12 January 2013

புத்தகக் காட்சி புலம்பல்கள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அது என்னவோ தெரியல, என்ன மாயமோ புரியல புத்தகக் காட்சி ஆரம்பித்துவிட்டாலே கம்யூனிச சிந்தனை, சமூகக் கோபம், அறச்சீற்றம் எச்சச்ச கச்சச்ச இவையெல்லாம் எங்கிருந்தோ பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது.


புத்தகம் வாங்குகிறோமோ இல்லையோ புத்தகக் காட்சி ஆரம்பித்தவுடன் முதல்நாள் முதல்காட்சி சினிமா ரசிகன் போல முண்டியடித்துவிட வேண்டுமென்று எனக்கொரு கோட்பாடு. எனினும் அன்றாட அக்கப்போருகள். வாரநாட்களில் என்னுடைய இயந்திரம் என்னை எங்கேயும் அனுமதிப்பதில்லை.

இன்று காலை வெள்ளென வீட்டில் இருந்து புறப்பட்டுவிட்டேன். கடந்த வாரம் ஏற்பட்ட சிறிய விபத்தொன்றின் காரணமாக அரை நிஜார் அணிந்து செல்ல வேண்டிய சூழல். (விபத்து என்றதும் வாசகர்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம். நான் நலமாக இருக்கிறேன் :) ). பபாசியில் அரை நிஜாரை அனுமதிப்பார்களா என்று தெரியவில்லை. பச்சையப்பாஸ் எதிரே நடைபெற்ற வரையில் போக்குவரத்து சுமூகமாகவே இருந்தது. நந்தனம் என்றால் திருவொற்றியூரிலிருந்து இரண்டு பேருந்துகள் மாறி செல்ல வேண்டும்.கூகுள் மேப்ஸ் வேறு YMCA ராயப்பேட்டையில் இருக்கிறது என்று சொல்லி குழப்பி வைத்திருந்தது. பிறந்ததிலிருந்து சென்னையில் இருந்துக்கொண்டு YMCA மைதானம் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை என்றால் மானக்கேடு. SIET வரை பயணிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. அதன்பிறகுதான் போக்குவரத்து நெரிசல் விழி பிதுங்கியது. முந்தய புத்தகக் காட்சிகளில் இடம்பெற்றது போல அரங்கு வாயிலில் பழைய புத்தகக்கடைகள் எதுவும் தென்படவில்லை. புறவழியில் வைத்திருக்கிறார்களோ என்னவோ ?

பதினொன்றரை மணிக்கு அரங்கை அடைந்துவிட்டேன். அரை நிஜாருக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை. என்ன, சில வயதுப்பெண்கள் ஏதோ சிக்கன் தொடைக்கறியை பார்ப்பதுபோல குறுகுறுவென்று பார்க்கும்போது கூச்சத்தில் நெளிய வேண்டியதாகிவிட்டது.

வழக்கமாக கடை எண் ஒன்றில் தொடங்கி அப்படியே ZIGZAG-ஆக ஒரு வலம் வருவேன். அதேபோல முதல்முறை செல்லும்போது எந்த புத்தகமும் வாங்க மாட்டேன். கடை எண்களை மட்டும் குறித்துக்கொண்டு புத்தகக் காட்சி நிறைவடைவதற்கு ஓரிரு நாட்கள் முன்பு சென்று வாங்குவேன். இன்றும் அப்படித்தான் தொடங்கினேன். முதலிரண்டு வரிசைகளுமே சுவாரஸ்யக்குறைவாக இருந்தது போல ஒரு எண்ணம். 30 நாளில் ஹிந்தி கற்றுக்கொள்வது எப்படி ?, கனவுகளும் பலன்களும், நீங்களும் ஜோசியர் ஆகலாம் போன்ற புத்தகங்களே கண்ணில் பட்டன. அதை விட்டால் இந்திரா செளந்திரராஜன் வகையறா குடும்ப நாவல்கள். சுமார் மூன்று வரிசைகள் கடந்தபின்னர் ஒரு கடையில் சுஜாதா புத்தகங்கள் மலிவு விலையில் கிடைத்தன. இந்தமுறை கடை எண்ணை குறித்து வைக்கவில்லை. நம் பதிவர்கள் இருக்கிறார்களே, எமகாதகர்கள். ஆளாளுக்கு ஒரு செட் புத்தகம் வாங்கினால் என்னவாம். சுஜாதா புத்தகங்கள் சல்லிசு விலையில் என்றால் போங்காட்டம் ஆடி மொத்தத்தையும் மூட்டை கட்டிவிடுவார்கள். சென்றமுறை அப்படித்தான் ஏமாந்தேன். அதனால் கையோடு புத்தகங்களை வாங்கிவிட்டேன்.

