அன்புள்ள வலைப்பூவிற்கு,
வருடக்கடைசி என்றாலே டாப் 10 திரைப்படங்கள், பாடல்கள், சம்பவங்கள், டாப் 10 பரபர, டாப் 10 சொற சொற என்று ஆளாளுக்கு ஆரம்பித்துவிடுகிறார்கள். இது பெரும்பான்மை தரப்புக்கு சலிப்பை ஏற்படுத்தினாலும் பிரபல ஊடகங்களுக்கு டாப் 10 பட்டியலை வெளியிடுவது கடமை என்றாகிவிட்டதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். இனிவரும் வருடக்கடைசிகளில் டாப் 10 கற்பழிப்புகள், டாப் 10 வங்கிக்கொள்ளைகள், டாப் 10 கள்ளக்காதல்கள், டாப் 10 என்கவுண்டர்கள் போன்ற பட்டியல்கள் வெளிவந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
சனிக்கிழமை
காலை சாவகாசமாக பத்து மணிக்கு கண் திறந்தேன். மின்சாரம் மிஸ்ஸிங். ஷட்
டவுன் என்று அம்மா சொன்னார். என் அம்மா தான். தினத்தந்தியின் கடைசி மூன்று
வண்ண பக்கங்களை புரட்டினேன். எல்லாம் லோ பட்ஜெட் குப்பைகள். நேரே
ஓடியன்மணிக்கு செல்வோம், என்ன படம் பார்க்கப்போகிறோம் என்பதை கடவுளோ,
தற்செயலோ அதுவே தீர்மானிக்கட்டும் என்று நடையை கட்டினேன். அருந்ததீ வேட்டை
போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. வியர்வை மழையில் நனைத்தாலும் பரவாயில்லையென
வீடு திரும்ப எத்தனித்தேன். யூ ஆர் மை ஒன்லி ஹோப் என்று சரண்யா மோகன்
சிணுங்கினாள். சந்திரமுகி, அருந்ததீ, காஞ்சனா வரிசையில் என்றெல்லாம்
மிரட்டி உள்ளே அனுப்பினார்கள். ஆனால் அவைகளின் கால்தூசு என்றுதான் சொல்ல
வேண்டும். கதை, திரைக்கதைக்காக பெரிதாக யோசிக்கவில்லை போல. என்னைப்
பொருத்தமட்டில் எந்தவித திகில், த்ரில், அதிர்ச்சியில்லாமல் தட்டையாக
நகர்ந்து கடைசியில் வழக்கம்போல சாமியாரின் உதவியோடு சரண்யா மோகன்
மீள்கிறார்.
வாழ்நாளில் முதல்முறையாக ஜாக்கி சான் படமொன்றை முழுமையாக திரையரங்கில் பார்த்திருக்கிறேன். தமிழில், என்பது ஆறுதல். CZ12 - பரபர பரபரவென்று படுவேக திரைக்கதை. ஆரம்பத்தில் தொடர்வதற்கு கொஞ்சம் சிரமப்பட்டேன். ஜேம்ஸ்பாண்ட் படங்களை போல ஜாக்கி சாதனங்களை பயன்படுத்துகிறார். நிறைய மசாலாத்தனங்கள், லாஜிக் பூ சுற்றல்கள் இருந்தாலும் ரசிக்க முடிந்தது. ரஜினியை ஏன் நம் மக்கள் ரசிக்கிறார்கள் என்ற உளவியல் புரிகிறது. தமிழ் மொழிமாற்றம் அட்டகாசம். இதுதான் ஜாக்கியுடைய கடைசி அடிதடி படம் என்ற செய்தி அதிர்ச்சி. ஐ வில் மிஸ் ஜாக்கி. (ஐ மீன் ஜாக்கி சான்).
