் இரண்டினை ராஜபாளையத்தில் இருந்து கூரியர் மூலம் அனுப்பி வைத்திருந்தார். (அவரை மிரட்டி அனுப்ப வைத்தேன்). ஒன்று, க. க.. க... என்ற கதை, கவிதை, கட்டுரை தொகுப்பு. மற்றொன்று, பேசும் ஊமைகள் என்ற 15 சீரிய(ஸ்) கதைகளின் தொகுப்பு. புத்தகத்தின் முதல்பக்கத்தில் இணையதள எழுத்தாளர் என்று என்னை குறிப்பிட்டிருந்ததை பார்த்ததும் குபுக்கென்று சிரிப்பு வந்தது. சாரே... நான் அந்த அளவுக்கு எல்லாம் வொர்த் கிடையாது. உங்களுக்கு வேறு சில பெரிய தலைகளின் வலைப்பூக்களை அறிமுகப்படுத்துகிறேன். அதன்பின் என் பக்கம் வரவே மாட்டீர்கள். எனிவே, புத்தகங்கள் அனுப்பியதற்கு என் மனமார்ந்த நன்றிகள். கூடிய விரைவில் புத்தகங்களை படித்துவிட்டு மடல் / பதிவு போடுகிறேன்.
ஜொள்ளு:
விழுந்தாலும் உன் கண்ணில் கனவாக நான் விழுவேன்... எழுந்தாலும் உன் நெஞ்சில் நினைவாக நான் எழுவேன்... |
ட்வீட் எடு கொண்டாடு:
kolaaru kolaaru
காதலில் பேசும் மொழியை காதலில்லாமல் கவனித்தால் அதைவிட ஹாய்ஸ்யம் வேறு இல்லை !
SeSenthilkumar Se.Senthilkumar
மங்காத்தாவை இன்னும் பாக்கலைடானு சொன்ன என்னை ஒரு மாதிரியா பாக்குறான் 2 மாசமா அவங்காத்தாவை பாக்காதவன்!
NVaanathi வானதி நடனம்
உங்கள் டேமேஜெர் (நாட் க்ளையன்ட் மேனேஜெர்) இம்சையாக இருந்தால் மறந்தும் கூட அவரிடம் உங்கள் படிக்கும் பழக்கம் பற்றி சொல்லாதீர்கள் ;)
naiyandi நையாண்டி
சென்னை மேயர் பதவிக்கு விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்றால் ராமர் பாலம் மீண்டும் கட்டப்படும்!
thoatta ஆல்தோட்டபூபதி
மூன்றாம் உலகப்போர் மூண்டால், நமக்கு வேறாயுதம் தேவையில்லை வேலாயுத சி.டி போதும்.!
அறிமுகப்பதிவர்: சதீஷ் மாஸ்
ஞாயிறன்று பதிவர் சந்திப்பிற்கு வந்தவர்களுக்கு இவரைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை. பதிவுலகம் புகுந்து ஐந்தாறு மாதங்கள் ஆகிவிட்டன. சீரியஸாக களம் கண்டிருப்பது சில வாரங்களாக. இவருடைய பதிவுலக தலைவர்கள் யாரென்று தெரிந்துக்கொள்ளுங்கள். பிரபல பதிவருக்கு கடிதம் எழுதியிருக்கிறார் வாசியுங்கள். தெருக்கூத்து பற்றிய அவரது சிந்தனைகளை படியுங்கள். முரசொலி மாறன் பற்றி என்னவோ சொல்லுகிறார் என்னவென்று கேளுங்களேன். லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் இவரது முதல் பதிவர் சந்திப்பு அனுபவங்கள்.