1. வடிவங்கள் (விஞ்ஞான சிறுகதைகளின் தொகுப்பு)
2. 60 அமெரிக்க நாட்கள் (பயண அனுபவம்)
3. டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு (நாடகம்)
4. விபரீதக் கோட்பாடு (நாவல்)
5. 24 ரூபாய் தீவு (நாவல்) (புத்தகவிலை 26 ரூபாய் என்பது முரண்)
6. படிப்பது எப்படி ?
7. சிறுகதை எழுதுவது எப்படி ?

ஏழு புத்தகங்கள் சேர்த்து நூற்றி ஐம்பது ரூபாய். தொடர்ந்து உலவினேன். ஏனோ கூட்டம் அதிகமில்லை. வி.ஐ.பிக்கள், சக பதிவர்கள் யாரும் தென்படவில்லை. கடந்த ஆண்டு, சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன் பில் கவுண்ட்டரில் சந்தித்த சுமாரான ஃபிகர் இன்னமும் என்னை நினைவில் வைத்து புன்னகைத்துவிட்டு செல்கிறாள்.

நான்கைந்து வரிசைகள் கடந்ததும் ரைம்ஸ் கடை அளப்பறைகள் ஆரம்பமானது. ஆளாளுக்கு ஒரு எல்.சி.டி தொலைகாட்சி வைத்துக்கொண்டு அதில் ஆத்திச்சூடியோ, ஆன்னா ஆவன்னாவோ, டோரா பூஜியோ அலறவிட்டு வெறுப்பேற்றுகிறார்கள். ஒரு யுவதி தன்னுடைய குழந்தையை வாக்கரில் அமர்த்தியபடி அழைத்து வந்திருக்கிறாள். அது ‘வீல்’ என்று கத்தி கூப்பாடு போடுகிறது. எரிச்சல் அதிகமானது. அந்நேரம் பார்த்து கண்ணில் பட்ட லிச்சி ஜூஸ் சற்று தணியச் செய்தது.

3012ல் உலகம் அழியுமா ?, இஸ்லாம் பயங்கரவாதச் செயலைக் கண்டிக்கிறது போன்ற குபீர் சிரிப்பை வரவழைக்கும் புத்தகங்கள் கண்ணில் படுகின்றன. இன்னொரு கடையில் பத்து, பதினைந்து ஆபீசர்ஸ் டை கட்டியபடி கிடைக்கிற பெற்றோர்களை பிடித்து மூளைச்சலவை செய்துக்கொண்டிருக்கிறார்கள். ராஜ் டிவி கடையில் வைக்கப்பட்டிருந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’, ‘நாடோடி மன்னன்' டிவிடிக்களையெல்லாம் அள்ளிக்கொண்டு செல்ல வேண்டும் போல ஆசையாக இருக்கிறது. அஜித் புகைப்படத்தை அட்டையில் பொறித்த ஐந்து RITZ சஞ்சிகைகளை வாங்கி பையில் சொருகிக்கொண்டேன். பசியெடுக்க ஆரம்பித்தது. ஏறத்தாழ கடைசி வரிசைக்கு வந்திருந்தேன். காட்சிப்பிழை சிற்றிதழில் தேர்ந்தெடுத்து நான்கை வாங்கினேன். சந்தா கட்டிவிடலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

