5 June 2013

ரம்பாயணம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இ-ங்-கு ப-ணி-யா-ர-ம் வி-ற்-க-ப்-ப-டு-ம் :- கடைத்தெருவில் வைக்கப்பட்டிருந்த பலகையில் எழுத்துக்கூட்டி படித்துக்கொண்டிருந்தேன். பேசாமல், மீன் மார்க்கெட்டில் வடிவேலுவிடம் பார்த்திபன் செய்வதைப் போல லந்து செய்யலாமா ? மறுபடியும் எதோ ஒரு யோசனை தோன்ற பலகை வாசகத்தை கவனித்தேன் - பணியாரம். இப்போது எனக்கு அவருடைய ஞாபகம் வந்தது. என்னது யாரா ? ரம்பா சார் ரம்பா ! ஒரு தட்டு பணியாரத்தை வாங்கி அதனோடு சேர்த்து ரம்பாவின் நினைவுகளையும் அசை போடத் துவங்கினேன்.


மிகச்சரியாக முப்பத்தி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் ரம்பா பூமியில் அவதரித்தார். ஆந்திர மாநில விஜயவாடா அன்று முதல் புண்ணியஸ்தலம் ஆகப்பெற்றது. அவரிடம் விஷயம் உள்ளது என்பதை குறிப்பால் உணர்ந்துக்கொண்ட அவருடைய பெற்றோர் அவருக்கு விசயலட்சுமி என்று பெயர் சூட்டினர். ஆமாம், அதுதான் அவருடைய இயற்பெயர். சினிமாவிற்காக அமிர்தா என்று மாற்றியிருக்கிறார். பின்னர் அவருடைய அழகில் சொக்கிய இயக்குனர் / தயாரிப்பாளர் யாரேனும் ரம்பா என்ற பெயரை சூட்டியிருக்க வேண்டும்.

பொதுவாக யாரும் அதிகம் கண்டுகொள்ளாத கன்னட சினிமாதான் முதன்முதலில் ரம்பாவை கண்டுக்கொண்டது. சர்வர் சோமன்னா என்கிற கன்னட படத்தில் பதினாறு வயது ரம்பா மழையில் நனைந்தபடி போட்ட ஆட்டத்திற்கு கர்நாடக மாநில நிலப்பரப்புகளில் சூடு கிளம்பியிருக்க வேண்டும். ஆந்திராவில் உருவாகிய புயல் கன்னட தேசம் வழியாக கேரளம் கண்டு மீண்டும் தெலுங்கு தேசம் சென்று கடைசியாகத்தான் தமிழகத்தை தாக்கியது. தெலுங்கில் ரம்பா முதன்முதலில் ராஜேந்திர பிரசாத்துடன் ஜோடி சேர்ந்தார் என்பதை நினைவில் கொள்ளவும்.

தமிழில் ரம்பாவுடைய முதல் படம் உழவன். அப்போது ரம்பாவின் வாளிப்பைக் கண்ட வாலிபக்கவிஞர் தன் வரிகளால் வாலிபால் விளையாடிவிட்டார்.

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைப்பூ !

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ
மைவிழி ஜாடைகள் முல்லைப்பூ
மணக்கும் சந்தனப்பூ !

என்று துவங்கி உச்சி முதல் பாதம் வரை வர்ணித்து தள்ளிவிட்டார் மனிதர். நியாயத்திற்கு ரம்பாவின் புகழ் உச்சகட்டத்தை அடைந்திருக்க வேண்டும். எனினும் அந்த படத்தில் நடித்த மற்றொரு நாயகி ராக்கோழியாக மாறி கவன ஈர்ப்பு செய்துவிட்டார். கிடைத்த கேப்பில் ரம்பா தாய்தேசம் திரும்பி சிரஞ்சீவி, வெங்கடேஷ் என ஒரு சுற்று வந்தார்.


அப்போது காமெடி ஸ்பெஷலிஸ்டுகளின் ஒருவரான சுந்தர்.சி கண்களில் ரம்பா சிக்கினார். ரம்பாவைக் கண்ட சுந்தர்.சிக்கு குஸ்காவிற்குள் லெக்பீஸ் கிடைத்தது போல இருந்திருக்க வேண்டும். உடனடியாக தன்னுடைய உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நாயகியாக்கி விட்டார். கூடவே அழகிய லைலா என்ற அழகிய அறிமுகப் பாடலை ரம்பாவுக்கு வைத்து, அதில் அவரை மர்லின் மன்றோ பாணியில் நடனமாட விட்டு தமிழ் சினிமா ரசிகர்களை திக்குமுக்காட வைத்துவிட்டார். ரம்பாவின் வருகையைக் கண்டு மற்ற நடிகைகள் தொடை நடுங்கியிருக்கக்கூடும்.