மரணம் யாருக்கும் எப்பொழுதும் வரலாம். ஆனால் அது மிகச்சிறிய கவனக்குறைவால் அநியாயமாக ஏற்படும்போது மனது கிடந்து தவிக்கிறது. உறவினர் வீட்டு மொட்டைமாடியில் விளையாடச் சென்ற பன்னிரண்டு வயது சிறுவன் அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பியை தொட்டதால் உடல் கருகி ஊயிரிழந்திருக்கிறான். புகைப்படத்துடன் செய்தித்தாளில் வெளியாகி ஒரு கனம் உலுக்கியெடுத்து விட்டது. சிறுவனின் பெற்றோர்களின் நிலையை கற்பனை செய்யமுடியவில்லை. இதுகுறித்து EBயில் முன்பே புகார் கொடுத்து, அவர்கள் “சரி செய்கிறோம். அதுவரை யாரும் மொட்டைமாடிக்கு செல்ல வேண்டாம்.” என்று மட்டும் சொல்லியிருக்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்களுக்கு பழுதான அரசு இயந்திரத்தை நொந்து பிரயோஜனமில்லாத போது நாமே முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.
உதாரணத்திற்கு, குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் பொதுவாக செய்யும் சில தவறுகள் உள்ளன. அவற்றை களைந்தாலே நலம். குழந்தைகளிடம், பேய் வருது, சாப்பிடலைன்னா பூச்சாண்டி கிட்ட பிடித்து கொடுத்துவிடுவேன் என்று பயம் காட்டுவது. போலவே கரப்பான்பூச்சி, பல்லி போன்றவற்றிற்கு பயம்காட்டி வளர்ப்பது. அதேசமயம், மின்சாரம், சாலை போக்குவரத்து, மொட்டை மாடி உயரம் போன்ற நியாயமான பயம் கலந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இன்னும் நிறைய இருக்கு. நினைவுக்கு வரும்போது எழுதுகிறேன்.
இப்பொழுதெல்லாம் வித்தியாசமாக ட்ரைலர் கட் செய்வதே வழக்கமான விஷயமாகி விட்டது. இனி வரும் காலங்களில் இந்த ட்ரெண்ட் போரடிக்க ஆரம்பித்து விடும் போல இருக்கிறது.
வருடக்கடைசி என்றாலே டாப் 10 திரைப்படங்கள், பாடல்கள், சம்பவங்கள், டாப் 10 பரபர, டாப் 10 சொற சொற என்று ஆளாளுக்கு ஆரம்பித்துவிடுகிறார்கள். இது பெரும்பான்மை தரப்புக்கு சலிப்பை ஏற்படுத்தினாலும் பிரபல ஊடகங்களுக்கு டாப் 10 பட்டியலை வெளியிடுவது கடமை என்றாகிவிட்டதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். இனிவரும் வருடக்கடைசிகளில் டாப் 10 கற்பழிப்புகள், டாப் 10 வங்கிக்கொள்ளைகள், டாப் 10 கள்ளக்காதல்கள், டாப் 10 என்கவுண்டர்கள் போன்ற பட்டியல்கள் வெளிவந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
வாழ்நாளில் முதல்முறையாக ஜாக்கி சான் படமொன்றை முழுமையாக திரையரங்கில் பார்த்திருக்கிறேன். தமிழில், என்பது ஆறுதல். CZ12 - பரபர பரபரவென்று படுவேக திரைக்கதை. ஆரம்பத்தில் தொடர்வதற்கு கொஞ்சம் சிரமப்பட்டேன். ஜேம்ஸ்பாண்ட் படங்களை போல ஜாக்கி சாதனங்களை பயன்படுத்துகிறார். நிறைய மசாலாத்தனங்கள், லாஜிக் பூ சுற்றல்கள் இருந்தாலும் ரசிக்க முடிந்தது. ரஜினியை ஏன் நம் மக்கள் ரசிக்கிறார்கள் என்ற உளவியல் புரிகிறது. தமிழ் மொழிமாற்றம் அட்டகாசம். இதுதான் ஜாக்கியுடைய கடைசி அடிதடி படம் என்ற செய்தி அதிர்ச்சி. ஐ வில் மிஸ் ஜாக்கி. (ஐ மீன் ஜாக்கி சான்).