இந்த வாரப் பாடல்:
தமிழ் சினிமாப்பாடல்களில் தேவாவின் ஆளுமை ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தது. மேற்கத்திய இசையை அதிகம் இரவல் வாங்கியவர் என்றொரு குற்றச்சாட்டு இருந்தாலும் கானா பாடல்களைப் பொறுத்தமட்டிலும் தேவா தான் THE ONE AND ONLY. சென்ற வாரம் கே டிவியில் எட்டுப்பட்டி ராசா படம் போட்டார்கள். அதிலிருந்து தேவா இசையில் ஒரு பாடல் – இது சிலருக்கு பக்திப்பாடலாக இருக்கலாம் ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் கானா.
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்று சொல்வார்கள். அதை இந்தப்பாட்டின் மூலம்தான் உணர்ந்தேன். எப்பேர்ப்பட்ட மனிதையும் ஒரு ஆட்டு ஆட்டுது இந்த பாட்டு.
இந்த வார காணொளி:
மேற்கத்திய கலாச்சாரம் பல்லிளிக்கிறது என்று பொங்கியெழும் சமூக / கலாச்சார காவலர்கள் இதோ இந்தக் கூத்தையும் கொஞ்சம் பாருங்கள்...
இந்த வார புகைப்படம்:
இனி நானும் டாகுடருங்கோ...! |
இந்த வார தத்துவம்:
“உலகிலேயே பலமான ஆயுதம் – பெண்களின் கண்ணீர்” – சொன்னவர் arattaigirl sowmya
இந்த வார எஸ்.எம்.எஸ்:
தீவிரவாதிக்கும் மனைவிக்கும் உள்ள வித்தியாசம் என்ன...?
தீவிரவாதியோடு சமாதான பேச்சுவார்த்தை நடத்த முடியும்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
44 comments:
அந்த பொண்ணு போட்டோ சூப்பர் பாஸ்.. ஹிஹி நாங்க யூத்தாக்கும்,,
சகலரின் ரசனைக்கும் இங்கே சரக்கு கிடைக்கிறது,, அதுதான் உங்கள் ஒயின்ஷாப்பின் ஸ்பெஷல்..
மாப்ள கலக்கல்யா...அதுவும் என்னைய திட்டி இருக்கீரு பாரும்(!) அது சூப்பரு ஹிஹி!
ஒயின்ஷாப் கிக் அதிகம்.
அந்தப் பொண்ணு சூப்பருங்க...
அருமை அன்பரே பதிவும் அந்த பொண்ணும் ..
சூப்பர் நண்பா!!
nan pathivar santhippuku vara ninaithen. but feaver with cough. so better luck next time ena vittu vitten.
//எதிர்பார்த்த சிலர் வராமல் ஏமாற்றினார்கள்//
அது யாருய்யா ?
//
இந்த வார எஸ்.எம்.எஸ்:
தீவிரவாதிக்கும் மனைவிக்கும் உள்ள வித்தியாசம் என்ன...?
தீவிரவாதியோடு சமாதான பேச்சுவார்த்தை நடத்த முடியும்.//
ஹா ஹா ஹா சூப்பர்
கலக்கல் பதிவு!
இந்தவார காணொளி தான் அதிகமாக லயிக்க வச்சிது..
கலக்கல் போதை நண்பா...!
ஆஹா............. இந்த வார ஜொள்ளு பலவாரங்களுக்கு தாங்கும் போல.......
வீடியோ கலக்கல்..... மனவாடுகள் வில்லேஜ் வீடியோ பாத்திருக்கீங்களா? அதுக்கு இதெல்லாம் ஒண்ணுமே இல்ல.......
பதிவர் சந்திப்பு முடிஞ்சதும் நீங்க போன இடத்தை பத்தி சொல்லவே இல்ல..
atta ஆல்தோட்டபூபதி
மூன்றாம் உலகப்போர் மூண்டால், நமக்கு வேறாயுதம் தேவையில்லை வேலாயுத சி.டி போதும்.!//
அட்டகாசம் சூப்பர் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...
ஹி ஹி அந்தப்பொண்ணு....
உண்மையிலேயே படித்து முடிக்கும்போது வைன் ஷாப் அனுபவம்...