தொண்ணூறுகளின் மத்தியில் தமிழகத்தில் தீம் பார்க்குகள் அப்படியொன்றும் பிரபலமில்லை. அது வசதி படைத்தவர்களுக்கு மட்டுமானதாக நடுத்தர வர்க்கம் கருதிக்கொண்டிருந்தது. உள்ளத்தை அள்ளித்தா படத்தில் ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ என்றொரு பாடல், MGM பார்க்கில் படம் பிடிக்கப்பட்டது. படம் வெளிவந்ததும் பொது மக்கள் கூட்டம் கூட்டமாக MGMமிற்கு படையெடுத்தனர். இதுதான் ரம்பா ஓடிவந்த இடம், இதுதான் ரம்பா தொடை வைத்திருந்த பெஞ்ச் என்று கண்டு களித்து இன்புற்றனர். 


அதுமுதல் ரம்பாவிற்கு ஏறுமுகம் துவங்கியது. 1997ல் வி.ஐ.பி என்றொரு தமிழ்ப்படம் வெளியானது. இரட்டை நாயகிகள் கதையம்சம். ஒருவர் ரம்பா, இன்னொருவர் சிம்ரன். ஒரே கல்லில் இரண்டு மாங்கா. மயிலு மயிலு மயிலம்மா பாடலில் ரம்பாவும் சிம்ரனும் போட்டி போட்டுக்கொண்டு திறமை காட்டினர். இருப்பினும் கொழு கொழு ரம்பாவின் ஆட்டத்திற்கு முன் கொத்தவரங்காய் சிம்ரனின் ஆட்டம் செல்லுபடியாகவில்லை. ரம்பாவின் புகழ் ஓங்கியது. உச்ச நடிகரின் பட வாய்ப்பு, அஜித்துடன் ராசி என்று அந்த ஆண்டு முழுவதும் ரம்பாவுக்கும் அவருடைய பக்தர்களுக்கும் சிறப்பான ஆண்டாக அமைந்திருந்தது.

டாகுடர் விஜய்க்கும் ரம்பாவுக்கும் அப்படியொரு பொருத்தம். விஜய் தன்னுடைய கனவில் இடுப்பில் மச்சம் வைத்த பெண்ணொருத்தியை அடிக்கடி காண்கிறார். முகத்தை பார்க்க முடியவில்லை. கனவில் வந்தவள் யாரென்று மணிவண்ணன் விசாரிக்கிறார். மனிஷா கொய்ராலா, மாதுரி தீட்சித் தொடங்கி பானுப்ரியா வரைக்கும் அத்தனை பேரையும் கேட்டுப் பார்த்தாயிற்று. கடைசியில் விஜய்யுடைய கனவில் வந்தவர் யார் ? ஷாத்ஷாத் நம்ம ரம்பாவே தான் ! அங்கே தொடங்குகிறது அவர்களுக்குள்ளான வேதியியல். விஜய்யும் ரம்பாவும் மூன்று படங்களில் ஜோடியாக நடித்தார்கள் என்பது செய்தி.


கிட்டத்தட்ட எல்லா முன்னணி நாயகர்களுடன் நடித்துவிட்ட ரம்ஸுக்கு கடைசியாக அவருடன் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துவிட்டது. ஆம், கமல் பட வாய்ப்பு. காதலா காதலா படத்தில் ரம்பா கமலுக்கு ஜோடியாக நடிக்காவிட்டாலும் செளந்தர்யாவைக் காட்டிலும் பிரதான வேடம். நகைச்சுவையிலும் தடம் பதித்திருப்பார். பொதுவாகவே, கமல் படத்தில் நடிக்கும் கதாநாயகிகள் அதன்பிறகு காணாமல் போய்விடுவார்கள் என்று திரையுலகில் ஒரு நம்பிக்கை இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் அது ஒரு மித். ஆனால் ரம்பா விஷயத்தில் அது துரதிர்ஷ்டவசமாக உண்மையாகிவிட்டது.

ரம்பாவின் மார்க்கெட் சரிய துவங்கியது. பாலிவுட்டில் முயற்சித்துப் பார்த்தார். கோவிந்தா கோவிந்தா ஆகாதது தான் மிச்சம். விபரீத முடிவாக தமிழில் சொந்தப்படம் எடுத்து கையையும் தொடையையும் சுட்டுக்கொண்டார். எனினும் மனம் தளராமல் பெங்காலி, போஜ்புரி என்று கிடைக்கிற ஜீப்பில் தொற்றிக்கொண்டு பயணித்தபடி இருந்தார் ரம்பா. தெலுங்கில் ரம்பாவின் முதல் நாயகன் ராஜேந்திர பிரசாத் என்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா ? சொல்லி வைத்தாற்போல மீண்டும் ராஜேந்திர பிரசாத்துடன் க்விக் கன் முருகனில் ரம்பாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. கிட்டத்தட்ட ரம்பாவின் கடைசி படம் அதுதான்.