வெளியே வந்ததும் குல்பி ஐஸ், ஸ்வீட் கார்ன், வாழைத்தண்டு சூப், ஐஸ்க்ரீம் என்று வரிசையாக கடைகள். சாப்பிட வாங்க என்ற பெரிய ஃபுட் கோர்ட் மாதிரி ஒன்று. உள்ளேயே நுழையவில்லை. மாலையில் சசிகுமார், சமுத்திரக்கனி வருவதாக பேசிக்கொண்டார்கள். அயர்ச்சியாக இருந்தது கிளம்பி வந்துவிட்டேன். மீண்டும் நாளை செல்ல வேண்டும்.

அடுத்து வருவது: கண்ணா லட்டு தின்ன ஆசையா

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

35 comments:

அஞ்சா சிங்கம் said...

லட்டு எனக்கு இருக்கா ................?

rajamelaiyur said...

தல முக்கியமாக மொபைல் நம்பர் வாங்க வேண்டிய ஆளை பற்றி சொல்லவே இல்லை ??

rajamelaiyur said...

நீங்கள் வாங்கிய அந்த நாவல்களை எனக்கும் வாங்கி அனுப்ப முடியுமா ? நான் பணம் அனுப்பி விடுகிறேன் . வாய்ப்பு உண்டா ?

ரமி said...

சுஜாதா புத்தகம் எந்த ஸ்டால வாங்கினிங்க?

Philosophy Prabhakaran said...

அஞ்சாசிங்கம், லட்டு உங்களுக்கும் சேர்த்து தான்... காலை 9 மணிக்காட்சி, ஐட்ரீம் சினிமாஸ்....

Philosophy Prabhakaran said...

ராஜா, பதிவின் இடையே சொல்லியிருக்கிறேன்... முழுமையாக வாசிக்கவும்...

உங்கள் முகவரியை அனுப்பவும்... வேண்டிய புத்தகங்களின் லிஸ்டடையும் அனுப்பவும்...

Philosophy Prabhakaran said...

ரமி, கடை எண் 93, மீனாட்சி புத்தக நிலையம்...

Robert said...

பசியெடுக்க ஆரம்பித்தது. வெளியே வந்ததும் குல்பி ஐஸ், ஸ்வீட் கார்ன், வாழைத்தண்டு சூப், ஐஸ்க்ரீம் என்று வரிசையாக கடைகள். சாப்பிட வாங்க என்ற பெரிய ஃபுட் கோர்ட் மாதிரி ஒன்று. உள்ளேயே நுழையவில்லை // ஏன் நண்பா பார்த்த உடனே பசி தீர்ந்திடுச்சா.....

Philosophy Prabhakaran said...

இல்லை ராபர்ட்... பர்ஸ் காலியாகி விடும் என்பதால்...

Unknown said...

1.சோளகர் தொட்டி -ச.பாலமுருகன்

2.ஜாலியா இலக்கணம் -தமிழ் கொத்தனார்.

3.ஏழாம் உலகம்-ஜெமோ

Philosophy Prabhakaran said...

பரிந்துரை லிஸ்டா மாம்ஸ்... ஜாலியா இலக்கணம் எந்த பதிப்பகம்ன்னு சொன்னா நல்லாயிருக்கும்....

ரமி said...

நன்றி.

JR Benedict II said...

//24 ரூபாய் தீவு (நாவல்) (புத்தகவிலை 26 ரூபாய் என்பது முரண்)//

அண்ணா இலங்கையில் இதே புத்தகம் 375/- கொடுத்து வாங்கி இருக்கிறேன். (கிழக்கு பதிப்பகம்). இலங்கை இந்திய பண மாற்றம் என்றாலும் நட்டம் எனக்கு தான் போல..

அண்ணா.. கட்டாயம் அங்கிருக்கும் நல்ல புத்தகங்கள் குறித்த ஒரு தொகுப்பு எழுதுங்க..