மரணம் யாருக்கும் எப்பொழுதும் வரலாம். ஆனால் அது மிகச்சிறிய கவனக்குறைவால் அநியாயமாக ஏற்படும்போது மனது கிடந்து தவிக்கிறது. உறவினர் வீட்டு மொட்டைமாடியில் விளையாடச் சென்ற பன்னிரண்டு வயது சிறுவன் அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பியை தொட்டதால் உடல் கருகி ஊயிரிழந்திருக்கிறான். புகைப்படத்துடன் செய்தித்தாளில் வெளியாகி ஒரு கனம் உலுக்கியெடுத்து விட்டது. சிறுவனின் பெற்றோர்களின் நிலையை கற்பனை செய்யமுடியவில்லை. இதுகுறித்து EBயில் முன்பே புகார் கொடுத்து, அவர்கள் “சரி செய்கிறோம். அதுவரை யாரும் மொட்டைமாடிக்கு செல்ல வேண்டாம்.” என்று மட்டும் சொல்லியிருக்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்களுக்கு பழுதான அரசு இயந்திரத்தை நொந்து பிரயோஜனமில்லாத போது நாமே முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.
உதாரணத்திற்கு, குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் பொதுவாக செய்யும் சில தவறுகள் உள்ளன. அவற்றை களைந்தாலே நலம். குழந்தைகளிடம், பேய் வருது, சாப்பிடலைன்னா பூச்சாண்டி கிட்ட பிடித்து கொடுத்துவிடுவேன் என்று பயம் காட்டுவது. போலவே கரப்பான்பூச்சி, பல்லி போன்றவற்றிற்கு பயம்காட்டி வளர்ப்பது. அதேசமயம், மின்சாரம், சாலை போக்குவரத்து, மொட்டை மாடி உயரம் போன்ற நியாயமான பயம் கலந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இன்னும் நிறைய இருக்கு. நினைவுக்கு வரும்போது எழுதுகிறேன்.
இப்பொழுதெல்லாம் வித்தியாசமாக ட்ரைலர் கட் செய்வதே வழக்கமான விஷயமாகி விட்டது. இனி வரும் காலங்களில் இந்த ட்ரெண்ட் போரடிக்க ஆரம்பித்து விடும் போல இருக்கிறது.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
8 comments:
சிறு வயது பாலகனைப் போல் இன்னும் எத்தனை பேரை இந்தப் பழுதான எந்திரம் குடிக்கப் போகிறதோ யார் கண்டா....
ஹாய் டா ஈர்க்கவில்லை... குறும்படம் போல் உள்ளது பார்க்கலாம்
//பிரபா ஒயின்ஷாப் - 07012013//
ரொம்ப நாளைக்கு அப்புறம்.......
என்ன பாஸ் சரக்குல கொஞ்சம் வீர்யம் குறையுது. காஜல் எங்கே?
நீங்கள் சொல்லியிருக்கும் டாப் 10 நடந்தாலும் நடக்கும்.
சின்ன குழந்தைகளுக்கு துப்பாக்கி மேல் அதிக ஆசை உள்ளது.கவலை தரும் விஷயம் இது.
//குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் பொதுவாக செய்யும் சில தவறுகள் உள்ளன. அவற்றை களைந்தாலே நலம். குழந்தைகளிடம், பேய் வருது, சாப்பிடலைன்னா பூச்சாண்டி கிட்ட பிடித்து கொடுத்துவிடுவேன் என்று பயம் காட்டுவது. போலவே கரப்பான்பூச்சி, பல்லி போன்றவற்றிற்கு பயம்காட்டி வளர்ப்பது
//
100 % உண்மை .. கொன்னுடுவேன் என விரலை காட்ட சொல்லித்தருவது , உதை , அடி என கற்று தருவதுஇதெலாம் தவறு என தெரியாமலே நாம் செய்யும் தவறுகள்
சரக்கு இன்னும் வேணும் பாஸ்
@ அமுதா கிருஷ்ணா
நல்லதொரு தொடுப்பு கொடுத்திருக்கிறீர்கள்... அதைப்பற்றி அடுத்த வாரம் விரிவாக எழுதுகிறேன்... நன்றி...
ஆனால் இனிமேல் ஜாக்கியுடைய காமெடி திறனை உலகம் பார்த்து மகிழும்.
Post a Comment