2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எட்டாம் நாளில் அந்த துயர செய்தி ரம்பா ரசிகர்களின் காதுகளுக்கு எட்டியது. செய்தியை கேட்டதும் இதய பலவீனமானவர்கள் பலர் மாரடைப்பில் பலியானார்கள். நிறைய வீடுகளில் கோபத்தில் செய்தி வாசித்த ரேடியோக்களும் தொலைக்காட்சிகளும் நொறுங்கின. பத்திரிகை அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. செய்தி: நடிகை ரம்பா தொழிலதிபரை மணந்தார். திருமணமாகி சரியாக ஒன்பதே மாதங்களில் ரம்பா, குட்டி ரம்பாவை ஈன்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் கோபமிருந்தாலும் ஒரு குழந்தையை பெற்றெடுத்துக் கொண்டுபோய் நின்றால் கோபம் போய்விடும் என்பார்கள். ரம்பா ரசிகர்கள் விஷயத்தில் அது உண்மைதான், மானாட மயிலாட நிகழ்ச்சியில் தற்போது ரம்பாவை பல்லிளித்து ரசித்துக்கொண்டிருக்கிறார்கள்.


தொடர்புடைய சுட்டிகள்:
நக்மாயிசம்
ஆல்ப்ஸ் மலைக்காற்று

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

19 comments:

Raj said...

good one. Indiran was my good friend...immm...என்ன செய்ய எல்லாருக்கும் ஒரு turn வந்துதான் ஆகணும்.... என்பது விதி.

Ravi Paraman

கோகுல் said...

அந்த துயர நிகழ்வை விஜய் டிவில இப்பவும் திரும்ப திரும்ப போட்டு ரணப்படுத்துறாங்க.,

maruthamooran said...

செம செம...!

கார்த்திக் சரவணன் said...

மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட ஒரு நடிகைக்கு டூப்பாக நடிக்க வந்தவர்தான் ரம்பா. ஜெயபாரதி என்று நினைக்கிறேன், படம் பெயர் ஞாபகம் இல்லை, பிரசாந்துக்கு ஜோடியாக நடித்தார். இதுவே ரம்பா நடித்த முதல் தமிழ்ப்படம்.

அப்புறம் சூப்பர் ஸ்டாருடன் நடித்த அருணாசலம் திரைப்படத்தைக் குறிப்பிடாததற்கு பிரபாவுக்கு வன்மையான கண்டனங்கள்...

வெங்கட் said...

ஜெயபாரதி அல்ல... அது திவ்யபாரதி.

Prem S said...

// ரம்பாவின் வருகையைக் கண்டு மற்ற நடிகைகள் தொடை நடுங்கியிருக்கக்கூடும்.//

ஹா ஹா என்ன ஒரு டைமிங் கலக்கல்

சக்தி கல்வி மையம் said...

அட....

கும்மாச்சி said...

உறங்கிக்கிடந்த ரம்பா நினைவுகளை தட்டி எழுப்பிட்டீங்க பாஸ், தொடரட்டும் உங்கள் கலை சேவை.

Philosophy Prabhakaran said...

ரவி பரமன் சார்... நீங்க என்ன தொனியில் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை... முடிந்தால் வார இறுதியில் தொலைபேசவும்...

Philosophy Prabhakaran said...

தகவலுக்கு நன்றி ஸ்கூல் பையன் & வெங்கட்...

sathishsangkavi.blogspot.com said...

சார் ரம்பா சார்., சார் ரம்பா சார்., சார் ரம்பா சார்.,

Anonymous said...

புது மாப்பிள்ளை இப்பவே இதையெல்லாம் பார்க்க கூடாது ஜாக்கிரதை?பெரியவங்க பேச்சை கேட்கணும்.

அஞ்சா சிங்கம் said...

வி.ஐ.பி. பட சூட்டிங் உங்க வீட்டுக்கு பின்னாடி தான் நடந்தது (கப்பல் ஒதுங்கிய இடம் ) ரம்பா அப்பாஸ் பிரபு தேவா மூவரும் நடிக்கும் சீன் நானும் என் நண்பர்களும் சிறு உதவிகள் செய்து ரம்பாவின் மனதில் இடம் பிடித்தோம் என்று தொடை தட்டி சொல்லிகொள்கிறேன் .......

Muza said...

at the time of ullathai allitha release i still remember was in third standard!hav seen that opening song lots n lots of time..wat a dance wat a reaction!glam doll...nice post sir

Raj said...

//ரவி பரமன் சார்... நீங்க என்ன தொனியில் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை... முடிந்தால் வார இறுதியில் தொலைபேசவும்...//

என்னத்த சொல்ல எல்லாம் இந்த்திரன் நினைச்சு காவலைதான்.
ஒரே தட்டுல சாப்பிட்ட நண்பர். மாயையின் பிடியில்......

வெற்றிவேல் said...

வலைச்சரத்தில் தங்கள் பதிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது...
கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்...
வாழ்த்துகள் நண்பா...
http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_6.html

அகில உலக மெண்டல் குழுமம் said...

உன் வீடு தூக்கப்படும்
உன் மனது மாற்றப்படும்
உனக்கு மொட்டை அடிக்கப்படும்
நீ கழுதைமேல் ஏற்றப்படுவாய்
பிம்பிளிக்கி பிளாக்கி

தனிமரம் said...

ம்ம் ரம்பா மச்சம் ஒரு காலம் மச்சி!

முத்தரசு said...

அட ரம்பா