13 January 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பாக்யராஜின் இன்று போய் நாளை வா படத்தின் மறுபதிப்பு, சந்தானத்தின் தயாரிப்பு, வசீகரமான தலைப்பு இதையெல்லாம் தாண்டி பவர் ஸ்டார் என்ற தாரக மந்திரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. பூர்த்தியானதா ?


மறுபதிப்பு என்பதால் கதை, சஸ்பென்ஸ் உடைப்பு என்பதை பற்றியெல்லாம் கவலை வேண்டாம். எனினும் புதுப்பொலிவான திரைக்கதை.

பவர் ஃபுல்லான வேடத்தில் பவர் ஸ்டார். வழக்கமாக படங்களில் டைட்டில் போடும்போது நாயகனை விட சந்தானம் அதிக விசில் வாங்குவார். இங்கே பவர் ஸ்டார் பெயர் போடும்போது உச்சக்கட்ட ஆர்ப்பரிப்பு. பவர் ஸ்டாருடைய நடிப்பு, வசன விடுவிப்பு பற்றி சொல்லித்தெரியவேண்டியதில்லை. ஆனால் குவியத்துக்கு வெளியே பவர் செய்யும் சேட்டைகள் கவனிக்க வைக்கின்றன. பவரை முதல்முறையாக மிகச்சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒரு காட்சியில் நாயகி சொல்வதைப் போல அவருடைய மைனஸ் ப்ளஸாக அமைந்துவிட்டது.

சந்தானத்தின் நகைச்சுவைகள் லட்டில் புதைத்து வைக்கப்பட்ட உலர் திராட்சைகள். அவருடைய உவமைகள், தத்துபித்துவங்கள் சலிக்காமல் தொடர்ந்திருக்கின்றன. நாயகியிடம் விருப்பம் தெரிவிக்கும் காட்சியில் முகபாவனை அற்புதம்.

பாக்யராஜ் வேடத்தில் புதுமுகம் சேது. சாப்பிடத் தெரியாதவருக்கு லட்டு கிடைத்திருக்கிறது. பனியன் விளம்பர மாடல் மாதிரி நடித்திருக்கிறார்.


விஷாகா - டல் திவ்யாவாக இருந்தவர் தூள் திவ்யா ஆகிவிட்டார். பிடிச்சிருக்கு. பாவாடை தாவணி போட்ட பாலாடை. பாடல் காட்சியில் பஞ்சாபி ஜிலேபி. அடியே என் அன்னக்கிளியே பாடலில் விஷாகாவின் குழைவான பிரதேசங்கள் நம் உடலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

கல்லாப்பெட்டியை நிரப்ப முடியாமல் கரகர கணேஷ். கோவை பேச்சுவழக்கில் சரளமாக நடித்திருக்கிறார் கோவை சரளா. உதிரி பாகங்களாக பட்டிமன்றம் ராஜா, தேவதர்ஷினி, சிவசங்கர் மாஸ்டர் தேவையான அளவிற்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பவர் குடும்பத்தினர் உறுத்தல். கெளரவ தோற்றத்தில் சிம்பு, கெளதம் மேனன்.

தமன் இசையில் ஆசையே அலை போல பாடலும், விஷாகா தசையில் அடியே என் அன்னக்கிளியே பாடலும் செவிக்கும் கண்களுக்கும் இனிமை, முறையாக.

குறைகள் என்று பார்த்தால், சில காமெடி காட்சிகள் மொக்கை தட்டுகின்றன. குறிப்பாக பவர் குடும்பத்தினர் செய்யும் நகைச்சுவைகள் தெலுங்குத்தனம். கணேஷ் பிணமாக தோன்றும் காட்சி காமெடி எல்லை மீறல். வசன உச்சரிப்பும் வாய் அசைப்பும் பல காட்சிகளில் பொருந்தவே இல்லை. சொல்லப்போனால் பவர் ஸ்டார் பல காட்சிகளில் வாயசைக்கவே இல்லை.