// சுஜாதா புத்தகங்கள் சல்லிசு விலையில் என்றால் போங்காட்டம் ஆடி மொத்தத்தையும் மூட்டை கட்டிவிடுவார்கள்.//

சுஜாதா புத்தகங்கள் என்றால் பதிப்பகங்கள் வித்தியாசப்படுமா.. குறிப்பிட்ட சில புத்தகங்கள் தெரிந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கிறதா??.. காரணம் இலங்கையில் சுஜாதா நாவல் கிழக்கு பதிப்பை தவிர வருவது மிக குறைவு.. நம்மாளுங்க டக்ஸ்னு சொல்லி விலையை ரொம்ப ஜாஸ்தி ஆகிடுராயங்க..

Philosophy Prabhakaran said...

ஹாரி, சுஜாதாவின் நூல்கள் கிழக்கு, விசா, குமரி மற்றும் சில பதிப்பகங்களில் வெளிவந்திருக்கின்றன... அவற்றில் குமரிப் பதிப்பகம் மட்டும் எப்போதோ வெளியிட்ட நூல்களை மறுபதிப்பு செய்யாமல் வைத்திருக்கிறது... எனவே அவை அப்போதைய விலையில் இப்போதும் விற்கப்படுகின்றன...

மற்றபடி கிழக்கு பதிப்பகத்தில் அதே புத்தகத்தை வாங்கினால் விலை 100, 150 என்று இருக்கும்... இலங்கையில் என்பதால் கொள்ளை விலையில் விற்றிருக்கிறார்கள்...

இப்போது குறைந்த விலையில் நான் பதிவில் குறிப்பிட்டுள்ள புத்தகங்கள் தவிர்த்து 21ம் விளிம்பு, தோரணத்து மாவிலைகள், விக்ரம், ஒரு நடுப்பகல் மரணம் ஆகியவை கிடைக்கின்றன...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டி ஆஃப் காஸ்மிக் எனர்ஜி கப்பில்டு வித் அட்டாமிக் எனர்ஜி புக் இருக்கா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

லட்டுவுக்கு சிறப்பு மலர் உண்டா?

Philosophy Prabhakaran said...

எட்டுப்புள்ளி கோல புக்குதான் இருக்குதாம் பன்னிக்குட்டி...

லட்டு காமெடி பீஸ் படமில்லைன்னு நினைக்கிறேன்... ஆனாலும் ரெண்டு டிக்கெட் எடுத்து வச்சிட்டு யாரை கூப்பிடுறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன்... சிங்கம் அதுவா வந்து சிக்கிடுச்சு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சிங்கத்த ஏற்கனவே அலெக்சாண்டர் செதச்சி அனுப்பிட்டாரே, நாளைக்கி இன்னொரு ரவுண்டுக்கு தாங்குமா?

Philosophy Prabhakaran said...

பயபுள்ள போதைல வர்றேன்னு கமிட் ஆயிடுச்சு... நாளைக்கு வரமாட்டேன்னு சொன்னா மிதிச்சிடுவேன்...

aavee said...

தொடைக்கறியை பார்த்து பயந்து விட்டார்களா இல்லையா என்பதையும் தெரிவிக்கவும்.

Philosophy Prabhakaran said...

பயப்படுவதற்கு அது என்ன ராஜ்கிரண் தொடையா ?

சீனு said...

நான் நாளைக்குப் போறேனே... வாரீங்களா வாரீங்களா

Philosophy Prabhakaran said...

வருவோம் சீனு...

துளசி கோபால் said...

பகிர்வுக்கு நன்றி.

இங்கிருந்தே மனக்கண்ணால் அத்தனையையும்............. ஹூம்.....

Unknown said...

ஜாலியா இலக்கணம் -கிழக்கு!

ஒரு முறை சந்திப்பிழை,ஒற்றுப்பிழை பற்றி விவரம் கேட்டிருந்தீர்களே நல்ல தீர்வு இந்த புத்தகம், வலைதள எழுத்தாளர்களுக்கென்றே எழுதியிருக்கின்றார் எழுத்தாளர்.!

Anonymous said...

