10. லக்ஷ்மி ப்ரியா
சங்கர் சிமெண்ட், ஏர்செல் விளம்பரங்கள் மூலம் யாரு சாமீ இவ ? என்று தேட வைத்தவர். சுட்டகதை படத்தில் சினிமா அறிமுகம். ஆறு வயது பையனின் அம்மா, புதிதாய் திருமணமான மணப்பெண், மலைவாழ் இனப்பெண் என எந்த வேடம் கொடுத்தாலும் அதற்கு தகுந்தபடி தோற்றம் தரக்கூடியது லக்ஷ்மியின் ஸ்பெஷாலிட்டி. தியேட்டர் ஆர்டிஸ்ட் என்பதால் நடிப்பும் கைவருகிறது. கிரிக்கெட், ஃப்ரிஸ்பீ விளையாட்டுகளில் ஆர்வமுள்ள லக்ஷ்மி இந்திய 'B' அணிக்காக கிரிக்கெட் விளையாடியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
09. ஸ்ரீ திவ்யா
ஸ்ரீ திவ்யாவின் எழுச்சி என்று ஒரு கட்டுரையே எழுதலாமா எனக் கருதும் அளவிற்கு ஒரே படத்தில் பிரபலம் ஆகியிருக்கிறார். ஆந்திர வரவு. குழந்தை நட்சத்திரம், தொலைக்காட்சி நடிகை போன்ற பரிமாணங்களை கடந்து, கதாநாயகியாக சில தெலுங்கு படங்களில் நடித்தவர். தற்போது வ.வா.ச வெற்றியின் காரணமாக ஜி.வி.பிரகாஷ் படம் உட்பட நான்கைந்து தமிழ் படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். பாவாடை தாவணி திவ்யாவின் ஸ்பெஷாலிட்டி. பாக்காத பாடலில் முடிவில் காட்டுவது போல சின்னச் சின்ன முகபாவனைகளில் மனதை அள்ளிவிடுகிறார்.
08. விஷாகா
டல் திவ்யா தூள் இப்ப திவ்யா ஆயிட்டா என்பதுதான் க.ல.தி.ஆ பார்த்தவர்களின் ஒருமித்த குரல். பார்த்தால் தமிழ் பொண்ணு மாதிரி தெரியும் விஷாகா அபுதாபியில் பிறந்த பஞ்சாபி. க.ல.தி.ஆ படத்திற்கு பிறகு பாலிவுட்டில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு போய்விட்டார். அது மட்டுமில்லாமல் படத் தயாரிப்பிலும் இறங்கிவிட்டு மீண்டும் சந்தானத்துடன் வாலிப ராஜாவில் நடிக்க இருக்கிறார். கொஞ்சம் கோதுமை நிறத்தில் ஜொலித்தாலும் Dark is Beautiful என்கிற கேம்பெயினில் பங்கெடுத்திருக்கிறார்.
07. ரெஜினா
கண்ட நாள் முதல் படத்தில் லைலாவின் தங்கையாக நடித்து, எட்டு ஆண்டுகளுக்கு பிறகு கேடி பில்லா கில்லாடி ரங்காவின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆகியிருக்கிறார் ரெஜினா. அதிகம் கவனிக்கப்படாத நிர்ணயம் என்ற லோ பட்ஜெட் படத்திலும் நடித்தார். நிர்ணயம் படத்தைப் போலவே ரெஜினாவின் மீள் வருகையும் கவனிக்கப்படாமல் போனது வருத்தம். தற்சமயம் பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் மும்மொழியில் தயாராகும் என் சமையல் அறையில் நடித்துக் கொண்டிருக்கிறார் ரெஜினா பாப்பா.
06. மிர்த்திகா
செதுக்கி வைத்த சிலை போல் தோற்றமளிக்கும் மிர்த்திகா 555 படத்தில் அறிமுகம் ஆகியிருக்கிறார். கொறச்சு கொறச்சு தமிழ் பேசும் கேரளத்து பைங்கிளி. நதியா, ஷாலினி போல திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்பது பட்சியின் லட்சியம். இயல்பில் மிர்த்திகா ஒரு பாடகி மற்றும் நடனப்பிரியை. ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவரை இயக்குநர் சசி கண்டுபிடித்து நடிப்பதற்கு அழைத்து வந்திருக்கிறார். சசி ரசனைக்காரர். மற்ற கோடம்பாக்க இயக்குநர்களின் பார்வை மிர்த்திகா மீது படாதது அவர்களுடைய துரதிர்ஷ்டம்.
|
4 comments:
போஸ்டை தங்கமணிகிட்ட காமிச்சியா மாப்பு? அவங்க கேஜ்ரிவால் தேர்தல் சின்னத்தை கையில் எடுக்கலியா? ஹா.......... ஹா.......... ஹா..........
ரொம்ப ரசிச்சிருக்கீங்க போல..
வீட்ல தெரியுமா?
உங்களுக்கு இவ்வளவு கனவு கன்னிகள் இருக்கிறார்கள் என்று வீட்டம்மாவிற்கு தெரியுமா? ஸ்ரீ திவ்யா ஆந்திர வரவா? நான் மலையாள வரவு என்று நினைத்திருந்தேன்!!
இதை எல்லாம் விக்கிபீடியாவில்லேயே படிச்சட்டோம்
Post a Comment