///சென்னை மேயர் பதவிக்கு விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்றால் ராமர் பாலம் மீண்டும் கட்டப்படும்!// அதெப்படி , அவர் தான் அணிலாசே,சின்ன சின்ன உதவிகள் மட்டும் தான் செய்வார் ))))
ஒயின் இனிக்குது...
அந்த அறிமுக நாயகன் நான் தான்ங்கோ.... நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு பிரபா... உங்களின் முயற்சிக்கு நன்ற் தல....
ஹாலோ பிரபா ஒயின்ஸ் ஷாப் ஓனரா?? அண்ணே, தப்பு இல்லாம எழுத நா இங்க தான் கத்துகணும்.. இனி நானும் அதை முயல்கிறேன்....
எல்லாமே அருமை. ஆனால் அந்த ரெக்கார்ட் டான்ஸ்தான் உறுத்துது. பலபெருக்கு இலவசமா லிங்கை கொடுத்துட்டீங்க போங்க...
சுற்றுப்பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்... சாந்திலால் இன்னுமா உங்களை நம்புகிறார்...
@ Raazi
// அந்த பொண்ணு போட்டோ சூப்பர் பாஸ்.. ஹிஹி நாங்க யூத்தாக்கும்,,
சகலரின் ரசனைக்கும் இங்கே சரக்கு கிடைக்கிறது,, அதுதான் உங்கள் ஒயின்ஷாப்பின் ஸ்பெஷல்.. //
பாராட்டுக்கு நன்றி தல... உங்கள் வலைப்பூவை இப்போது தான் பார்வையிட்டேன்... வாழ்த்துக்கள்...
@ விக்கியுலகம்
// மாப்ள கலக்கல்யா...அதுவும் என்னைய திட்டி இருக்கீரு பாரும்(!) அது சூப்பரு ஹிஹி! //
ஓஹோ அப்போ நீங்கதான் சமூக / கலாச்சார காவலரா... குட் மார்னிங் ஆபீசர்ர்ர்ர்...
@ சே.குமார், சி.பிரேம் குமார்
கருத்துக்கு நன்றி நண்பர்களே... அட இந்த வார ஜொள்ளு நல்லா வேலை செய்யுது போல...
@ ஜ.ரா.ரமேஷ் பாபு
// சூப்பர் நண்பா!! //
நன்றி நண்பா!!
@ பித்தனின் வாக்கு
// nan pathivar santhippuku vara ninaithen. but feaver with cough. so better luck next time ena vittu vitten. //
ம்ம்ம்... எங்க போயிடப்போறோம் நண்பா... இங்கே சென்னையிலே தானே இருக்கோம்... கூடிய விரைவில் சந்திக்கலாம்...
@ Prabu Krishna (பலே பிரபு)
// அது யாருய்யா ? //
தல நான் உங்கள சொல்லல... நீங்க ஆரம்பத்தில் இருந்தே முடிஞ்சா வர்றேன்னு தான் சொன்னீங்க... சிலர் கண்டிப்பா வந்துடுறேன்னு உறுதிமொழி கொடுத்துட்டு எஸ்கேப் ஆயிட்டாங்க...
@ சென்னை பித்தன்
// கலக்கல் பதிவு! //
நன்றி இளைஞரே...
@ ♔ம.தி.சுதா♔
// இந்தவார காணொளி தான் அதிகமாக லயிக்க வச்சிது.. //
என்னது லயிச்சீங்களா... என்னா வில்லத்தனம்...
@ Nirosh
// கலக்கல் போதை நண்பா...! //
நன்றி நண்பா...!
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// ஆஹா............. இந்த வார ஜொள்ளு பலவாரங்களுக்கு தாங்கும் போல....... //
அனுபவஸ்தர் நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்...
// மனவாடுகள் வில்லேஜ் வீடியோ பாத்திருக்கீங்களா? அதுக்கு இதெல்லாம் ஒண்ணுமே இல்ல....... //
லிங்க் கொடுங்க... பாத்துடலாம்...
@ ! சிவகுமார் !