சென்னையை பிரிந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டன, நான் தவறவிடும் 5ம் புத்தக கண்காட்சி இது. அந்த குறையை நிவர்த்தி செய்தது உங்கள் பதிவு. முன்பு காயிதே மில்லத் கல்லூரியில் கண்காட்சி நடக்கும், பின்னர் பச்சையப்பாவுக்கு முன் இருந்த பள்ளி, இப்போ நந்தனமா?! நல்லது. இடம் தான் மாறிவிட்டன, புத்தகங்கள் மாறவில்லை போல. அதே தேவாரம், ராமயணம், சமையல், ஜோதிடம், பாலர்வாடி சிடிக்கள், அப்புறம் நீங்க சொன்ன மாதிரி செம காமடி புத்தகங்கள் தானா? முன்பு எல்லாம் கண்காட்சி நடக்கும் 10 நாளும் கல்லூரிக்கு மட்டம் போட்டுவிடுவேன், நல்ல புத்தகங்களை 10 நாள் தேடினால் தான் எடுக்க முடியும், கூடவே நல்ல பிகர்களும், என்னவோ அழகான் பெண்கள் பலரும் வாசிப்பதில்லை போல, கண்காட்சியில் காணக்கிடைக்காது, வெளியில் தின்பண்டக் கடைகள் மட்டும் விதிவிலக்கு. மாலையில் எதாவது பிரபலங்கள் வரும், அதை எல்லாம் முடிச்சு வீடு சேர ராத்திரி 10 ஆயிடும். இன்று அவை எல்லாம் ஓர்மையாக மட்டுமே என்னோடு. நன்றிகள் பிராபகரன்.

arasan said...

தொடை கறி சூப்பர் அண்ணாத்தே..(சொன்னவிதம் சூப்பர்னு சொல்ல வந்தேன்)

faqirsulthan said...

\இஸ்லாம் பயங்கரவாதச் செயல்களை வெறுக்கிறது போன்ற குபீர் சிரிப்பை வரவழைக்கும் புத்தகங்கள்/
சபாஷ்! பதிவுலகில் பெருகி வரும் காவித் தீவிரவாதம்.
கீப் இட் அப்!

JR Benedict II said...

நன்றி அண்ணா

Philosophy Prabhakaran said...

நன்றி துளசி மேடம்...

தகவலுக்கு நன்றி மாம்ஸ்... பதிவுலகில் பின்னூட்ட உரையாடல் முதற்கொண்டு உற்றுநோக்கும் தங்கள் பார்வை ஆச்சரியப்படுத்துகிறது...

நன்றி இக்பால்... தற்போது பச்சயப்பாஸ் அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடந்துவருவதால் இடம் மாறியிருக்கிறது...

நன்றி அரசன்...

நன்றி ரத்னவேல் அய்யா...

நன்றி சுல்தான்...

நன்றி ஹாரி...

வவ்வால் said...

பிரபா,

இன்னுமா தாத்தா எழுதின புத்தகங்களையே கொத்தா அள்ளிக்கிட்டு இருப்பீங்க?

நல்ல இளவட்ட எழுத்தாளர்கள்,அதுவும் பெண்ணியக்கவிஞர்கள் எழுதின பின்னவினத்துவ "எழுச்சி கவித,கத புக்குளாம் எந்த ஸ்டால் என சொல்லவும் போய் வாங்கிடலாம்.

மலையாள மாந்த்ரீகம்,வூடு சூன்யம், கூடு விட்டு கூடு பாய்தல்,நோக்கு வர்மம் போன்ற அறிவியல் புத்தகங்கள் வாங்கி வாழ்வில் முன்னேறலாம்னு பார்க்கிறேன் ,அது குறித்தும் தகவல்கள் சொல்லவும்.

பொங்கல் முடிஞ்சப்பொறவு தான் போகணும்.