மற்றபடி, முதல் பாதியில் முழுக்க சிரிக்க வைத்து, இரண்டாம் பாதி கொஞ்சம் தொய்வடைந்து பின்னர் மறுபடியும் சிரிப்பு மூட்டி மொத்தத்தில் ஒரு ஃபீல் குட் படமாகவும், பொதுஜன விருந்தாகவும் அமைந்திருக்கிறது. சந்தானத்தின் முதல் தயாரிப்பு சினிமாவுக்கும், அதன் ரசிகர்களுக்கும் லட்டு கொடுத்து வருடத்தை தொடங்கி வைத்திருக்கிறது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

12 comments:

Philosophy Prabhakaran said...

சந்தானம் தன்னுடைய நடிப்பில் வெளிவந்திருக்கும் இன்னொரு படம் வெளிவந்த அதே நாளில் தன்னுடைய படத்தை வெளியிடுகிறார் என்றால் அவருக்கு லட்டின் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்திருக்க வேண்டும். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. சில தினங்களில் அலெக்ஸ் பாண்டியனை போண்டியாக்கிவிட்டு திரையரங்குகளில் லட்டு நிறையும்.

Philosophy Prabhakaran said...

Off the records:

திரைப்படங்களுக்கு இரண்டு டிக்கெட்டுகள் எடுப்பது வழக்கம். எடுத்தபிறகு விழைகிற நண்பர் யாரையாவது அழைத்துச் செல்வேன். இந்தமுறை செல்வின். அதிகமாக சினிமா பார்க்காத அவருக்கும் படம் பிடித்திருக்கிறது.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தமிழ்சினிமாவை வாழவைக்க வந்த பவரே.... தமிழகத்தின் ஜெனரேட்டரே..... வாழ்க....

ராம்குமார் - அமுதன் said...

நல்ல வேளை... படம் நல்லாருந்துச்சு.... மூனுமே மொக்கை வாங்குமோன்னு நெனச்சேன்... நாளை பார்க்கனும்...

Unknown said...

விஷாகாவின் குழைவான பிரதேசங்கள் நம் உடலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
///////////////////////////
உடலில் எதிர் விழை மாற்றம்...!ஓ.....ஓகோ...!

Unknown said...

பவர் ஆட்டம் ஆரம்பம் ஆயிருசுலே

வவ்வால் said...

விசாகா விசா வாங்காம மன்சுக்குள்ள பூந்துடுச்சு போல, பலே விசாக பலே..விசாகா கூறைத்தகடுகள் பலமானவை...இடி,மின்னல் ,மழை அனைத்தும் தாங்கும் :-))

ரெண்டாவது லட்டு எங்கே?

M (Real Santhanam Fanz) said...

padam superhit.. santhanam,powerstar bla bla ellathaiyum vidunga.... but neenga vishakava patthi jolluratha paartthaa, 2013 kanavu kannikalla muthal 5kulla varuvaanga polarukke.. superb review boss..

aavee said...

power nadicha padamnathum prabhaharanoda vimarsanam irukkumnu ethir paarthen..

vazhakkam pol soopparaa jolliyirukeenga.. ;-)

Philosophy Prabhakaran said...

நன்றி பன்னிக்குட்டி...

நன்றி ராம்குமார்... நீங்கள் செய்திருந்த ஜாக்கி ஸ்பூப் அற்புதம்...

நன்றி வீடு மாம்ஸ்.... க க க போ... அந்த சொற்றொடர் படிப்பவர்களுக்கு புரியுமோ இல்லையோ என்று தயங்கினேன்... யூ ஆர் க்ரேட்...

நன்றி சக்கர கட்டி...

வவ்வால், உங்களுடைய பின்னூட்டத்தில் இரட்டை அர்த்தம் எதுவும் இல்லையே...

நன்றி சந்தானம் ரசிகர்களே... கடைசி இரண்டு இடங்களுக்குள் இடம்பெறுவது நிச்சயம்...

நன்றி கோவை ஆவி...

பால கணேஷ் said...

தயங்காம, தைரியமா லட்டை சாப்பிடலாம்ங்கறீங்க. ரைட்டு.

r.v.saravanan said...

சந்தானத்தின் நகைச்சுவைகள் லட்டில் புதைத்து வைக்கப்பட்ட உலர் திராட்சைகள். அவருடைய உவமைகள், தத்துபித்துவங்கள் சலிக்காமல் தொடர்ந்திருக்கின்றன.

ஹா....ஹா

விமர்சனம் ரசித்தேன் பிரபா