// பதிவர் சந்திப்பு முடிஞ்சதும் நீங்க போன இடத்தை பத்தி சொல்லவே இல்ல.. //
அது பற்றிய தனிப்பதிவு வரும் தல...
@ MANO நாஞ்சில் மனோ
// அட்டகாசம் சூப்பர் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா... //
நன்றி நண்பா...
// ஹி ஹி அந்தப்பொண்ணு.... //
துடச்சிக்கோங்க மனோ...
@ அப்பு
// உண்மையிலேயே படித்து முடிக்கும்போது வைன் ஷாப் அனுபவம்... //
இது வஞ்சப்புகழ்ச்சி அணியோ...?
@ கந்தசாமி.
// அதெப்படி , அவர் தான் அணிலாசே,சின்ன சின்ன உதவிகள் மட்டும் தான் செய்வார் )))) //
கொத்தனார் கட்டுவார்... இவர் அணில் போல ஒன்றிரண்டு கற்களை எடுத்துக்கொடுத்து உதவுவார்...
பி.கு: கொத்தனார் சிமென்ட் கறைபட்ட கையால் அணில் முதுகில் மூன்று கோடுகள் வருமாறு தடவிக்கொடுப்பார்...
@ சதீஷ் மாஸ்
// அந்த அறிமுக நாயகன் நான் தான்ங்கோ.... நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு பிரபா... உங்களின் முயற்சிக்கு நன்ற் தல.... //
நீங்க உண்மையிலேயே நாயகன் தான் சதீஷ்...
// ஹாலோ பிரபா ஒயின்ஸ் ஷாப் ஓனரா?? அண்ணே, தப்பு இல்லாம எழுத நா இங்க தான் கத்துகணும்.. இனி நானும் அதை முயல்கிறேன்.... //
இது phonetics சம்பந்தப்பட்ட பிரச்சனை... அதை நீங்கள் புரிந்துக்கொள்ளும் வரை எழுத்துப்பிழைகளை தவிர்க்க முடியாது...
@ பாலா
// எல்லாமே அருமை. ஆனால் அந்த ரெக்கார்ட் டான்ஸ்தான் உறுத்துது. பலபெருக்கு இலவசமா லிங்கை கொடுத்துட்டீங்க போங்க... //
பல மாதங்களுக்கு முன்பு கே.ஆர்.பி செந்தில் இந்தமாதிரி வீடியோ மூன்றினை தனி இடுகையாக போட்டிருந்தார்... அதிலிருந்து ஒன்றை எடுத்து இங்கே போட்டேன்... அவ்வளவே...
@ சதீஷ் மாஸ்
// சாந்திலால் இன்னுமா உங்களை நம்புகிறார்... //
உங்களுக்கு ஒரு பிரபலம் புத்தகம் பரிசளித்தது போல எனக்கும் ஒரு பிரபலம் புத்தகங்களை பரிசளித்திருக்கிறார்...
கலக்கலோ கலக்கல்! சூப்பர்! அந்த பாட்டு எங்க ஊரு திருவிழாவுல ரொம்ப வருஷமா ஹிட்டு! இப்ப கொஞ்ச நாளா கேக்க முடியலை! ஞாபகபடுத்தியதுக்கு தேங்க்ஸ்!
ஏஜென்சி எதுக்குங்க ரூம் மட்டும் புக் பண்ணுங்க,,,சுத்தி பாக்க அங்க போய் பைக் எடுத்துகோங்க....
அப்புறம் பதிவு கலக்கல்....
கடைசி வரி ஹா..ஹா.. செம ஜோக் :-)
இந்த வார எஸ்.எம்.எஸ்:
தீவிரவாதிக்கும் மனைவிக்கும் உள்ள வித்தியாசம் என்ன...?
தீவிரவாதியோடு சமாதான பேச்சுவார்த்தை நடத்த முடியும்...
குடும்பத்தோடு ரசித்தோம்....சிரித்தோம்..
Post a Comment