பதிவு எழுதுறனோ இல்லியோ பின்னூட்டம் போடலைனா...சரியா காலைக்கடன் கூட முடிக்க முடியலை ,இது எதுனா பின்னூட்டப்பிராந்தியா, நேத்து நைட்டு துவக்கின நெடுஞ்சாலைப்பயணம் இப்போ தான் முடிஞ்சது,ஆனாலும் பொறுப்பா வந்து பின்னூட்டம் போடுறேன்...நாளைக்கு என் சொத்தைப்பல்லை வச்சு எப்படி கரும்பு கடிப்பதுன்னு ஒரு கவலை உள்ளுக்குள் ஓடுகிறது...என்னமாதிரியான சவால்கள் ஒரு சாமனியனுக்கு ...வாழ்க்கை என்பது வாழைப்பழம் சாப்பிடுவது போல எளிதாக தோன்றினாலும் ,வழுக்கிவிம் தோலையும் தாண்டித்தான் வாழ வேண்டியுள்ளது.

பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Philosophy Prabhakaran said...

வவ்வால், நீங்கள் குறிப்பிடும் பெண்ணியக்கவிஞர்கள் விஷயத்தில் எனக்கு அறிவு குறைவு... உண்மையில் நாங்களெல்லாம் பெண் பதிவர்கள் பக்கம் கூட திரும்புவதில்லை...

உண்மையில் பெண்ணியவாதிகள் தொலைபேசி எண் உட்பட உமக்கு நெருக்கமான ஒளிவட்டங்களிடம் தான் இருக்கிறது... பேசி பெற்றுக்கொள்ளவும்...

நீங்களும் இலக்கியவியாதி ஆக முயற்சிக்கிறீர்கள் என்று புரிகிறது...

இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்...

r.v.saravanan said...

கடை எண் 93, மீனாட்சி புத்தக நிலையம்...

நன்றி பிரபா இந்த வாரம் செல்கிறேன் வாங்கி விடுகிறேன்

Philosophy Prabhakaran said...

சரவணன், டூ லேட்... மூன்றாவது நாளே மொத்தத்தையும் காலி செய்துவிட்டார்கள்...

வவ்வால் said...

பிரபா,

// நீங்கள் குறிப்பிடும் பெண்ணியக்கவிஞர்கள் விஷயத்தில் எனக்கு அறிவு குறைவு... உண்மையில் நாங்களெல்லாம் பெண் பதிவர்கள் பக்கம் கூட திரும்புவதில்லை...//

எனக்கும் அறிவுக்குறைவு அதேன் உம்மக்கிட்டே விவரம்கேட்டேன், அறிவு கொறைச்சலா இருக்கு ,இன்னும் கொஞ்சம் அபிவிருத்தி செய்யலாம்னு பார்த்தேன் :-))

பெண்ப்பதிவர்கள் எல்லாம் பெண்ணியம் பேசுவதில்லை அவங்க எல்லாம் சமையல்குறிப்பு வாதிகள் :-))

நெஞ்சை நிமித்துக்கிட்டு பெண்ணியம் பேசுறவங்க அழகே அழகு :-))

ஐ மீன் அழகா பேசுவாங்கண்ணு சொன்னேன் :-))

//உண்மையில் பெண்ணியவாதிகள் தொலைபேசி எண் உட்பட உமக்கு நெருக்கமான ஒளிவட்டங்களிடம் தான் இருக்கிறது... பேசி பெற்றுக்கொள்ளவும்...
//

அந்த ஒளிவட்டங்களின் இம்சை தாங்காம தான் நானே அல்லாடுறேன் ,இதுல அவங்கக்கிட்டே கேட்கணுமாமே அவ்வ்வ் :-((

//நீங்களும் இலக்கியவியாதி ஆக முயற்சிக்கிறீர்கள் என்று புரிகிறது...//

டாஸ்மாக்கில் டானிக் குடிக்கிறவன்கிட்டே அந்த அபாயமான வியாதிகள் அண்டாது :-))

இலக்கியவியாதிகள் எல்லாம் டாஸ்மாக் டானிக் குடிக்கிறதா சொல்லிக்கிட்டாலும் அதெல்லாம் , மோந்து பார்க்கிற வகையறா :-))